டிஜிட்டல் கேமரா வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

புகைப்படக் கேமரா என்றழைக்கப்பட்ட படச்சுருள் இணைந்த கேமராக்களின் காலம் மலையேறிப் போய் இன்று மின்னணு ஒளிப்படக் கருவி என்றழைக்கப்படும் டிஜிட்டல் கேமராக்களின் காலம் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. கைபேசியுடன் இணைந்த கேமராக்கள் வந்தபிறகு மக்களிடையே ஒளிப்படத்தின் மீதான ஆர்வம் அதிகமாகியிருக்கிறது. ஆனால், கேமரா என்பது கைபேசிக்கு கூடுதல் வசதி மட்டுமே. படத்தின் தரம் குறைவாகவே இருக்கும்.
6X4 என்ற  Maxi அளவு படத்தை பிரிண்ட் செய்ய குறைந்தபட்சம் 540X360 என்ற பிக்சல் அளவு ரெசல்யூசன் தேவைப்படும். ஆனால் இந்த அளவு ரெசல்யூசனைத் தரக்கூடிய கைபேசிகளின் விலை கேமரா விலையைவிட பல மடங்கு அதிகமாகும்.டிஜிட்டல் கேமரா புதிதாக வாங்குபவர்கள் சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.முதலில் பொழுதுபோக்குக்காகவா அல்லது தொழில் முறை (Professional) யாக படம் பிடிக்க வாங்கப் போகிறீர்களா என்பதைப் பொறுத்தே மாடல்களைத் தேர்வு செய்யவேண்டும். 
பிக்சல் மற்றும் லென்ஸ் அளவு
பொழுதுபோக்கிற்கு என்றால் லென்ஸ் 18-55 எம்.எம் அளவும் 8 முதல் 14 மெகாபிக்சல்களும் (Mega Pixel) , தொழில் முறைக்காக எனில் 18-135 எம்.எம் அளவும் 12 முதல் 21 மெகாபிக்சல்களும் கொண்ட கேமராக்களை தேர்வு செய்யலாம். 
ஆப்டிகல் ஜூம்
தூரத்தில் உள்ளவற்றை படம்பிடிக்க உதவும் வசதி. இது 3x, 4x, 6x, 8x  என்று பலவகை இருக்கும். இதில் எது உங்களுக்குப் போதுமானது என்பதைத் தீர்மானிக்கவும். 
பேட்டரி
அல்கலைன் பேட்டரிகள் என்றால் நீங்கள் 30 அல்லது 40 ஒளிப்படங்கள் எடுத்த பிறகு புதிய பேட்டரியை வாங்க வேண்டியதிருக்கும். அதுவே நிக்கல் மெட்டல் ஹய்ட்ரைட் பேட்டரிகளை ரீசார்ஜ் செய்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். செல்போன் பேட்டரிகளைப் உள்ள லித்தியம் அயர்ன் பேட்டரிகள் நிக்கல் பேட்டரிகளைவிட அதிகத் திறன் உள்ளவை. பேட்டரிக்கான சார்ஜர்களிலும் தரத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கவும்.
கொள்ளளவு
கேமராக்களின் உள் நினைவகம் குறைவாகவே இருக்கும். மெமரி கார்டுகள் குறைந்தது 2 ஜிபி அளவாவது இருக்க வேண்டும். கூடுதலாக எத்தனை ஜிபி வரை பயன்படுத்த முடியும் என்ற விவரத்தையும் பார்க்கவும்.
எஸ்எல்ஆர் வகை
பொழுதுபோக்கிற்காக உபயோகிக்க கையடக்க கேமராக்கள் (Point and Shoot) போதுமானவை. தொழில்முறை கலைஞர்களுக்கு நல்ல தரமான படங்கள் எடுக்க எஸ்எல்ஆர் (Single Lens Reflex)வகைக் கேமராக்களே சிறந்தவை.
பிற கூடுதல் வசதிகள்
பொதுவாக ஒளிப்படக் கேமராக்களில் வீடியோ எடுக்கும் வசதி என்பது பெயரளவில்தானே தவிர முழுமையானதாக இருக்காது. தற்போது வரும் சில வகை கேமிராக்களில் உயர் தர வீடியோ (HD Video) பதிவு வசதி உள்ளது. இதுபோலவே எல்ஈடி, எல்சிடி டிவியில் இணைத்துப் படங்களைப் பார்க்க உதவும் HDMI அவுட்புட், தொடுதிரை வசதி ஆகியவற்றுடனும் கேமராக்கள் கிடைக்கின்றன.
கூடுதல் வசதிகள், தேவையைப் பொறுத்து விலையும் மாறுபடும்.
. Related Posts with Thumbnails

