கணினித் தொழில்நுட்பம் 2011


2011ம் ஆண்டில் கணினித் தொழில்நுட்பத் துறை முந்தைய 2010 ஆம் ஆண்டைப் போலவே எண்ணற்ற மாற்றங்களை சந்தித்தது. தொழில் நுட்பத் துறையில் ஏற்பட்ட பெரும்பாலான மாற்றங்கள் அதன் போக்கில் ஏற்படும் வளர்ச்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது. அப்படி உருவான மாற்றங்களில் நேரடியாக மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திய முக்கிய நிகழ்வு
கள் மட்டும் சிறு தொகுப்பாகத் தருகிறோம்.

சமூக வலைத்தளங்கள்:
ஒவ்வொரு ஆண்டிலும் கூகுளின் ஏதாவது ஒரு புதிய வசதி முன்னணியில் இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டும் கூகுளின் படைப்புகளே முன்னிலையில் உள்ளன.
ஃபேஸ்புக்கின் வளர்ச்சி விளம்பர வருவாயைப் பாதிக்கத் தொடங்கியதால் தன்னுடைய இடத்தை தக்க வைக்கவும், வெளியேறும் பயனரை தொடர்ந்து கூகுளில் நீடிக்கச் செய்யவும் கூகுள் நிறுவனம் அதிரடியாய் தொடங்கியது தான் கூகுள் பிளஸ் சமூக வலைத்தளம்.கூகுள் பிளஸ் தொடங்கிய 6 மாதத்திற்குள்ளாக சுமார் 25 கோடிப் பேரை இணைத்து சாதனை படைத்துள்ளது.
ஃபேஸ்புக், டிவிட்டர் தளங்களுக்கு போட்டியாக இருக்கும் என்று கூறப்பட்ட பின் தோல்வியைத் தழுவிய கூகுள் பஸ் சேவை சென்ற வாரத்துடன் நிறுத்தப்பட்டுவிட்டது.


பிரௌசர் யுத்தம்:

கூகுள் குரோம் பிரௌசர் மற்றொரு முன்னணி பிரௌசரான ஃபயர்பாக்ஸ் பிரௌசரைப் பின்னுக்குத் தள்ளியது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைத்து வெளியிடுவதன் மூலம் முன்னணி பிரௌசராகக் காட்டிக் கொள்ளும் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் தற்போது கடும் சரிவை சந்தித்து வருகிறது.
குரோம் பிரௌசரின் போட்டி காரணமாக பல புதிய வசதிகளுடன் 7 பதிப்புகளை இந்த ஆண்டில் ஃபயர்பாக்ஸ் வெளியிட்டது. தற்போது ஃபயர்பாக்ஸ் 9.1 பதிப்பு பயன்பாட்டில் உள்ளது.
ஃபயர்பாக்சில் கூகுள் தேடல் டூல்பார் இடம்பெற கடந்த 6 ஆண்டு
களாக நடைமுறையில் உள்ள ஒப்பந்தத்தை இந்த ஆண்டுடன் கூகுள் முடித்துக் கொள்ளும் என்று எதிர்பார்த்த வேளையில், அந்த ஒப்பந்தத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு கூகுள் நீடித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் 200 கோடி டாலர்களை ஃபயர்பாக்சுக்கு கூகுள் அளிக்கவேண்டும்.
பிரௌசர் சந்தையில் குரோம் மற்றும் ஃபயர்பாக்சின் பங்களிப்பு தற்போது 25 சதவீதமாக உள்ளது. 
 -----------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவு

மேசைக் கணினி, ஐபேட், ஐபாட், ஐபோன் என்று ஒவ்வொரு தயாரிப்பிலும் முத்திரை பதித்த ஆப்பிள் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அவர்தான் அந்நிறுவனத்தின் மூளை என்று கூட சொல்லலாம். புதிய கண்டுபிடிப்பு என்று குறிப்பிட்டு சொல்ல முடியாவிட்டாலும், ஆப்பிளின் பல தயாரிப்புகளை மக்களுக்கு எளிமையான விதத்தில் கொண்டு சேர்த்தது ஸ்டீவின் திறமை என்று கூறலாம்.
இவர் பிப்ரவரி 24, 1955 அன்று கலிபோர்னியாவில் பிறந்தார். ஏப்ரல் 1, 1976 இல் தன் பள்ளி நண்பர் ஸ்டீவ் வாஷ்னியாக் மற்றும் மைக் மார்குலா ஆகியோருடன் இணைந்து ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கினார். ஆப்பிள் மேகிண்டோஸ் மேசைக் கணினிகளை வெளியிட்டது. எளிமையும், பல வசதிகளும் நிறைந்த ஐபேட், ஐபாட், ஐபோன் கருவிகளும் உருவாக்கப்பட்டன. ஆப்பிள் தயாரிப்புகளின் விலை அதிகமானதாக இருந்தாலும் அதன் செயல்பாடும், வசதிகளும் முழுத் திருப்தியைத் தந்தது. ஆப்பிள் கடைசியாக வெளியிட்ட ஐபோன் 4 எஸ் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அது வெளியிடப்பட்ட அடுத்த நாளான அக்டோபர் 5, 2011 அன்று, பல ஆண்டுகளாகப் புற்றுநோய் பாதிப்பிற்குள்ளாகியிருந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தார்.
 -----------------------------------------------------------------------------------------------------------------------
ஆகாஸ் டேப்ளட் பிசி

 அக்டோபர் 5, 2011 அன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்டு தகவல் தொழில் நுட்பத் துறையால் அறிமுகம் செய்யப்பட்டது ஆகாஸ் டேப்ளட் பிசி. உலகிலேயே விலை குறைவான டேப்ளட் பிசி இதுதான். ஆண்ட்ராய்ட் இயங்குதளத்துடன் ஜிபிஆர்எஸ் இணைய வசதியுள்ளது. மாணவர்களுக்கு அரசு குறைவான விலையில் வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது. இதன் சந்தை விலை 2999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலிடத்தில் ஆண்ட்ராய்ட்
கூகுள் ஆண்ட்ராய்ட் இயங்குதள போன்கள் விற்பனையில் 50 சதவீதத்திற்கும் மேலான இடத்தைப் பிடித்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளன. இதன் மூலமாக சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட் போன் விற்பனையில் நோக்கியாவை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
இந்த சரிவை சமாளிக்க நோக்கியா தன் பழைய சிம்பியன் இயங்குதளத்தை கைகழுவிவிட்டு விண்டோஸ் இயக்க போன்களை களமிறக்கியுள்ளது.
அதே நேரத்தில் கூகுள் நிறுவனம் மோட்டரோலா நிறுவனத்துடன் இணைந்து ஆண்ட்ராய்ட்  போன் மேம்பாட்டிற்கான  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

பிளாக்பெர்ரிக்கு சரிவு
உலக அளவில் சேவை மற்றும் தகவல் பாதுகாப்பில் தனக்கு நிகர் யாருமில்லை என்று சொன்ன பிளாக்பெர்ரிக்கு அக்டோபர் 10இல் பெரும் சிக்கல் ஏற்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகளில் இணைய சேவை 3 நாட்கள் பாதித்தது. இது பிளாக் பெர்ரியின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் சர்வர் அமைக்கவேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கையை மறுத்து முரண்டு பிடிக்கும் பிளாக்பெர்ரிக்கு மேலும் ஒரு பின்னடைவாக, விற்பனையில் மட்டுமல்லாமல் பங்குச் சந்தையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. Related Posts with Thumbnails

மொபைல் போன் கதிர்வீச்சு, பேட்டரி மற்றும் டேட்டா பேக்கப் பிரச்சனைகள்


லக அளவில் 83 சதவீதம் பேர் மொபைல் போன் பயன்படுத்துவதாக  கேஷ்ஜெனரேட்டர் என்று இணைய வழி தகவல் சேகரிப்பு புள்ளி விவரம் ஒன்று குறிப்பிடுகிறது. அந்த அளவிற்கு இன்று பெரும்பாலானவர்களின் தகவல் தொடர்பு சாதனமாகவும், கைகளுக்குள் உலகம் என்று சொல்லுமளவிற்கு அதன் பயன்பாடும் மாறியிருக்கிறது.
மொபைல் போன் பயன்படுத்தும் 10ல் 5 பேர் அதற்கு அடிமையாகவே மாறிவிடுகின்றனர் என்றும், மொபைல் வழியாக இணையத்தைப் பயன்படுத்துவோர் 44 சதவீதம் என்றும், குறுஞ்செய்தி அனுப்ப மற்றும் ஒளிப்படம் எடுக்க 74 சதவீதம் பேர் பயன்படுத்துவதாகவும் மேற்சொன்ன ஆய்வில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிக்சனரி, கால்குலேட்டர் தொடங்கி கணினி, தொலைக்காட்சி, டெலிகான்
பிரன்ஸ் என பல சாதனங்களின் வேலையையும் செய்யும் ஒரே பொருளாக மாறியிருக்கிறது.
கதிர்வீச்சு
இது ஆக்கப்பூர்வமான வளர்ச்சியாக இருந்தாலும் சில ஆபத்துகளும் உண்டு. முதலாவது கதிர் வீச்சு. மொபைல் போனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு குறித்து சர்ச்சைகள் இருந்தாலும், கதிர்வீச்சு வெளியாவதை யாரும் மறுக்கவில்லை.
போன்களில் கதிர் வீச்சு அளவை எஸ்.ஏ.ஆர்.  (SAR - Specific Absorption Rate) என்று குறிப்பிடுகிறார்கள். இது வாட் பர் கேஜ் என்ற அளவில் அளக்கப்படுகிறது. இந்தியாவில் முன்பு ஐரோப்பிய தரநெறிமுறைப்படி 2W/Kg அளவுள்ள போன்கள் அனுமதிக்கப்பட்டன. தற்போது அமெரிக்க தரநெறிமுறைப்படி 1.6W/Kg  என்ற அளவு கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்த விபரம் போனின் உதவிப் புத்தகத்திலும், லேபிளிலும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இது குறித்த ஆராய்ச்சிகள் நடந்து வந்தாலும் நாம் மொபைல் போனை காதுகளில் ஒட்டிவைத்துப் பேசாமல் தள்ளி வைத்தே பேசவேண்டும் அல்லது அதற்கென உள்ள இயர்போன்களைப் பயன்படுத்தலாம். எப்படியாயினும் அதிக நேரம் தொடர்ந்து பேசுவது காதுகளையும், மூளையையும் பாதிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கர்ப்பிணிப் பெண்களும், குழந்தைகளும்  மொபைல் போனை அதிகமாக பயன்படுத்துவது தவிர்க்கப்படவேண்டும்.
பொதுவாக சிக்னல் கிடைக்காத பகுதிகளில் இருக்கும்போது கதிர்வீச்சு அதிகமாக வெளியாவதாகக் கூறப்படுகிறது.
பேட்டரி
மொபைல் போனுக்கு ஆதாரமாக இருப்பது அதற்கு மின் சக்தி வழங்கும் பேட்டரியாகும். இன்று 1000ஆஹா அளவு மின்சக்தி தரும் பேட்டரிகளே சிறந்ததாகக் கூறப்படுகிறது.
பேட்டரியை முறையாக சார்ஜ் செய்து முக்கியம். முதன் முதலாக மொபைல் வாங்கியவுடன் குறைந்தது 8 மணி நேரமாவது சார்ஜ் செய்யவேண்டும். அதன் பிறகு சார்ஜ் தீரும் நிலை ஏற்பட்டால் மட்டுமே சார்ஜ் செய்யவும். அதுவும் முழுமையாக செய்யவேண்டும்.
அதேபோல சார்ஜ் ஏற்றப்படுவது முழுமையடைந்ததும் மின் இணைப்பைத் துண்டிக்காமல் இருப்பதும் பேட்டரியை செயலிழக்கச் செய்யும். எனவே சார்ஜ் செய்யும் நேரத்தை சரியாக கணக்கிட்டு அழைப்புகள் வராத நேரமாகப் பார்த்து தேர்ந்தெடுக்கவும். இந்த முறையைத் தொடர்ந்து பின்பற்றினால் பேட்டரியின் ஆயுள் நீடித்திருக்கும்.
பேட்டரி தொடர்ந்து அதிக நேரம் தாக்குப்பிடிக்க வேண்டுமென்றால் ரிங்டோனாக முழுமையான பாடலைப் பயன்படுத்தாமல் மொபைல் நிறுவனம் தரும் ரிங்டோனை செட் செய்வது நல்லது அல்லது சிறிய அளவாக துண்டிக்கப்பட்ட எம்பி3 கோப்புகளைப் பயன்படுத்தலாம். வால்பேப்பர் அனிமேஷன் படமாக இல்லாமல் திரை அளவிற்கு இணையான அளவுப் படத்தை உபயோகிக்கவும். ப்ளுடூத், ஒய்ஃபீ வசதிகள் இருந்தால் பயன்படுத்தாத நேரத்தில் அவற்றை அணைத்து வைக்கவும்.
போன் பேக்கப்
உங்க அப்பா போன் நெம்பர் என்ன? என்று ஒருவர் கேட்டால் உடனே போனில் தேடிப் பார்த்து சொல்வது வாடிக்கையாகி இருக்கிறது. தாய், கணவன், மனைவி, மகன், மகள் என்று குடும்ப உறவுகளைத் தொடர்பு கொள்ள முக்கியமான எண்களை நினைவில் வைத்துக் கொள்ளாமல்தான் பலபேர் இருக்கிறோம்.
இத்தகைய சூழலில் உங்கள் மொபைல் போன் காணாமல் போனாலோ, சேதமடைந்தாலோ அதில் பதிந்து வைத்திருக்கும் அனைத்து தொடர்பு எண்களையும், முக்கியமான தேதிகள், தகவல்கள் என பலவற்றையும் இழக்க நேரிடும். எனவே முடிந்தவரை அவ்வப்போது உங்கள் சிம் கார்டு தகவல்களை மொபைல் போன், மெமரி கார்டு மற்றும் உங்களிடம் வேறு ஏதேனும் பயன்படுத்தாத சிம் கார்டுகள் இருந்தால் அதில் பேக்கப் செய்து வைத்துக் கொள்ளவும். இப்போது வரும் பெரும்பாலான போன்களில் இந்த வசதி இருக்கிறது. அதேபோல கணினி வைத்திருப்பவர்கள் இந்த பேக்கப்பை அதிலும் பதிந்து வைத்துக்கொள்ளவும். ஒருசில செல்போன் நிறுவனங்கள் பேக்கப் வசதியை தருகிறார்கள். ஆனால் அதற்கு மாதந்திரக் கட்டணம் செலுத்தவேண்டும். முடிந்தவரை முக்கியமான எண்களை குறிப்பாக எழுதி வைத்துக்கொள்வதே சிறந்தது. Related Posts with Thumbnails

