கணினி தொழில்நுட்பம் 2010

இந்த ஆண்டில் கணினித் துறை பல நிலைகளிலும் வளர்ச்சி பெற்றது. 2009ஆம் ஆண்டின் பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட பாதிப்பு  சற்றே குறைந்தது, தொழில் நுட்பத் துறை வளர்ச்சிக்குக்கு சாதகமாக அமைந்தது.
மைக்ரோசாப்ட், ஆரக்கிள், அடோப் மென்பொருள் நிறுவனங்கள் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மென்பொருள்களை அறிமுகப்படுத்தின. புதிய வியாபார முயற்சிகளையும் மேற்கொண்டன.
கூகுள், பேஸ்புக், டிவிட்டர், யாகூ  ஆகிய இணையதள நிறுவனங்களும் பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தின. அதே நேரத்தில் சில பழைய, பயன்பாடு குறைந்த வசதிகளைத் திரும்பப்பெற்றன.
மைக்ரோசாப்ட் பிங் - யாகூ ஒப்பந்தம், பேஸ்புக் - கூகுள் மோதல், விக்கிலீக்ஸ்  ‌‌வெளியிட்ட அமெரிக்க தூதரகக் ‌கேபிள் தகவல்கள், அதைத் தொடர்ந்து ஜூலி‌யன் அஸெஞ்ச் கைது, சீனாவின் அதி‌வேக சூப்பர் கம்ப்யூட்டர் எனப் பல நிகழ்வு‌கள் முக்கிய செய்திகளாயின. அதன் சிறு தொகுப்பே இப்பட்டியல். இது என் நினைவில் நின்றவை மட்டுமே பட்டியலில் உள்ளன. உங்களுக்கு வேறு ஏதேனும் தகவல் தெரிந்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். அவற்றையும் சேர்த்துக் கொள்கிறேன்.

ஜனவரி
  • கூகுள் நெக்ஸஸ் ஒன் ஆண்ட்ராய்ட் போனை வெளியிட்டது.
  • புகழ் பெற்ற ஸ்டார் ஆபிஸ், ஓப்பன் ஆபிஸ், ஜாவா ஆகிய மென்பொ ருள்களை உருவாக்கிய சன் மைக்ரோ சிஸ்டத்தை ஆரக்கிள் நிறுவனம் கையகப்படுத்தியது.





பிப்ரவரி
  • கூகுள் பஸ் சமூக வலைத்தள சேவையை அறிமுகப்படுத்தியது. இது போதிய வரவேற்பைப் பெறவில்லை.
  • கூகுளின் போட்டியை சமாளிக்க மைக்ரோசாப்ட் - யாகூ நிறுவனங்கள் கூட்டாக இணைந்து செயல்படுவதற்கான உடன்படிக்கையை செய்து கொண்டன. இதன்படி பிங்கின் தேடல் நுட்பத்தை யாகூவும், யாகூவின் விளம்பர பரிவர்த்தனையை மைக்ரோசாப்ட்டும் பயன்படுத்திக்கொள்கின்றன.
மே
  • தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கான 3 ஜி அலைக் கற்றை ஒதுக்கீட்டு ஏலம் நடந்தது. இதன் மூலம் அரசுக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி வரையிலான வருமானம் கிடைத்தது. இந்த ஏலமே 2ஜி அலைக்கற்றை ஊழல் தொகையான 1,76,000 கோடி ரூபாயை மதிப்பிட உதவியது.
  • அதிவேக இணையத்திற்கான முயற்சிகளை ‌மேற்கொண்டிருக்கும் கூகுள் இணைய வழியில் தொலைக்காட்சி ஒளிபரப்பை‌ மேற்கொள்ள தி்ட்டமிட்டுள்ளது. இதற்கென  கூகுள் இண்டெர்நெட் டிவியை துவக்குவதாக அறிவித்தது.
ஜூன்
  • உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் உலக இணை ய மாநாடு 2010 கோவையில்  நடத்தப்பட்டது. அர சின் அதிகாரப்பூர்வ எழுத்துருவாக 16 பிட் யுனிக்கோட் அங்கீகரிக்கப்பட்டது.
  • இதே நிகழ்வில் பனேசியா ட்ரீம்வீவர் நிறுவனத்திற்கு சிறந்த தமிழ் மென்பொருள் தயாரிப்பிற்கான விருதும் வழங்கப்பட்டது. 
ஜூலை
  • இந்திய ரூபாய்க்கு புதிய அடையாளச் சின்னம் ஜூலை 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சின்னம் தமிழ் நாட்டைச் சேர்ந்த உதயகுமாரால் உருவாக்கப் பட்டது.
ஆகஸ்ட்
  • இந்திய ரூபாய்க்கான புதிய  சின்னம் யுனிக்கோட் கன்சார்டியத்தால் அங்கீகரிக்கப்பட்டு எழுத்துருவில் சேர்க்கப்பட்டது.
  • கூகுள் ஆர்ப்பாட்டமாக அறிமுகப்படுத்திய கூகுள் வேவ்  தகவல் பரிமாற்ற மென்பொருளின் கட்டமைப்புத் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது. தட்டச்சு செய்யும்போதே   தேடல் முடிவு களை பட்டிய லிடும் இன்ஸ்டன்ட் சர்ச் வசதியை கூகுள் அறிமுகம் செய்தது.
அக்டோபர்
  • மைக்ரோசாப்ட் கிளவுட் கம்ப்யூட்டிங் முறையிலான ஆன்லைன் ஆபிஸ் தொகுப்பான ஆபிஸ் 365-ஐ அறிமுகம் செய்தது.
  • ஆப்பிள் ஐபோன், கூகுள் ஆண்ட் ராய்ட் போனுக்குப் போட்டியாக மைக்ரோசாப்ட் விண்டோஸ் மொபைல் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய மொபைலை சாம்சங், ஹெச்டிசி நிறுவனங்கள் மூலமாக வெளியிட்டது.
நவம்பர்
  • சீனா உலகின் அதிவேக கணினி தயாங்கி-1ஏ சூப்பர் கம்ப்யூட்டரைத் தயாரித்தது.



