பசீரா வீடியோ கன்வர்ட்டர் சூட்

வீடியோ கன்வர்ட் செய்யும் மென்பொருள்கள் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கின்றன. அப்படி புதிதாக வந்திருக்கும் மென்பொருள்தான் பசீரா.
இது AVI, MPEG, MP4, MOV, WMV, FLV, M4V, 3GP. ஆகிய வீடியோ பார்மட்களை ஆதரிக்கக் கூடியது. வீடியோவை மட்டுமல்லாத வீடியோவிலிருந்து ஆடியோவையும் பிரித்துத் தரக்கூடியதாக உள்ளது. மாற்றக்கூடிய ஆடியோ பார்மட்கள் MP3, WMA, OGG, WAV, AAC, AC3, FLA.
இது சிறிய சிறிய பல மென்பொருள்களின் தொகுப்பாக உள்ளது.

Pazera Free FLV to AVI Converter     1.3
Pazera Free Video to Flash Converter   1.1
Pazera Free 3GP to AVI Converter     1.3
Pazera Free Video to 3GP Converter    1.2
Free Zune Video Converter         1.1
Pazera Free PSP Video Converter      1.1
Pazera Free Video to iPod Converter    1.1
Pazera Free MP4 to AVI Converter     1.4
Pazera Free MOV to AVI Converter     1.3
Pazera Free Audio Extractor        1.4இவற்றை தேவைக்கேற்றபடி தனித்தனியாகவும் டவுன்‌லோட் செய்து கொள்ளலாம்.
அல்லது பசீரா வீடியோ கன்வர்ட்டர் சூட்டை முழுவதுமாகவும் டவுன்லோட் செய்யலாம். அளவு 34 MB தான்.
டவுன்லோட் செய்தபிறகு
ஜிப் பைலை Extract  செய்து கணினி அல்லது பென்டிரைவில் பதிந்து போர்ட்டபிளாக பயன்படுத்தலாம்.
http://www.pazera-software.com/download.php?id=0023&f=Pazera_Video_Converters_Suite.zip

விதவிதமாக வரும் வீடியோ கன்வர்ட்டர் மென்பொருள்களைப் பார்க்கும்போது கன்வர்ட் செய்வதற்கு வீடியோக்களுக்கு பஞ்சம் வந்துவிடும் போலிருக்கிறது!
. Related Posts with Thumbnails

கூகுளின் அடுத்த அதிரடி கூகுள் வாலட்

எதிர்பார்க்காத ஒன்றை  திடீரென்று சந்தையில் நுழைத்து சாதிப்பது கூகுளின் சாமர்த்தியம், அ‌ப்படித்தான் இப்போது கூகுள் மே 26இல் நியூயார்க் நகரில் வெளியிட்ட அறிவிப்பும் இருந்தது.
இந்த முறை கூகுள் நுழைந்திருப்பது பணபரிமாற்ற  சேவை அதாவது  நாம் பயன்படுத்தும் மொபைல் போனிலிருந்து விரும்பியதை வாங்குவதற்கான மொபைல் பேமண்ட் சேவை. இச்சேவைக்கு கூகுள் வாலட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இச்சேவையில் கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு போல பிளாஸ்டிக் அட்டையாக இல்லாமல் போன் திரையில் விர்ச்சுவல் கார்டாக காட்டப்படும் என்றும், இந்த அப்ளிகேசனில் நமக்கான  பின் எண்ணை அழுத்தி நுழைந்து பேமண்ட்களை அனுப்ப முடியும்.
இந்த சேவை சிட்டி  பேங்க் (Citi Bank), மாஸ்டர் கார்டு (Master Card), பேபாஸ்(Pay Pass) நிறுவனங்களின் கூட்டணியில் ஸ்பிரிண்ட் நெக்ஸஸ் எஸ் 4 ஜி (Nexus S 4G by Google, available on Sprint).ஆண்ட்ராய்ட் போனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் மட்டுமே சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் பிற நாடுகளுக்கும் விரிவு படுத்தப்படும் எனத் தெரிகிறது.‌
கூகுள் வாலட் பற்றி மேலும் அறிய http://www.google.com/wallet/ என்ற இணைய முகவரிக்கு செல்லவும்.
. Related Posts with Thumbnails

