ஒளியும் ஒலியும்

 நம் கணினி, டிவிடி பிளேயர், செல்போன், ஐபேட் ஆகியவற்றில் எம்பி3 (MP3), டேட் (DAT), விஓபி (VOB), எம்பி4(MP4), 3ஜிபி(3GP), ஏவிஐ(AVI), எம்பெக்-1(MPEG-1), எம்பெக்-2 (MPEG-2) எனப் பல விதமான ஆடியோ மற்றும் வீடியோ ஃபைல்களைப் பயன்படுத்தி வருகிறோம்.
    இத்தனை விதமான பைல்கள் எதற்கு ஏதோ ஒன்றை மட்டும் பயன்படுத்தினால் போதாதா என்று யோசிக்கலாம். அப்படி இருந்தால் நல்லதுதான். ஆனால், உண்மையில் அவை ஒவ் வொன்றும் ஒவ்வொரு விதமான தொழில் நுட்பத்தில் வேறு வேறு பயன்பாடுகளை எதிர்நோக்கி உருவாக்கப்பட்டவை.
நம் வீட்டு திருமண மற்றும் பொது நிகழ்ச்சிகளை பதிவு செய்யும் வீடியோ கேமராக்களில்  பயன்படுத்தப்படுவது டிஜிட்டல் வீடியோ (DV) கேசட்டுகளில் பதியப்படும் படங்கள் ஏவிஐ (AVI) ஃபைல் ஃபார்மேட்டுக்கு இணையானவை ஆகும். ஏவிஐ (AVI) என்பது விண்டோஸின் தயாரிப்பு. இது பெரும்பாலான முன்னணி வீடியோ கேமராக்களில் பயன்படுத்தப்படுவதாகும். இதில் உருவாக்கப்படும் வீடியோ மிகத் துல்லியமானதாகவும் தரமுள்ளதாகவும் இருக்கும்.
இதற்கு அடுத்து எம்பெக்-2 (MPEG-2) இது ஏவிஐ விட சற்றே தரம் குறைவானது. இது டி.வி.டி.(Digital Video Disc)க் களில் பயன்படுத்தப்படுகிறது. எம்பெக்-1 (MPEG-1) என்பது வி.சி.டி.(Video Compact Disc) தரமுள்ளது. இதே தரத்தில் குறைந்த அளவு கொள்ளளவில் அமைந்தவை எம்பெக்-4 (MPEG-4) மற்றும் டிவ்எக்ஸ் (DivX) வீடியோ வகைகளாகும். இவையெல்லாம் கணினி, வி.சி.டி. மற்றும் டி.வி.டி. பிளேயர்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வீடியோ ஃபைல் வகைகளாகும்.
அதற்கு அடுத்து  செல்போன்கள் மற்றும் ஐபேட்களில் 3ஜிபி (3GP) என்ற வகை வீடியோக்கள் அதிகமாக பயன் படுத்தப்படுகின்றன. அத்துடன் எம்பெக்4 (MPEG-4), எம்கேவி (MKV), தரம் குறைக்கப்பட்ட ஏவிஐ(AVI), எம்பெக்-2 (MPEG-2), எம்பெக்-1 (MPEG-1) வகை ஃபைல்களும் பயன்படுத்தப்படுகின்றன. வீடியோ ஃபைல்களைப் பொறுத்தவரை அளவுகளை சுருக்குவது மற்றும் ஃபிரேம் எண்ணிக்கையை குறைப்பது ஆகியவற்றின் மூலமே ஃபைலின் அளவு பொதுவாகக் குறைக்கப்படுகிறது.

வீடியோ அளவை (ரெசல்யூசன்) குறைப்பதன் மூலமாகக் கனிசமான அளவு ஃபைல் அளவை சுருக்கமுடியும்.
சுருக்கப்படும் அளவுகள் இவ்வாறு இருக்கலாம்.      
320x200, 320x240, 640x480, 720x480, 720x576, 1024x768, 1280x720, 1920x1080

அளவுகள் குறித்து மேலும் படிக்க விக்கிபீடியாவின் இந்த லிங்க் உதவும் http://en.wikipedia.org/wiki/Display_resolution

