கார்ப்பரேட் கல்ச்சர் கஷ்டங்கள்...

கார்ப்பரேட் கம்பெனிகள் என்ற பெயரில் இன்று இந்தியா முழுவதும் சில்லறைக் கடை முதல் சிலிக்கான் சிப் கம்பெனிகள் வரை எண்ணற்ற பன்னாட்டு நிறுவனங்கள் கால்பதித்துள்ளன. இவர்களுடைய சட்ட திட்டங்களைப் பார்த்தாலே தலைசுற்றும். நண்பர் பிகேபி தம்முடைய வலைப்பதிவில் (படிக்க http://pkp.blogspot.com ) குறிப்பிட்டதுபோல கார்ப்பரேட் என்ற பெயரில் நடக்கும் கூத்துகள் சில ரசிக்கும் படியாக இருந்தாலும், பல ரசிக்கத்தக்கதாக இல்லை என்பதே உண்மை. பன்னாட்டு நிறுவனங்களைப் பார்த்து நம் நாட்டு நிறுவனங்களும் மாறுவது இன்னும் கொடுமையான வி்ஷயம். குறிப்பிட்ட கால இடைவெளியில் நிறுவணங்கள் பணியாளர்கள் மீது சுமத்தும் பழிகளும் அதனைத் தொடர்ந்து நடக்கும் பதவி பறிப்பு நிகழ்வுகளும் அனுபவித்தவர்கள் சொல்லக் கேட்டதுண்டு. உதாரணத்திற்கு சில உண்மைச் சம்பவங்கள், என் நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டது, நண்பர் பணிபுரிந்தது முன்னனி இந்திய நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு மேலாளராக. அவர் அங்கு பணிக்கு சேரும்முன்பே வேறு சில நிறுவனங்களில் சாதாரண சூப்பர்வைசராக பணிபுரிந்திருக்கிறார். இந்த கம்பெனியிலும் அப்படிப்பட்ட ஒரு வேலைக்குத்தான் இவர் விண்ணப்பித்திருந்தார். ஆனால், இவருடைய அனுபவத்தைப் பார்த்து விற்பனை மேலாளராக பதவியமர்த்தியது. மாத சம்பளம் ரூ. 12,000/- + P.F. + T.A (டிராவலிங் அலவன்சு) என்று வாரிவழங்கியதில் மனிதர் உற்சாகத்தில் மிதந்தார். தினமும் கால் டாக்சியில்தான் போவார். (டூ வீலர் பயன்படுத்தினால் கம்பெனிக்கு கெளரவம் இல்லை. கார் அலவன்சு இன்னும் 3 மாதமாகும். அதனால் கம்பெனி காட்டிய கரிசனம் (கண்டிப்பு) இது). கம்பெனி சார்பாக வெளியூர் சென்றால் ஐந்து நட்சத்திர ஹோட்டலில்தான் தங்கவேண்டும். அப்புறம் அங்கே கஷ்டமர்களைக் கவர மது வகையுடன் பார்ட்டி ஏற்பாடு செய்வது என்று தொடங்கி ஏகப்பட்ட சலுகைகள். நண்பருக்கு கேட்கவா வேண்டும், குடிப்பழக்கம் இல்லாதவர் பார்ட்டிகளில் குடிக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி, பார்ட்டி இல்லாத நாட்களிலும் குடிக்க ஆரம்பித்திருந்தார். இதற்கிடையில் வெளியூர் பயணத்திற்கு கம்பெனி செலவை ஏற்றுக்கொண்டாலும் சில சமயங்களில் பணம் அக்கவுண்ட்டில் விழ காலதாமதமாகும்போது கைக்காசை செலவு செய்யவேண்டிய கட்டாயத்தில், ஒன்றிரண்டு கிரெடிட் கார்டுகளையும் வாங்கிவைத்துக்கொண்டார். அதற்குள் 4 மாதங்கள் கடந்துவிட்டிருந்தது. அதன்பிறகுதான் கம்பெனி தன்னுடைய வேலையைக் காட்ட துவங்கியது. சேல் டார்கெட் என்னவாயிற்று? ஏன் இந்த மாதம் குறைவு? சேல்ஷ் குறைந்தால் உங்கள் சேலரியில் பிடித்தம் செய்யப்படும் என்று அடுக்கடுக்கான memoக்களை வாரி வழங்கத்தொடங்கயது. மனிதர் அரண்டுபோனார். சம்பாரித்ததெல்லாம் ஆடம்பர வாழ்க்கையில் கரைந்துபோனது. கிரெடிட் கார்டு கம்பெனி கழுத்தைப் பிடிக்க, மஞ்சள் கடிதாசி கொடுக்கும் நிலைமையில் வந்து என்னிடம் புலம்பினார். சூப்பர்வைசராவே நான் இருந்திருக்கலாம் சார் என்று! எனக்கு ஏற்பட்ட அனுபவம் இன்னும் சுவாரசியமானது. தமிழ் பத்திரிக்கை தொடங்குவதாகக் கூறி என்னை பணியமர்த்தினார்கள். இரண்டு மாதமாகியும் பத்திரிக்கை தொடங்கவேயில்லை. ஆனால் தினமும் Day Report கொடுக்கவேண்டும். நாங்கள் மொத்தம் ஆறு