அனைத்து மென்பொருள்களுக்குமான ஷார்ட்கட் கீகள்


நாம் பயன்படுத்தும் வேர்ட், எக்செல், அக்ரோபேட் ரீடர், மீடியா பிளேயர் மற்றும் பல மென் பொருள்களை எளிதாகவும் வேகமாகவும்   கையாள குறுக்கு விசைகள் (Short Cut Keys) பயன்படுகின்றன. இந்தக் குறுக்கு விசைகளை அறிந்து கொள்ள எங்கும் தேடாமல் அனைத்து மென்பொருள்களுக்கும் ஒரே தளத்தில் குறுக்கு விசைப்பட்டியல் உள்ளது. இத்தளத்தில் நீங்கள் எந்த மென்பொருளுக்கான குறுக்கு விசை தேவையோ அம்மென்பொருளின் பெயரைக் கொடுத்தால் போதும். உடனே அம்மென் பொருளுக்கான குறுக்கு விசைப்பட்டியல் கிடைக்கும். உதாரணமாக, வேர்ட் 2007க்கான குறுக்கு விசைப் பட்டியல் தேவையென்றால் வேர்ட் 2007 என்று கொடுத்து தேடலாம். வேர்ட் என்று மட்டும் கொடுத்தால் அதன் வேர்ட் 97/2000, எக்ஸ்பி, 2003, 2007, 2010 என அனைத்து பதிப்புகளையும் பட்டியலிடும். அதில் தேவையானதைத் தேர்ந்தெடுக்கவேண்டும். இணையதள முகவரி: http://www.keyxl.com/

மேற்கண்ட தளத்தைப் போலவே ஷார்ட் கட் கீகளைத்தரக் கூடிய மற்றொரு தளம்: http://www.shortcutworld.com
இத்தளத்தில்  விண்டோஸ் மென்பொருள்களான

ஆகிய அனைத்து மென்பொருள்களுக்கும் ஷார்ட்கட் கீ தொகுப்பு கிடைக்கிறது.
அதே போல
http://shortcutkeys.net/
மற்றும்
http://www.computerhope.com/shortcut.htm என்ற தளத்தில் கீழ்க்கண்ட ஷார்ட்கட் கீ தொகுப்புகள் கிடைக்கின்றன.
Basic PC shortcut keys
F1 - F12 function keys
Top 10 keyboard shortcuts
Linux / Unix shortcut keys
Apple shortcut keys
Microsoft Windows shortcuts
Microsoft Excel shortcut keys
Microsoft Word shortcut keys
Internet Explorer shortcut keys
Microsoft FrontPage shortcut keys
Microsoft Outlook shortcut keys
Related Posts with Thumbnails