  • செல்போன் எண்ணை மாற்றாமல் சேவை நிறுவனத்தை மாற்றிக் கொள்ளும் மொபைல் நெம்பர் போர்ட்டபிலிட்டி (MNP) சேவை முதன் முறையாக  இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில்  அறிமுகமானது.

  • விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்கத் தூதரகங்களின்  தகவல் பரிமாற்ற கேபிள் ரகசியங்களை வெளியிட்டது.  இது அமெரிக்காவின் உண்மை முகத்தை உலகுக்குக் காட்டியது.
டிசம்பர்
  • அமெரிக்காவின் நெருக்குதலால் பேபால், அமெசான் தளங்கள் விக்கிலீக்சுக்கான சேவையை நிறுத்தின. அதனைத் தொடர்ந்து விக்கி லீக்ஸ் அதிபர் ஜூலியன் அஸெஞ்ச் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய் யப்பட்டார். விக்கிலீக்ஸ் தளத்தை முடக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. பின் னர் அஸெஞ்ச் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.



  • கூகுளுடனான மோதலின் உச்சகட்டமாக பேஸ்புக் இமெயில் சேவையை வழங்கப்போவதாக அறிவித்தது.

  • கூகுள் எர்த் மூலம் உலகின் மூலை முடுக்கெல்லாம் காட்டிய கூகுள் அடுத்ததாக மனித உடலமைப்பை முப்பரிமாணத்தில் பார்க்க  உதவும் கூகுள் பாடி பிரௌசர் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியது. இது வெப் ஜிஎல் (Web GL) என்ற தொழில் நுட்பத்தில் இயங்குகிறது. இதனைப் பார்க்க கூகுள் குரோம் பீட்டா, பயர்பாக்ஸ் 4 பீட்டா பிரளெசர்க்ளை பரிந்துரைக்கிறது. http://bodybrowser.googlelabs.com/
  • கூகுள் இணைய வழியில் இயங்கும் கிளவுட் கம்ப்யூட்டிங் அடிப்படையிலான குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிஆர்-48   (Chrome OS CR-48 Netbook)  ஐ டிசம்பர் 7ல் அறிமுகம் செய்தது.
  • ஓப்பரா பிரௌசரின் 11ஆம் பதிப்பு வெளியானது.
    http://www.opera.com/browser/download/
Related Posts with Thumbnails