விண்டோஸிற்கு கூடுதல் வசதிகள் தரும் எக்ஸ்ட்ரா பட்டன்ஸ்

விண்டோஸ் கணினியில் உள்ள மென்பொருள்களை இயக்கும்போதும், ஃபோல்டர்களைத் திறக்கும்போதும் மேல் பகுதியில் மினிமைஸ் (Minimize), மேக்சிமைஸ் (Maximize) மற்றும் குளோஸ் (Close) பட்டன்களைப் பயன்படுத்துவோம். இந்த பட்டன்களுடன் கூடுதலாக மினிமைஸ் டூ ட்ரே (Minimize to Tray), டிரான்ஸ்பிரண்ட் விண்டோ (Transparant), விண்டோ டூ பாக்ஸ் (Window to Box), ஆல்வேஸ் ஆன் டாப் (Always on top) என்ற அனைத்து விண்டோக்களுக்கும் முதன்மையான விண்டோவாக மாற்றும் செயல்பாடு, மெனு இல்லாத முழுமையான விண்டோவாக மாற்ற (Full Screen) என்பது உள்ளிட்ட 10 விதமான பட்டன்களைத் தரக்கூடிய எக்ஸ்ட்ரா பட்டன்ஸ் என்ற மென்பொருள் வெளியிடப்பட்டுள்ளது.
இது விண்டோஸ் 98, எக்ஸ்பி, விண்டோஸ் 7 உள்ளிட்ட அனைத்து இயங்குதளங்களிலும் இயங்கும் என்று கூறப்படுகிறது. 1.3 எம்பி அளவே உள்ள இம்மென்பொருள் முற்றிலும் இலவசமாகும்.
இம்மென்பொருளை பதிவிறக்கம் செய்யும் இணைய முகவரி:   http://www.xtrabuttons.com/files/eXtraButtons.exe
. Related Posts with Thumbnails

கூகுளின் தனியுரிமைக் கொள்கை நன்மையா?


ணையதள உலகில் பெரியண்ணனாக இருக்கும் கூகுள் மார்ச் முதல் புதிய தனியுரிமைக் கொள்கைக்கு (google privacy policy) மாறியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை சென்ற ஜனவரியில் தன் பயனர்கள் அனைவருக்கும் அனுப்பியிருந்தது.