கணினிப் பராமரிப்பும் பாதுகாப்பும்

நம் வீட்டுக் கணினியானாலும் அலுவலகக் கணினியானாலும் பயன்
படுத்தும் முறையில் வேறுபாடு இருந்தாலும் பராமரிப்பு மற்றும் பாது
காப்பு முறை என்பது இரண்டிற்கும் பொதுவானதுதான்.
சீரான மின்சாரம்
கணினியை தூசி, வெப்பம் படாமல் சுத்தமான அறையில் வைத்தி
ருப்பது அவசியம். மின் இணைப்பு சரியான முறையில் இணைக்கப்பட்டிருக்கவேண்டும். இதற்கு ஸ்பைக் பஸ்டர் (Spike Buster) எனப்படும் மின்பகிர்வானைப் பயன்படுத்தலாம். கணினியில் ஷாக் அடிக்குமானால் அதற்கு முறையாக எர்த் (Earth) அமைக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். இந்நிலையில் தொடர்ந்து   வைத்திருப்பது கணினிக்கு மட்டுமல்ல நமக்கும் ஆபத்தே. கணினிக்கான யுபிஎஸ் (UPS)-சில் மானிட்டர் மற்றும் சிபியு (CPU)-விற்கான  மின்சாரத்தை வழங்கும் அளவிற்கு மட்டுமே திறன் இருக்கும். கூடுதலாக பிரிண்டர், ஹோம் தியேட்டர் ஆகியவற்றை இணைப்பது பேட்டரியின் ஆயுளையும், மின் சேமிப்புத் திறனையும் குறைக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
வைரஸ் பரிசோதனை
கணினி விளையாட்டுக்கள் இலவசமாக கிடைக்கிறது என்று வாங்கியோ அல்லது இணையத்திலிருந்து பதிவிறக்கியோ பயன்படுத்தும்போது வைரஸ் ஸ்கேனர்களைக் கொண்டு பரிசோதிக்கவும். இதே நடைமுறையை வெளியிடங்களிலிருந்து வாங்கிப் பயன்படுத்தும் பென் டிரைவ், சிடி, மெமரி கார்டுகளுக்கும் கடைபிடிக்கவேண்டும்.
ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்களில் தற்போது எது சிறந்தது என்பதையும், கணினியின் வேகத்தை குறைக்காததாகவும் இருக்கக் கூடியதை கணினி வல்லுநரிடம் கலந்தாலோசித்து பதியவும். இலவசமாக கிடைப்பதை விட விலை கொடுத்து வாங்குவது கூடுதல் பாதுகாப்பைத் தரும்.  ஆண்ட்டி வைரஸ் தொகுப்பை எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்கவும். இணைய இணைப்பு இருந்தால் அதுவாகவே அப்டேட் செய்துகொள்ளும் அல்லது வாரத்திற்கு இருமுறையாவது நாம் அப்டேட் செய்யவேண்டும். அப்போதுதான் சிறப்பான செயல்பாடு இருக்கும். அதேபோல ஒரு கணினியில் ஒன்றிற்கும் மேற்பட்ட ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இது கணினியின் வேகத்தை குறைக்கும் அத்துடன் ஒன்றிற்கொன்று முரண்பட்டு கணினியின் செயல்பாட்டை முடக்கும் நிலைகூட ஏற்படலாம்.
கோப்பு சீரமைப்பு
நாம் பயன்படுத்தும் மென்பொருள்களால் உருவாக்கப்படும் தற்காலிக கோப்புகளையும், இணையத்தைப் பயன்படுத்தும்போது உருவாகும் தற்காலிக கோப்புகளையும் தினமும் அழித்திடவேண்டும். இதற்கு சிகிளீனர் (C Cleaner) போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்தலாம்.  இரண்டு மாதத்திற்கு ஒரு முறையேனும் கணினியை டீப்ராக்மென்டர் டூல் (Defragment)ஐ பயன்படுத்தி சிதறி இருக்கும் கோப்புகளை சீராக்க வேண்டும். இதனால் கணினி விரைவாக இயங்கும்.
கணினி இயங்கும்போது அதன் தட்ப வெப்பம் மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காற்றாடி சரியான  சுழற்சி வேகத்தில் சுழலாமல் இருந்தால் அக்காற்றாடியினை உடனடியாக மாற்ற வேண்டும்.
கணினியின் கோப்புகளை பயன்படுத்துவதில் தனி கவனம் செலுத்த
வேண்டும். ஒன்றிற்கும் மேற்பட்ட பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் ஹார்ட் டிஸ்க்கின் நினைவகத்தில்  சி டிரைவ் (C Drive) என்பது பொதுவாக மென்பொருள்களை பதிவதெற்கென்று ஒதுக்கப்படும் இடமாகும். இங்குதான் கணினியை இயக்கும் அனைத்து மென்பொருள் களும் பதியப்படும். அந்தப் பகுதியில் உங்களுடைய தனிப்பட்ட கோப்புகளை பதிவதைத் தவிர்க்கவும். அடுத்துள்ள டி (D), ஈ (E), எப் (F) என ஹார்ட் டிஸ்க் அளவிற்கு ஏற்ப இரண்டிற்கும் மேற்பட்ட அளவில் பிரிக்கப்பட்ட டிரைவ்களில் பதிவது நல்லது. இதனால் ஏதேனும் காரணத்தால் கணினி செயலிழக்க நேர்ந்தால் சி டிரைவை அழிக்கும் (Format) கட்டாயம் நேரலாம் அப்போது நம்முடைய கோப்புகள்  வேறு டிரைவ்களில் இருப்பதால் பாதுகாக்கப்படும்.
, Related Posts with Thumbnails

