இந்திய அஞ்சல் துறையில் 28,740 பணியிடங்கள்: தமிழ்நாட்டில் மட்டும் 2009 பணியிடங்கள்

 இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் உள்ள கிளைகளில் காலியாக உள்ள 28,740 கிராமின் டக் சேவக் (GDS) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM) மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) ஆகிய பணியிடங்களும் அடங்கும்.

விண்ணப்பப் பதிவு தொடக்கம்: ஜனவரி 31, 2026

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 14, 2026

கட்டணம் செலுத்த கடைசி நேரம்: பிப்.16, 2026 (மாலை 5 மணி வரை)

திருத்தம் செய்யும் காலம் (Correction Window): பிப்ரவரி 18 மற்றும் 19, 2026

கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு:

கல்வி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எவ்விதத் தேர்வும் கிடையாது. 10-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பள விவரம்:

ABPM மற்றும் GDS: மாதம் ரூ.10,000 முதல் ரூ.24,470 வரை.

BPM: மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை.

முக்கிய மாநில வாரியான காலிப்பணியிடங்கள்:

மொத்தம் 28,740 இடங்களில்  தமிழ்நாட்டில் மட்டும் 2009 பணியிடங்கள்.

விண்ணப்பிக்க:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால், பிப்ரவரி 18-19 தேதிகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி திருத்தம் செய்து கொள்ளலாம்.

தேர்வு செய்யப்பட்டவர்களின் முதல் பட்டியல் பிப்.28-ஆம் தேதி வெளியாகும். அதில் விண்ணப்பதாரரின் பதிவு எண், மதிப்பெண் சதவீதம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் இடம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

நதிக்கரை தகவல் தளம்:
👉WhatsApp: https://whatsapp.com/channel/0029VaAR6kc8aKvFugYTm633 
👉Arattai: https://aratt.ai/@nadhikkarai
👉Telegram: https://t.me/nadhikarai

Related Posts with Thumbnails

CUET (UG) 2026: நுழைவுத் தேர்வு எதற்காக? என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? முக்கியத் தகவல்கள்

மத்திய, மாநிலப் பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் (UG) சேருவதற்கான CUET (UG) 2026 நுழைவுத் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது.

CUET (UG) 2026: மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் வேளாண் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியா முழுவதும் உள்ள மத்திய, மாநில, Deemed மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் (UG) சேருவதற்கான CUET (UG) 2026 நுழைவுத் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வு, Arts, Science, Commerce, Agriculture உள்ளிட்ட பல துறைகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஒரே நுழைவாயிலாக அமைந்துள்ளது.

CUET (UG) மூலம், பல்கலைக்கழகங்களுக்கு தனித்தனி நுழைவுத் தேர்வுகள் எழுத வேண்டிய அவசியம் இல்லாமல், ஒரே தேர்வில் பல பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கிறது.


முக்கிய தேதிகள் (Important Dates)

NTA வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி CUET (UG) 2026 தொடர்பான முக்கிய தேதிகள் பின்வருமாறு:

  • ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்: 03 ஜனவரி 2026

  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 30 ஜனவரி 2026 (இரவு 11:50 மணி வரை)

  • தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள்: 31 ஜனவரி 2026

  • விண்ணப்பத் திருத்தம் (Correction Window): 02 முதல் 04 பிப்ரவரி 2026 வரை

  • தேர்வு நடைபெறும் காலம் (உத்தேசமாக): 11 மே முதல் 31 மே 2026 வரை


தேர்வு முறை

CUET (UG) 2026 தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வாக (CBT) நடைபெறும். கேள்விகள் அனைத்தும் Multiple Choice Questions (MCQ) முறையில் இருக்கும். பாடத்திட்டம் முழுமையாக 12ஆம் வகுப்பு பாடங்களை அடிப்படையாகக் கொண்டது என NTA தெரிவித்துள்ளது.


எந்தப் பாடங்களை எழுத வேண்டும்?

CUET தேர்வு மூன்று முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

மொழிப் பகுதி (Language Section)

  • குறைந்தது ஒரு மொழி கட்டாயம் (English, Tamil, Hindi உள்ளிட்டவை)

Domain Subjects (முக்கிய பாடங்கள்)

  • மாணவர்கள் 12ஆம் வகுப்பில் படித்த பாடங்களிலிருந்து மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்

General Test (சில படிப்புகளுக்கு மட்டும்)

  • பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், தர்க்க அறிவு, அடிப்படை கணிதம்

ஒரு மாணவர் அதிகபட்சமாக 5 பாடங்கள் வரை தேர்வு செய்யலாம்.