100 MB பைல்களை அனுப்பலாம் எளிதாக

‌ஜிமெயில் அக்கவுண்ட்டில் 25 எம்பி அளவு பைல் மட்டுமே மெயில்  அனுப்பமுடியும். இன்.காம் மூலமாக 50 எம்பி பைலை அனுப்பமுடியும். ஆனால் 100 எம்பி  பைலை அனுப்ப  4 சேர்டு (4 Shared), டெபாசிட் ‌பைல்ஸ் (Deposit files), ரேப்பிட் சேர் (Rapidshare), மீடியா பைர் (Media Fire) ஆகிய சர்வர்களைப் பயன்படுத்துவதை விட நம்பகமான  அடோப் நிறுவனத்தின் புதிய சென்ட் நவ் (Send Now) இணையதளம் மூலமாக இப்போது அனுப்பலாம்.
இதற்கு சென்ட் நவ் இணையதளத்தில் ஒரு இலவசக் கணக்கை துவங்க வேண்டும். பதிவு செய்தவுடன் உங்களுக்கான இன்பாக்ஸ் பகுதி காட்டப்படும். எளிமையாக இருக்கிறது. இதில் இலவசமாக அனுப்புவதற்கு டிரைல் (Trial)  பிரிவில் 500 எம்பி இலவச இடம் தருகிறார்கள். நீங்கள் அனுப்பவேண்டிய பைலை அப்லோட் செய்து பெறவேண்டியவரின் இமெயில் முகவரியையும் கொடுத்துவிட்டால் போதும். அவருடைய மெயிலுக்கு டவுன்லோட் லிங்கை அனுப்பிவைத்துவிடும்.
100 எம்பி அள‌விற்கு உட்பட்ட பைல்களே அனுமதிக்கப்படுகிறது. 7 நாட்கள் மட்டுமே சர்வரில் இருக்கும். அதற்குள்ளாக அதிகபட்சம் 100 முறை டவுன்லோட் செய்து‌ கொள்ளலாம்.
இதுவே நீங்கள் கட்டணத்திட்டத்தில் சேர்ந்தால் 2 ‌ஜிபி அளவு பைலை அனுப்பும் வசதியும், அன்லிமி்டெட் டவுன்லோட்/ ஸ்டோரேஜ் வசதியும் தருகிறது. வைரஸ் ஸ்கேனர், ‌சென்ட் வெரிபிகே‌‌ஷன் ஆகிய வசதிகளும் உள்ளடங்கியுள்ளது.
இணைய முகவரி: https://sendnow.acrobat.com/welcome.html
தற்போது வெளியாகியுள்ள அடோப் ரீடரின் பத்தாவது பதிப்பில் (Adobe Acrobat Reader X) பிடிஎப் பைல்களை ரீடரிலிருந்து நேரடியாக சென்ட் நவ் தளத்திற்கு அப்லோட் செய்யும் வசதி உள்ளது. அத்துடன் மார்க்கர், எடிட்டர் ஆகிய வசதிகளும் சேர்க்கப்பட்டு உள்ளது.‌ Related Posts with Thumbnails

நீங்கள் கணினியில் அதிக நேரம் பணிபுரிபவரா?

கணினியில் அதிக நேரம் பணிபுரிபவர்களுக்கு பல்வேறு விதமான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. நாம் கணினியை வைத்திருக்கும் இடம், உட்காரும் நிலை, கீபோர்டு, மெளஸை தவறாகக் கையாளுதல் ஆகியவையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
தற்போது 100 கோடிக்கும் அதிகமான கணினிகள் பயன்பாட்டில் உள்ளன. எதிர்வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் பன்மடங்கு உயரும். அப்போது கணினி சார்ந்த பாதிப்புகளால் பல்லாயிரம் மக்கள் தாக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
எனவே, காற்றோட்டமான அறையில், தெளிவான, சரியான வெளிச்சத்தில், அளவான ஒளியுடன், ஒன்றரை அடி தூரத்தில் இருக்கும்படியான கணினித் திரையும், பயன்படுத்த எளிதான கீபோர்டு மற்றும் மௌசும் இருக்க வேண்டும்.
கீபோர்ட், மௌஸ் உபயோகிக்கும்போது மணிக்கட்டை வளைக்காமல் நேராக கைகளை  வைத்தும், முதுகுப்பகுதி ஒரே நேர் கோட்டில் இருக்கும்படியாக (படம்)  சாய்வதற்கு ஏற்ற நாற்காலியையும் பயன்படுத்த வேண்டும். அதே போல தொடர்ந்து கணினி முன்பாக அமர்ந்திருக்காமல் அரை மணி நேரத் திற்கு ஒரு முறை எழுந்து சிறிது நடந்து பின் அமர்வதும், கைகளை வளைத்து சிறிது பயிற்சி செய்வதும் நல்லது. அதேபோல அடிக்கடி கண் இமைகளை மூடித்திறப்பதும் கண்களுக்கு நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். Related Posts with Thumbnails