போட்டோஷாப் பிரஷ்கள் இலவசம்

போட்டோ‌ஷாப்பில் பிரஷ் டூலைப் பயன்படுத்தி விதவிதமான டிசைன் பேட்டர்ன்கள், ஸ்பெஷல் எபெக்ட்கள், மேகங்கள், அருவி, பூக்கள், பார்டர்கள் என பலவித வேலைப்பாடுகளை செய்ய ரெடிமேட் பிரஷ்களைப் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய பிரஷ்களை இலவசமாக தரும் தளம் ஒன்று உள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட‌ பிரஷ்களை இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.
தளத்தின் முகவரி:   http://photoshopbrushes.eu/

இந்த பிரஷ்களை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாதவர்களுக்கு
போட்டோஷாப்பில்  பிரஷ் டூலை (Short cut - B) செலக்ட் செய்தால் படம் 1இல் உள்ளபடி ‌பிரஷ் டூலும் மெனுபாரில் டிபால்ட்டாக உள்ள பிரஷ் படமும் காட்டப்படும்.

 
டிபால்ட் பிரஷ் படத்திற்கு அருகில் உள்ள பிரஷ் மெனு ஏரோவை கிளிக் செய்தால் படம் 2இல் உள்ளவாறு பிரஷ்களின் படம் தெரியும். அதில் பிரஷ் அளவு காட்டப்படும் இடத்தில் காட்‌டப்படும் வலதுபக்கம் நோக்கிய அம்புக்குறியை கிளிக் செய்ய தோன்றும் மெனுவில் லோட் பிரஷ் (Load Brushes) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
 படம் 3இல் உள்ளபடி நீங்கள் டவுன் லோட் செய்த பிரஷ் இருக்கும் இடத்தில் தேவையான பிரஷ்ஷை செல‌க்ட் செய்து லோட் என்பதைக் கிளிக் செய்யவும்.
இப்பொழுது நீங்கள்  லோட் செய்த பிரஷ்களை கீழே அம்புக்குறியிட்டுள்ள இடத்தில் காட்டப்படும். இனி அதில் எந்த வடிவம் தேவையோ அதனை தேர்ந்தெடுத்து அதன் அளவை மேலே உள்ள அம்புக்குறி காட்டும் இடத்தில் தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
. Related Posts with Thumbnails

லிப்ரே என்றால் சுதந்திரம்

நம் வீட்டிலும், அலுவலகங்களிலும் உபயோகத்தில் உள்ள பெரும்பான்மையான கணினிகளில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் அல்லது ஓப்பன் ஆபிஸ் மென்பொருள் தொகுப்பு கட்டாயமாக இடம் பெற்றிருக்கும்.