CUET மூலம் கிடைக்கும் துறைகள் மற்றும் படிப்புகள்

Arts & Humanities

  • BA Tamil, English, History, Political Science, Economics, Sociology, Psychology

  • Journalism & Mass Communication

Science & Technology

  • B.Sc Physics, Chemistry, Mathematics

  • B.Sc Computer Science, Data Science, Biotechnology

  • Integrated B.Sc + M.Sc

Commerce & Management

  • B.Com, B.Com (Hons)

  • BBA, BMS, Economics (Hons)

Agriculture & Allied Sciences (ICAR)

CUET (UG) 2026 மூலம் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் (ICAR) நடத்தும் கலந்தாய்வில் பங்கேற்று, முன்னணி வேளாண் பல்கலைக்கழகங்களில் சேரலாம்.

  • B.Sc (Hons) Agriculture, Horticulture, Forestry

  • B.F.Sc Fisheries Science

  • B.Tech Agricultural, Dairy, Food Technology


எந்தக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேரலாம்?

மத்திய பல்கலைக்கழகங்கள்

  • Delhi University (DU)

  • Banaras Hindu University (BHU)

  • Aligarh Muslim University (AMU)

  • Jawaharlal Nehru University (UG Courses)

  • University of Hyderabad

  • Central University of Tamil Nadu (CUTN)

மாநில / Deemed / தனியார் பல்கலைக்கழகங்கள்

  • CUET மதிப்பெண்களை ஏற்றுக் கொள்ளும் மாநில பல்கலைக்கழகங்கள்

  • Deemed Universities

  • தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள்

வேளாண் பல்கலைக்கழகங்கள் (ICAR)

  • Central Agricultural Universities

  • State Agricultural Universities


தகுதி நிபந்தனைகள் மற்றும் முக்கிய எச்சரிக்கை

விண்ணப்பதாரர்கள் +2 வகுப்பில் Physics, Chemistry, Mathematics, Biology அல்லது Agriculture ஆகியவற்றில் குறைந்தது 3 முக்கிய பாடங்களை படித்திருக்க வேண்டும்.

மிக முக்கியமாக, +2 வகுப்பில் படிக்காத Domain பாடத்தை CUET-ல் தேர்வு செய்தால், அதில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், கலந்தாய்வின் போது தகுதி நீக்கம் செய்யப்படும் என NTA மற்றும் ICAR தெளிவுபடுத்தியுள்ளது.


தேசிய தேர்வு முகமையின் அறிவிப்பு

 

விண்ணப்பிக்கும் முறை

தகுதியுள்ள மாணவர்கள் 30 ஜனவரி 2026-க்குள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cuet.nta.nic.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


CUET மூலம் கிடைக்காத படிப்புகள்

CUET மூலம் பொதுவாக கீழ்கண்ட படிப்புகளில் சேர முடியாது:

  • மருத்துவப் படிப்புகள் (MBBS, BDS) – NEET தேவை

  • Engineering (B.E / B.Tech – பெரும்பாலும்) – JEE

  • Law – CLAT


இறுதியாக..

CUET (UG) 2026 தேர்வு, இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் Arts, Science, Commerce மற்றும் Agriculture துறைகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. சரியான பாடத் தேர்வு மற்றும் கவனமான விண்ணப்பம் மூலம், உயர்தர கல்வி பெறும் வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

நதிக்கரையுடன் இணைந்திருங்கள்..
👉 WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029VaAR6kc8aKvFugYTm633
👉 Arattai Channel: https://aratt.ai/@nadhikkarai
👉 Telegram Channel:  https://t.me/nadhikarai
👉 Facebook :  https://www.facebook.com/profile.php?id=61581364045711
👉 Blogger: https://nathikarai.blogspot.com/

 


Related Posts with Thumbnails

மத்திய அரசுக் கல்வி நிறுவனத்தில் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) படிக்க விண்ணப்பிக்கலாம்!

🎓நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) - மாணவர் சேர்க்கை 2026 🎨

இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முதன்மை கல்வி நிறுவனமான NIFT, 2026-ஆம் ஆண்டிற்கான இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கையைத் தொடங்கியுள்ளது.

📍 NIFT வளாகங்கள்: சென்னை, பெங்களூரு, மும்பை, புது தில்லி உட்பட இந்தியா முழுவதும் 20 முக்கிய நகரங்களில் செயல்படுகிறது.

🗓️ முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 08.12.2025

  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.01.2026

  • நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்: 08.02.2026

💰 விண்ணப்பக் கட்டணம்:

  • SC / ST பிரிவினர்: ₹750

  • இதர பிரிவினர்: ₹3000

📍 தமிழகத்தில் தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், கடலூர், வேலூர் மற்றும் நாகர்கோவில்.