ரயில் பயணத்திற்கான விபரங்கள் தரும் இணையதளங்கள்

இந்திய ரயில்வே இணைய தளமான https://www.irctc.co.in தளத்தைப் போலவே சிறப்பாக அமைந்த மற்றொரு இணைய தளம் http://www.indiarailinfo.com (இந்தியா ரயில் இன்போ டாட் காம்) ஆகும். இத்தளத்தில்  பிஎன்ஆர் ஸ்டேட்டஸ், பயணச் சீட்டு விபரம், இருக்கைகள், வண்டி நேரம், அத்தடத்தில் செல்லும் பிற ரயில்களின் எண், நேரம் எனப் பல்வேறு உபயோகமான விபரங்கள் கிடைக்கின்றன. இத்தளத்தை கூகுள் குரோம் பிரௌசர் வழியாக பயன்படுத்துவோருக்கு எளிமையான எக்ஸ்டென்சன் மென்பொருளையும் இத்தளம் வழங்குகிறது. இதனை குரோம் பிரௌசரில் கீழ்க்கண்ட இணைப்பு மூலம் பெறலாம்.

http://goo.gl/iTIv3 இந்த இணைப்பிலிருந்து பதிவிறக்கி நிறுவியதும் அட்ரஸ் பாருக்கு அருகில் சிறிய பல்பு போன்ற படம் காட்டப்படும். இதனைக் கிளிக் செய்தால் புறப்படும் இடம், சேரும் இடம் ஆகியவற்றைக் கொடுத்து அந்த வழியில் பயணிக்கும் ரயில் வண்டியின் விபரத்தையும், முன்பதிவு எண்ணைக் கொடுத்து (PNR Status) அதுகுறித்த விபரத்தையும் அறியமுடியும்.
இது தனியார் தளமாக இருந்தாலும் விளம்பரத் தொல்லைகள் இல்லாமல் ரயில்வே இணைய தளத்திற்கு இணையாக சிறப்பாகவே இயங்குகிறது.
. Related Posts with Thumbnails

கணினியை நிர்வகிக்க உதவும் சாப்ட்வேர்

கணினி குறித்த விபரங்களை அறிய, மறந்த பாஸ்வேர்டை கண்டுபிடிக்க, அழிந்த கோப்புகளை மீட்டெடுக்க, லேப்டாப் பேட்டரி விபரம் அறிய, ஒய்-பீ நெட்வொர்க்கை கண்டுபிடிக்க, ஆடியோ வீடியோ சார்ந்த யுட்டிலிட்டிகள், மென்பொருள் நிரல் எழுதுவதற்கு உதவும் சிறு மென்பொருள்கள், அவுட்லுக், தண்டர்பேர்ட் மெயில் கிளைண்ட்களுக்கான யுட்டிலிட்டிகள் எனப் பல பயனுள்ள சிறு மென்பொருள் தொகுப்புகளை பிரிவு வாரியாகக் கொண்ட போர்ட்டபிள் மென்தொகுப்புதான் நிர் சாப்ட் லான்ச்சர் (NirSoft Launcher). இதில் நிர் சாப்ட்டின் மென்பொருள் தொகுப்பு மட்டுமல்லாமல் Priformaவின் சிகிளீனர், ரெக்குவா ஆகிய வேறு போர்ட்டபிள் மென்பொருள்களை இணைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.


மேலும் விபரம் அறியவும், டவுன்லோட் செய்யவும் http://launcher.nirsoft.net/ என்ற முகவரிக்கு செல்லவும்.
. Related Posts with Thumbnails

மேசைக் கணினிகளில் ஆண்ட்ராய்ட் சாத்தியமா?


ற்போது ஸ்மார்ட் போன்கள் என ஆப்பிள், விண்டோஸ், ஆண்ட்ராய்ட் இயங்குதளக் கைபேசிகள் குறிப்பிடப்படுகின்றன. அதேபோல இதே இயங்கு தளங்கள் நிறுவப்பட்ட டேப்ளட் பிசி எனப்படும் பலகைக் கணினிகளும்  பயன்பாட்டில் உள்ளன. இக் கையடக்க சாதனங்கள் மூலம் கணினிக்கு இணையான பயன்பாடுகள் இன்று சாத்தியமாகியுள்ளன.
இச்சாதனங்களின் திறனை மேம்படுத்தி புதிய புதிய வசதிகள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன. அந்த வரிசையில் முன்னணியில் இருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் சாதனமாகும், அடுத்ததாக கூகுள் சார்பு அமைப்பான ஒன் அலையன்ஸின் ஓப்பன் சோர்ஸ் முறையிலான ஆண்ட்ராய்ட் இயங்குதளம் இரண்டாவதாக உள்ளது. அடுத்த
தாக இருப்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 7 இயங்குதளம் ஆகும்.
இதில் ஆப்பிளும், விண்டோசும் மேசைக் கணினியிலிருந்து கைபேசிக்கு மாற்றியமைக்கப்பட்ட இயங்கு தளங்களாகும். ஆனால் ஆண்ட்ராய்ட் செல்பேசி மற்றும் டேப்ளட் பிசிக்களுக்காக வடிவமைக்கப்பட்ட மென்பொருளாகும். தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வெளியிடப்படும் இம்மென்பொருளின் புதிய பதிப்பு அடுத்த ஆண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பதிப்பிற்கு ஐஸ்கிரீம் சாண்ட்விச் ((Ice Cream Sandwich)) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த இயங்குதளம் முப்பரிமாண (3D) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்
டுள்ளது. இதன் மூலம் உரிமையாளரின் முகத்தை அடையாளம் கண்டு இயங்க அனுமதிக்கும் வசதி சாத்தியமாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கார், பைக், வீட்டிலுள்ள மின் விசிறி, விளக்கு ஆகிய மூன்றாம் தர சாதனங்களை புளூடூத்  தொழில் நுட்பம் மூலமாக கட்டுப்படுத்தும் வசதி இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடைசியாக வந்த ஆண்ட்ராய்ட் பதிப்பு தோஷிபா ஏடி 200 சாதனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பதிப்பு மேசைக் கணினிகளுக்கு ஏற்புடையதாக இல்லை.
ஆனால், ஐஸ்கிரீம் ஸாண்ட்விச் ஆண்ட்ராய்ட் பதிப்பு இன்டெல் மற்றும் ஏஎம்டி பிராசசர்களில் வேலை செய்யும் திறனுள்ளது. இது மேசைக் கணினிகளுக்கு இணையானது என தொழில் நுட்ப வல்லுனர்களால் பார்க்கப்படுகிறது.
இதனால், கூகுளின் அடுத்த இலக்கு மேசைக்  கணினிகளுக்கான ஆண்ட்ராய்ட் இயங்கு தளமாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. ஏற்கனவே கூகுள் குரோம் (Google Chrome OS) இயங்குதளத்தை அறிமுகம் செய்திருந்தாலும் அது பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
தற்போதுள்ள மேசைக் கணினிகளில் மைக்ரோசாப்ட் விண்டோசின் ஆதிக்கமே பெரும்பாலும் உள்ள நிலையில், ஸ்மார்ட் போன்களில் 50 சதவீதத்திற்குமேல் இடம் பிடித்துவிட்ட கூகுள் ஆண்ட்ராய்ட் எளிதாக மேசைக் கணினிக்கு மாறும் சாத்தியம் உள்ளது.
எதையும் செய்து பார்க்கும் கூகுள் இதையும் செய்யும் என்றும், ஐஸ்கிரீம் ஸான்ட்விச் பதிப்பிற்கு பிறகு இது நிகழலாம் என்றும் கணினி உலகில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. Related Posts with Thumbnails

கூகுள் மியூசிக் தளத்தைப் பார்க்க குறுக்கு வழி

கூகுளின் புதிய சேவையான கூகுள் மியூசிக் இப்போது அமெரிக்காவில் மட்டும் சேவையை வழங்கி வருகிறது. இச்சேவை பரவலாகக் கிடைக்க சிறிது காலமாகும் என்று தெரிகிறது.
https://music.google.com தளத்தை நாம் பார்க்க விரும்பினால் We're sorry. Google Music is currently only available in the United States என்ற செய்தி தோன்றும்.

இத்தளத்தை பார்க்க நாம் அமெரிக்காவிற்குத்தான் செல்லவேண்டும். காரணம் நம்முடைய ஐபி முகவரிதான்.
ஆனால் இங்கி‌ருந்தே பார்க்க ஒரு குறுக்கு வழி இருக்கிறது. எப்படியென்றால் http://www.proxy4free.com/ என்ற இந்தத் தளத்தில் நுழைந்து அமெரிக்க புராக்ஸி சேவை சர்வர் ஒன்றை தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் தோன்றும் இணைய தளத் திரையில் music.google.com என்று டைப் செய்து ஓகே கொடுக்கவும். இப்போது நீங்கள் அமெரிக்காவில் இருந்து பார்ப்பதாகக் கருதி பக்கம் திறக்கும்.

இனி கூகுளின் பாடல் கோப்புகளைப் பார்க்கலாம். கேட்கலாம்.Related Posts with Thumbnails

உங்கள் கணினி விரைவாக செயல்பட 10 கட்டளைகள்ங்கள் கணினி வேகமான செயல் திறனுடனும், பயன்படுத்த எளிதாகவும் இருக்கவேண்டும் என்பது உங்களது விருப்பமாக இருக்கும். புதிதாக வாங்கிய கணினியில் இத்தகைய செயல்திறன் இருக்கும். காரணம், குறைந்த அளவு கோப்புகளும், அதிக அளவு இடமும், வேண்டாத குப்பைகள் மிக மிகக் குறைந்த அளவில் இருப்பதுமே.
அதுவே, ஓர் ஆண்டிற்குப் பிறகு என்றால் டெஸ்க்டாப் நிறைய ஐகான்
களும், பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்ட ரெஜிஸ்ட்ரி, அதிக அளவு கோப்புகள் என்று நிறைந்து வழியும் குப்பைத்தொட்டி போல கணினி மாறியிருக்கும். இதனால் செயல் திறன் குறைந்து, கணினியைத் தொடங்குவதற்குக்கூட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.
இவ்வாறு மாறிய கணினி விரைவிலேயே செயலிழந்து போகும் வாய்ப்பும் உண்டு. கணினியின் வன்தட்டு (ஹார்ட்டிஸ்க்) செயலிழந்து போகுமானால் நம்முடைய விலை மதிக்க முடியாத கோப்புகளையும் சேர்ந்தே இழக்க நேரிடும். இத்தகைய நிலை ஏற்படாமல் இருக்க கணினி பயன்படுத்து
பவர்கள் விழிப்புடன் இருந்து கணினியைப் பாதுகாப்புடன் பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். 

கணினி விரைவான செயல்திறனுடன் இயங்க 10 கட்டளைகளை ஒவ்வொரு கணினிப் பயனரும் கடைப்பிடிக்கவேண்டும்.

1.    கணினியின் டெஸ்க்டாப்பில் நாம் அதிகமாக பயன்படுத்தாத மென்
பொருள் ஷார்ட்கட் ஐகான்கள் இருந்தால் முதலில் அவற்றை நீக்க
வேண்டும். அடுத்ததாக டெஸ்க்டாப்பில் டவுன்லோட் செய்த ஃபைல்கள் மற்றும் பிற ஃபைல்கள், ஃபோல்டர்களைப் போட்டு நிரப்பி வைக்காதீர்கள்.

2.    கணினி தொடங்கும்போது தேவையில்லாத புரோக்ராம்கள் பின்புலத்தில் இயங்கலாம். அவற்றை ஸ்டார்ட் அப் (Startup) பகுதியிலிருந்து நீக்கவும் அல்லது அவற்றின் செயல்பாட்டை தடை செய்யவும்.

3.    முடிந்தவரை மாதத்திற்கு ஒரு முறையாவது ஹார்ட் டிஸ்க் டிரைவ்களை டிபிராக்மெண்ட் (Defragment) டூலைப் பயன்படுத்தி கோப்புகளை சீராக்கவும்.

4.    டெஸ்க்டாப்பை அழகூட்ட அதிக கொள்ளளவு கொண்ட படங்களையோ, மேம்பட்ட கிராபிக் அனிமேஷன் தீம்களையோ அமைக்காதீர்கள். எளிமையான வடிவமைப்பே கணினி வேகமாக இயங்க உதவும்.

5.    இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துபவர் என்றால் தற்காலிக இணையக் கோப்புகள் (Temprovary Internet Files) மற்றும் குக்கீகளை (Cookies)  தினமும் அழித்துவிடவேண்டும்.

6.    இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை உங்கள் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளுக்கான மேம்படுத்தல்களை (Updates) நிறுவிக்கொள்ளவும். இது வைரஸ், மால்வேர், ஸ்பைவேர்கள் ஆகிய எண்ணற்ற தீங்கிழைக்கும் நிரல்களிடமிருந்து உங்கள் கணினியைப் பாதுகாக்க உதவும்.

7.    மென்பொருள் இயக்கத்திற்கு உதவும் வகையில் உருவாகும் தற்காலிக கோப்புகளை (Temp Files) தினந்தோறும் அழித்துவிடவும்.

8.    சமீபத்தில் பயன்படுத்திய ஃபைல்களுக்கான ஷார்ட்கட்கள் ரீஸண்ட் டாக்குமெண்ட்ஸ் பகுதியில் பட்டியலிடப்படும். இவற்றையும் நீக்கவும்.