மைக்ரோசாப்ட் ஆபிஸ் (MS Office) தொகுப்பில் வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட் ஆகியவை முக்கியமான மென்பொருள்கள். அதேபோல ஓப்பன் ஆபிஸில் (Open Office) இவற்றின் பெயர் ரைட்டர், ஸ்பிரட் சீட், பிரசன்டேசன் என வழங்கப்படுகிறது. இம்மென்பொருள்களைப் பற்றி கணினி கற்ற அனைவரும் அறிந்தே வைத்திருப்பர்.
மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருள் தொகுப்பை விலை கொடுத்துதான் வாங்கவேண்டும். இது சுமார் ரூ. 6000 என்ற விலையில் கிடைக்கிறது. இத்தொகுப்பை வாங்கினால் ஒரு கணினிக்கு மட்டுமே பயன்படுத்தமுடியும். அதே ஓப்பன் ஆபிஸ் தொகுப்பாக இருந்தால் எத்தனை கணினிகளுக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கட்டணம் இல்லை. ஏனென்றால் அது கட்டற்ற இலவச (Open Source Software) மென்பொருளாகும்.
கட்டற்ற அல்லது சுதந்திர மென்பொருள் என்பது ஒருவருக்கு மட்டுமே சொந்தமானதல்ல, அதைப் பயன்படுத்த எவ்விதக் கட்டணமோ, அனுமதியோ தேவையில்லை. அதை உருவாக்கப் பயன்பட்ட நிரல்களை (Source Code) எவரும் தமது விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்துப் பயன்படுத்தலாம். ஆனால் மைக்ரோசாப்ட் மென்பொருள் தொகுப்பை அவ்வாறு பயன்படுத்த முடியாது.
அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் உலகின் பல நாடுகளும் குறிப்பாக இந்தியாவிலும் ஓப்பன் ஆபிஸ்  மென்பொருளே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இத்தகு சிறப்பு வாய்ந்த ஓப்பன் ஆபிஸ் மென்பொருளை உருவாக்கிய சன் மைக்ரோ சிஸ்டம் நிறுவனம் நிதிநிலை காரணமாக ஆரக்கிள் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. இது  உலகெங்கும் உள்ள தன்னார்வ மென்பொருள் வல்லுநர்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியது. ஏனெனில்  பிரபலமான சன் சொலாரிஸ் இயங்குதளம், ஜாவா கணினிமொழி, ஓப்பன் ஆபிஸ் என திறந்த நிரல் மென்பொருட்களை ஆதரித்து இலவசமாக வழங்கி வந்த சன் மைக்ரோ சிஸ்டம் போல ஆரக்கிள் நிறுவனம் நடந்து கொள்ளாது, அது ஒரு தேர்ந்த வியாபாரி என்பதைத் திறந்த நிரல் பங்களிப்பாளர்கள் உணர்ந்தே உள்ளனர்.
எதிர்பார்த்தது போலவே ஆரக்கிளும் ஓப்பன் ஆபிஸ் மென்பொருளுக்கு இனி யாரும் நிரல் எழுதி மேம்படுத்தக் கூடாது என்றது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் தற்போது  எழுதலாம் என்றிருக்கிறது. இது குறித்து முன்பே எச்சரிக்கையடைந்திருந்த ஓப்பன் சோர்ஸ் குழுக்கள் டாக்குமெண்ட் ஃபவுண்டேஷன் என்ற இணையதளத்தை தொடங்கி அதில் லிப்ரே ஆபிஸ் (Libre Office) என்ற மென்பொருளை வெளியிட்டனர்.
இது ஓப்பன் ஆபிஸ் மென்பொருளின் நிரலைப் பயன்படுத்தியே உருவானது. தற்போது இம்மென்பொருளுக்கே தன்னார்வ மென்பொருள் நிரலாளர்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளை பதிவிறக்கம் செய்யும் முகவரி:www.libreoffice.org/
. Related Posts with Thumbnails

ஆன்லைனில் இசைக் களஞ்சியம்

அலுவலகப் பணி நேரத்தில் வேலையுடன் மனதிற்கு பிடித்த இசையைக் கேட்பது சற்று இதமாக இருக்கும். ஒரே மாதிரியான திரையிசையை கேட்டு அலுத்துப் போனவர்களும் வித்தியாசமான இசையை கேட்க விரும்புவோருக்கும், பிற இந்திய மொழிப் பாடல்களை கேட்டு ரசிக்கலாம். இணைய இணைப்பு உள்ளவர்கள் மட்டுமே கேட்க முடியும் என்பதை கவனத்தில் கொள்க.
அனைத்து இந்திய மொழித் திரை இசைப் பாடல்களையும், கிராமிய, மேற்கத்திய, கர்நாடக இசைப் பாடல்கள், நாடகம், நகைச்சுவை எனப் பலவகை ஒலிக் கோப்புகளையும் விரும்பியதைத் தேடி ஆன்லைனில் கேட்கலாம். விருப்பங்களை பட்டியலாக்கி(Play List) நமது கணக்கில் ஆன்லைனிலேயே சேமிக்கவும் முடியும்.
இத்தளங்கள் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருக்கக் கூடும். அப்படித் தெரியாதவர்கள் பயன்படுத்திப் பாருங்கள். உங்களுக்கு‌ப் பிடிக்கும்.
http://www.musicindiaonline.com
http://www.raaga.com

1937 முதல் தற்போது வரையுள்ள தமிழ் திரைப் பாடல்கள் மட்டுமே உள்ள தளம்: http://www.thiraipaadal.com Related Posts with Thumbnails

கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா?