🏠 சென்னை வளாகத்தில் 'Open House' நிகழ்வு: மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் NIFT படிப்புகள் குறித்து அறிய, 22.12.2025 முதல் 06.01.2026 வரை (காலை 9:00 - மாலை 5:00) சென்னை தரமணி வளாகத்தில் நடைபெறும் நேரிடை விளக்கக் கூட்டத்தில் பங்கேற்கலாம். விருப்பமுள்ளவர்கள் admission.chennai@nift.ac.in என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும். (ஆன்லைன் வழியாகவும் விளக்கக் கூட்டங்கள் நடத்தப்படும்).

🔗 விண்ணப்பிப்பதற்கான லிங்க்: B.Des மற்றும் B.F.Tech படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://examinationservices.nic.in/ExamSys2026/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFeJo/GYzQNCJSjiL7nIGKIyjx34yl8+Yh50CjSWDOgge

🌐 கூடுதல் தகவல்களுக்கு: www.nift.ac.in | www.nift.ac.in/admission

📞 தொடர்புக்கு: நோடல் ஆபீசர், NIFT சென்னை. தொலைபேசி: 044-22542755 (காலை 9:00 - மாலை 5:30)

ஃபேஷன் மற்றும் டிசைன் துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்தத் தகவலைப் பகிருங்கள்! ✨

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் எங்கள் நதிக்கரை சேனல்களில்..
👉WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029VaAR6kc8aKvFugYTm633 
👉Arattai Channel: https://aratt.ai/@nadhikkarai 
👉Telegram Channel: https://t.me/nadhikarai

Related Posts with Thumbnails

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உயிரியலாளர் (Biologist) பணியிடம் : உடனே விண்ணப்பிக்கவும்.

தமிழ்நாடு வனத்துறை - பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உயிரியலாளர் (Biologist) பணியிடம் 

ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக்கோட்டம், தற்காலிக அடிப்படையில் உயிரியலாளர் (Biologist) பதவிக்கு (Outsourcing) தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1.    பதவியின் பெயர்                  :    உயிரியலாளர் (Biologist)
2.    காலிப்பணியிட விவரம்    :    1 (ஒன்று)
3.    ஊதிய விகிதம்   :    மாதாந்திர ஊதியம் ரூ. 38866/- (Gross Outsourced wages)
4.    வயது வரம்பு       :    40 வயது

--------------------------
கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு இணைந்திருங்கள், 
👉WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029VaAR6kc8aKvFugYTm633
👉Arattai Channel: https://aratt.ai/@nadhikkarai
👉Telegram Channel: https://t.me/nadhikarai
--------------------------

5.    கல்வி தகுதி மற்றும் இதர தகுதிகள் :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து கீழ்க்கண்ட எந்தவொரு பாடப்பிரிவிலும் எம்.எஸ்.சி (M.Sc.) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வனவிலங்கு உயிரியல் (Wildlife Biology)
சூழலியல் (Ecology) 
வனவியல் (Forestry)
சுற்றுச்சூல் அறிவியல் (Environmental Science)
இயற்கை அறிவியல் (Natural Sciences)
விலங்கியல் (Zoology)
மேற்கண்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின் ஆராய்ச்சி துறையில் பிஎச்.டி (Ph.D.) பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுககு முன்னுரிமை வழங்கப்படும். 

6.    அனுபவம் : 

உயிரியலாளர் (Biology) பதவிக்கான குறைந்தபட்ச 2 ஆண்டுகள் அனுபவம் இருப்பது விரும்பத்தக்கது. குறிப்பாக கீழ்க்கண்ட துறைகளில்:
வனவிலங்கு ஆராய்ச்சி, மேலாண்மை மற்றும் இடமாற்றம் (Translocation)
இடவியல் தரவுப் பகுப்பாய்வு (Spatial Data Analysis), GIS பயன்பாடு மற்றும் அறிக்கை தயாரித்தல்
களப்பணி, வாழிடம் (Habitat) ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி வடிவமைப்பு (Research Designing) 
மதிப்பாய்வு செய்யப்பட்ட (Peer-reviewed) அறிவியல் இதழ்களில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளின் நிரூபிக்கப்பட்ட பதிவுகள்

7.    தொழில்நுட்பத் திறன்கள் (Technical Skills):

மாதிரிகள் எடுக்கும் (Sampling), கணக்கெடுக்கும் (Survey) மற்றும் தரவுப் பகுப்பாய்வு (Data Analysis) மற்றும் பயோ இன்ஃபார் மெட்டிக்ஸ் (Bioinformatics) தொடர்பான தேர்ச்சி
கணினி பயன்பாட்டு திறன், GIS அறிவு மற்றும் தட்டச்சு (Typing) திறன் அவசியம்

