மூளை வேணுமா மூளை...

அவனா... மூளை இருக்கான்னு கேட்டா எந்த சந்தையில் கிடைக்கும்னு கேக்குற ஆளாச்சே... என்ற வசனம் அனைவரின் காதுகளிலும் அடிக்கடி விழுவதாகும். உண்மையிலேயே சந்தைக்கு வந்துவிடும் போலிருக்கிறது. மனிதர்களுக்காக செயற்கை மூளையை இன்னும் பத்தாண்டுகளுக்குள்ளாக உருவாக்கிவிடுவோம் என ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் நடந்த கருத்தரங்கில் விஞ்ஞானி ஹென்றி மார்க்ரம் அறிவித்துள்ளார்.
குளோனிங் ஆடு, எருது என்று தொடங்கி செயற்கை இதயம், இரத்தம், நுரையீரல் என்று மனித பாகங்களுக்கு மாற்று கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ள விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருப்பது மனித மூளை மட்டுமே. காரணம் மனித மூளை தானே சிந்தித்து செயல்படக்கூடியது. சிக்கலான பல இணைப்புகளுடன் முழு உடலையும் நிர்வகிக்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நியுரான்களையும் கொண்டது. அத்தகைய ஒன்றை உருவாக்குவது இயற்கைக்கு முரணானதாகவும், அதே நேரத்தில் அப்படி ஒன்று உருவானால் தற்போதைய மனித இனத்திற்கு அதனால் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகள் குறித்த பரவலான பயமும் உலகளவில் இயற்கை ஆர்வலர்களிடமும், சாதாரண மக்களிடத்திலும் உள்ளது.
மனிதர்களுக்கான செயற்கை மூளையை உருவாக்குவது குறித்த ஆராய்ச்சிக்காக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஈபிஎப்எல் அமைப்பு 2005ஆம் ஆண்டில் ப்ளூ பிரெய்ன் திட்டம் என்ற பெயரில் துவக்கியது. இத்திட்டத்தின் தலைவராக மூளை நரம்பியல் துறை ஆராய்ச்சியாளர் டாக்டர் ஹென்றி மார்க்ரம் உள்ளார். இவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக மழைக்காடுகளில் சுற்றி பல்வேறு மரங்களின் வளரும் தன்மை, அமைவிடம், வடிவமைப்பு, புறக்கட்டமைப்பு குறித்து பல்வேறு தகவல்கள் திரட்டியுள்ளார். அதனடிப்படையில் இவை அனைத்திற்கும் உள்ள பொதுவான தொடர்புகள் குறித்து ஒரு வரையறையை கண்டறிந்தார். அதனை அடிப்படையாகக் கொண்டு பல்லாயிரக்கணக்கான நியுரான்களின் செயல்பாடுகளை - ஒன்றுக்கொன்று மாறுபட்ட செயல்பாடுகளைக் கொண்டதாக - தனித்தன்மை வாய்ந்ததாக - பொதுவான மூளைச் செயல்பாடுகள் ஒன்றுக்கொன்று பகிர்ந்துகொள்ளக் கூடியதான கட்டமைப்புக் கொண்ட மென்பொருளை உருவாக்கும் முயற்சியில் இவர் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே எலிகளுக்கான முழுமையான மூளையை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 21 முதல் 24 வரை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த டெட் கருத்தரங்கில் உலகளா
விய விஞ்ஞானிகள் முன்னிலையில் விஞ்ஞானி ஹென்றி மார்க்ரம் தங்களது ஆராய்ச்சி குறித்து உரை நிகழ்த்தினார். அதில், உலக அளவில் இருநூறு கோடி மக்கள் மூளை சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எங்கள் ஆராய்ச்சி மூலமாக இன்னும் பத்தாண்டுகளில் கணினி மென்பொருள் உதவியுடன் செயற்கை மூளையை உருவாக்கித் தரமுடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பல்லாயிரக்கணக்கான நியுரான்களைக் கொண்ட மூளைக்கு இணையான செயற்கை மூளையை தயாரிக்க ஒரு நியுரானுக்கு ஒரு லேப்டாப் கணினி என்ற அடிப்படையில் தனித்தனித் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் பத்தாயிரம் லேப்டாப்புகளின் செயல்திறன் கொண்ட ஐபிஎம் நிறுவனத்தின் பத்தாயிரம் கணினி பிராசசர்களுடன் கூடிய ஜெனி என்ற சூப்பர் கம்ப்யூட்டரை பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் செயல்பாடு குறித்து மேலும் அவர் கூறுகையில் ஒரு மலரின் படத்தைக் காட்டும்போது நிறம், வடிவம் என்று பிரித்து தன்னுடைய மின்னணு தகவல் கட்டமைப்பிலிருந்து தரம்பிரித்து சரிபார்த்து அதனை மலர் என்று கூறும். அதற்கேற்றவகையில் சுய திறனுடன் கூடிய தகவல்களை வெளியிடும் வகையில் மென்பொருளை உருவாக்கி வருகிறோம். தற்போது பல்வேறு பாலூட்டிகள் மற்றும் விலங்குகளுக்கான மாடல் மென்பொருள்களை உரு
வாக்கியும், பரிசோதித்தும் வருகிறோம் என்றார். Related Posts with Thumbnails

