இலவச டைப்பிங் டியூட்டர் மென்பொருள்

ஆங்கிலத் தட்டச்சு பழகுவோர் ஆசிரியர் துணையின்றி கணினியிலேயே எளிதாகப் பழகுவதற்கு எண்ணற்ற மென்பொருள்கள் வந்துவிட்டன. இதில் பெரும்பாலானவை கட்டண மென்பொருள்களே. தற்போது இலவசமாக புதிய மென்பொருள் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் பெயர் டிப் 10 (Tipp 10) ஆகும்.
இம்மென்பொருள் ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் இலவசப் பயன்பாட்டுடன் கிடைக்கிறது. இதில் அடிப்படை நிலைப் பாடம் முதல் முதுநிலைப் பாடம் வரை என 20 வகைப் பாடங்கள் உள்ளன. இதில் எது தேவையோ அதனைத் தேர்ந்தெடுத்துப் பழகலாம். புதியவர்களுக்கு மட்டுமல்லாமல் ஏற்கனவே தட்டச்சுப் பழகி பாதியில் நிறுத்தியவர்கள், தட்டச்சுத் திறனை மேம்படுத்த நினைப்பவர்கள் ஆகியோருக்கு இம்மென்பொருள் பயனுள்ளது.
இதில் தட்டச்சு செய்யும் வேகம், விசைகளை அழுத்துவதில் எந்த விரல் சிறப்பாக செயல்படுகிறது என்பதையும், குறிப்பிட்ட நேரத்தில் எத்தனை எழுத்துக்கள் தட்டச்சு செய்தோம், பிழைகள் அதில் எத்தனை என்பன போன்ற விரிவான தகவல்களைத் தருகிறது.

அத்துடன் அவற்றை பிரிண்ட் செய்து பார்க்கும் வசதியும் உள்ளது. தட்டச்சு பழகுவோருக்கு சுலபமான, விரிவான குறிப்புகள் கொண்ட மென்பொருள் இது.
பதிவிறக்கம் செய்ய: http://www.tipp10.com/en/download/ Related Posts with Thumbnails

wibiya widget