8.    மென்மையான திறன்கள் (Soft Skills) :

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சிறந்த எழுத்து மற்றும் வாய்மொழி தொடர்புத் திறன் 
சுயமாக ஆராய்ச்சித் திட்டங்களைத் திட்டமிடும் மற்றும் செயல்படுத்தும் திறன்
வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி துறைகளில் ஆர்வம்

9.    சாதிச்சான்றிதழ்: 
சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியரிடமிருந்து, பெறப்பட்ட சாதிச்சான்று 10.    இதர விபரங்கள் : உடல்நலம் சான்றிதழ் (Physical Fitness Certificate) 
11.    அலுவலக மின்னஞ்சல் : ddatrpoy@gmail.com

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ 02.01.2026 மாலை 5 மணிக்குள் “துணை இயக்குநர், ஆனைமலை புலிகள் காப்பகம், 365/1, மீன்கரை சாலை, பொள்ளாச்சி - 642 001” என்ற முகவரிக்கு அனுப்பலாம்.


 நாளிதழ் விளம்பரம் 20.12.2025

Related Posts with Thumbnails

102 காலிப்பணியிடங்கள்: புவிசார் குறியீடு பரிசோதகர் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

📝 புவிசார் குறியீடு பரிசோதகர் வேலை; UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு !
102 காலிப்பணியிடங்கள்



📌 Examiner of Trade Marks & Geographical Indications (GI Tags)

🏢 வேலை வழங்கும் நிறுவனம்:
Union Public Service Commission (UPSC)
(வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் – CGPDTM)

📊 காலிப்பணியிடங்கள்:
மொத்தம் – 102 பணியிடங்கள்

🎓 கல்வித் தகுதி:
• சட்டம் (Law) அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

🎂 வயது வரம்பு:
• 21 முதல் 35 வயது வரை
• SC / ST / OBC பிரிவினருக்கு அரசு விதிப்படி வயது தளர்வு உண்டு

📅 முக்கிய தேதிகள்:
• விண்ணப்பம் தொடங்கும் தேதி: 13.12.2025
• விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.01.2026

🖥️ விண்ணப்பிக்கும் முறை:
• முழுக்க முழுக்க ஆன்லைன் மூலம் மட்டும்
• UPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்

🔍 பணியின் தன்மை:
• Trade Mark மற்றும் Geographical Indication (GI) விண்ணப்பங்களை பரிசோதனை செய்வது
• அறிவுசார் சொத்து (Intellectual Property) தொடர்பான பணிகள்

📢 முக்கிய அறிவுரை:
• விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாக படிக்கவும்

Related Posts with Thumbnails

விளையாட்டு வீரர்களுக்கு GST அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

விளையாட்டு வீரர்களுக்கு  GST அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

GST & சென்ட்ரல் எக்ஸைஸ் சென்னை துறையில் மெரிட்டோரியஸ் ஸ்போர்ட்ஸ் பெர்சன்கள்க்கு 20 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆன்லைன் விண்ணப்ப பதிவு 08.12.2025 முதல் 07.01.2026 வரை அதிகாரப்பூர்வ தளத்தில் (https://gstchennai.gov.in/ ) திறந்து இருக்கும். 

பணியிடங்கள்

இந்த அறிவிப்பின் கீழ் மொத்தம் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

  • Tax Assistant – 11 இடங்கள்
  • Stenographer Grade II – 01 இடம்
  • Havaldar – 07 இடங்கள்
  • Multi Tasking Staff – 01 இடம்

சென்னை, தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் பணியமைப்பு நடைபெறும்.

கல்வித் தகுதி

  • ஒவ்வொரு பதவிக்கும் தேவையான தகுதிகள்:
  • Tax Assistant – ஏதேனும் பட்டப்படிப்பு
  • Steno Grade II – 12ஆம் வகுப்பு தேர்ச்சி
  • Havaldar – 10ஆம் வகுப்பு
  • MTS – 10ஆம் வகுப்பு

மேலும், விண்ணப்பதாரர்கள் நாட்டை / மாநிலத்தை / பல்கலைக்கழகத்தை / பள்ளி அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றிருக்க வேண்டும்.

விளையாட்டுகள்

கீழ்கண்ட விளையாட்டுகளில் திறமை பெற்றவர்களுக்கு முன்னுரிமை:

  1. கிரிக்கெட் (ஆண்கள்)
  2. கால்பந்து (ஆண்கள்)
  3. ஹாக்கி (ஆண்கள்)
  4. கபடி (ஆண்கள்)
  5. வாலிபால் (ஆண்கள்)
  6. அத்த்லெடிக்ஸ் (ஆண்/பெண்)
  7. நீச்சல் (ஆண்/பெண்)

Khelo India போட்டிகளில் பங்கேற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயதுத் தகுதி

(07.01.2026 தேதியின்படி)

  • TA / Steno / Havaldar – 18 முதல் 27 வயது
  • MTS – 18 முதல் 25 வயது

அரசு விதிப்படி SC/ST, OBC, PwBD, Ex-Servicemen விண்ணப்பதாரர்களுக்கு வயது சலுகை வழங்கப்படும்.