9.    புதிய மென்பொருள்கள் நிறுவும்போது ஹார்ட் டிஸ்க் மற்றும் ரிஜிஸ்ட்ரியில் அதற்கென இடம் ஒதுக்கப்படுகிறது. அதிக மென்பொருள்கள் பதியப்படுவதால் ரிஜிஸ்ட்ரி செயல்படும் வேகம் குறையும். எனவே ரிஜிஸ்ட்ரி கிளீனர் மென்பொருளை இரு வாரங்களுக்கு ஒருமுறை பயன்படுத்தி ரெஜிஸ்ட்ரியை சீர் செய்யவும்.

10.    இவையல்லாமல் கணினி வேகத்தைக் கூட்ட சிஸ்டம் பிராப்பர்டீஸ் பகுதியில் Advanced சென்று “Adjust for  best performance” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

இந்தக் கட்டளைகளை ஏற்று செயல்படுத்தினால், கணினியின் வேகம் அதிகரித்திருப்பதை நீங்கள் உணரலாம். தேவையற்ற கோப்புகளை அழிக்க சி கிளீனர் (C-Cleaner) போன்ற பல இலவச மென்பொருள்கள் வந்துவிட்டன. அவற்றில் ஒன்றைப் பதிந்து தினமும் பயன்படுத்துவது அவசியமாகும். Related Posts with Thumbnails

மடியில் கணமில்லாவிட்டாலும் வழியில் பயமுண்டு

எளிமையான வங்கிச் சேவைக்காக இன்று பல வசதிகள் வந்துவிட்டன. அதில் குறிப்பிடத்தக்கதாக இருப்பது ஏடிஎம் என்ற தானியங்கி பண வழங்கி வசதியாகும்.
வங்கிக் கணக்கு வைத்திருப்பவரிடம் ஏடிஎம் கார்டு இல்லையென்றால் அவரை வேற்று கிரக வாசியைப் பார்ப்பது போல மேலும் கீழுமாக பார்க்கும் காலமிது. உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எங்கும், எந்த நேரத்திலும் எடுத்துக் கொள்ளலாம் என்ற இந்த ஏடிஎம் வசதி பிக்பாக்கெட், வழிப்பறி மற்றும் கொள்ளைச் சம்பவங்களிலிருந்து ஓரளவிற்கு பாதுகாப்பை வழங்கியிருக்கிறது என்று சொல்லலாம். ஆனால், அதே நேரத்தில் இவ்வசதி சமீப நாட்களில் பல மோசடிச் சம்பவங்களால் நாளிதழ் செய்திகளில்  தொடர்ந்து இடம் பிடிப்பதாக மாறிவருவது கவலையளிக்கக் கூடிய விஷயமாகும்.
ஏடிஎம்-மில் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி ஏமாற்றினார், போலி ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்திக் கொள்ளை என்பதோடல்லாமல் ஏடிஎம் எந்திரத்தை கடத்திச் சென்றனர் என்ற செய்தி கூட பத்திரிகைகளில் வந்ததை நீங்கள் படித்திருக்கக்கூடும்.
கண்காணிப்புக் கேமராக்கள், பாதுகாவலர்கள் இருந்தாலும் இத்தகைய திருட்டுக்கள் நடைபெறுவதைத் தவிர்க்க முடியவில்லை. இதற்கு வங்கி மட்டுமே காரணமல்ல, நம்முடைய கவனக் குறைவும்தான். ஏடிஎம் அட்டைகளை வைத்திருப்போர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய சில நடத்தை விதிமுறைகளை காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவும், ரிசர்வ் வங்கியும் பட்டியலிட்டுள்ளன. அவற்றைப் படித்து அதன்படி நடந்து கொண்டால் நம்முடைய இழப்பை தவிர்க்க முடியும். 

ஏடிஎம் பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டியவை:
 • உங்கள் ஏடிஎம் கார்டை பிறரிடம் கொடுத்துப் பணம் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.
 • பின் எண்ணை காகிதத்திலோ, ஏடிஎம் அட்டையிலோ, பாஸ் புத்தகத்திலோ, பர்சிலோ அல்லது வேறு எங்குமோ எழுதி வைக்காதீர்கள். மறந்து விடுவோம் என்றெண்ணினால் உங்கள் வீட்டில் உள்ள நோட்டிலோ, காகிதத்திலோ எழுதிப் பாதுகாப்பான இடத்தில் வைக்கவும்.
 • ஏடிஎம் கார்டை டெபிட் கார்டாக உபயோகித்து கடைகளில் பொருள் வாங்கும்போது கார்டை உங்கள் கண் முன்னரே எந்திரத்தில் செலுத்த அனுமதியுங்கள். கடவுச் சொல்லை நீங்களே நேரடியாக எந்திரத்தில் பதிவு செய்யுங்கள். எக்காரணம் கொண்டும் ஏடிஎம் அட்டையை விற்பனையாளர் எடுத்துச் செல்வதற்கோ, கடவுச் சொல்லை கேட்டாலோ கொடுக்காதீர்.
 • மேலும், நம்பகமான கடைகளிலேயே இவ்வட்டையைப் பயன்படுத்தவும். பொருட்காட்சி மற்றும் விழாக்கால உடனடிக் கடைகளிலோ, அறிமுகமில்லாத கடைகளிலோ பயன்படுத்தாதீர்.
 • ஏடிஎம் பாஸ்வேர்டை அடிக்கடி மாற்றுங்கள். அதே போல உங்கள் பிறந்த ஆண்டு, வாகன எண், தொலைபேசி எண் என்பது போல உங்களுடன் தொடர்புடைய எந்த எண்ணையும் பயன்படுத்தி பின் எண்ணை உருவாக்காதீர். உங்களுக்கு நினைவில் நிற்கக்கூடிய வேறொரு எண்ணையே பயன்படுத்தவும்.
 • வெளி நபர்களிடம் பின் எண்ணை சொல்லவேண்டி நேர்ந்தால் உடனடியாக அதனை மாற்றிவிடவும்.
 • ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது அது குறித்த விபரத்தை  குறுஞ்செய்தியாக கைபேசிக்கு அனுப்பும் சேவை பெரும்பாலான வங்கிகளில் உள்ளது. இவ்வசதியை நீங்கள் பயன்படுத்தாவிடில் உடனே பதிவு செய்து செயல்பாட்டில் வைக்கவும்.
 • ஏடிஎம் கார்டு தொலைந்து போனால் உடனே உங்கள் வங்கிக்கு தகவல் தெரிவிக்கவும். அதனால் உங்கள் அட்டையை பிறர் பயன்படுத்தி பணம் எடுக்க முயற்சிப்பதைத் தடுக்கலாம். எனவே வங்கி உதவி எண்ணை எப்போதும் நினைவில் வைக்கவும் அல்லது பத்திரமாக எழுதி வைத்துக்கொள்ளவும். உதவி எண் ஏடிஎம் அட்டை, வங்கி பாஸ் புக் மற்றும் ஏடிஎம் மையங்களில் அச்சிடப்பட்டிருக்கும்.
பயோ மெட்ரிக் என்ற கைரேகை அல்லது கண் ரேகையைக் கொண்டு ஏடிஎம்-மில் பணம் எடுக்க அனுமதிக்கும் வசதியை ஏற்படுத்துவது பரிசீலனையில் உள்ளது. இத்தகைய பாதுகாப்பு வசதி வருவது நல்லது என்றாலும், சில சமயங்களில் நாம் சென்று பணம் எடுக்க முடியாத சூழலில் நம் குடும்ப உறுப்பினரை அனுப்பி பணம் எடுத்துவரச் சொல்வோம். அத்தகைய வாய்ப்பு பயோமெட்ரிக் முறையால் இழக்க நேரிடுவதை தவிர்க்க முடியாது.

. Related Posts with Thumbnails

மைக்ரோசாப்ட் வேர்டில் கால்குலேட்டர் வசதி

மைக்ரோசாப்ட் வேர்ட் மென்பொருளில் நாம் கொடுக்கும் எண்களைக் கணக்கிட்டு விடையளிக்க தனியாக கால்குலேட்டரைப் பயன்படுத்தாமல் வேர்டிலேயே உள்ள கால்குலேட் வசதியைப் பயன்படுத்தி விடை காணமுடியும். இந்த கால்குலேட் வசதியைப் பெற வேர்ட் 2003 பயன்படுத்துபவர்கள் மெனுபாரில் Tools -> Customize கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் Commands என்ற டேபைக் கிளிக் செய்யவும். அதில் Categories: என்ற பட்டியலில் உள்ள All Commands  என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது எதிர்புறம் உள்ள பட்டியலில் Tools Calculate என்பதைத் தேர்ந்தெடுத்து அதனை அப்படியே இழுத்து (Drag & Drop) வேர்டின் டூல்ஸ் பட்டன் அமைந்துள்ள பகுதியில் எந்த இடம் உங்களுக்கு வசதியானதோ அங்கே விடவும். இப்போது ToolsCalculate என்ற பட்டன் அங்கு இடம் பெற்றிருக்கும்.

இதே கால்குலேட் வசதியை வேர்ட் 2007ல் பெற, வேர்டின் இடது புற மேல் பகுதியில் உள்ள வேர்ட் ஃபைல் மெனு பட்டனைக் கிளிக் செய்ய வரும் மெனுவில் வேர்ட் ஆப்சன்ஸ் (Options) என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். வரும் விண்டோவில் Customize என்பதைக் கிளிக் செய்யவும். வரும் பட்டியலின் மேல் பகுதியில் All Commands என்பதைத் தேர்ந்தெடுக்க, தோன்றும் முழுமையான பட்டியலில் Calculate என்பதைத் தேர்ந்தெடுத்து Add பட்டனைக் கிளிக் செய்து எதிர்புற டூல்பார் வரிசைக்கு மாற்றி ஓகே கொடுக்கவும்.

இப்போது சிறிய வட்ட வடிவ பட்டன் ஒன்று Save, Undo, Redo பட்டன்களுக்கு அடுத்ததாக அமர்ந்திருக்கும். கீழுள்ள படத்தில் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது பார்க்கவும்.
இனி வேர்ட் டாக்குமெண்ட்டில் 24+34*20/10 என்பது போல எண்களைக் கொடுத்து அதனை செலக்ட் செய்தபடி இந்த பட்டனைக் கிளிக் செய்தால் வேர்டின் இடது புறம் கீழ்ப்பகுதியில்  விடை 92 என்று காட்டப்படும். இதேபோல வேர்டில் தயாரிக்கும் டேபிள்களில் கொடுக்கப்படும் எண்களைக் கூட்ட, செல்களை மட்டும் செலக்ட் செய்து இந்த பட்டனை அழுத்தி கூட்டுத்தொகையை அறியலாம். எக்செல் அளவு வசதிகள் இதில் இல்லாவிட்டாலும் மற்றொரு மென்பொருளைத் தேடாமல் கணக்கிட இவ்வழிமுறை உங்களுக்கு உதவும்.
.
Related Posts with Thumbnails

கம்ப்யூட்டர் பிரிண்டரின் கதை

ன்று அனைத்து தொழில் வர்த்தக நிறுவனங்களிலும் கணினியுடன் பிரிண்டர்களும் இன்றியமையாத இடத்தைப் பிடித்துள்ளன.
அச்சிடப்பட்ட காகிதங்களில் கைகளால் எழுதி ரசீதுகள் வழங்கப்பட்ட காலம் மாறி உடனுக்குடன் கணினி மூலம் கணக்கிட்டு பிரிண்டரில் அச்சிட்டுக் கொடுப்பதாக மாறியிருக்கிறது. அதற்குக் காரணம் எல்லோரும் பயன்படுத்தும் படியாக குறைந்த விலையிலும்  பல்வேறு துறையினருக்கும் ஏற்ற வடிவங்களிலும் பிரிண்டர்கள் கிடைப்பதுதான்.

முதன் முதலில் கம்ப்யூட்டருக்கான பிரிண்டர்  உருவானது 1938ல். சார்லஸ் கார்ல்சன் என்பவர் இதனை உருவாக்கினார். இதுவே இன்றைய லேசர் பிரிண்டர்களுக்கு முன்னோடி.
அதன்பிறகு 1953இல் வேகமாக அச்சிடும் பிரிண்டரை ரேமிங்டன் ரேண்ட் என்ற நிறுவனம் உருவாக்கியது. 1964-ல் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற போது போட்டி முடிவுகளை அச்சிட்டு வழங்க டாட்மேட்
ரிக்ஸ் (Dotmatrix) வகைப் பிரிண்டர்கள் உருவாக்கப்பட்டன. இதனை  சீக்கோ (இப்போது எப்சன்) நிறுவனம் சந்தைப்படுத்தியது. அதன் பிறகு 1970இல் இம்பேக்ட் பிரிண்டரும், 1971இல் ஜெராக்ஸ் நிறுவனத்தால் மேம்படுத்
தப்பட்ட லேசர் பிரிண்டரும் (Lesar Printer)வெளியிடப்பட்டன.
"முதல் கணினியை உருவாக்கிய சார்லஸ் பாபேஜ்  (Charles Babbage)  தான் முதல் பிரிண்டரையும் உருவாக்கியிருக்க வேண்டியவர். அதற்கான தொழில்நுட்பம் அவரிடம் இருந்தும் அதைத் தயாரிப்பதற்கான பணம் இல்லாமல் அந்த முயற்சியை அவர் கைவிட்டு விட்டார்.