கூகுள் டாக்குமெண்ட் பேக்அப்

கூகுள் மெயிலை பேக்அப்பாக நமது கணினியில் பதிந்துவைத்துக்கொள்வதற்கு மென்பொருள் இருப்பது போல http://www.gmail-backup.com/
கூகுள் டாக்குமெண்ட்டுகளையும் பேக்அப் செய்துவைத்துக்கொள்ளமுடியும். இம்மென்பொருளை இணைய தளத்திலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளவும். http://gs.fhtino.it/gdocbackup Related Posts with Thumbnails

இணைய முகவரியை சுருக்க, விரிக்க

மிக நீண்ட இணையதள முகவரிகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டியிருந்தால் அதனை சுருக்கித் தருவதற்கு இந்த இணையதளங்கள் பயன்படும்.
http://tineurl.com
http://bit.ly/
http://tweetburner.com/
http://www.buzzup.com/us/buzzlink.php
http://www.snipurl.com/
http://www.urlshort.com/
http://www.adjix.com/WebObjects/Adjix.woa/
http://cli.gs/
http://urlborg.com/a/
http://dot.tk
http://trim.li/nk
http://awe.sm

அதேபோல சுருக்கிய இணையதள முகவரிகளின் முழு வடிவைத் திரும்பவும் பெறுவதற்கு அன்டைனி என்ற இணையதளம் உதவுகிறது.
http://untiny.me Related Posts with Thumbnails

உலக மென்புத்தகக் கண்காட்சி

உலக புத்தக தினத்தை முன்னிட்டு உலக மென்புத்தகக் கண்காட்சி இணையதளத்தில் நடைபெற்று வருகிறது, இக்கண்காட்சி ஜூலை 4முதல் ஆகஸ்ட் 4 வரை நடைபெறுகிறது, இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன, இவற்றை இலவசமாகவே டவுன்லோட் செய்துகொள்ளமுடியும், இம்மென்புத்தகங்கள் டெக்ஸ்ட். எம்பி3. எச்டிஎம்எல். பிடிஎப் எனப் பலவித கோப்பு வடிவங்களில் கிடைக்கின்றன.
இதுவரை டவுன்லோட் செய்யப்பட்ட மென்புத்தகங்களில் சாப்ட்வேர் துறை சார்ந்த மென்புத்தகங்களே அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்டிருப்பதாக புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது, நீங்கள் விரும்பும் புத்தகங்களையும் தேடிப்பாருங்கள்,
இணையதளமுகவரி - http://worldebookfair.org/index.htm
மதுரைத் திட்டத்தில் தயாரிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட தமிழ் மென் புத்தகங்களும் டவுன்லோட் செய்யக்கிடைக்கிறது,
தமிழ் மென்புத்தகங்கள் பதிவிறக்க Related Posts with Thumbnails

Virtual Studio - போட்டோ எடிட்டர் மென்பொருள்

போட்டோசாப் மென்பொருளுக்கு இணையாக இல்லாவிட்டாலும் பொதுவாக எடிட்டிங்கில் நாம் மேற்கொள்ளும் கலர் கரெக்சன். கிரே ஸ்கேல். பிளாக் அன்ட் ஒயிட். சார்ப்பிங். கிராப் எனப் பலவற்றையும் இம்மென்பொருள் மூலம் செய்ய முடியும். மேலும் பிரேம். ரெட் ஐ ரிமூவர். காப்பிரைட் டைட்டில்கள் எனப் பல வசதிகளும் இதில் உண்டு. அழகிய 7 விதமான மாற்றத்தக்க முகப்பு(Skins) வடிவமைப்புடன் இலவசமாக டவுன்லோட் செய்திடலாம், அளவு 3. 5 எம்பி மட்டுமே. போட்டோகிராபி ஆர்வமுள்ளவர்களுக்கு எளிமையான மென்பொருள் இது.
http://www.optikvervelabs.com/virtualstudio.asp Related Posts with Thumbnails

இலவச வீடியோ கட்டர்

பெரிய அளவிலான வீடியோ பைல்களை நமக்கு வேண்டிய அளவிற்கு வெட்டி எடுக்க இந்த மென்பொருள் உதவும். MPEG 1/2, MPEG4, DivX, Xvid, AVI, WMV, Quicktime MOV, Flash video என்று அனைத்து முன்னணி ஃபைல் ஃபார்மேட்களையும் இதில் எடிட் செய்யமுடியும்.
எடிட் செய்த வீடியோ ‌பைல‌ை
  • MPEG4
  • DivX
  • WMV (Windows Media Video)
  • Quicktime MOV
  • Flash Video (*.flv)
  • MP3 (only audio) போன்ற ஃபைல் ஃபார்மட்களில் சேமிக்கலாம். இம்மென்பொருள் முற்றிலும் இலவசமாகவே கிடைக்கிறது.
டவுன்லோட் செய்ய: http://www.freevideocutter.com
... Related Posts with Thumbnails

wibiya widget