சம்பள விவரம்

  • Tax Assistant / Steno – Level 4 : ₹25,500 – ₹81,100
  • Havaldar / MTS – Level 1 : ₹18,000 – ₹56,900

தேர்வு முறைகள்

  • Shortlisting
  • Sports Trial
  • மருத்துவ பரிசோதனை
  • சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். ஆன்லைன் பதிவு தொடக்கம் – 08.12.2025 கடைசி தேதி – 07.01.2026, விண்ணப்பிக்கும் போது செயல்படும் மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் ஐடி கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க: https://gstchennai.gov.in/ 

👉Arattai Channel: https://aratt.ai/@nadhikkarai
👉Telegram Channel:https://t.me/nadhikarai
👉WhatsApp Channel:https://whatsapp.com/channel/0029VaAR6kc8aKvFugYTm633

Related Posts with Thumbnails

Central Govt. SSC Constable Jobs

 🚨 காவல்துறையில் அட்டகாச வேலை வாய்ப்பு!
🎯 10ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 25,487 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

📌 மொத்த காலியிடங்கள்: 25,487 (Constable)

👮 ஆண் விண்ணப்பதாரர்களுக்கு:
BSF – 524 | CISF – 13,135 | CRPF – 5,366 |
SSB – 1,764 | ITBP – 1,099 | AR – 1,556 | SSF – 23

👮‍♀️ பெண் விண்ணப்பதாரர்களுக்கு:
BSF – 92 | CISF – 1,460 | CRPF – 124 |
ITBP – 194 | AR – 150

🎓 கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி

🎂 வயது வரம்பு:
18 – 23 வயது
(02-01-2003 முதல் 01-01-2008 வரை பிறந்தவர்கள்)

⏳ வயது தளர்வு:
SC/ST – 5 ஆண்டுகள் | OBC – 3 ஆண்டுகள்

💰 சம்பளம்:
Pay Level–3
₹21,700 முதல் ₹69,100 வரை + மத்திய அரசு சலுகைகள்

📝 தேர்வு முறை:
கணினி அடிப்படையிலான தேர்வு
உடல் திறன் / உடல் தர தேர்வு
மருத்துவ தேர்வு & ஆவண சரிபார்ப்பு

📍 தமிழ்நாடு தேர்வு மையங்கள்:
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம்,
திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், கிருஷ்ணகிரி

🌐 விண்ணப்பிக்கும் முறை:
ssc.gov.in இணையதளத்தில் One Time Registration (OTR) செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
(பழைய கணக்கு செல்லாது)

📅 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31, 2025 (இரவு 11 மணி வரை).

🗓 தேர்வு தேதி: பிப்ரவரி – ஏப்ரல் 2026

• அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.gov.in ல் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

• புதிய இணையதளத்தில் 'One Time Registration' (OTR) செய்வது கட்டாயம். பழைய இணையதள கணக்கு செல்லாது.

• தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: ஜனவரி 1, 2026.

• தேர்வுகள் பிப்ரவரி முதல் ஏப்ரல் 2026 வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசி நேரத்தில் சர்வர் முடங்க வாய்ப்புள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் டிசம்பர் 31 வரை காத்திருக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

📢 தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!
🔔 மேலும் வேலைவாய்ப்பு தகவல்களுக்கு channel-ஐ follow செய்யுங்கள்.

Related Posts with Thumbnails

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) - பிப்ரவரி 2026 அறிவிப்பு

 

 

 

 

 

 

 

 

📢 *மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) - பிப்ரவரி 2026 அறிவிப்பு*


*CTET தேர்வின் சிறப்பம்சங்கள்:*

தகுதி: மத்திய அரசுப் பள்ளிகளில் (KVS, NVS உட்பட) ஆசிரியராகப் பணிபுரிய இது கட்டாயத் தகுதி.

செல்லுபடியாகும் காலம்: இச்சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் (Lifetime Validity) செல்லும்.

தேர்வு முறை: 150 கொள்குறி வகைக் கேள்விகள் (MCQ).

முக்கிய குறிப்பு: தேர்வில் எதிர்மறை மதிப்பெண்கள் (Negative Marking) இல்லை.