150 ஆண்டுகளுக்குப் பிறகு 1991இல் அவரது தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தொழில் நுட்ப வல்லுனர் குழு ஒன்று அந்தப் பிரிண்டரை வடிவமைத்தது. 2.5 டன் எடையும், 4 ஆயிரம் உதிரி பாகங்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட அப்பிரிண்டர் கணக்கீடுகளை கணக்கிட்டு சிறப்பாக அச்சிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு டிப்ரன்ஸ் என்ஜின் 2 (Difference Engine No.2) என பெயர் சூட்டி லண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர்."
1976இல் இங்க் ஜெட்(Ink-Jet) என்ற திரவ மையைக் கொண்டு அச்சிட உதவும் பிரிண்டர்களும் சந்தைக்கு வந்தன. 1977ல் எப்சன் நிறுவனம் டெஸ்க்டாப் பிரிண்டர்களை  விற்பனைக்கு கொண்டு வந்தது.
தற்போது பிரிண்டர்கள் தயாரிப்பில் முக்கிய இடத்தை வகிப்பவை ஹாவ்லெட் பெக் கார்டு (hewlett packard), டிவிஎஸ் (TVS), கேனான் (Canan), சாம்சங் (Samsung), எப்சன் (Epson), லெக்ஸ்மார்க் (Lexmark) ஆகிய நிறுவனங்களாகும்.
இன்று தரத்துடனும், வேகத்துடனும் கூடிய பிரிண்டர்கள் வந்துவிட்டன. வண்ணத்தில் அச்சிட, காப்பியர், ஸ்கேனர், ஃபேக்ஸ், மற்றும் தாளின் இருபக்கமும் அச்சிட எனப் பல வசதிகளுடன் பிரிண்டர்கள் கிடைக்கின்றன. எங்கும் எடுத்துச் செல்லும் வகையிலான கையடக்க பிரிண்டர்களும் பயன்பாட்டில் உள்ளன.
, Related Posts with Thumbnails

பைல்களைத் தேடித்தரும் புதிய தேடியந்திரம்

பைல்களைத் தேடித்தரும் பயனுள்ள புதிய தேடியந்திரம்
zip, rar, mp3, 3gp,wma, video, audio, exe, png, jpg, tiff, ttf என்று பல வகையான கோப்புகளையும் எளிதில் தேடித்தரும் புதிய தளம் ஒன்று உள்ளது. இத்தளத்தில் சுமார்  738,966,512 பைல்கள் பட்டியலிடப்பட்டிருப்பதாக அத்தளம் தெரிவிக்கிறது. இதில் 1 கோடியே 37 லட்சத்திற்கும் மேற்பட்ட எம்பி3 மற்றும் பிற ஆடியோ பைல்களும், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடியோ பைல்களையும், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மென்பொருள் தொகுப்புகளையும், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்ட் அப்ளிகே‌‌ஷன்களையும் வைத்திருப்பதாகக் கூறுகிறது  இத்தளம்.

இதில் நேரடியாக இத்தளத்திலிருந்தே ஒரே கிளிக்கி்ல் டவுன்லோட் செய்ய முடிகிறது. பயனுள்ள இத்தளத்தின் பெயர் பைன்ட் பைல்ஸ்.நெட் http://www.findfiles.net/ என்பதாகும். பயன்படுத்திப் பாருங்கள், நிச்சயம் உபயோகமாக இருக்கும். Related Posts with Thumbnails

லினக்ஸ் 20 ஆண்டுகள்

ருபது ஆண்டுகளுக்கு முன்பாக லைனஸ் டோர்வால்ட்ஸ் (Linus Torvalds) பின்லாந்து நாட்டின் ஹெல்சின்கி பல்கலைக் கழகத்தில்  (University of Helsinki) கணினி மென்பொருள் பாட மாணவர். அப்போது மினிக்ஸ் என்ற இயங்கு தள மென்பொருள் கொண்ட கணினியே அங்கு பயன்படுத்துப்பட்டது. இம்மென்பொருள் கல்விப் பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கப்பட்டது. அது கிடைக்க அவர்  ஒரு மாதம் காத்திருக்க வேண்டியிருந்தது. இச்சூழலிதான் எவரும் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய இலவச இயங்குதளத்தை பொழுதுபோக்காக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் டோர்வால்ட்ஸ். பல்கலைக் கழகத்தில் இருந்த யுனிக்ஸ் கணினிக் கட்டமைப்பில் அதனைப் பயன்படுத்தி வெற்றியும் பெற்றார். பிறகு வந்த ரிச்சர்ட் ஸ்டால்மேன் குழுவினர் அதை மேலும் மேம்படுத்தினர். இதுவே இன்றைய லினக்ஸ் இயங்கு தளமாக உருவெடுத்துள்ளது.
மேஜைக் கணினிகளில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்துவதிலிருந்து மக்களை விடுவிக்க லினக்ஸ் மூலமாக செய்த முயற்சி தோல்வியடைந்தது.
ஆயினும், லினக்ஸ் ஆர்வலர்கள் கவலைப்படவில்லை. காரணம் கடந்த 20 ஆண்டுகளில் இயங்குதளம், இணையம், கைபேசி என்று லினக்ஸ் சாதித்தது ஏராளம்.
இலவச மென்பொருளாக இருந்தாலும், வணிக மென்பொருள்களான விண்டோஸ் மற்றும் ஆப்பிள் மேக் ஆகியவற்றிற்கு சரியான போட்டியாக லினக்ஸ் உள்ளது.
பொழுதுபோக்காக தொடங்கியதாக இருந்தாலும், இன்று கூகுள், ஃபேஸ்புக், அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் அளவு
வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
இன்று சூப்பர் கம்ப்யூட்டிங் உலகில் முன்னணிப் பயன்பாட்டில் லினக்ஸ் உள்ளது. இணைய வழங்கிகளில் 50 முதல் 80 சதம்  அளவில் பயன்படுத்தப்படுகிறது.
இன்று உலகில் அதிகமாக விற்பனையாகும் கூகுளின் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில் லினக்ஸ் திறந்த மூல நிரல் பதிப்பே பயன்படுத்தப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள விண்டோஸ் 7 ஸ்மார்ட் போன்கள் தற்போது சந்தையில் நுழைந்துள்ளன. அவற்றால் ஆண்ட்ராய்ட் இடத்தைப் பிடிப்பது என்பது அத்தனை சுலபமல்ல. Related Posts with Thumbnails

எழுத்துருக்களை நிர்வகிக்க உதவும் இலவச மென்பொருள்

ணினிகளில் ஒரு சில எழுத்துருக்களைத் தவிர்த்து பிற எழுத்துருக்களை நாம் அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. நிகழ்ச்சி அழைப்பிதழ்கள், வாழ்த்து மடல்கள், பவர்பாயிண்ட் பிரசன்டேஷன்கள் உருவாக்கும்போதுதான் மற்ற வடிவ எழுத்துரு வகைகளைப் பயன்படுத்துவோம். புதிய எழுத்துருக்களை  சேர்க்க கணினியிலுள்ள விண்டோஸ் ஃபாண்ட் போல்டரில் பதிய வேண்டும்.
என்றாவது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் எழுத்துருக்களை விண்டோஸ் ஃபாண்ட் போல்டரில் பதியாமல் கணினியில் தனியாக வேறு ஒரு இடத்தில் பதிவு செய்து வைத்துக் கொண்டு தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தலாம். அதற்கு நெக்ஸஸ் ஃபான்ட் மென்பொருள் உதவுகிறது. இந்த மென்பொருளில் எழுத்துருக்கள் உள்ள ஃபோல்டரை திறந்து வைத்திருக்கும் நிலையில் எந்த ஒரு மென்பொருளைத் திறந்தாலும் அதில் தற்போது நெக்ஸஸ் ஃபாண்ட்டில் திறந்திருக்கும் போல்டரில் உள்ள எழுத்துருக்களும் சேர்த்தே காட்டப்படும். எனவே கணினியில் எழுத்துருவை பதியாமலேயே பயன்படுத்த முடியும். மேலும் நாம் கொடுக்கும் தலைப்புக்குரிய எழுத்துருவை பிரிவியூவாக பார்க்கும் வசதி, காப்பி செய்வது, வேறு ஃபோல்டருக்கு மாற்றுவது எனப் பல கூடுதல் வசதிகளும் உள்ளது. இது போர்ட்டபிள் வடிவ இலவச மென்பொருளாகும். இதைத் தரவிறக்கம் செய்யும் முகவரி:
http://xiles.net/downloads/#NexusFont

Related Posts with Thumbnails

கிரெடிட் / டெபிட் கார்டு மோசடிகள்

போலி கிரெடிட் கார்டு மோசடி, ஏடிஎம் மையத்தில் கொள்ளை என வரும் செய்திகளைப் படித்திருப்பீர்கள். இது போன்ற தொழில்நுட்ப முறையிலான மோசடிக் குற்றங்கள் இந்தியாவில் தற்போது அதிகரித்திருக்கின்றன.
வேறொருவருடைய கார்டை திருடியோ அல்லது அதனை நகல்
எடுத்தோ பயன்படுத்துவது பொதுவாக நடைபெறும் திருட்டாகும். நகலெடுப்பதற்காக பல்வேறு யுக்திகள் கையாளப்படுகின்றன.

நீங்கள் பொருள்கள் வாங்கும் கடைகளில் கடன் அட்டை அல்லது ஏடிஎம் பண அட்டையை விற்பனையாளர் வசம் அளிக்கையில் மறைவாக வைத்திருக்கும் ஸ்கிம்மர் (Skimmer) என்ற தகவல்களை திருடும் கருவியில் செலுத்தி விபரங்களை சேகரித்து அதைப் பயன்படுத்தி போலி கார்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
மற்றொரு முறையில் ஸ்கிம்மர் கருவியை ஏடிஎம் இயந்திரங்களில் கார்டை செலுத்தும் இடத்தில் பொருத்தி அதன் மூலமாகவும் விபரங்களைத் திருடுகின்றனர். இத்தகைய திருட்டுகள் காவலர்கள் இல்லாத ஏடிஎம் மையங்களிலேயே அதிகம் நடைபெறுவதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
அதேபோல வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப பெட்ரோலிய நிறுவனங்கள் வழங்கும் பெட்ரே கார்டுகளை வாங்கி, அந்தக் கார்டுகளின் பின்புறம் இருக்கும் மேக்னடிக் டேப்பை அழித்துவிட்டு கார்பன் ரைட்டர் மூலம் அந்த இடத்தில் வெளிநாட்டில் வசிப்பவர்களின் ஏடிஎம் அட்டை ரகசிய குறியீட்டு விபரங்களைப் பதிந்து, போலி ஏ.டி.எம். கார்டாக மாற்றி, கோடிக்கணக்கில் கொள்ளையடித்த கும்பல் ஒன்று சமீபத்தில் சென்னையில் பிடிபட்டது நினைவு கூறத்தக்கது.

கிரெடிட் கார்டு / ஏடிஎம் கார்டு பாதுகாப்பு:
கடன் அட்டை (Credit Card), பண அட்டைகளை (ATM/Debit Card) விற்பனை நிலையங்களில் பயன்படுத்தும்போது கவனமாக இருக்கவும். விற்பனையாளர் வசம் கார்டு மற்றும் பாஸ்வேர்டை கொடுப்பதை தவிர்க்கவும். விழாக் காலங்களில், கண்காட்சி அரங்குகளில், புதிதாக முளைக்கும் கடைகளில் கடன் / பண அட்டைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
ஏடிஎம் மையங்களில் கார்டுகளைப் பயன்படுத்தும் முன்பாக வித்தியாசமான அந்நியப் பொருள்கள் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கவனமாக பார்க்கவும். அவசரத்தில் இது சற்றுக் கடினமானதுதான். தொடர்ந்து ஏடிஎம் மையங்களுக்குச் செல்வோர் மாற்றங்களை எளிதாக கண்டுகொள்ள இயலும்.
ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க அறிமுகம் இல்லாத நபரின் உதவியை நாடுவதும் தவறு.
ஏடிஎம்களில் பணம் எடுத்தால் குறுஞ்செய்தி அனுப்பும் சேவை தற்போது பல வங்கிகளில் உள்ளது. அச்சேவையைப் பயன்படுத்தலாம்.
நம்முடைய கவனக் குறைவே இதுபோன்ற குற்றங்கள் நடைபெறக் காரணமாகும். ஆகவே கடன் / பண அட்டையைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்கவும். Related Posts with Thumbnails

போலி மின்னஞ்சல்கள்

மின்னஞ்சலைப் பயன்படுத்தி நடைபெறும் முறைகேடுகள் வெளிநாடுகளில்தான் அதிகம் என்றிருந்த நிலை மாறி  இன்று இந்தியாவிலும் இதுபோன்ற மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
பரிசுக் குலுக்கலில் உங்கள் பெயருக்கு பரிசு விழுந்திருக்கிறது. பரிசை இந்தியாவிற்கு கொண்டு வர வங்கியில் பணம் செலுத்துங்கள் என்றும், உங்களுக்கு எங்கள் நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்கிறது அதில் சேர பணம் கட்ட வேண்டும் என்றும் பிரபல நிறுவனத்திலிருந்து அனுப்பியது போலவே போலியான மின்னஞ்சல் (Fake Mail) கடிதம் அனுப்புவது, உங்கள் வங்கிக் கணக்கில் பிழை உள்ளது, உங்கள் கணக்கு விபரங்களை மீண்டும் சமர்ப்பிக்கவும் என்று கூறி உங்கள் கணக்கு விபரங்களைத் திருடுவது எனப் பலவகை மோசடிகள் நடைபெறுகின்றன.
நம்முடைய மின்னஞ்சல் முகவரி இவர்களுக்கு எப்படிக் கிடைக்கிறது என்று ஆராய்ந்தால் அதற்குக் காரணம் பெரும்பாலும் நாமாகத்தான் இருப்போம். இணையதளங்களில் நுழையும்போது மின்னஞ்சல் முகவரிகளைக் கொடுப்பது, ஃபேஸ்புக், டிவிட்டர், ஆர்குட் போன்ற சமூக வலைத் தளங்களில் நம்மைப் பற்றிய விபரங்களைப் பலரும் பார்க்கும்படி வைப்பது ஆகியவற்றைக் குறிப்பாகச் சொல்லலாம்.
அதுமட்டுமல்லாமல் பிரபல நிறுவன மற்றும் அரசு  இணைய தளங்களிலிருந்தும்கூட தகவல்களைத் திருடுகின்றனர். சென்ற மாதத்தில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் இணையதளத்திலிருந்து 13 லட்சம் மின்னஞ்சல் முகவரிகள் திருடப்பட்டன. அம்முகவரியினர் அனைவருக்கும் உங்களுக்கு ஆன்லைன் வேலை கிடைத்திருக்கிறது என்ற போலியான செய்தி அனுப்பப்பட்டது.
இதுபோன்று வரும் மின்னஞ்சல்களைக் கவனமாகப் படித்துப் பார்க்கவேண்டும். அது எந்த முகவரியிலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது என்பதை Show Details என்ப‌தைக் கிளிக் செய்து பார்க்கவும். அம்முகவரி அந்த நிறுவனத்தின் உண்மையான முகவரியா என்பதை ஆராய்ந்து அதன்பிறகே பதிலளிக்கவேண்டும்.
இம்மின்னஞ்சல்களுடன் வரும் இணையதள இணைப்புகளைக் கிளிக் செய்து திறக்காமல், அந்த இணைப்பை காப்பி செய்து புதிய இணையப் பக்கத்தில் பேஸ்ட் செய்து திறக்கவும். கிளிக் செய்து திறந்தால் நமக்குக் காட்டுவது உண்மையான முகவரியாக இருந்தாலும் பின்னிணைப்பாக வேறொரு போலி இணையதளத்தின் முகவரி கொடுக்கப்பட்டிருக்கலாம். எனவே  கவனமாக இருக்கவேண்டும்.
எனவே தேவையற்ற தளங்களில் மின்னஞ்சல் முகவரியைப் பதிவதெற்
கென்று தனியாக வேறொரு மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாம். சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட தகவல்களைப் பதிவதைத் தவிர்ப்பதும், எல்லோரும் பார்க்காத  வகையில் செக்யூரிட்டி செட்டிங்கை மாற்றியமைப்பதும் அவசியமாகும்.
. Related Posts with Thumbnails