அது என்ன பிரைவஸி பாலிசி? நாம் பயன்படுத்தும் இணையதளங்களில் பயனர் கணக்குத் தொடங்கும்போது எங்கள் கொள்கைகளைப் படித்துப் பார்த்து ஒத்துக்கொள்கிறீர்களா என்று மிக நீண்ட கட்டுரை போலக் கொடுத்து கேட்கும். அதுவே அந்த இணையதளத்தின் தனியுரிமைக் கொள்கைகளாகும்.
இக்கொள்கையைப் படித்துப் பார்த்து ஒத்துக் கொள்வதாக இருந்தால் அடைப்புக் கட்டத்தில் ‘டிக்’ செய்யவேண்டும். இதனை பெரும்பாலும் யாரும் படிப்பதில்லை. ‘டிக்’ மட்டும் கொடுத்து பயனர் கணக்கைத் தொடங்குவதே வழக்கமாக இருக்கிறது. இதை முழுமையாகப் படித்துப் பார்த்தால் தெரியும் நம்மை அந்நிறுவனத்திடம் ஒப்படைத்த கதை.
நமக்கு இலவச சேவை தருகிறார்கள். அவர்களுக்கு ஏதோ கொள்கை இருக்கிறது. அது நம்மை என்ன செய்து விடப்போகிறது? எங்கேயோ இருப்பவன் வந்து என்ன செய்துவிட முடியும்? நான் மட்டுமா, கோடிக்கணக்கான பேர் ஒத்துக்கொண்டுவிட்டார்களே? என்று கேட்கலாம்.எல்லாரும் ஒத்துக் கொண்டனர் என்பதுகூட தவறானதுதான். ஒரு நாலு வரியில் “உங்களைக் கண்காணிப்போம், உங்கள் விருப்பத்தை, உங்கள் தேவைகளை, உங்கள் சுய விபரத்தை கேட்பவர்களுக்கு விற்றுக் காசாக்குவோம்” என்று நாலு வரியில் கொடுத்திருந்தால் நீங்கள் ‘டிக்’ அடித்து ஓகே செய்திருப்பீர்களா?
ஆனால், அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. உங்களுக்குத் தேவையான சேவையை வழங்குவதில் போட்டி போடுகிறார்களே என்று சந்தோஷப்படாதீர்கள். உங்களிடம் பெரியதாக எதையோ எதிர்பார்க்கிறார்கள் என்பதே உண்மை.
நம்மை வைத்து இவர்கள் என்ன செய்வார்கள் என்று கேட்கிறீர்களா? நீங்கள் கூகுளின் ஆர்குட் அல்லது பிளஸ் சமூக இணையதளத்தில் நீங்கள் வாங்கிய புதிய கைபேசி குறித்து பகிர்ந்து கொண்டாலோ அல்லது கூகுள் தேடலில் குறிப்பிட்ட பொருள் குறித்து நீங்கள் தேடினாலோ அது உங்கள் கூகுள் கணக்கில் சேமிக்கப்படும். அடுத்த முறை கூகுளின் மற்றொரு சேவையைப் பயன்படுத்தும்போது உங்கள் விருப்பம் சார்ந்த விளம்பரங்கள் காட்டப்படும்.உங்கள் விருப்பத்திற்குரிய விஷயம் விளம்பரமாக மாறும் யுக்தி இதுதான். இப்படித்தான் உங்களை மற்றவர்களிடம் விற்கிறார்கள்.
தற்போது இக்கொள்கையில்தான் மாற்றம் கொண்டுவந்துள்ளது கூகுள். எப்படி என்றால், கூகுளில் கணக்குத் தொடங்கும் ஒருவர், அதன் மின்னஞ்சல் சேவை, கூகுள் தேடல் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட சேவைகளைப் பயன்படுத்தலாம். இச்சேவைகளுக்கென்று தனித்தனியாக இருந்த தனியுரிமைக் கொள்கையைத்தான் தற்போது அனைத்திற்கும் ஒரே மாதிரியாக மாற்றியமைத்திருக்கிறது.கூகுளின் சர்வரில் சேமிக்கப்படும் இத்தகவல்களை பயனர் விரும்பினால் ஹிஸ்டரி (History) பகுதியில் சென்று அழித்து விடலாம் என்பது கூடுதலாக கூகுள் செய்திருக்கும் ஒரு நன்மை.
ஆனால், அதற்கு முன்பாக அத்தகவல் மற்றவர்களுக்கு கடத்தப்பட்டிருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை. இது கூகுளுக்கு மட்டுமல்ல ஃபேஸ்புக், டிவிட்டர், யாகூ உள்ளிட்ட அனைத்து இணையதளங்களுக்கும் பொருந்தும். இதை நியாயப்படுத்தும் விதமாக கூகுள் தலைவர் இப்படிக் கூறுகிறார் “ஒரு விஷயத்தை மற்றவர்கள் தெரிந்து கொள்ளக்கூடாது என்று நீங்கள் நினைத்தால், அந்த விஷயத்தை நீங்கள் செய்திருக்கவே கூடாது” என்று. ஆம். உங்களைப் பற்றிய தனிப்பட்ட விபரங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்ளும்போது கவனமாக இருக்கவேண்டும். உங்களுக்குத் தொல்லை தரும் என்று தோன்றினால் அதனை பதிவிடாமல் இருப்பதே நலம்.
,
Related Posts with Thumbnails

wibiya widget