வேதியியல் மாணவர்களுக்கு பயனுள்ள இணையதளம்

வேதியியல் ( Chemistry ) துறை சார்ந்த மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு உதவிடும் வகையில் பீரியடிக் டேபிள் ஆப் எலிமெண்ட்ஸ் (Periodic Table of Elements) என்ற பெயரில் ஐசோடோப்புகளின் வேதிவினை செயல்பாடுகளை விளக்கும் வகையில், அழகிய வண்ணத்தில் குறியீடுகளுடன் கூடிய தெளிவான விளக்கப் படங்கள், தகவல்கள், வீடியோக்களுடன் இந்த இணையதளம் அமைந்துள்ளது. இணையதள முகவரி: http://ptable.com/
. Related Posts with Thumbnails

தமிழில் கல்வித் தகவல்களைத் தரும் இணையதளம்

மாணவர்களின் படிப்பிற்கு தேவையான அனைத்து தகவல்களையும் இணையத்தில் தமிழிலேயே பெற்றிடலாம். அதற்கென்று ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் வினாத்தாள்கள், படக்குறிப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கிடைக்கிறது. இதில் சாதாரண தரம், உயர் தரம் என்று இருவகைக் கல்வி முறைக்கும் தனித்தனியாக பாடங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
கணிதம், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம், வரலாறு, உயிரியல், பௌதீகவியல், நடனம், வணிகம், இராசாயனவியல், புவியியல் போன்ற பாடங்களில் மாதிரித் தேர்வையும் எழுதி தங்களின் திறனை பரிசோதித்து கொள்ளலாம். மேலும் வெளிநாட்டுக் கல்வி, பல்கலைக் கழகங்கள் குறித்த தகவல்கள், கணினித் தொழில் நுட்பம், மென்பொருள், இணையம் தொடர்பான தகவல்கள் எனப் பலவும் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கியுள்ளது. மாணவர்களுக்கு பயனுள்ள தளமாக இது இருந்து வருகிறது.
இதன் இணைய முகவரி: http://www.gatherpage.com/
. Related Posts with Thumbnails

இ-மெயிலைப் பாதுகாப்பது எப்படி?