அடுத்ததாக ஃபிரேம்களின் எண்ணிக்கையைக் குறைப்பது. தொடர்ச்சியான காட்சியமைப்புகளைக் கெர்ண்ட ஒளிப்படங்கள் தொடர்ச்சியாக நகர்வதால் ஏற்படுத்தப்படும் சலனத் தோற்றமே ஒரு வீடியோவாகிறது. அத்தகைய ஒவ்வொரு ஒளிப்படமும் ஒரு ஃபிரேம் என அழைக்கப்படுகிறது. ஒரு வினாடியில் நகரும் ஃபிரேம்களின் எண்ணிக்கையை FPS (Frames Per Second) என்று குறிப்பிடுவர்.
 என்பதே ஒரு சராசரி வீடியோவிற்கு 30 ஃபிரேம்கள் பயன்படுத்தப்படுவ்து வழக்கம். திரைப்பட பிலிம்களில் 24 ஃபிரேம்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஐமேக்ஸ் போன்றவற்றில் 48, 60 ஃபிரேம்கள் கூடப் பயன்படுத்தப்படுகின்றன.
மிகக் குறைந்த அளவாக 16 ஃபிரேம்கள் வரை குறைத்தும் பயன்படுத்தப்படுகிறது.

வீடியோ அளவைக் குறைக்க வேறு தரத்திற்கு மாற்ற உதவும் இலவச மென்பொருள்கள் சில:
Format Factory
http://www.formatoz.com/download.html
Any Video Converter
http://www.any-video-converter.com/products/for_video_free/
Hamster Free Video Converter
http://videoconverter.hamstersoft.com/

இணைய தளங்களில் அடோப் ஃபிளாஸ் (FLV) மற்றும் கூகுளின் யூட்யூப்(YouTube)  வகை வீடியோக்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

ஆடியோ பிரிவில் இன்று முன்னணியில் இருப்பது எம்பி3 வடிவம். இது எம்பெக் வகை வீடியோ ஃபைலை உருவாக்கிய மூவிங் பிக்சர்ஸ் எக்ஸ்பர்ட்ஸ் குழுவினால் எம்பெக் வீடியோவில் ஒலியைச் சேர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமாகும்.

எம்பி3இல் செவிப்புலன் உணராத ஒலிகளை நீக்கும் வழிமுறை கையாளப் பட்டிருக்கிறது. இது ஃபைல் அளவைக் குறைப்பதற்கும், அவ்வாறு குறைக்கப் பட்ட பின்னர் கேட்கப்படும் ஒலியில் வேறுபாடின்றியும் இருக்கும்படியாக உருவாக்கப்பட்டது.
ஒரு எம்பி3 கோப்பு 128 கி.பிட்/நொடி (kbps) என்பதை வரையறையாகக் கொண்டது. இது மூல ஆடியோ தரத்தைவிட பதினொன்றில் ஒரு பங்கு அளவாகும். அதாவது 110 எம்.பி. அளவு கொண்ட ஒரு ஆடியோ சி.டி., எம்பி3 வடிவிற்கு மாற்றப்படும்போது 10 எம்.பி. அளவிலான ஃபைலாக உருவாகும். ஒரு எம்பி3 ஃபைலை 32, 64, 96, 256, 320 கி.பிட்/நொடி (kbps) ஆகிய பல அளவுகளிலும் உருவாக்க முடியும். பிட்களின் அளவைப் பொறுத்து தரமும் மாறுபடும்.
அடுத்ததாக விண்டோஸ் கணினி களில் பயன்படுத்தப்படும் வேவ் (WAV) மற்றும் டபுள்யூஎம்ஏ(WMA) ஃபைல்கள், ரியல் பிளேயரின் ஆர்ஏ (RA)மற்றும் ஆர்எம் (RM) வகை ஃபைல்கள், ஏஎம்ஆர்,(AMR) எம்பெக்4, ஏஏசி(AAC) ஆகியவையும் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கும் ஆடியோ ஃபைல் வகைகளாகும். Related Posts with Thumbnails

1 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

"எம்பெக் திரைப்படம்" இந்த வார்த்தையை கொண்டு தேடிக்கொண்டு இருக்கும்போது அருமையான உங்கள் வலை பக்கத்தை பார்த்தேன் .
அருமை .என் போன்ற மிக சாதாரண படிப்பறிவு கொண்டவர்களை தொழில்நுட்பம் சென்று அடைய நீங்கள் எடுக்கும் முயற்சி பாராட்டக்குரியது.
நன்றி

என்றென்றும் அன்புடன் ,
சுகி ...

wibiya widget