பேர். எங்களை நிர்வகிக்க ஒரு Administrative. இதெல்லாம் எதற்கு முதலில் பத்திரிக்கை வெளிவரட்டும் பிறகு சரிசெய்துகொள்ளலாம் என்று ஆலோசனை சொல்பவர்களை எட்டப்பன்போல் பார்ப்பார் அந்த நிர்வாகி. அடுத்த நாளே எங்களுக்கு அழைப்பு வரும். ஆலோசனை சொன்னவருடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்று. ஒரு மாதம்தான் வேலை தொடர்ந்து இருந்தது. அது மாதப் பத்திரிக்கையானதால் இரண்டு மாதத்திற்கான வேலைகளை முடித்துவிட்டோம். அதன்பிறகு வேலை எதுவும் செய்வதற்கு இல்லை. அப்படியிருந்தும் தினமும் வேலை ஏன் செய்யாமல் இருக்கிறீர்கள். உங்களுக்கு கம்பெனி மீது அக்கறையே கிடையாதா? இப்படி இருந்தால் கம்பெனியை எப்படி நடத்துவது? என்று ஒருபக்கம் டார்ச்சர். வேலை இல்லாமல் எதைச் செய்வது என்று கேட்டால் அவர்களுக்கு Memo. நி¡வாகியிடம் நேரடியாக எதையும் பேசமுடியாது, கார்ப்பரெட் கல்ச்சர் என்று சொல்லி எதுவா இருந்தாலும் Adminகிட்டதான் நீங்க சொல்லணும் என்று கோபிப்பார். இது என்ன தொந்தரவாகப் போனதே என்று நினைத்திருந்த வேளையில் திடீரென்று Admin வேலையில் இருந்தவர் ஆள் ஓடியே போய்விட்டார். அப்புறம் என்னை அந்த இடத்தில் அமர்த்துவதாக சொன்னார். அதற்குள் அலுவலகத்தில் பணியிலிருந்தவர்கள் ஒவ்வொருவராய் ஓடத்தொடங்கினர். எல்லா பணிகளுக்கும் என்னையே அழைப்பார், எதுவும் நம்முடைய கருத்து என்று எதுவும் அங்கு இருக்காது. அவர்களுடைய எண்ணம் எதுவோ அதுவே செயலாக இருக்கவேண்டும். அப்படித்தான் ஒருநாள் நிர்வாகி தன்னுடைய அறைக்கு பெயிண்ட் அடிக்க முடிவு செய்து என்னை அழைத்து, இந்த அறைக்கு ஆரஞ்சு கலரில் பெயிண்ட் அடித்தால் நன்றாக இருக்குமல்லவா என்றார். நான் சொன்னேன் அது அவ்வளவு நல்லா இருக்காது என்று. ஆனால் அவரோ உனக்கு ஒன்றும் தெரியாது அதுதான் நன்றாக இருக்கும் வெளிச்சுவரில் ஆரஞ்சு டிஷ்டம்பர் நன்றாக இருக்கிறதே, உள்ளேயும் அதையே அடிப்போம் என்று சொல்லி என்னை அழைத்துச் சென்று பெயிண்ட் வாங்கினார். அப்புறம் அன்று முழுக்க பெயிண்ட் அடித்து முடியும் வரை எவ்வளவு நல்லா இருக்கிறது என்று சொல்லிச் சொல்லி வெறுப்பேற்றினார். அடுத்த நாள் வந்தார் வந்தவர் நேராக தன்னுடைய அறைக்குப் போனார். அமர்ந்தார். அப்புறம் என்னை அழைத்தார் இண்டர்காமில். அடியேன் போய் நின்றதும் என்ன இது இப்படி பெயிண்ட் அடித்திருக்கிறார்கள். சரியில்லை நான் நினைத்த கலரே வரவில்லை. நேற்று நான் கொடுத்த பெயிண்ட் கலர் வரவில்லை. ஒரு கோட் அடித்தாலே போதும், ஆனால் இரண்டு கோட் அடித்தும் நான் நினைத்த கலர் வரவில்லை. அவர்கள் சரியாக அடிக்கவில்லை இந்த கலர் சரியில்லை நீ சரியாக கவனிக்கவில்லை, பெயிண்டர்கள் உன்னை ஏமாற்றிவிட்டார்கள். உடனே போய் அவர்களை அழைத்துவந்து Light Blue Colourக்கு மாற்றி பெயிண்ட் அடிக்கசொல் என்று சரமாரியாக பொரிந்தார். இப்படியே போனால் நம் புத்தி மழுங்கிப்போகும். இதற்குமேல் இங்கிருந்தால் நமது சுயமரியாதை என்னாவது என்று வேலையை நானே தூக்கியெறிந்தேன். அப்புறம் இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறேன். சில மாதங்களுக்கு முன் விசாரித்ததில் கடன் வாங்கி பணத்தை வாரி இரைத்து தொடங்கிய அந்நிறுவனம் இன்று இருந்த சுவடேயில்லாமல் காணமல்போய்விட,. அந்த நிர்வாகியும் தலைமறைவாகிவிட்டாராம். Related Posts with Thumbnails