கூகுள் பிளஸ் முகவரியை உங்கள் பெயருக்கு மாற்ற

கூகுள் பிளஸ் சேவை விரைவாக எல்லோராலும் விரும்பப்படும் சமூக வலைத்தளமாக உருமாறிவருகிறது. கூகுள் + -ல் நம்முடைய ID எண்ணாலேயே குறிப்பிடப்படுகிறது. அதுவும் https://plus.google.com/u/0/101603382714391674411 என்பதாக உள்ளது. பேஸ்புக், டிவிட்டரில் நம்முடைய பெயரிலேயே இருப்பதால் எளிதில் புதியவர்களுக்கு அடையாளம் காட்ட முடிகிறது. ஆனால் கூகுள் பிளஸ் ஸின் இவ்வளவு நீளமான முகவரியை எல்லோராலும் நினைவில் வைப்பது கடினம். இதற்கு மாற்றாக இணைய முகவரியை சுருக்கித் தரும் தொழில்நுட்பத்தில் சுடச்சுட ஒரு இணையதளம் உருவாகியுள்ளது.

http://gplus.to/ என்ற இத்தளத்தில் நாம் பயன்படுத்த விரும்பும் பெயரையும், கூகுள் பிளஸ் எண்ணையும் கொடுத்தால் உடனடியாக நமக்கான சுருக்கப்பட்ட முகவரி வழங்கப்படுகிறது. அந்த முகவரி http://gplus.to/your id என்பதாகக் கிடைக்கும். இதனை இனி நீங்கள் நினைவில் வைப்பதும், மற்றவர்களுக்குச் சொல்வதும் எளிதாகும்.
, Related Posts with Thumbnails

இணைய உலகில் ஒரு நிமிடத்தில் ...


எப்போதும் பரபரப்பு மிக்கது இணைய உலகம். ஒவ்வொரு நிமிடத்திலும் அது பல மாற்றங்களை சந்திக்கிறது. இந்தப் பரபரப்பான ஒவ்வொரு நிமிடத்திலும் நடக்கும் சில முக்கிய நிகழ்வுகள் குறித்த கணக்கீடு ஒன்றை கோ குளோப் டாட் காம் (goglobe.com) என்ற இணைய தள நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. அந்தப் பட்டியலிலிருந்து

 • ஒரு நிமிடத்தில் கூகுள் தளத்தில் 6 லட்சத்து 94 ஆயிரத்து 445 தேடல் முடிவுகள் பட்டியலிடப்படுகின்றன.
 • 16 கோடியே 20 லட்சம் இமெயில்கள் அனுப்பப்படுகின்றன.
 • ஒரு நிமிடத்தில் 60க்கும் மேற்பட்ட Blog எனப்படும் வலைப்பூக்கள் தொடங்கப்படுகின்றன. ஆயிரத்து 500 வலைப்பதிவுகள் புதிதாக சேர்க்கப்படுகின்றன.
 • 70க்கும் மேற்பட்ட புதிய இணையதள முகவரிகள் (Domain Names) பதியப்படுகின்றன.
 • யூ டியூப் (youtube.com) வீடியோ தளத்தில் 600க்கும் மேற்பட்ட புதிய வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன.
 • யாகூ ஆன்சர்ஸ் டாட் காம் (answers.yahoo.com) தளத்தில் 40 கேள்விகளும், ஆன்சர்ஸ் டாட் காம் (answers.com) தளத்தில் 100க்கும் மேற்பட்ட கேள்விகளும் கேட்கப்படுகின்றன.
 • 13 ஆயிரத்திற்கும் மேலான ஐபோன் ஆட்ஆன்கள் (Add-on) பதிவிறக்கம் செய்யப்படுகின்றன.
 • இணையம் மூலமாக தொலைபேசி சேவை அளிக்கும் ஸ்கைபி தளம் (Skype) ஒரு நிமிடத்தில் பரிமாறும் அழைப்புகளின் (Voice Calls) எண்ணிக்கை 3 லட்சத்து 70 ஆயிரம் நிமிடங்கள்.
 • சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் (Facebook) பதிவாகும் கருத்துக்களின் எண்ணிக்கை 79 ஆயிரத்து 364.
 • மற்றொரு சமூக வலைத் தளமான டிவிட்டரில் (Twitter) 320க்கும் மேற்பட்டோர் புதிதாக இணைகின்றனர். 98 ஆயிரம் புதிய பதிவுகள் (tweets) பதியப்படுகின்றன.
 • யாகூவின் பிளிக்கர் (flickr.com) போட்டோ ஷேரிங் தளத்தில் 600க்கும் மேற்பட்ட படங்கள் பதிவேற்றப்படுகின்றன.
 • இணைய தளங்களைப் பார்க்க உதவும் ஃபயர்பாக்ஸ் இணைய உலாவி (firefox browser) 1,700 முறை பதிவிறக்கம் செய்யப்படுகிறது.
.
Related Posts with Thumbnails

Corrupt ஆன ஃபைல்களை மீட்டெடுக்கும் புதிய மென்பொருள்

திடீரென்று ஏற்படக்கூடிய மின் தடை, வைரஸ் தாக்குதல் எனப் பல பிரச்சனைகளால் நம்முடைய பைல்கள் ஓப்பனாகாமல் போனால் என்ன செய்வது. இதுபோன்ற Corrupt ஆன ஃபைல்களை மீட்டெடுக்க புதிய மென்பொருள் வந்திருக்கிறது.
முற்றிலும் இலவசமாக கிடைக்கும் இம்மென்பொருளின் பெயரே ஃபைல் ரிப்பேர் என்பதுதான்.

இம்மென்பொருள் சரி செய்யும் பைல் வகைகள்:
 • corrupted Word documents (.doc, .docx, .docm, .rtf)
 • corrupted Excel spreadsheets (.xls, .xla, .xlsx)
 • corrupted Zip or RAR archives (.zip, .rar)
 • corrupted videos (.avi, .mp4, .mov, .flv, .wmv, .asf, .mpg)
 • corrupted JPEG, GIF, TIFF, BMP, PNG or RAW images (.jpg, .jpeg, .gif, .tiff, .bmp, .png)
 • corrupted PDF documents (.pdf)
 • corrupted Access databases (.mdb, .mde, .accdb, .accde)
 • corrupted PowerPoint presentations (.ppt, .pps, .pptx)
 • corrupted music (.mp3, .wav)
 சுமார் 1 MB அளவே உள்ள இம்மென்பொருளை கணினியில் பதிந்து வைத்துக் கொள்ளலாம் அவசரத்திற்கு உதவும்.
டவுன்லோட் செய்ய: http://www.filerepair1.com/ Related Posts with Thumbnails

ஒய்-ஃபி (Wi-Fi) தொழில்நுட்பம்


கம்பிவடத் தொழில் நுட்ப முறைக்கு மாற்றாக கம்பியில்லாத வயர்லெஸ் தொழில்நுட்பம் இன்று பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.  அதில் ஒருவகையே ஒய்-ஃபி (Wi-Fi). இது ஒயர்லெஸ் ஃபிடெலிடி (Wireless Fidelity) என்பதன் சுருக்கமாகும். இத்தொழில் நுட்பம் ஒய்-ஃபி அல்லயன்ஸால்  (Wi-Fi Allaines)  உருவாக்கப்பட்டது.
வயர்லெஸ் நுட்பம் வானொலி, தொலைக்காட்சி, கணினி,  கைபேசி மற்றும் பல சாதனங்களில் வெவ்வேறுஅலைவரிசைகளில் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் ஒய்-ஃபி-க்கு 2.4 கிகா ஹெர்ட்ஸ் (Giga Hertz) முதல் 5 கிகா  ஹெர்ட்ஸ் (Giga Hertz) வரையிலான அலைவரிசை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனை 802.11 என்ற எண்ணால் குறிப்பிடுவர். வினாடிக்கு  11 மெகா பைட் (Mega Byte) முதல்   140 மெகா பைட் வரை தகவல்களைக் கடத்தும் திறன் கொண்டது. இத்திறனை அடிப்படையாக வைத்து 802.11ஒ, 802.11, 802.11ப, 802.11  என நான்கு உட்பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது.
அலுவலகங்களில் வயர்கள் இல்லாமல் வயர்லெஸ் முறையில் கணினிகள், பிரிண்டர்கள், மடிக்கணினிகளுக்கிடையே தொடர்பை ஏற்படுத்திட (LAN) இத்தொழில்நுட்பம் உதவுகிறது.
தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள்  ஆகிய பல இடங்களில் இணையத்தைப்  பயன்படுத்துவதற்கென  ஒய்-ஃபி அக்ஸஸ் பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது வீடுகள் சிறு நிறுவனங்களில் இணைய இணைப்பிற்காகப் பயன்படுத்தப்படும் மோடம்களில் ஒய்-ஃபி ரூட்டர்கள் (Wi-fi Router) பொருத்தப்பட்டுக் கிடைக்கின்றன.

இதுபோன்ற ஒய்-ஃபி வசதி உள்ள இடங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ற மடிக்கணினிகள் (Laptop), குளிகைக் கணினிகள் (Tablot Pc) மற்றும் கைபேசிகள் (Smart Phones)  சந்தையில் பல மாடல்களில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.
ஒய்-ஃபி சாதனங்களுக்கான இந்திய சந்தையின் தற்போதைய மதிப்பு சுமார் 120 கோடி. வரும் ஆண்டுகளில் இது 400 கோடியாக வளர்ச்சியடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தொழில் நுட்பம் சிறந்ததாக இருந்தாலும் இதிலும் சில பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ளது. ஒய்-ஃபி நெட்வொர்க்கில்  ஹேக்கர்கள் எளிதில் நுழைந்து நம் தகவல்களைத் திருடி நாசவேலையில் ஈடுபடும் சாத்தியக்கூறுகள் உண்டு.
ஒய்-ஃபி நெட்வொர்க்கில் தகவல் திருட்டு
ஒய்-ஃபி நெட்வொர்க்கின் எல்லைக்குட்பட்ட சுற்றுப்புறத்தில் எங்கிருந்தும் அந்த நெட்வொர்க்கை ஹேக் செய்யமுடியும். இதற்கான மென்பொருள்கள்கூட இணையத்தில் கிடைக்கின்றன.
இதுபோன்ற திட்டமிட்ட ஹேக்கிங் மட்டுமல்லாமல் ஏதோச்சையாக கிடைக்கும் ஒய்-ஃபி நெட்வொர்க்கில் நுழைந்து விளையாட்டாக அல்லது விஷமத்தனமாகக் குழப்பங்களை ஏற்படுத்துதல், தகவல்களைத் திருடுதல் ஆகியவையும்கூட நிகழ்கின்றன.
தற்காலிகமாக போலியான ஒய்-ஃபி நெட்வொர்க்கை உருவாக்கி தொடர்பு கொள்ளும் கணினிகளில் தகவல்களைத் திருடுவது எனப் பல வழிமுறைகள் கையாளப்படுகின்றன.
பாதுகாப்பு வழிமுறைகள்
இதுபோன்ற தீய நோக்கத்துடன் வயர்லெஸ் நெட்வொர்க்குகளை அணுகாமல் தடுக்க ஒய்-ஃபி ரூட்டரின் பாஸ்வேர்டை சாதாரணமானதாக இல்லாமல் கடினமானதாக அமைக்கவேண்டும்
உங்கள் ஒய்-ஃபி நெட்வொர்க்கிற்கான பாதுகாப்பு அமைப்பை (Security Setup) எப்போதும் இயக்கத்திலேயே வைத்திருக்கவும்.  வீடுகள் மற்றும் சிறு நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் ஒய்-ஃபி ரூட்டர்களுக்கும் இவை பொருந்தும். பயன்படுத்தாத போது மின் இணைப்பைத் துண்டித்து விடுவதே  நல்லது. உங்கள் நெட்வொர்க்கில் உள்ள ஒய்-ஃபி கருவிகளுக்கு மட்டுமே இணைப்பை அனுமதிக்கும் படியான ஃபில்டர்களைப் பயன்படுத்தவும். ஒய்-ஃபி சாதனங்களில் வேறு திறந்த நெட்வொர்க்குகளை தானாகவே இணைக்கும் (Automatic Access) தானியங்கி அமைப்புகள் இருந்தால் அவற்றின் செயல்பாட்டை நிறுத்தி வைக்கவும். நிறுவன நெட்வொர்க்குகளுக்கு ஃபயர்வால் (Firewall) போன்ற கூடுதலான பாதுகாப்பு வளையங்களை ஏற்படுத்தவேண்டும்.
. Related Posts with Thumbnails

கூகுள் தமிழுக்கு Contribute செய்வோம்

கூகுளின் மொழி மாற்று வசதியை பயன்படுத்திப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த வசதி தற்போது சோதனை அ‌டிப்படையில் உள்ளது. மொழிபெயர்ப்பும் சிறப்பானதாக இல்லை. வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழிபெயர்க்கிறது. சில வாக்கியங்களை மட்டுமே சரியாக மொழிபெயர்க்கிறது. இதனை சரி செய்யும் பணி நம் கைகளில்தான் உள்ளது. ஆம், இந்த மொழிமாற்று வசதியை கூகுள் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இத்தனை நாட்களாக கூகுளின் மொழி மாற்றி லேப் தளத்தில் சில தன்னார்வலர்களால் பதியப்பட்டு வந்த வார்த்தைகள் குறிப்பிட்ட எண்ணிக்கையை எட்டியதும், உலகம் முழுவதிலிமிருந்து கூகுள் தளத்திற்கு வரும் தமிழ் அன்பர்களின் வளர்ச்சியும்தான் (வியாபார யுக்தி என்றும் சொல்லலாம்) கூகுள் தன் மொழிபெயர்ப்புப் பட்டியலில் தமிழைச்  சேர்த்ததற்குக் காரணம்.
இந்த மொழிபெயர்ப்பு‌ சேவை தமிழுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்த நாம் மொழி மாற்றிப் படிக்க நினைக்கும் கட்டுரை அல்லது இணையதளத்தை தேர்ந்தெடுத்து உள்ளிடும்போது கிடைக்கும் தமிழ் மொழிபெயர்ப்புக் கட்டுரையில் வார்த்தைகள் தவறாக இருந்தால் அதனை உடனடியாக சரி செய்யலாம்.
அதற்குத் தவறான சொற்றொடரின் மீது மொளசின் முனையை கொண்டு சென்றால் அச்சொல்லிற்கு இணையான வேறு சொற்கள் காட்டப்படும். அதில் சரியானதைத் தேர்ந்தெடுத்த அளிக்கலாம் அல்லது வேறு புதிய பொருத்தமான வார்த்தை அல்லது வாசகம் இருந்தால் அதனை உடனடியாக தட்டச்சு செய்து உள்ளிடலாம்.