ஆப்பிள் நிறுவன ஐபோன்களுக்கும், பிளாக் பெர்ரி போன்களுக்கும் போட்டியாக கூகுள் நிறுவனம் களமிறக்கிய ஆண்ட்ராய்ட் இயங்குதளம்  (Android OS) பதிந்த போன்கள் இன்று சந்தையில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கின்றன.  ஐபோனிற்கு இணையான அம்சங்களோடும் விலையில் அதைவிட நான்கில் ஒரு பங்கு அளவிலும் இருப்பதே இதன் விற்பனை அதிகரிப்பிற்கு முக்கியக் காரணமாகும்.
ஆண்ட்ராய்ட் இயங்குதளம் என்பது கணினிக்கு எப்படி விண்டோஸ், லினக்ஸ், மேக் இயங்குதளங்கள் உள்ளனவோ அதுபோல கைபேசி (Cell Phone) , இணையக் கணினி (Net PC), டேப்ளட் பிசி (Tablet PC) க்களுக்காக உருவாக்கப்பட்ட ஓர் இயங்குதளமாகும். இதனை முதன் முதலில் ஆண்ட்ராய்ட் இன்க் என்ற நிறுவனம் உருவாக்கியது. இந்நிறுவனத்தை 2005இல் கூகுள் வாங்கியது.
அதன் பின்னர் 2007இல் மோட்டேரோலா(Motorola) சாம்சங் (Samsung), எல்ஜி (LG), டிமொபைல் (T-Mobile), ஹெச்டிசி (HTC), பிராட்காம் கார்ப்பரேசன் ( Broadcom Corporation), இண்டெல் (Intel), என்வீடியா (Nvidia), குவால்காம் (Qualcomm) மற்றும் பல முன்னணி நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து ஓப்பன் ஹேண்ட்செட் அல்லயன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியது‌. அதன் மூலமாக ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை மேலும் மேம்படுத்தி வெளியிட்டது.
இதில் ஜாவா நிரல்களைக் கொண்டு எவர்வேண்டுமானாலும் கூடுதல் பயன்பாட்டிற்கான சிறு சிறு மென்பொருள்களை(Add-on applications) உருவாக்கி இணைத்துக் கொள்ளமுடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
இந்த வகையில் இன்று ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்ட் பதிந்த கைபேசிகளில் இணையப் பக்கங்களைப் பார்ப்பது, கூகுள் மேப், ஆர்குட் சமூக வலைத்தள சேவை, பிற கணினிகளுடன் இணைப்பது எனப் பல வசதிகள்  உள்ளன. இது போட்டியாளர்களின் தயாரிப்புகளுக்கு சற்றும் சளைத்ததல்ல என்பது உண்மையே. இத்தனை சிறப்புகள் இருப்பினும் ஆண்ட்ராய்டுக்கு எதிர்ப்புக் குரல்களும் அவ்வப்போது எழவே செய்கின்றன.
கூகுள் ஆண்ட்ராய்டில் தனது ஜாவா நிரல் காப்புரிமையை மீறிவிட்டதாக ஆரக்கிள் நிறுவனம் குற்றம் சாட்டியது. மேலும் ஆண்ட்ராய்ட் கைபேசிகளைக் கொண்டு பயனரைக் கூகுள் கண்காணிப்பதாகவும், பயனரின் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்கத்தக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதே குற்றச்சாட்டு ஆப்பிளின் ஐபோன் மீதும் உண்டு.
"பயனருக்கு முழுச் சுதந்திரத்தை அளிக்காத எதுவும் ஓப்பன் சோர்ஸ் அல்ல. ஆண்ட்ராய்ட் ஓப்பன் சோர்ஸ் என்று கூறப்படுவதை நான் ஏற்கமுடியாது. அதுவும் ஒரு வியாபார மென்பொருள்தான்" என்று ஓப்பன் சோர்சின் தந்தை என மதிக்கப்படும் ரிச்சர்ட்  ஸ்டால்மேன் கூறியுள்ளதும் கவனிக்கத்தக்கதே.
. Related Posts with Thumbnails

போட்டோஷாப் ஷார்ட் கட் கீகள்

போட்டோஷாப் மென்பொருளை விரைவாகவும் சிறப்புடனும் பயன்படுத்த Shortcut கீகள் தெரிந்திருப்பது நல்லது. போட்டோ ஷாப் பயன்படுத்துவோருக்கும் புதியவர்களுக்கும் உதவ ஆங்கிலத் தளம் ஒன்றில் கிடைத்த Photoshop ShortCut Key கொண்ட படத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
கீழே உள்ள கீபோர்ட் ஷார்ட் கட் படத்தை கிளிக் செய்தால் பெரிதாகும். அதனை சேவ் செய்து பிரிண்ட் எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நன்றி.
.
Related Posts with Thumbnails