இன்றைய நாளில் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாக இ-மெயில் மாறியிருக்கிறது. இ-மெயில் சேவையை இலவசமாகப் பல நிறுவனங்கள் தருவதால் ஒருவரே எண்ணற்ற இமெயில் முகவரிகளை உருவாக்கிக் கொள்வது என்பது இன்று சர்வ சாதாரண விஷயம்.
அதே நேரத்தில் இன்று தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி ஒருவருடைய இமெயில் தகவல்களை திருடுவதும் அதிகரித்து வருகிறது. இத்தகைய தாக்குதலிலிருந்து நம்முடைய இமெயில் முகவரியை எப்படிப் பாதுகாப்பது என்பது பற்றி அறிந்து கொள்வோம்.
இமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்டைத் திருட ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்கள் பல்வேறு வகையான வழிமுறைகளைக் கையாளுகின்றனர். அதில் ஒன்று ஸ்பை வேர் என்ற நச்சு நிரல்களை உருவாக்கி இணையம் வழியாக பரப்பியும், போலி அல்லது பொழுது போக்கு இணைய தளங்களில் பதிவு செய்யச் சொல்லி அதன் மூலமாகத் தகவல்களைத் திருடுவது எனப் பல வழிமுறைகளைக் கையாளு கின்றனர்.
இவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள முதலில் செய்ய வேண்டியது இமெயில் முகவரி களைத் தேவையில்லாத தளங் களில் பதிவு செய்வதைத் தவிர்ப்பது அல்லது அதற்கென வேறு ஒரு இமெயில் முகவரியை உருவாக்கிப் பயன்படுத்தலாம்.
நம் அலுவலகம் அல்லது வீட்டில் பயன்படுத்தும் கணினி யில் ஆண்டிவைரஸ், ஆண்டி ஸ்பைவேர், ஆட்வேர் ரிமூவர் ஆகிய மென்பொருள்களை நல்ல நிலையில் இயங்கும்படி அப்டேட் செய்து வைத்துக் கொள்ளவும். வெளி இடங் களில் இமெயிலை ஓப்பன் செய்து பார்ப்பதை தவிர்த்தி டுங்கள்
அதேபோல இமெயிலை அனுப்பும்போதும் கவனமாக இருக்கவேண்டும். பலருக்கும் ஒரே செய்தியை அனுப்ப வேண்டியிருந்தால் BCC என்ற கட்டத்திற்குள் முகவரிகளை உள்ளிட்டு அனுப்பவும். இதனால் பெறுபவர்கள் நாம் அனுப்பிய பிற நண்பர்களுடைய முகவரிகளைப் பார்க்க முடியாத வகையில் செய்திட முடியும்.
பாஸ்வேர்ட் திருட்டைத் தடுக்க ஜிமெயில் மற்றும் யாகூ மெயில் பயன்படுத்துவோருக்கு அந்த நிறுவனங்களே கூடுதல் வசதியாக செல்போன் வழிப் பாதுகாப்பைத் தருகின்றன.
இதனைப் பயன்படுத்த நம்முடைய இமெயில் அக்க வுண்ட்டில் நுழைந்து அக்க வுண்ட் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று செல்போன் எண்ணைப் பதிவு செய்யலாம். பதிவு செய்த வுடன் உடனடியாக நம்முடைய செல்போனுக்கு எஸ்எம்எஸ் ஒன்று அனுப்பப்படும். அதில் கொடுக்கப்படும் பாஸ்வேர்டை தளத்தில் பதிந்து உறுதிப்படுத் தவும். அதன்பிறகு நீங்கள் எப்போது பாஸ்வேர்டை மாற்ற முயன்றாலும் உடனடியாக உங்கள் செல்போனுக்கு இதே போன்ற பாஸ்வேர்ட் ஒன்று அனுப்பப்படும்.
இதன் மூலம் மற்றவர்கள் நமக்குத் தெரியாமல் பாஸ் வேர்டை மாற்ற முயற்சித்தால் கண்டுபிடித்துவிடமுடியும்.
. Related Posts with Thumbnails

வேர்ட் பேட் (Word Pad) போரடிக்கிறதா?

எத்தனையோ புதிய புதிய மென்பொருள்கள் வந்தாலும் இன்றும் பெரிய மாற்றங்கள் இல்லாமல் இருக்கும் மென் பொருள்களில் ஒன்று வேர்ட்பேட் (Word Pad). எளிய தோற்ற மும், பிற மென்பொருள்களில் ஆர்டிஎப் கோப்புகள் கையா ளுவதற்கு ஏற்றதாகவும் உள்ளதால் டெக்ஸ்ட் டைப்பிங் செய்பவர்களின் விருப்பமாக உள்ளது. அதில் மேலும் பல வசதிகள் தேவை என நினைப்பவர்கள் ஃபோகஸ் ரைட்டர் (Focus Writter) மென்பொருளுக்கு மாறலாம்.


இம்மென்பொருளைக் கிளிக் செய்தவுடன் துவங்கும் தட்டச்சு செய்வதற்கான சாளரம் (டைப்பிங் விண்டோ) கணினித் திரையின் முழுமைக்கும் தெரியும் வகையில், மெனுபார் ஐகான்கள் அனைத்தும் மறைக்கப்பட்டு (ஆட்டோ ஹைட்) பளிச்சென்று இருக்கிறது. மெனுப் பகுதியைப் பார்க்க மெளஸை மேல் விளிம்பிற்கு கொண்டு செல்ல வேண்டும்.
அதே போல எழுத்துக்கள், வார்த்தை கள், பத்தி ஆகியவற் றின் எண்ணிக்கை அறிய டைப்பிங் விண்டோவின் கீழே மெளஸை நகர்த்திப் பார்க்கலாம். எழுத் துரு மற்றும் பேக் கிரவுண்ட் வண்ணங் களை மாற்றி தீம் டெம்ப்ளேட்களாக பதிவு செய்து கொள்ளுதல், டைப் செய்யும் நேர அளவை கணக்கிடுவது, பல டாக்குமெண்ட்களை  கையாள டேப் வசதி,  ஸ்பெல் செக்கர் முதலிய பல வசதிகள் உள்ளது. இதற்கெல்லாம் மேலாக தானாக சேவ் செய்து கொள்ளும் ஆட்டோ சேவ் வசதியும் உள்ளது. இது ஓப்பன் சோர்ஸ் போர்ட்டபிள் மென்பொருளாக இருப்பதால் கணினி மற்றும் பென்டிரைவில் காப்பி செய்து எளிதாகப் பயன்படுத்தலாம்.