அதுவே இணையதள மொழி மாற்றியாக இருந்தால் Contribute a better translation என்ற Box வரும். அதனைக் கிளிக் செய்து சரியான சொற்றொடரைக் கொடுத்து Contribute என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.

(இப்படிச் செய்வதால் என்ன நடக்கும் என்று கேட்கிறீர்களா?
அதற்காக சிறு விளக்கம். தொழில் நுட்பத்துறை சார்ந்தவர்களுக்கு தெரிந்ததுதான், மற்றவர்களுக்காக:
கூகுள் தளத்தின் சிறப்பே அதுதான். கூகுள் இணைய தளத்தில் நீங்கள் தேடும் ஒரு வி‌‌ஷயம் தொடர்ந்து பல மாதங்களுக்கு அதன் டேட்டா பேஸில் பதிந்து வைக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல நீங்கள் எந்த ஐபி முகவரி அல்லது ஜிமெயில் கணக்கிலிருந்து தேடியுள்ளீர்கள் என்பதும் நீங்கள் தேடும் பொருள் குறித்த பட்டியலில் எந்த இணையதள இணைப்பை கிளிக் செய்கிறீர்கள் என்பதும் கூடப் பதியப்படுகிறது. இதுபோல உலகம் முழுவதுமிருந்து தேடுபவர்களின் விபரங்களை கூகுள் ஒவ்வொரு நொடியிலும் பதிந்து கொண்டேயிருக்கிறது. (இந்த செயல் தனிமனித சுதந்திரத்தை பாதிக்கிறது என்ற குரல் ஒலித்தாலும், அதுதான் கூகுளின் அஸ்திவாரம் ‌)
எடுத்துக்காட்டாக அண்ணா யுனிவர்சிட்டி என்று கொடுத்து தேடும்போது முதலிடத்தில் பல்கலைக் கழகத்தின் இணையப்பக்கம் வருவதும் இந்த அடிப்படையில்தான். ஒரு இணையதளத்தை அதிகம்பேர் தேர்ந்தெடுத்துக் கிளிக் செய்தால் அவர்கள் கிளிக் செய்த நாடு, பகுதி, இணையதளத்தின் வகை, தேடும் பொருள், அது சார்ந்த பிற என்று பல கூடுதல் விபரங்களையும் அலசி ஆராய்ந்து நீங்கள் தேடுவது சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளம்தான் என்பதாக முடிவெடுத்துக் காட்டுகிறது.
அதுவே அண்ணா பல்கலைக்கழகம் என்று ஒன்று கனடாவில் இருந்தால் நீங்கள் இருக்கும் இடம் கனடாவாக இருக்கும் பட்சத்தில் கனடாவில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தை முன்னிலைப்படுத்திக் காட்டக் கூடும்.
இத்தொழில்நுட்பம்தான் கூகுளின் அனைத்து வகை சேவைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.)

எனவே நீங்கள் இப்போது கொடுக்கும் சரியான வார்த்தை அல்லது வாக்கியம் மற்றொருமுறை அதே போன்ற வாக்கிய அமைப்பு வரும்பொழுது பயன்படுத்தப்படும். வளமை மிக்க தமிழ் மொழியில் சொற்பிழை, பொருட்பிழை இன்றி குறைந்த காலத்திற்குள்ளாக மொழிபெயர்ப்பு சேவை சரியானதாகவும் சிறந்த தரத்திற்கும் மாறுவது என்பது இனி நம் அனைவரின் பங்களிப்பி்ல்தான் உள்ளது.  Contribute a better translation.
. Related Posts with Thumbnails

நீங்களே சரிசெய்யக்கூடிய கணினிப் பிரச்சனைகள்..

கணினியில் திடீரென்று ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நம்மை திகைப்பில் ஆழ்த்திவிடக் கூடியவை. கடைசியா அணைக்கிற வரைக்கும் நல்லாத்தானே இருந்தது என்று நாம் புலம்புவதுண்டு.
கணினியில் ஏற்படக்கூடிய பொதுவான அடிப்படைப் பிரச்சனைகளுக்காக  கணினிப் பராமரிப்பாளரை அழைக்காமல், ஒரு சில நிமிடங்களில் நாமே சரி செய்ய முடியும். அத்தகைய  சரி செய்யக்கூடிய பிரச்சனைகள் சிலவற்றை பார்ப்போம்.
கணினியை தொடங்கும்போது (Power On) மூன்று பீப் ஒலி (Beep Sound) கேட்டால்:
ரேம் நினைவகம் சரியாக பொருத்தப்படாமல் இருக்கலாம் அல்லது பழுதடைந்திருக்கலாம். எனவே மதர்போர்டில் (Mother Board) மாட்டியுள்ள ரேம் நினைவகத்தை  (RAM Memory) கழற்றி மீண்டும் சரியாக அதன் ஸ்லாட்டில் பொருத்தி கணினியை இயக்கவும். 
கணினியை இயக்கும் போதெல்லாம் கணினிக் கடிகாரத்தில் நேரம் மாறிவிடுகிறதா?
 மதர் போர்டில் உள்ள 3 வோல்ட் மின்சக்தி கொண்ட சீமாஸ் (CMOS) பேட்டரி தீர்ந்து போயிருக்கலாம். புதிய பேட்டரி வாங்கிப் பொருத்திப் பார்க்கவும்.
மூன்று பீப் ஒலிகளில் ஒன்று நீளமாகவும், இரண்டு குறைவாகவும் கேட்டால்:
இத்தகைய ஒலி கேட்டால் கணினியின் டிஸ்பிளே கார்டில் (Display Card) பிரச்சினை என்பதை அறிந்து கொள்ளவும். இந்தக் கார்டை கழற்றி திரும்பப் பொருத்தவும். அப்பொழுதும் பிரச்சினை தொடர்ந்தால் அதனை மாற்ற வேண்டியதிருக்கும்.
இடைவிடாமல் பீப் ஒலி கேட்டால்:
இது விசைப் பலகையில் (கீ போர்ட் - Key Board) பிரச்சினை இருந்தால் தோன்றும் ஒலியாகும். ஏதேனும் ஒரு விசையோ, பல விசைகளோ தூசு படிந்ததன் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களால் மேலே எழாமல் இறுக்கமாக அழுந்தியிருந்தால் இந்த ஒலி தோன்றும். அதனை சரிசெய்தால் ஒலி நின்றுவிடும்.
கணினித் திரை (Monitor) மற்றும் சிபியூவில் ஷாக் அடித்தால்:
நேர், எதிர் மின் இணைப்புகளுடன் எர்த் (Earth) எனப்படும் மூன்றாவது இணைப்பு சரியாக கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்க்கவும். நிலத்தில் பதிக்கப்பட்ட சிறு குழாயின் மூலமாக இந்த இணைப்புக் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். அப்படிக் கொடுக்கப்படாமல் தொடர்ந்து ஷாக் அடிக்கும் நிலையிலேயே இருந்தால் கணினி விரைவிலேயே பழுதாகும் நிலை ஏற்படும்.
கணினியை இயக்கியதும் ஹார்ட் டிஸ்க் ஃபெயிலியர் (  HDD Error or Hard Disk Failure) என்பது போன்ற தகவல் திரையில் தோன்றினால்:
சிபியூ(CPU)வில் ஹார்ட்டிஸ்க்கிற்கு மின்சாரம் தரும் இணைப்பு (Power Card), டேட்டா கேபிள் (Data Card) இணைப்பு ஆகியவற்றை கழற்றி சரியாகப் பொருத்தவும். சிபியூவில் தூசிகள் படிந்திருந்தால் அதனை துடைத்துப் பிறகு இயக்கிப் பார்க்கவும். அல்லது சிடி டிரைவில் ஏதேனும் சிடிக்கள் இருந்தாலும் இதுபோன்ற பிரச்சனை எழும். சிடியை எடுத்துவிட்டு இயக்கிப் பார்க்கவும்.
சுவிட்ச் ஆன் செய்ததும் கணினி இயங்கவில்லையென்றால்:
கணினிக்கான மின் இணைப்புகள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும். கணினியின்  மின்சார தொடர்பை நிர்வகிக்கும் எஸ்.எம்.பி.எஸ். (SMPS) பகுதி சரியாக வேலை செய்கிறதா என்பதையும், எஸ்.எம்.பி.எஸ்-லிருந்து மதர்போர்டிற்குச் செல்லும் மின் இணைப்பு சரியாக பொருத்தப்
பட்டுள்ளதா என்பதையும் பரிசோதித்துப் பார்க்கவும்.
மேற்கண்ட சோதனைகளைச் செய்யும்போது கண்டிப்பாக கணினிக்கான மின் இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்யவும்.
இவை அல்லாமல் வைரஸ் தாக்குதல், மின்னழுத்தம் ஆகியவற்றாலும் கணினி தாக்கப்படலாம். அவற்றை கணினிப் பராமரிப்பாளரிடம் சொல்லித்தான் சரி செய்யவேண்டும். Related Posts with Thumbnails

மின்னஞ்சல்களை அழகாக்கும் நியூஸ்லெட்டர் டெம்ப்ளேட்கள்

இணையதளங்கள் மற்றும் மின்னஞ்சல் மூலமாக வர்த்தகம் செய்யவும், விளம்பர‌ம் செய்யவும் கார்ப்பரேட் நிறுவனங்கள் விதவிதமான டிசைன்களில் மின்னஞ்சல்களை அனுப்புவதை‌ நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
இத்தகைய செய்தி மின்னஞ்சல்களை  HTML/ CSS ல் வடிவமைக்கின்றனர். அதுபோல நாமும் நமது வர்த்தகத்திற்கு பயன்படுத்தலாமே என்று எண்ணுபவர்களுக்கு ரெடிமேட்  டெம்ப்ளேட்களை வழங்கும் பல தளங்கள் உள்ளன. அதில் சிறப்பான சில தளங்கள் இங்கே கொடுத்திருக்கிறேன். இத்தளங்களில் சில இலவசமாகவும் கூடுதல் வசதிகளுக்கு கட்டணம் செலுத்தும் விதத்திலும் டெம்ப்ளேட்கள் கிடைக்கின்றன. பிடித்தவற்றை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். வர்த்தக விளம்பரமாக மட்டுமல்லாமல் புதிதாக இணையதள வடிவமைப்புப் பயிற்சியில் உள்ளவர்களுக்கும் இவை உதவும் என்று நம்புகிறேன்.
நியூஸ்லெட்டர் டெம்ப்ளேட் தரும் தளங்கள்:
http://www.cakemail.com/newsletter-template/

http://www.campaignmonitor.com/templates/
http://freemailtemplates.com/mail-templates

http://hotemailtemplates.com/
http://www.templateworld.com/
. Related Posts with Thumbnails

உங்கள் கணினிக்கு அவசியமான மென்பொருள்கள்

கணினியில் இலவசமாகக் கிடைக்கும் மென்பொருள்களை வாங்கி அடைக்காமல் தேவைக்குரிய மென்பொருள்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும். அதிகமான மென்பொருள்களைப் பதிவது   உங்கள் கணினியின் செயல்திறன் மற்றும் வேகத்தை  குறைக்கக்கூடும்.
பொதுவான கணினிப் பயன்பாட்டிற்கென்று சில மென்பொருள்கள் உள்ளன. அவற்றைப் பதிந்து கொண்டாலே பெரும்பாலான அடிப்படை நிலை வேலைகளுக்குப் போதுமானது. அப்படிப்பட்ட சில இலவசமாகக் கிடைக்கும் மென்பொருள்களை இங்கே தருகிறோம். இவற்றை இணையதளங்களிலிருந்து பதிவிறக்கியோ அல்லது உங்கள் கணினி வல்லுநரிடம் கேட்டுப் பெற்றோ பயன்படுத்தலாம்.