--------------------
நதிக்கரை தகவல் தளம்

👉WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029VaAR6kc8aKvFugYTm633"

👉அரட்டை: https://aratt.ai/@nadhikkarai

--------------------------

*முக்கிய தேதிகள்:*

• ஆன்லைன் விண்ணப்பம்: 27.11.2025 முதல் 18.12.2025 வரை.

• கட்டணம் செலுத்த இறுதி நாள்: 18.12.2025 (இரவு 11:59 மணிக்குள்).

• விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய: 23.12.2025 முதல் 26.12.2025 வரை.

• தேர்வு நடைபெறும் நாள்: 08 பிப்ரவரி 2026 (ஞாயிற்றுக்கிழமை).


*தேர்வு நேரம் மற்றும் தாள்:*


தாள் II (6 முதல் 8 ஆம் வகுப்பு) – காலை: 09:30 AM முதல் 12:00 PM வரை.


தாள் I (1 முதல் 5 ஆம் வகுப்பு) – மாலை: 02:30 PM முதல் 05:00 PM வரை.


தேர்வு நேரம்: இரண்டரை மணி நேரம் (2.30 Hrs).


*தேர்வுக் கட்டணம் (Online Payment):*


பொது / OBC: ஒரு தாள் - ₹1000. இரண்டு தாள்களும் - ₹1200.


SC / ST / மாற்றுத்திறனாளிகள்: ஒரு தாள் - ₹500. இரண்டு தாள்களும் - ₹600.


*CTET ஆன்லைன் விண்ணப்ப முகவரி:*


CTET பிப்ரவரி 2026 தேர்வுக்கு விண்ணப்பிக்க இணையதளம்:

🔗 https://ctet.nic.in

நீங்கள் இந்த இணையதளத்திற்குச் சென்று, "Apply for CTET-FEB 2026" என்ற இணைப்பைக் கிளிக் செய்து, விண்ணப்ப நடைமுறையைப் பூர்த்தி செய்யலாம்.


*தமிழ்நாட்டில் உள்ள தேர்வு மையங்கள்:*

தமிழ்நாட்டில் CTET தேர்வு பொதுவாகப் பின்வரும் நகரங்களில் நடத்தப்படுகிறது. விண்ணப்பப் படிவத்தில், இந்த மையங்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.

• சென்னை (Chennai)

• கோயம்புத்தூர் (Coimbatore)

• மதுரை (Madurai)

• சேலம் (Salem)

• திருச்சிராப்பள்ளி (Tiruchirappalli)


*முக்கிய குறிப்பு:*

தேர்வு மையங்கள் "முதலில் வருபவருக்கு முன்னுரிமை" (First Come First Serve) என்ற அடிப்படையில் ஒதுக்கப்படுகின்றன. எனவே, நீங்கள் விரும்பும் நகரத்தில் தேர்வு மையம் கிடைப்பதை உறுதி செய்ய, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, விண்ணப்பத்தை உடனடியாகப் பூர்த்தி செய்வது அவசியம். மையங்களில் இடங்கள் நிரம்பிவிட்டால், வேறு நகரத்தைத் தேர்வு செய்ய வேண்டியிருக்கும்.

Related Posts with Thumbnails

கோவையிலிருந்து ராஜஸ்தான் மாதர் ரயில்நிலையத்திற்கு சிறப்பு ரயில்

 


🚆 கோவையிலிருந்து ராஜஸ்தான் மாதர் ரயில்நிலையத்திற்கு
✨ வாராந்திர சிறப்பு ரயில் சேவை! ✨

🛤️ வழித்தடம்:
திருப்பூர் ➤ ஈரோடு ➤ சேலம் ➤ ஜோலார்பேட்டை ➤ காட்பாடி ➤ ரேணிகுண்டா ➤ கடப்பா ➤ எர்ரகுண்ட்லா ➤ கர்னூல் ➤ கச்சேகுடா ➤ அகோலா ➤ மால்காபூர் ➤ உதானா ➤ வதோரா ➤ பில்வாரா ➤ அஜ்மீர்

🎉 பண்டிகை சிறப்பு ரயில் — மொத்தம் 4 சேவைகள் 🎊

🚉 Train No. 06181 — கோவை ➜ மாதர் (ராஜஸ்தான்)
📅 புறப்படும் தேதிகள்:
நவம்பர் 13, 20, 27 மற்றும் டிசம்பர் 04
🕑 புறப்படும் நேரம்: வியாழக்கிழமை அதிகாலை 02:30 மணி
🛬 சென்றடையும் நேரம்: மூன்றாவது நாள் மாதர் நிலையம்


