உதவித்தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உதவித்தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விளையாட்டு வீரர்கள் ONGC வழங்கும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு வீரர்கள் ONGC வழங்கும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

ONGC நிறுவனம் 2025-26ம் ஆண்டிற்கான 21 விளையாட்டுகளில் திறமையான ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை உதவித்தொகையாக 250 விளையாட்டு உதவித்தொகைகளை வழங்க ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த உதவித்தொகை 15 முதல் 20 வயதுடைய, ஆண்டு வருமானம் 5 லட்சம் வரை உள்ள பின்தங்கிய நிலையில் இருக்கும் திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.


*விண்ணப்பிக்கவும் விபரம் அறியவும்:*

https://sportsscholarship.ongc.co.in/

*விண்ணப்பிக்க கடைசி தேதி:*

செப்டம்பர் 22-ம்தேதி முதல் அக்டோபர் 21-ம்தேதி மாலை 4 மணி வரை


விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.



விண்ணப்பதாரர்கள் தவறான சான்றிதழை அளித்தால், அதை நிராகரிக்கவும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் ONGCக்கு அதிகாரம் உண்டு.

*சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் :*

பிறப்புச் சான்றிதழ்

பாஸ்போர்ட் அல்லது ஆதார் அட்டை அல்லது 10-ம் வகுப்பு சான்றிதழ் (ஏதேனும் ஒன்று)

*தகுதிகள் :*

இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

15 முதல் 20 வயதுக்குட்பட்ட விளையாட்டு வீரராக இருக்க வேண்டும்

வேறு எந்த நிறுவனத்திடமிருந்தும் உதவித்தொகை பெற்றிருக்கக்கூடாது


*விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் வசதிகள் :*

உதவித்தொகைக்கு தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர்களுக்கு TA/DA மற்றும் மற்ற போட்டிகளில் பங்கேற்பதற்கான தேவையான செலவுத்தொகை வழங்கப்படும்.

உதவித்தொகைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர்களுக்கு, போட்டிகளில் பங்கேற்கும் போது ONGC இலட்சிணையுடன் (Logo) கூடிய விளையாட்டுப் பொருட்களும் வழங்கப்படும்.

உதவித்தொகை பெற்றவர்கள் தங்களுக்காக மட்டுமே 5,00,000 ரூபாய்க்கு தனிநபர் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தைப் பெற முடியும்.


WhatsApp Channel:

https://whatsapp.com/channel/0029VaAR6kc8aKvFugYTm633

Instagram:

https://www.instagram.com/nadhikkarai/

Related Posts with Thumbnails

அண்ணா பல்கலைக்கழகம் வழங்கும் இலவச பொறியியல் பட்டப்படிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழிற்பயிற்சியுடன் கூடிய இலவச பொறியியல் (BE) பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கு டிப்ளமோ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை குறித்து விரிவாக காணலாம்.

இலவச பொறியியல் படிப்பு..

அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் HL Mando Anand India எனப்படும் தனியார் நிறுவனத்தின் முழு நிதி உதவியோடு எலெக்ட்ரானிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியல் பாடப்பிரிவில் தொழிற்பயிற்சியுடன் கூடிய பி.இ பட்டப்படிப்பு வழங்கப்படவுள்ளது. இந்த படிப்பில் சேரும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக வகுப்புகள் மற்றும் HL Mando நிறுவனத்தில் தொழிற்பயிற்சி ஆகிய இணைந்து வழங்கப்படும்.


உதவித்தொகையோடு பட்டப்படிப்பு :-

மேலும்  இந்த படிப்பிற்கான முழு கட்டணமும் தனியார் நிறுவனத்தின் மூலம் ஏற்கப்படும். தொழிற்பயிற்சிக்கான உதவித்தொகையாக (stipend) மாதம் ரூ.14,500 வழங்கப்படும்.  மேலும் மாணவர்களுக்கான கவ்லி கட்டணம், அட்மிஷன் கட்டணம், விடுதி செலவு, உணவு செலவு ஆகியவை அனைத்து அந்த தனியார் நிறுவனம் செலுத்தும்.

-------------------------------------

இதுபோன்ற தகவல்களைப் பெற சப்ஸ்கிரைப் செய்யுங்கள்..
நதிக்கரை வாட்ஸ்அப் சேனல் https://whatsapp.com/channel/0029VaAR6kc8aKvFugYTm633
-------------------------------------

விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள் யார்.?

  • இப்படிப்பில் சேர நுழைவுத் தேர்வு கிடையாது. டிப்ளமோ தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இட ஒதுக்கீடு முறை கடைப்பிடிக்கப்படும்.
  • மின்னணுவியல் மற்றும் கருவியியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம்,  இயந்திர பொறியியல், மின் பொறியியல், மின் மற்றும் மின்னணு பொறியியல், மின்னணு பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல்,  ஆகிய பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
  • டிப்ளமோ படிப்பில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அரியர் வைத்திருக்கக்கூடாது.
  • விண்ணப்பதார்கள் 2022-23 / 2023-24 / 2024-25 ஆகிய கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.


இலவச பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பிப்பது எப்படி?

ஆன்லைன் வழியாக மட்டுமே நடைபெறும். https://cfa.annauniv.edu/cfa/beintegrated.html என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும் என்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://cfa.annauniv.edu/cfa/beintegrated.html

APPLY LINK

ADMISSION NOTIFICATION

நன்றி: WWW.internetcafetamil.in

இதுபோன்ற தகவல்களைப் பெற சப்ஸ்கிரைப் செய்யுங்கள்..
நதிக்கரை வாட்ஸ்அப் சேனல் https://whatsapp.com/channel/0029VaAR6kc8aKvFugYTm633

Related Posts with Thumbnails

wibiya widget