சி கிளீனர் (C Cleaner): 
கணினியை உபயோகிக்கும்போது உருவாகும் தற்காலிக கோப்புகள்,  தேவையில்லையென்று நாம் அழித்த கோப்புகள், இணையத்
தைப் பயன்படுத்தும்போது உருவாகும் தற்காலிக கோப்புகள், குக்கிகள் ஆகியவற்றை தேடி அழித்து கணினியை சுத்தமாக்கும். ரிஜிஸ்ட்ரியை சீராக்க, கணினியில் மென்பொருள்களை சேர்க்க, நீக்க உதவும்.  பதிவிறக்கம் செய்ய: http://www.piriform.com/ccleaner
லிப்ரே ஆபிஸ்  (Libre Office):
 மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருளுக்கு மிகச் சிறந்த மாற்றாக உள்ள ஆபிஸ் மென்பொருளாகும். பதிவிறக்கம் செய்ய: http://www.libreoffice.org/
விஎல்சி மீடியா பிளேயர் (VLC Media Player):
வீடியோ பார்ப்பதற்கும், பாடல்களைக் கேட்பதற்கும் உதவும் மென்பொருள். விண்டோஸ் மீடியா பிளேயர், வின்ஆம்ப் ஆகியவற்றைக் காட்டி
லும் அதிகமான வகை வீடியோ, ஆடியோ ஃபைல்களை ஆதரிக்கக்
கூடியது.
http://www.videolan.org/
ஃபார்மேட் பேக்டரி(Format Factory):
வீடியோ, ஆடியோ ஃபைல்களை ஒரு வகையிலிருந்து மற்றொரு வகைக்கு மாற்ற உதவும் மென்பொருள். பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான ஃபார்மட்
களை ஆதரிக்கக்கூடிய எளிய மென்பொருள்.
http://www.formatoz.com/ 
ரெக்குவா (Recuva):
தெரியாமல் அழித்த கோப்புகளை கணினி, பென்டிரைவ், மெமரி கார்டுகளிலிருந்து மீட்டுத் தரும் மென்பொருள். 
http://www.piriform.com/recuva
டீஃப்ராக்ளர் (Defraggler): 
கணினியில் கோப்புகளை மாற்றுதல், அழித்தல் ஆகிய செயல்பாடுகளால் ஹார்ட் டிஸ்க்கின் அடுக்குகளில் கோப்புகள் பதிவது சீரற்ற நிலையிலிருக்கும். இது கணினியின் வேகத்தை குறைக்கும். இதை சரிசெய்ய இம்மென்பொருளை மாதம் ஒருமுறை இயக்கி கோப்புகளை சீராக்கலாம். பதிவிறக்க: http://www.piriform.com/defraggler
கூகுள் பிக்காஸா (Google Picasa) : 
கணினியில் நாம் சேகரித்த வைத்துள்ள படங்களை தேடுதல், ஒழுங்குபடுத்துதல், எடிட் செய்தல், பிக்காஸா இணையப் பக்கத்திற்கு அப்லோட் செய்தல் ஆகிய பணிகளுக்கு உதவக்கூடியது.
http://picasa.google.com/
7 ஜிப் (7 Zip): 
கோப்புகளை சுருக்கவும், பல கோப்புகளை ஒருங்கிணைத்து ஒரே கோப்பாக மாற்றவும், திறக்கவும் உதவும் மென்பொருள். ஜிப், ரேர், ஐஎஸ்ஓ மற்றும் பல முன்னணி கோப்பு சுருக்க வடிவங்களை ஆதரிக்கக்கூடியது.
 http://www.7-zip.org/
அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ் ஹோம் எடிசன் (Avast Home Edition):
 இலவசமாகக் கிடைக்கும் வைரஸ்  எதிர்ப்பு மென்பொருள்களில் சிறப்பானதாக கூறப்படும் மென்பொருள். அதேபோல  ஏவிஜி ஆண்டிவைரஸ், அவிரா ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.
http://www.avast.com/
மொஸில்லா பயர்பாக்ஸ் (Mozilla Firefox):
இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு மிகச் சிறந்த மாற்றாக இணைய உலாவி. கூகுள் குரோம், ஓபேரா ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.
http://www.mozilla.com/en-US/firefox/new
மொஸில்லா தண்டர்பேர்ட் (Thunderbird): 
அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மென்பொருளுக்கு மாற்றாக உள்ள மின்னஞ்சல்களை நிர்வகிக்க, அனுப்ப உதவும் மென்பொருள்.
http://www.mozillamessaging.com/en-US/thunderbird/
அக்ரோபேட் ரீடர் (Acrobat Reader) (அ) ஃபாக்சிட் ரீடர் (Foxit Reader):
 போர்ட்டபிள் டாக்குமண்ட் ஃபார்மட் எனப்படும் பிடிஎப் கோப்புகளை பார்க்க உதவும் மென்பொருள்.
http://get.adobe.com/reader/
http://www.foxitsoftware.com
. Related Posts with Thumbnails

பசீரா வீடியோ கன்வர்ட்டர் சூட்

வீடியோ கன்வர்ட் செய்யும் மென்பொருள்கள் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கின்றன. அப்படி புதிதாக வந்திருக்கும் மென்பொருள்தான் பசீரா.
இது AVI, MPEG, MP4, MOV, WMV, FLV, M4V, 3GP. ஆகிய வீடியோ பார்மட்களை ஆதரிக்கக் கூடியது. வீடியோவை மட்டுமல்லாத வீடியோவிலிருந்து ஆடியோவையும் பிரித்துத் தரக்கூடியதாக உள்ளது. மாற்றக்கூடிய ஆடியோ பார்மட்கள் MP3, WMA, OGG, WAV, AAC, AC3, FLA.
இது சிறிய சிறிய பல மென்பொருள்களின் தொகுப்பாக உள்ளது.

Pazera Free FLV to AVI Converter     1.3
Pazera Free Video to Flash Converter   1.1
Pazera Free 3GP to AVI Converter     1.3
Pazera Free Video to 3GP Converter    1.2
Free Zune Video Converter         1.1
Pazera Free PSP Video Converter      1.1
Pazera Free Video to iPod Converter    1.1
Pazera Free MP4 to AVI Converter     1.4
Pazera Free MOV to AVI Converter     1.3
Pazera Free Audio Extractor        1.4இவற்றை தேவைக்கேற்றபடி தனித்தனியாகவும் டவுன்‌லோட் செய்து கொள்ளலாம்.
அல்லது பசீரா வீடியோ கன்வர்ட்டர் சூட்டை முழுவதுமாகவும் டவுன்லோட் செய்யலாம். அளவு 34 MB தான்.
டவுன்லோட் செய்தபிறகு
ஜிப் பைலை Extract  செய்து கணினி அல்லது பென்டிரைவில் பதிந்து போர்ட்டபிளாக பயன்படுத்தலாம்.
http://www.pazera-software.com/download.php?id=0023&f=Pazera_Video_Converters_Suite.zip

விதவிதமாக வரும் வீடியோ கன்வர்ட்டர் மென்பொருள்களைப் பார்க்கும்போது கன்வர்ட் செய்வதற்கு வீடியோக்களுக்கு பஞ்சம் வந்துவிடும் போலிருக்கிறது!
. Related Posts with Thumbnails

கூகுளின் அடுத்த அதிரடி கூகுள் வாலட்

எதிர்பார்க்காத ஒன்றை  திடீரென்று சந்தையில் நுழைத்து சாதிப்பது கூகுளின் சாமர்த்தியம், அ‌ப்படித்தான் இப்போது கூகுள் மே 26இல் நியூயார்க் நகரில் வெளியிட்ட அறிவிப்பும் இருந்தது.
இந்த முறை கூகுள் நுழைந்திருப்பது பணபரிமாற்ற  சேவை அதாவது  நாம் பயன்படுத்தும் மொபைல் போனிலிருந்து விரும்பியதை வாங்குவதற்கான மொபைல் பேமண்ட் சேவை. இச்சேவைக்கு கூகுள் வாலட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இச்சேவையில் கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு போல பிளாஸ்டிக் அட்டையாக இல்லாமல் போன் திரையில் விர்ச்சுவல் கார்டாக காட்டப்படும் என்றும், இந்த அப்ளிகேசனில் நமக்கான  பின் எண்ணை அழுத்தி நுழைந்து பேமண்ட்களை அனுப்ப முடியும்.
இந்த சேவை சிட்டி  பேங்க் (Citi Bank), மாஸ்டர் கார்டு (Master Card), பேபாஸ்(Pay Pass) நிறுவனங்களின் கூட்டணியில் ஸ்பிரிண்ட் நெக்ஸஸ் எஸ் 4 ஜி (Nexus S 4G by Google, available on Sprint).ஆண்ட்ராய்ட் போனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் மட்டுமே சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் பிற நாடுகளுக்கும் விரிவு படுத்தப்படும் எனத் தெரிகிறது.‌
கூகுள் வாலட் பற்றி மேலும் அறிய http://www.google.com/wallet/ என்ற இணைய முகவரிக்கு செல்லவும்.
. Related Posts with Thumbnails

அனைத்து மென்பொருள்களுக்குமான ஷார்ட்கட் கீகள்


நாம் பயன்படுத்தும் வேர்ட், எக்செல், அக்ரோபேட் ரீடர், மீடியா பிளேயர் மற்றும் பல மென் பொருள்களை எளிதாகவும் வேகமாகவும்   கையாள குறுக்கு விசைகள் (Short Cut Keys) பயன்படுகின்றன. இந்தக் குறுக்கு விசைகளை அறிந்து கொள்ள எங்கும் தேடாமல் அனைத்து மென்பொருள்களுக்கும் ஒரே தளத்தில் குறுக்கு விசைப்பட்டியல் உள்ளது. இத்தளத்தில் நீங்கள் எந்த மென்பொருளுக்கான குறுக்கு விசை தேவையோ அம்மென்பொருளின் பெயரைக் கொடுத்தால் போதும். உடனே அம்மென் பொருளுக்கான குறுக்கு விசைப்பட்டியல் கிடைக்கும். உதாரணமாக, வேர்ட் 2007க்கான குறுக்கு விசைப் பட்டியல் தேவையென்றால் வேர்ட் 2007 என்று கொடுத்து தேடலாம். வேர்ட் என்று மட்டும் கொடுத்தால் அதன் வேர்ட் 97/2000, எக்ஸ்பி, 2003, 2007, 2010 என அனைத்து பதிப்புகளையும் பட்டியலிடும். அதில் தேவையானதைத் தேர்ந்தெடுக்கவேண்டும். இணையதள முகவரி: http://www.keyxl.com/

மேற்கண்ட தளத்தைப் போலவே ஷார்ட் கட் கீகளைத்தரக் கூடிய மற்றொரு தளம்: http://www.shortcutworld.com
இத்தளத்தில்  விண்டோஸ் மென்பொருள்களான

ஆகிய அனைத்து மென்பொருள்களுக்கும் ஷார்ட்கட் கீ தொகுப்பு கிடைக்கிறது.
அதே போல
http://shortcutkeys.net/
மற்றும்
http://www.computerhope.com/shortcut.htm என்ற தளத்தில் கீழ்க்கண்ட ஷார்ட்கட் கீ தொகுப்புகள் கிடைக்கின்றன.
Basic PC shortcut keys
F1 - F12 function keys
Top 10 keyboard shortcuts
Linux / Unix shortcut keys
Apple shortcut keys
Microsoft Windows shortcuts
Microsoft Excel shortcut keys
Microsoft Word shortcut keys
Internet Explorer shortcut keys
Microsoft FrontPage shortcut keys
Microsoft Outlook shortcut keys
Related Posts with Thumbnails

கணினிப் பராமரிப்பும் பாதுகாப்பும்

நம் வீட்டுக் கணினியானாலும் அலுவலகக் கணினியானாலும் பயன்
படுத்தும் முறையில் வேறுபாடு இருந்தாலும் பராமரிப்பு மற்றும் பாது
காப்பு முறை என்பது இரண்டிற்கும் பொதுவானதுதான்.
சீரான மின்சாரம்
கணினியை தூசி, வெப்பம் படாமல் சுத்தமான அறையில் வைத்தி
ருப்பது அவசியம். மின் இணைப்பு சரியான முறையில் இணைக்கப்பட்டிருக்கவேண்டும். இதற்கு ஸ்பைக் பஸ்டர் (Spike Buster) எனப்படும் மின்பகிர்வானைப் பயன்படுத்தலாம். கணினியில் ஷாக் அடிக்குமானால் அதற்கு முறையாக எர்த் (Earth) அமைக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். இந்நிலையில் தொடர்ந்து   வைத்திருப்பது கணினிக்கு மட்டுமல்ல நமக்கும் ஆபத்தே. கணினிக்கான யுபிஎஸ் (UPS)-சில் மானிட்டர் மற்றும் சிபியு (CPU)-விற்கான  மின்சாரத்தை வழங்கும் அளவிற்கு மட்டுமே திறன் இருக்கும். கூடுதலாக பிரிண்டர், ஹோம் தியேட்டர் ஆகியவற்றை இணைப்பது பேட்டரியின் ஆயுளையும், மின் சேமிப்புத் திறனையும் குறைக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
வைரஸ் பரிசோதனை
கணினி விளையாட்டுக்கள் இலவசமாக கிடைக்கிறது என்று வாங்கியோ அல்லது இணையத்திலிருந்து பதிவிறக்கியோ பயன்படுத்தும்போது வைரஸ் ஸ்கேனர்களைக் கொண்டு பரிசோதிக்கவும். இதே நடைமுறையை வெளியிடங்களிலிருந்து வாங்கிப் பயன்படுத்தும் பென் டிரைவ், சிடி, மெமரி கார்டுகளுக்கும் கடைபிடிக்கவேண்டும்.
ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்களில் தற்போது எது சிறந்தது என்பதையும், கணினியின் வேகத்தை குறைக்காததாகவும் இருக்கக் கூடியதை கணினி வல்லுநரிடம் கலந்தாலோசித்து பதியவும். இலவசமாக கிடைப்பதை விட விலை கொடுத்து வாங்குவது கூடுதல் பாதுகாப்பைத் தரும்.  ஆண்ட்டி வைரஸ் தொகுப்பை எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்கவும். இணைய இணைப்பு இருந்தால் அதுவாகவே அப்டேட் செய்துகொள்ளும் அல்லது வாரத்திற்கு இருமுறையாவது நாம் அப்டேட் செய்யவேண்டும். அப்போதுதான் சிறப்பான செயல்பாடு இருக்கும். அதேபோல ஒரு கணினியில் ஒன்றிற்கும் மேற்பட்ட ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இது கணினியின் வேகத்தை குறைக்கும் அத்துடன் ஒன்றிற்கொன்று முரண்பட்டு கணினியின் செயல்பாட்டை முடக்கும் நிலைகூட ஏற்படலாம்.
கோப்பு சீரமைப்பு
நாம் பயன்படுத்தும் மென்பொருள்களால் உருவாக்கப்படும் தற்காலிக கோப்புகளையும், இணையத்தைப் பயன்படுத்தும்போது உருவாகும் தற்காலிக கோப்புகளையும் தினமும் அழித்திடவேண்டும். இதற்கு சிகிளீனர் (C Cleaner) போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்தலாம்.  இரண்டு மாதத்திற்கு ஒரு முறையேனும் கணினியை டீப்ராக்மென்டர் டூல் (Defragment)ஐ பயன்படுத்தி சிதறி இருக்கும் கோப்புகளை சீராக்க வேண்டும். இதனால் கணினி விரைவாக இயங்கும்.
கணினி இயங்கும்போது அதன் தட்ப வெப்பம் மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காற்றாடி சரியான  சுழற்சி வேகத்தில் சுழலாமல் இருந்தால் அக்காற்றாடியினை உடனடியாக மாற்ற வேண்டும்.
கணினியின் கோப்புகளை பயன்படுத்துவதில் தனி கவனம் செலுத்த
வேண்டும். ஒன்றிற்கும் மேற்பட்ட பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் ஹார்ட் டிஸ்க்கின் நினைவகத்தில்  சி டிரைவ் (C Drive) என்பது பொதுவாக மென்பொருள்களை பதிவதெற்கென்று ஒதுக்கப்படும் இடமாகும். இங்குதான் கணினியை இயக்கும் அனைத்து மென்பொருள் களும் பதியப்படும். அந்தப் பகுதியில் உங்களுடைய தனிப்பட்ட கோப்புகளை பதிவதைத் தவிர்க்கவும். அடுத்துள்ள டி (D), ஈ (E), எப் (F) என ஹார்ட் டிஸ்க் அளவிற்கு ஏற்ப இரண்டிற்கும் மேற்பட்ட அளவில் பிரிக்கப்பட்ட டிரைவ்களில் பதிவது நல்லது. இதனால் ஏதேனும் காரணத்தால் கணினி செயலிழக்க நேர்ந்தால் சி டிரைவை அழிக்கும் (Format) கட்டாயம் நேரலாம் அப்போது நம்முடைய கோப்புகள்  வேறு டிரைவ்களில் இருப்பதால் பாதுகாக்கப்படும்.
, Related Posts with Thumbnails