🚉 Train No. 06182 — மாதர் ➜ கோவை
📅 புறப்படும் தேதிகள்:
நவம்பர் 16, 23, 30 மற்றும் டிசம்பர் 07
🕓 புறப்படும் நேரம்: ஞாயிற்றுக்கிழமை இரவு 23:50 மணி


🎫 முன்பதிவு தொடக்கம்:
🗓️ 04.11.2025 (செவ்வாய்க்கிழமை)
⏰ காலை 08:00 மணி முதல்
📍 Southern Railway அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மற்றும் counters-ல்


🌿 #SouthernRailway #Coimbatore #Rajasthan #FestivalSpecialTrain #Nadhikkarai

📢 இணைந்திருங்கள் நதிக்கரை வாட்ஸ்அப் சேனல்
👉 https://whatsapp.com/channel/0029VaAR6kc8aKvFugYTm633



Related Posts with Thumbnails

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 1794 கள உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு!

⚡தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 1794 கள உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு!👨‍🔧


💡விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.10.2025 

காலியிடங்கள்: 1794

சம்பளம்: Rs.18,800 – 59,900/-

கல்வி தகுதி: Must possess National Trade Certificate / National Apprenticeship Certificate awarded by the National Council for Training and Vocational Trade in any one of the following trades: Electrician (or) Wireman (or) Electrical Trade under Centre of Excellence Scheme

வயது வரம்பு:
குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:
One Time Registration Fee – Rs.150/-
Examination Fee – Rs.100/-
BCM, BC, MBC / DC – Three Free Chances
Persons with Benchmark Disability, SC, SC(A) and ST, Destitute Widow – Full exemption

தேர்வு செய்யும் முறை: 
1.    Written Test
2.    Certificate Verification
3.    Physical Test

முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.10.2025

தேர்வு நடைபெறும் தேதி:
Paper I: 16.11.2025, 09.30 AM to 12.30 PM
Paper II: 16.11.2025, 02.30 PM to 05.30 PM

விரிவான தகவலுக்கும் விண்ணப்பிக்கவும்:👇
https://tnpsc.gov.in/examdashboard/web/index.aspx?notno=13/2025

நதிக்கரையைத் தொடர
WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VaAR6kc8aKvFugYTm633
Instagram: https://www.instagram.com/nadhikkarai/
Threads: https://www.threads.com/@nadhikkarai Related Posts with Thumbnails

விளையாட்டு வீரர்கள் ONGC வழங்கும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு வீரர்கள் ONGC வழங்கும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

ONGC நிறுவனம் 2025-26ம் ஆண்டிற்கான 21 விளையாட்டுகளில் திறமையான ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை உதவித்தொகையாக 250 விளையாட்டு உதவித்தொகைகளை வழங்க ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த உதவித்தொகை 15 முதல் 20 வயதுடைய, ஆண்டு வருமானம் 5 லட்சம் வரை உள்ள பின்தங்கிய நிலையில் இருக்கும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.


*விண்ணப்பிக்கவும் விபரம் அறியவும்:*

https://sportsscholarship.ongc.co.in/

*விண்ணப்பிக்க கடைசி தேதி:*

செப்டம்பர் 22-ம்தேதி முதல் அக்டோபர் 21-ம்தேதி மாலை 4 மணி வரை


விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.



விண்ணப்பதாரர்கள் தவறான சான்றிதழை அளித்தால், அதை நிராகரிக்கவும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் ONGCக்கு அதிகாரம் உண்டு.

*சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் :*

• பிறப்புச் சான்றிதழ்

• பாஸ்போர்ட் அல்லது ஆதார் அட்டை அல்லது 10-ம் வகுப்பு சான்றிதழ் (ஏதேனும் ஒன்று)

*தகுதிகள் :*

• இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

• 15 முதல் 20 வயதுக்குட்பட்ட விளையாட்டு வீரராக இருக்க வேண்டும்

• வேறு எந்த நிறுவனத்திடமிருந்தும் உதவித்தொகை பெற்றிருக்கக்கூடாது


*விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் வசதிகள் :*

• உதவித்தொகைக்கு தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர்களுக்கு TA/DA மற்றும் மற்ற போட்டிகளில் பங்கேற்பதற்கான தேவையான செலவுத்தொகை வழங்கப்படும்.

• உதவித்தொகைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர்களுக்கு, போட்டிகளில் பங்கேற்கும் போது ONGC இலட்சிணையுடன் (Logo) கூடிய விளையாட்டுப் பொருட்களும் வழங்கப்படும்.

• உதவித்தொகை பெற்றவர்கள் தங்களுக்காக மட்டுமே 5,00,000 ரூபாய்க்கு தனிநபர் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தைப் பெற முடியும்.


