தேர்தல் நடைமுறைகள் - 04

  • அஞ்சல் வழி வாக்குகள் அளிக்க யாருக்கு தகுதி உண்டு?
    சிறப்பு வாக்காளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளோர்,தேர்தல் பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள், தடுப்பு காவலில் வைக்கப்பட்டவர்கள் ஆகியோர் விதி முறைக்கு உட்பட்டு சில நிபந்தனைகளின் அடிப்படையில் அஞ்சல் வழியாக வாக்களிக்க முடியம்.
  • யார் பதிலாள் வாக்கை செலுத்த இயலும்?
    ஆயுதப் படையில் பணியாற்றுபவர்கள், ராணுவச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்ட படைப்பிரிவினர் போன்ற பணியில் ஈடுபட்டுள்ள வாக்காளர்களுக்கு அஞ்சல் வழி வாக்கிற்கு பதிலாக இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பதிலாள் வாக்களிப்புமுறையிலோ அல்லது அஞ்சல் வழி வாக்களிப்பையோ தெரிவு செய்து கொள்ளலாம்.
  • நுண்நிலை பார்வையாளர்கள் என்றால் என்ன?
    ஒரு மாவட்டத்தில் பணியாற்றும் மத்தியஅரசு அல்லது மைய அரசு பொதுத் துறை நிறுவனங்களின் அதிகாரி அல்லது அலுவலர்கள் நுண்நிலை பார்வையாள ராக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் ஒரு வளாகத்திலோ அல்லது கட்டிடத்திலோ அமைந்துள்ள வாக்குச் சாவடி அல்லது வாக்குச்சாவடிகளை கண்காணிக்கும் அலுவலராக செயல்படுகிறார்கள். இந்தியத் தேர்தல் ஆணைய பார்வையாளர்களின் நேரடி கட்டுபாடு மற்றும் கண்காணிப்பில் இவர்கள் செயல்படுகிறார்கள்.
  • நுண்நிலை பார்வையாளர்களை நியமிப்பதற்கான வரைமுறை என்ன? வாக்காளர்களை பாதிப்புக்கு உட் படுத்தும் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வாக்குச்சாவடிகள் இனம் கண்டறியப்பட்டு நுண்நிலை பார்வையாளர்களின் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
  • வாக்குப்பதிவு தினத்தன்று நுண் நிலை பார்வையாளர்களின் பணிகள் என்ன?
    நுண்நிலை பார்வையாளர்கள் கீழ் கண்ட பணிகளில் கவனம் செலுத்துவர்.
    1. ஒத்திகை தேர்தல் நடைமுறை
    2. சாவடிகளில் வேட்பாளரின் பிரிதிநிதி களின் இருப்பை கண்காணிப்பது. இவர்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை செயல்படுத்துவது.
    3. நுழைவு அனுமதி சீட்டு முறை மை மற்றும் வாக்கு சாவடிகளுக்கு செல்லுபவரை கண்காணிப்பது.
    4. தேர்தல் ஆணையத்தின் நெறிமுறை களுக்கு ஏற்ப வாக்காளர்களை சரியான முறையில் கண்டறிதல்.
    5. வராத வாக்காளர் இடம் பெயர்ந்த வர்கள் மற்றும் நகல் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்ட இடங்களில் அவற்றை கண்டறிந்து அதற்கான நடைமுறைகளை பதிவு செய்தல்.
    6. அழியாத மை பயன்பாடு
    7. வாக்காளர் பற்றிய விவரங்களை பதிவேட்டில் 17 எ படிவத்தில் குறித்து வைத்தல்.
    8. வாக்களித்த பின் ரகசியத்தை பராமரித்தல்.
    9. வாக்குப்பதிவு முகவர்களின் செயல் பாடு மற்றும் புகார்களை கவனிப்பது. ஏதோ ஒரு காரணத்தினால் நியாயமான வாக்கு பதிவுக்கு இடையூறு ஏற்படுகிறது என்று நுண்நிலை பார்வையாளர் கருதுவா ரேயானால் அதை நீக்கஅவர் உடனடி யாக இந்த நிகழ்வை அந்தந்த தொகுதி யின் பார்வையாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுவார்.
  • ஒரு வேட்பாளர் தமது தேர்தலுக்கு விருப்பம் போல் செலவழிக்க முடியுமா?
    முடியாது. ஒரு வேட்பாளர் தமது தேர்தலுக்கு விருப்பம் போல செலவழிக்க இயலாது. மொத்த தேர்தல் செலவு அந்த குறிப்பிட்ட தொகுதிக்கு நிர்ணயிக்கப்பட்ட உயர்ந்தபட்ச அளவை மிஞ்ச கூடாது என்று விதிமுறைகள் கூறுகின்றன.
  • உத்தர பிரதேசம், பீகார், ஆந்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் செலவின் உயர்ந்த அளவு எவ்வளவு?
    தேர்தல் செலவு வரையறை அவ்வப்போது மறு மதிப்பீடு செய்யப்படுகிறது. உத்தர பிரதேசம்., பீகார், ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ள உயர்ந்தபட்ச செலவின் அளவு ரூ.25 லட்சமாகும்.
  • இது மாதிரியான பெரிய மாநிலங்களில் சட்டப்பேரவை தொகுதிக்கு அனுமதிக்கப்பட்டுள்ள செலவு தொகை எவ்வளவு?
    இது மாதிரியான பெரிய மாநிலங் களில் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள செலவு தொகை ரூ. 10 லட்சம்.
  • எல்லா மாநிலங்களிலும் இந்த வரையறை ஒரே மாதிரியானவையா? இல்லையென்றால் நாடாளுமன்ற தொகுதிக்கு இப்போது இருக்கும் குறைந்த அளவு செலவு தொகை எவ்வளவு?
    இல்லை, தேர்தல் செலவிற்கான உயர்ந்த அளவு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, தாமன் மற்றும் டையூ லட்சத்தீவு போன்ற நாடாளுமன்ற தொகுதிக்கு இப்போது இருக்கும் குறைந்த அளவு செலவு தொகை ரூ. 10 லட்சம்.
Related Posts with Thumbnails

0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

wibiya widget