போட்டோஷாப் பிரஷ்கள் இலவசம்

போட்டோ‌ஷாப்பில் பிரஷ் டூலைப் பயன்படுத்தி விதவிதமான டிசைன் பேட்டர்ன்கள், ஸ்பெஷல் எபெக்ட்கள், மேகங்கள், அருவி, பூக்கள், பார்டர்கள் என பலவித வேலைப்பாடுகளை செய்ய ரெடிமேட் பிரஷ்களைப் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய பிரஷ்களை இலவசமாக தரும் தளம் ஒன்று உள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட‌ பிரஷ்களை இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.
தளத்தின் முகவரி:   http://photoshopbrushes.eu/

இந்த பிரஷ்களை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாதவர்களுக்கு
போட்டோஷாப்பில்  பிரஷ் டூலை (Short cut - B) செலக்ட் செய்தால் படம் 1இல் உள்ளபடி ‌பிரஷ் டூலும் மெனுபாரில் டிபால்ட்டாக உள்ள பிரஷ் படமும் காட்டப்படும்.

 
டிபால்ட் பிரஷ் படத்திற்கு அருகில் உள்ள பிரஷ் மெனு ஏரோவை கிளிக் செய்தால் படம் 2இல் உள்ளவாறு பிரஷ்களின் படம் தெரியும். அதில் பிரஷ் அளவு காட்டப்படும் இடத்தில் காட்‌டப்படும் வலதுபக்கம் நோக்கிய அம்புக்குறியை கிளிக் செய்ய தோன்றும் மெனுவில் லோட் பிரஷ் (Load Brushes) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
 படம் 3இல் உள்ளபடி நீங்கள் டவுன் லோட் செய்த பிரஷ் இருக்கும் இடத்தில் தேவையான பிரஷ்ஷை செல‌க்ட் செய்து லோட் என்பதைக் கிளிக் செய்யவும்.
இப்பொழுது நீங்கள்  லோட் செய்த பிரஷ்களை கீழே அம்புக்குறியிட்டுள்ள இடத்தில் காட்டப்படும். இனி அதில் எந்த வடிவம் தேவையோ அதனை தேர்ந்தெடுத்து அதன் அளவை மேலே உள்ள அம்புக்குறி காட்டும் இடத்தில் தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
. Related Posts with Thumbnails

லிப்ரே என்றால் சுதந்திரம்

நம் வீட்டிலும், அலுவலகங்களிலும் உபயோகத்தில் உள்ள பெரும்பான்மையான கணினிகளில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் அல்லது ஓப்பன் ஆபிஸ் மென்பொருள் தொகுப்பு கட்டாயமாக இடம் பெற்றிருக்கும்.

மைக்ரோசாப்ட் ஆபிஸ் (MS Office) தொகுப்பில் வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட் ஆகியவை முக்கியமான மென்பொருள்கள். அதேபோல ஓப்பன் ஆபிஸில் (Open Office) இவற்றின் பெயர் ரைட்டர், ஸ்பிரட் சீட், பிரசன்டேசன் என வழங்கப்படுகிறது. இம்மென்பொருள்களைப் பற்றி கணினி கற்ற அனைவரும் அறிந்தே வைத்திருப்பர்.
மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருள் தொகுப்பை விலை கொடுத்துதான் வாங்கவேண்டும். இது சுமார் ரூ. 6000 என்ற விலையில் கிடைக்கிறது. இத்தொகுப்பை வாங்கினால் ஒரு கணினிக்கு மட்டுமே பயன்படுத்தமுடியும். அதே ஓப்பன் ஆபிஸ் தொகுப்பாக இருந்தால் எத்தனை கணினிகளுக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கட்டணம் இல்லை. ஏனென்றால் அது கட்டற்ற இலவச (Open Source Software) மென்பொருளாகும்.
கட்டற்ற அல்லது சுதந்திர மென்பொருள் என்பது ஒருவருக்கு மட்டுமே சொந்தமானதல்ல, அதைப் பயன்படுத்த எவ்விதக் கட்டணமோ, அனுமதியோ தேவையில்லை. அதை உருவாக்கப் பயன்பட்ட நிரல்களை (Source Code) எவரும் தமது விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்துப் பயன்படுத்தலாம். ஆனால் மைக்ரோசாப்ட் மென்பொருள் தொகுப்பை அவ்வாறு பயன்படுத்த முடியாது.
அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் உலகின் பல நாடுகளும் குறிப்பாக இந்தியாவிலும் ஓப்பன் ஆபிஸ்  மென்பொருளே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இத்தகு சிறப்பு வாய்ந்த ஓப்பன் ஆபிஸ் மென்பொருளை உருவாக்கிய சன் மைக்ரோ சிஸ்டம் நிறுவனம் நிதிநிலை காரணமாக ஆரக்கிள் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. இது  உலகெங்கும் உள்ள தன்னார்வ மென்பொருள் வல்லுநர்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியது. ஏனெனில்  பிரபலமான சன் சொலாரிஸ் இயங்குதளம், ஜாவா கணினிமொழி, ஓப்பன் ஆபிஸ் என திறந்த நிரல் மென்பொருட்களை ஆதரித்து இலவசமாக வழங்கி வந்த சன் மைக்ரோ சிஸ்டம் போல ஆரக்கிள் நிறுவனம் நடந்து கொள்ளாது, அது ஒரு தேர்ந்த வியாபாரி என்பதைத் திறந்த நிரல் பங்களிப்பாளர்கள் உணர்ந்தே உள்ளனர்.
எதிர்பார்த்தது போலவே ஆரக்கிளும் ஓப்பன் ஆபிஸ் மென்பொருளுக்கு இனி யாரும் நிரல் எழுதி மேம்படுத்தக் கூடாது என்றது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் தற்போது  எழுதலாம் என்றிருக்கிறது. இது குறித்து முன்பே எச்சரிக்கையடைந்திருந்த ஓப்பன் சோர்ஸ் குழுக்கள் டாக்குமெண்ட் ஃபவுண்டேஷன் என்ற இணையதளத்தை தொடங்கி அதில் லிப்ரே ஆபிஸ் (Libre Office) என்ற மென்பொருளை வெளியிட்டனர்.
இது ஓப்பன் ஆபிஸ் மென்பொருளின் நிரலைப் பயன்படுத்தியே உருவானது. தற்போது இம்மென்பொருளுக்கே தன்னார்வ மென்பொருள் நிரலாளர்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளை பதிவிறக்கம் செய்யும் முகவரி:www.libreoffice.org/
. Related Posts with Thumbnails

ஆன்லைனில் இசைக் களஞ்சியம்

அலுவலகப் பணி நேரத்தில் வேலையுடன் மனதிற்கு பிடித்த இசையைக் கேட்பது சற்று இதமாக இருக்கும். ஒரே மாதிரியான திரையிசையை கேட்டு அலுத்துப் போனவர்களும் வித்தியாசமான இசையை கேட்க விரும்புவோருக்கும், பிற இந்திய மொழிப் பாடல்களை கேட்டு ரசிக்கலாம். இணைய இணைப்பு உள்ளவர்கள் மட்டுமே கேட்க முடியும் என்பதை கவனத்தில் கொள்க.
அனைத்து இந்திய மொழித் திரை இசைப் பாடல்களையும், கிராமிய, மேற்கத்திய, கர்நாடக இசைப் பாடல்கள், நாடகம், நகைச்சுவை எனப் பலவகை ஒலிக் கோப்புகளையும் விரும்பியதைத் தேடி ஆன்லைனில் கேட்கலாம். விருப்பங்களை பட்டியலாக்கி(Play List) நமது கணக்கில் ஆன்லைனிலேயே சேமிக்கவும் முடியும்.
இத்தளங்கள் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருக்கக் கூடும். அப்படித் தெரியாதவர்கள் பயன்படுத்திப் பாருங்கள். உங்களுக்கு‌ப் பிடிக்கும்.
http://www.musicindiaonline.com
http://www.raaga.com

1937 முதல் தற்போது வரையுள்ள தமிழ் திரைப் பாடல்கள் மட்டுமே உள்ள தளம்: http://www.thiraipaadal.com Related Posts with Thumbnails

கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா?

ஆப்பிள் நிறுவன ஐபோன்களுக்கும், பிளாக் பெர்ரி போன்களுக்கும் போட்டியாக கூகுள் நிறுவனம் களமிறக்கிய ஆண்ட்ராய்ட் இயங்குதளம்  (Android OS) பதிந்த போன்கள் இன்று சந்தையில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கின்றன.  ஐபோனிற்கு இணையான அம்சங்களோடும் விலையில் அதைவிட நான்கில் ஒரு பங்கு அளவிலும் இருப்பதே இதன் விற்பனை அதிகரிப்பிற்கு முக்கியக் காரணமாகும்.
ஆண்ட்ராய்ட் இயங்குதளம் என்பது கணினிக்கு எப்படி விண்டோஸ், லினக்ஸ், மேக் இயங்குதளங்கள் உள்ளனவோ அதுபோல கைபேசி (Cell Phone) , இணையக் கணினி (Net PC), டேப்ளட் பிசி (Tablet PC) க்களுக்காக உருவாக்கப்பட்ட ஓர் இயங்குதளமாகும். இதனை முதன் முதலில் ஆண்ட்ராய்ட் இன்க் என்ற நிறுவனம் உருவாக்கியது. இந்நிறுவனத்தை 2005இல் கூகுள் வாங்கியது.
அதன் பின்னர் 2007இல் மோட்டேரோலா(Motorola) சாம்சங் (Samsung), எல்ஜி (LG), டிமொபைல் (T-Mobile), ஹெச்டிசி (HTC), பிராட்காம் கார்ப்பரேசன் ( Broadcom Corporation), இண்டெல் (Intel), என்வீடியா (Nvidia), குவால்காம் (Qualcomm) மற்றும் பல முன்னணி நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து ஓப்பன் ஹேண்ட்செட் அல்லயன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியது‌. அதன் மூலமாக ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை மேலும் மேம்படுத்தி வெளியிட்டது.
இதில் ஜாவா நிரல்களைக் கொண்டு எவர்வேண்டுமானாலும் கூடுதல் பயன்பாட்டிற்கான சிறு சிறு மென்பொருள்களை(Add-on applications) உருவாக்கி இணைத்துக் கொள்ளமுடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
இந்த வகையில் இன்று ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்ட் பதிந்த கைபேசிகளில் இணையப் பக்கங்களைப் பார்ப்பது, கூகுள் மேப், ஆர்குட் சமூக வலைத்தள சேவை, பிற கணினிகளுடன் இணைப்பது எனப் பல வசதிகள்  உள்ளன. இது போட்டியாளர்களின் தயாரிப்புகளுக்கு சற்றும் சளைத்ததல்ல என்பது உண்மையே. இத்தனை சிறப்புகள் இருப்பினும் ஆண்ட்ராய்டுக்கு எதிர்ப்புக் குரல்களும் அவ்வப்போது எழவே செய்கின்றன.
கூகுள் ஆண்ட்ராய்டில் தனது ஜாவா நிரல் காப்புரிமையை மீறிவிட்டதாக ஆரக்கிள் நிறுவனம் குற்றம் சாட்டியது. மேலும் ஆண்ட்ராய்ட் கைபேசிகளைக் கொண்டு பயனரைக் கூகுள் கண்காணிப்பதாகவும், பயனரின் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்கத்தக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதே குற்றச்சாட்டு ஆப்பிளின் ஐபோன் மீதும் உண்டு.
"பயனருக்கு முழுச் சுதந்திரத்தை அளிக்காத எதுவும் ஓப்பன் சோர்ஸ் அல்ல. ஆண்ட்ராய்ட் ஓப்பன் சோர்ஸ் என்று கூறப்படுவதை நான் ஏற்கமுடியாது. அதுவும் ஒரு வியாபார மென்பொருள்தான்" என்று ஓப்பன் சோர்சின் தந்தை என மதிக்கப்படும் ரிச்சர்ட்  ஸ்டால்மேன் கூறியுள்ளதும் கவனிக்கத்தக்கதே.
. Related Posts with Thumbnails

wibiya widget