கணினி விளையாட்டுக்கு இணையதளம்

இது கோடைகாலம், நம்  இல்லக் குழந்தைகளுக்கு விடுமுறைக் காலம். வெளியில் சென்று  விளையாடிய நேரம் போகக் களைத்திருக்கும் நேரத்தில் வீட்டில் அமர்ந்து  விளையாட கணினி விளையாட்டுக்கள் சில இணைய தளத்தில் உள்ளன. மிகவும் சிறிய  அளவிலான இந்த விளையாட்டுக்களில் சில போர்ட்டபிள் மென்பொருளாக இருப்பதால் கணினியில் நிறுவவேண்டிய அவசியம் இல்லை. இவ்விளையாட்டுக்களை http://free-zd.t-com.hr என்ற தளத்திலிருந்து இலவசமாகப் பதிவிறக்கிப் பயன்படுத்தலாம்.
நம் வீட்டுக் குழந்தைகளுக்கு பணப் பரிவர்த்தனை, வியாபாரம், வங்கி ஆகியவற்றை நிர்வகிக்க பழக உதவும் Trade  என்றும் MonoPoly  என்றும்  அழைக்கப்படும் வியாபார விளையாட்டு பயனுள்ளது.
அடுத்து சதுரங்க விளையாட்டை கணினியில்  விளையாட விரும்பும் குழந்தைகளுக்கும் பெரியோருக்கும் யேசெஸ் (yea Chess) சிறப்பானது.
77 விதவிதமான சிறிய விளையாட்டுக்களை ஒரே விண்டோவில் விளையாடும் வகையில் ஒரு மென்பொருளும். 5 விளையாட்டுக்களை கொண்ட ஒரு மென்பொருளும் இத்தளத்தில் கிடைக்கிறது.
மேலும் இணைய வசதி உள்ளவர்கள் வேறொரு ஊரில். நாட்டில் உள்ள நண்பர்களுடன் விளையாடும் வகையிலான  நெட்வொர்க் கேம்கள் இரண்டும் இத்தளத்தில் உள்ளது சிறப்பாகும்.
இம்மென்பொருள்களை டவுன்லோட் செய்ய: http://free-zd.t-com.hr/drazen/index.html
Related Posts with Thumbnails

