ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உயிரியலாளர் (Biologist) பணியிடம் : உடனே விண்ணப்பிக்கவும்.

தமிழ்நாடு வனத்துறை - பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உயிரியலாளர் (Biologist) பணியிடம் 

ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக்கோட்டம், தற்காலிக அடிப்படையில் உயிரியலாளர் (Biologist) பதவிக்கு (Outsourcing) தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1.    பதவியின் பெயர்                  :    உயிரியலாளர் (Biologist)
2.    காலிப்பணியிட விவரம்    :    1 (ஒன்று)
3.    ஊதிய விகிதம்   :    மாதாந்திர ஊதியம் ரூ. 38866/- (Gross Outsourced wages)
4.    வயது வரம்பு       :    40 வயது

--------------------------
கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு இணைந்திருங்கள், 
👉WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029VaAR6kc8aKvFugYTm633
👉Arattai Channel: https://aratt.ai/@nadhikkarai
👉Telegram Channel: https://t.me/nadhikarai
--------------------------

5.    கல்வி தகுதி மற்றும் இதர தகுதிகள் :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து கீழ்க்கண்ட எந்தவொரு பாடப்பிரிவிலும் எம்.எஸ்.சி (M.Sc.) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வனவிலங்கு உயிரியல் (Wildlife Biology)
சூழலியல் (Ecology) 
வனவியல் (Forestry)
சுற்றுச்சூல் அறிவியல் (Environmental Science)
இயற்கை அறிவியல் (Natural Sciences)
விலங்கியல் (Zoology)
மேற்கண்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின் ஆராய்ச்சி துறையில் பிஎச்.டி (Ph.D.) பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுககு முன்னுரிமை வழங்கப்படும். 

6.    அனுபவம் : 

உயிரியலாளர் (Biology) பதவிக்கான குறைந்தபட்ச 2 ஆண்டுகள் அனுபவம் இருப்பது விரும்பத்தக்கது. குறிப்பாக கீழ்க்கண்ட துறைகளில்:
வனவிலங்கு ஆராய்ச்சி, மேலாண்மை மற்றும் இடமாற்றம் (Translocation)
இடவியல் தரவுப் பகுப்பாய்வு (Spatial Data Analysis), GIS பயன்பாடு மற்றும் அறிக்கை தயாரித்தல்
களப்பணி, வாழிடம் (Habitat) ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி வடிவமைப்பு (Research Designing) 
மதிப்பாய்வு செய்யப்பட்ட (Peer-reviewed) அறிவியல் இதழ்களில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளின் நிரூபிக்கப்பட்ட பதிவுகள்

7.    தொழில்நுட்பத் திறன்கள் (Technical Skills):

மாதிரிகள் எடுக்கும் (Sampling), கணக்கெடுக்கும் (Survey) மற்றும் தரவுப் பகுப்பாய்வு (Data Analysis) மற்றும் பயோ இன்ஃபார் மெட்டிக்ஸ் (Bioinformatics) தொடர்பான தேர்ச்சி
கணினி பயன்பாட்டு திறன், GIS அறிவு மற்றும் தட்டச்சு (Typing) திறன் அவசியம்

8.    மென்மையான திறன்கள் (Soft Skills) :

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சிறந்த எழுத்து மற்றும் வாய்மொழி தொடர்புத் திறன் 
சுயமாக ஆராய்ச்சித் திட்டங்களைத் திட்டமிடும் மற்றும் செயல்படுத்தும் திறன்
வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி துறைகளில் ஆர்வம்

9.    சாதிச்சான்றிதழ்: 
சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியரிடமிருந்து, பெறப்பட்ட சாதிச்சான்று 10.    இதர விபரங்கள் : உடல்நலம் சான்றிதழ் (Physical Fitness Certificate) 
11.    அலுவலக மின்னஞ்சல் : ddatrpoy@gmail.com

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ 02.01.2026 மாலை 5 மணிக்குள் “துணை இயக்குநர், ஆனைமலை புலிகள் காப்பகம், 365/1, மீன்கரை சாலை, பொள்ளாச்சி - 642 001” என்ற முகவரிக்கு அனுப்பலாம்.


 நாளிதழ் விளம்பரம் 20.12.2025

Related Posts with Thumbnails

0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

wibiya widget