கூகுள் - பிங் - காஃபெய்ன் தேடல்படம் 1. கூகுள் தேடலில் இந்தியாவிற்கான தேடல்

படம் 2. மைக்ரோசாப்ட் பிங்கில் இந்தியாவிற்கான தே
டல்

படம் 3. கூகுள் காஃபெய்னில் இந்தியா விற்கான தேடல்.
மைக்ரோ
சாப்ட்டின் பிங் தேடலுக்கு ஈடுகொடுக்க கூகுளும் களத்தில் குதித்தது.தனது புதிய தேடல் இயந்திரத்திற்கு காஃபெய்ன் (Google Caffeine) என்று அது பெயரிட்டுள்ளது. தற்போது சோதனை பதிப்பாக வெளிவந்திருக்கும் காஃபெய்ன் நாம் தேடும் விபரங்களை கூகுள் தேடலை விட விரைவாகவும், பிங் தேடலைவிட அதிக அளவு இணையப் பக்கங்களில் தேடியும் தருகிறது. மைக்ரோசாப்ட் பிங்கில் தேடல் தகவலின் வலதுபுறம் அவ்விணைப்பு பக்கத்தில் உள்ள விபரத்தின் சிறு அளவு தொகுப்பும் கிடைக்கிறது. அது கூகுள் தேடல் மற்றும் காஃபெய்ன் தேடலில் இல்லை. ஆயினும் பொதுவாக தேடல் விஷயத்தில் கூகுளின் புதிய காஃபெய்ன் சோதனை (பீட்டா) பதிப்பு சிறப்பாகவே இருக்கிறது. இப்பதிப்பு குறித்து இன்டெர்நெட் பயன்பாட்டாளர்களின் கருத்துக்களை கூகுள் கேட்டிருக்கிறது. வரும் நாட்களில் அதனையொட்டி பல புதிய மேம்படுத்தப்பட்ட வசதிகள் கிடைக்கும் என்று நம்பலாம்.
Related Posts with Thumbnails

0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

wibiya widget