நதிக்கரை பற்றி...

உலகமெங்கும் மனித சமூகத்தின் வாழ்வாதாரமாய் நாகரிகத்தின் தொட்டிலாய் நைல் (நைல் நதி நாகரிகம்), சிந்து (சிந்து சமவெளி நாகரிகம்), கங்கை, பிரம்மபுத்திரா, தேம்ஸ் போன்ற நதிகளைக் குறிப்பிடுவார்கள். அங்ஙனமே காவிரி, வைகை, தாமிரபரணி, நொய்யல் ஆகிய நம் ஊர் நதிகளும் நமக்கு வழங்கியது அத்தகைய நல்வாழ்வுதான். மனித சமூகத்திற்கு அன்னையாய் தந்தையாய் இருந்த நதியும் கரையும் நமக்கு இன்று அந்நியப்பட்டுப் போய் கொண்டிருக்கின்றன. நதிநீர் பங்கீட்டுச் சண்டைகளும், கழிவு நீர் கலப்பு, சுற்றுச் சூழல் மாசு என்று எத்தனையெத்தனை வழிகளில் ஒரு நதிக்கு தீங்கிழைக்க முடியுமோ, அதனுடைய போக்கை கட்டுப்படுத்தமுடியுமோ அத்தனை விதமாகவும் மனித சமூகம் முயன்றுகொண்டிருக்கிறது. நதிகள் நமக்கு தந்த நல்வாழ்வை இப்போது அவற்றிற்கு தரவேண்டிய கடமை நமக்கும் இருக்கிறது. ஆம் அவற்றோடுதான் நம் வாழ்வும் பிணைந்தேயிருக்கிறது.
மீண்டும் நாம் நதிக்கரைகளைத் திரும்பிப் பார்க்கவும், அன்போடு நினைவு கூறவும், அவற்றைக் காக்கவும் புறப்படுவோம். புது வெள்ளமாய்...

நதிக்கரை இரண்டு பிரிவாக பதிவேற்றப்படுகிறது. ஒன்று சமூகம், அரசியல், அறிவியல் தகவல் கட்டுரைகளுடன் nathikarai.blogspot.com என்ற தளத்திலும் இரண்டு கலை, இலக்கியம், வரலாறு சார்ந்த பதிவுகளுடன் nadhikarai.wordpress.com என்ற தளத்திலும் பதிவேற்றப்படுகிறது. படித்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். நன்றி! Related Posts with Thumbnails

wibiya widget