WhatsApp Channel:

https://whatsapp.com/channel/0029VaAR6kc8aKvFugYTm633

Instagram:

https://www.instagram.com/nadhikkarai/

Related Posts with Thumbnails

அண்ணா பல்கலைக்கழகம் வழங்கும் இலவச பொறியியல் பட்டப்படிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழிற்பயிற்சியுடன் கூடிய இலவச பொறியியல் (BE) பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கு டிப்ளமோ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை குறித்து விரிவாக காணலாம்.

இலவச பொறியியல் படிப்பு..

அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் HL Mando Anand India எனப்படும் தனியார் நிறுவனத்தின் முழு நிதி உதவியோடு எலெக்ட்ரானிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியல் பாடப்பிரிவில் தொழிற்பயிற்சியுடன் கூடிய பி.இ பட்டப்படிப்பு வழங்கப்படவுள்ளது. இந்த படிப்பில் சேரும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக வகுப்புகள் மற்றும் HL Mando நிறுவனத்தில் தொழிற்பயிற்சி ஆகிய இணைந்து வழங்கப்படும்.


உதவித்தொகையோடு பட்டப்படிப்பு :-

மேலும்  இந்த படிப்பிற்கான முழு கட்டணமும் தனியார் நிறுவனத்தின் மூலம் ஏற்கப்படும். தொழிற்பயிற்சிக்கான உதவித்தொகையாக (stipend) மாதம் ரூ.14,500 வழங்கப்படும்.  மேலும் மாணவர்களுக்கான கவ்லி கட்டணம், அட்மிஷன் கட்டணம், விடுதி செலவு, உணவு செலவு ஆகியவை அனைத்து அந்த தனியார் நிறுவனம் செலுத்தும்.

-------------------------------------

இதுபோன்ற தகவல்களைப் பெற சப்ஸ்கிரைப் செய்யுங்கள்..
நதிக்கரை வாட்ஸ்அப் சேனல் https://whatsapp.com/channel/0029VaAR6kc8aKvFugYTm633
-------------------------------------

விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள் யார்.?

  • இப்படிப்பில் சேர நுழைவுத் தேர்வு கிடையாது. டிப்ளமோ தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இட ஒதுக்கீடு முறை கடைப்பிடிக்கப்படும்.
  • மின்னணுவியல் மற்றும் கருவியியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம்,  இயந்திர பொறியியல், மின் பொறியியல், மின் மற்றும் மின்னணு பொறியியல், மின்னணு பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல்,  ஆகிய பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
  • டிப்ளமோ படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அரியர் வைத்திருக்கக்கூடாது.
  • விண்ணப்பதார்கள் 2022-23 / 2023-24 / 2024-25 ஆகிய கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.


இலவச பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்லைன் வழியாக மட்டுமே நடைபெறும். https://cfa.annauniv.edu/cfa/beintegrated.html என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும் என்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://cfa.annauniv.edu/cfa/beintegrated.html

APPLY LINK

ADMISSION NOTIFICATION

நன்றி: WWW.internetcafetamil.in

இதுபோன்ற தகவல்களைப் பெற சப்ஸ்கிரைப் செய்யுங்கள்..
நதிக்கரை வாட்ஸ்அப் சேனல் https://whatsapp.com/channel/0029VaAR6kc8aKvFugYTm633

Related Posts with Thumbnails

ராமேசுவரம் கோயிலில் 76 பேருக்கு வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிங்க!

ராமேசுவரம் கோயிலில் 76 பேருக்கு வேலைவாய்ப்பு! 12.03.2025க்குள் விண்ணப்பிங்க!

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 76 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12.03.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

தமிழ் புலவர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: தமிழ் பாடத்தில் பி.லிட் அல்லது பி.ஏ அல்லது எம்.லிட் அல்லது எம்.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,500 – 58,600

பிளம்பர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: பிளம்பர் பிரிவில் ஐ.டி.ஐ படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,000 – 56,900

காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 18

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,900 – 50,400

கருணை இல்லம் காப்பாளர் (பெண்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,900 – 50,400

துப்புரவு பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 27

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000 – 31,500

தூர்வை

காலியிடங்களின் எண்ணிக்கை: 26

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000 – 31,500

கால்நடை பராமரிப்பு (கோசாலை)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000 – 31,500

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:  

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://rameswaramtemple.in/ என்ற இணையதளப் பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.

முகவரி:
இணை ஆணையர்/ செயல் அலுவலர்,
அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில்,
இராமேசுவரம் நகர் மற்றும் வட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் - 623526

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.03.2025

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

https://drive.google.com/file/d/1bNJSKtyD7IZF6VQL8N-ibij_TKpl8ad9/view?usp=sharing

Related Posts with Thumbnails

wibiya widget