கணினிகளைத் தாக்கும் 7வகைத் திருடர்கள்

இணைய வெளியின் பாதுகாப்பு என்பது சற்றுக் கடினமான ஒன்றுதான். முகமறியாத இவ்வுலகில் எதை விடுவது, யாரை நம்புவது என்பதான கடினமான சூழலில் அவ்வப்போது வரும் தகவல்களைக் கொண்டே நம்முடைய தற்காப்பு முறைகளை மாற்றியமைக்க வேண்டியுள்ளது.
இணையத்தில் தொல்லை கொடுப்பவர்களை 7 வகையினராகப் பிரித்துள்ளனர். இவர்களுடைய செயல்பாட்டை ஆய்ந்து இப்பட்டியல் தயாரிக்கப்பட்டது.
1. இணையக் குற்றவாளிகள் (Cyber Criminols)
இவர்களே இணையத்தில் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்களுடைய குறி பணம்தான். வங்கிக் கணக்குகள், கிரெடிட் கார்டுகளின் பாஸ்வேர்டுகளைத் திருடுவது, போலி வங்கி இணையதளங்கள், போலி வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களைக் கொண்டு தாக்குதல் நடத்துவது, இமெயில் மற்றும் பிற சேவைகளில் நாம் உபயோகிக்கும் பயனர் பெயர், பாஸ்வேர்டுகளைத் திருடி அதன் மூலமாக மிகப்பெரிய கொள்ளைகளை நிகழ்த்துவது ஆகியவை இவர்களது வேலை.
2. தேவையற்ற விளம்பரங்களை பரப்புவோர் (Spammers and adware spreaders) 
முறையற்ற, கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலமாக பயனருக்கு வலை விரித்து அதன் மூலமாக பணம் சம்பாதிப்பவர்கள். இவர்களுடைய நடவடிக்கைகள் அடாவடித்தனமான ஒரு வியாபார யுக்தியாகும். 
3. பயமோ, ஆசையோ காட்டி திருடுபவர்கள் (Advanced persistent threat (APT) agents) 
இந்த வகையினர் தங்களுக்கு சாதகமான சட்ட திட்டங்கள் கொண்ட நாடுகளிலிருந்தே இயங்குகின்றனர். உங்களுக்கு லாட்டரியில் பணம் விழுந்திருக்கிறது, பரிசு கிடைத்திருக்கிறது, அதனைக் கொடுக்க சிறிதளவு பணம் செலுத்துங்கள் என்று வரும் இமெயில்கள், குறுஞ்செய்திகள் இந்த வகையினருடைய வேலைதான்.
4. வர்த்தக உளவாளிகள் (Corporate spies)
நிறுவனக் கணினிகளின் பாஸ்வேர்ட் கட்டமைப்பை உடைத்து விபரங்களை திருடி போட்டி நிறுவனங்களுக்கு  விற்றுப் பணம் சம்பாதிப்பவர்கள். இவர்களும் தங்களுக்கு சாதகமான சட்ட திட்டங்கள் உள்ள நாடுகளிலிருந்தே இயங்குகின்றனர்.
5. தகவல்களை உளவு பார்ப்பவர்கள் (Hacktivists)
அரசியல், மதம், சுற்றுப்புறம் சார்ந்த அல்லது சொந்தக் கோட்பாடு ஒன்றை வைத்துக் கொண்டு அதன்படி மற்றவருக்கு பயனுள்ள அல்லது தொல்லை கொடுக்கும் விதமான கருத்துக்களையோ அல்லது எதிரியின் ரகசிய தகவல்களை இணையதளங்களில் கசிய விடுவதன் மூலமாக அவர்களை பலவீனமடையச் செய்ய முயற்சிப்பவர்கள்.
6. இணையப் போர்வீரர்கள் (Cyber warriors)
இது ஒரு நவீன இணையப் போர்முறையாகும். எதிரி நாடுகளின் ராணுவ ரகசியங்களை திருடுதல், ராணுவ கணினிகளை செயலிழக்கச் செய்தல் ஆகியவை இதில் அடங்கும். இதற்கு உதாரணமாக ஈரான் ராணுவக் கணினிகளைத் தாக்கிய ஸ்டக்ஸ்நெட் வைரசைக் குறிப்பிடலாம்.
7. அடாவடித் திருடர்கள் (Rogue hackers)
இந்த வகையில் ஆயிரக்கணக்கானவர்கள் இணையவெளியில் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். தன்னுடைய திறமையை மற்றவர்களுக்குக் காட்டி தற்பெருமையடிக்க சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவது இவர்களுடைய பொழுது போக்காகும். பெரும்பாலும் இரவுதான் இவர்களது அடாவடிக்கான நேரமாகும். இவர்களிடமிருந்து நம் கணினியைப் பாதுகாக்க நல்ல வைரஸ் எதிர்ப்பு மென்பொருளைப் பயன்படுத்துவதும், அதை அப்டேட்டாக வைத்திருப்பதும் அவசியமாகும்.
. Related Posts with Thumbnails

ஆன்லைன் ஃபைல் கன்வர்ட்டர்

எந்த ஒரு ஃபைலையும் வேறொரு  ஃபைல் ஃபார்மட்டிற்கு மாற்றுவதற்கு மென்பொருள்கள் துணையின்றி இணையம் வழியாகவே மாற்றிக் கொள்ள உதவும் தளம்தான் கன்வர்ட் ஃபைல்ட் டாட் காம். இத்தளத்தில் நாம் மாற்ற விரும்பும் ஃபைலை அப்லோட் செய்துவிட்டு எந்த அவுட் புட் ஃபார்மேட் தேவை என்பதை தேர்ந்தெடுத்துக் கொடுத்தால் ஒரு சில நொடிகளில் மாற்றிக் தருகிறது. இத்தளத்தில் டாக்குமண்ட், ஆடியோ, வீடியோ, பிடிஎப், வரைகலை உள்ளிட்ட 9 வகைகளில் 60க்கும் மேற்பட்ட ஃபார்மட்களுக்கு மாற்ற முடியும். மேலும் இணையதளத்தில் பதிந்த ஃபைல்களின் லிங்க் கொடுத்தும் கன்வர்ட் செய்ய முடியும். அத்துடன் கன்வர்ட் செய்த ஃபைலின் லிங்க்கை நாம் விரும்பும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் வசதியும் உள்ளது.
இணையதள முகவரி : http://www.convertfiles.com/
Related Posts with Thumbnails

wibiya widget