தரவிறக்க: http://gottcode.org/focuswriter/
 . Related Posts with Thumbnails

அப்லோட் செய்ய உதவும் இணையதளங்கள்

ஒரே நேரத்தில் டெபாசிட் பைல். ரேப்பிட்சேர். மெகாஅப்லோட். ஜிட்டு எனப் பல தளங்களிலும் கோப்புகளை பதிவேற்ற உதவும் 18 தளங்களுக்கான பட்டியல்

1. ASAPload – Support uploading to 6 file hosting websites
2 Rapidmirrors - Support uploading to 8 file hosting websites
3. DL4 – Support uploading to 4 file hosting websites
4. FileDucky – Supports uploading to 2 file hosting websites
5. Gazup! – Supports uploading to 8 file hosting websites
6. Mass Mirror – Supports uploading to 4 file hosting websites
7. Miroriii – Supports uploading to 3 file hosting websites
8. Mirror a File – Supports uploading to 11 file hosting websites
9. Mirrorcreator – Supports uploading to 15 file hosting websites
10. Multi-UP – Supports uploading to 4 file hosting websites
11. MultiUpload – Supports uploading to 12 file hosting websites
12. QOOY – Supports uploading to 12 file hosting websites
13. RapidSpread – Supports uploading to 9 file hosting websites
14. ShareBee – Supports uploading to 5 file hosting websites
15. SuperUploader – Supports uploading to 15 file hosting websites
16. Upload Mirrors – Supports uploading to 16 file hosting websites
17. X-mirrors – Supports uploading to 9 file hosting websites
18. Flash Mirrors - Supports uploading to 8 file hosting websites
- Related Posts with Thumbnails

ஜிமெயிலுக்கான மின்னஞ்சல் நினைவூட்டி

ஒன்றிற்க்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு புதிய மின்னஞ்சல்கள் வந்தவுடன் நினைவூட்டும் சிறிய யுட்டிலிட்டிதான் Spiffy Gmail notifier இது முற்றிலும் இலவசமானது. இதில் 5 ஜி‌மெயில் கணக்குகளை பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட நேர இடைவெளியில் புதிய மின்னஞ்சல்கள் குறித்த தகவல்கள் ட்ரே ஐகான் பகுதியில் 5 செகண்டுகள் என்ற அளவில் காட்டப்படும். ஒரு எம்பிக்கும் குறைவான இம்மென்பொருளை நிறுவுவது எளிது.


நிறுவியபின் திறக்கும் விண்டோவில் ஆப்சன்ஸ் (Options) மெனு சென்று அக்கவுண்ட்ஸ் (Accounts) என்பதை கிளிக் செய்யவும். அதில் நாம் வைத்துள்ள ஜிமெயில் அக்கவுண்ட்களின் யூசர் நேம். பாஸ்வேர்டை ஒவ்வொன்றாக பதிவு செய்யவும்.
பிறகு கான்பி‌கிரேசன் (Configuration) என்பதை கிளிக் செய்து நமக்குத் தேவையான வகையில் செட்டிங்குகளை மாற்றிக் கொள்ளவும். ‌இந்த யுட்டிலிட்டியில் ஜிமெயில் அப்ளிகேசன் மூலம் பெறப்படும் தனிப்பட்ட டொமைன்களுக்கான மின்னஞ்சல்களையும் பெறமுடியும் என்பது கூடுதல் வசதியாகும்.

இம்மென்பொருளை பதிவிறக்க இங்கு செல்லவும்
http://www.snapfiles.com/get/spiffy.html

மேலும் விபரங்களுக்கு
http://members.multiweb.nl/kevin/spiffy/ Related Posts with Thumbnails

பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சி - மார்னிங் காபி

காலையில் பார்க்கும் செய்தித்தாள் தளங்கள், நமது இமெயில் தளங்கள் ஆகியவற்றை ஒரே கிளிக்கில் வரவழைக்க உதவும் பயர்பாக்ஸ் நீட்சி (ஆட்ஆன்) தான் மார்னிங் காபி. இதனைப் பயன்படுத்தி தினசரி பார்க்கும் தளங்கள் மட்டுமல்லாது குறிப்பிட்ட கிழமையில் பார்க்கவேண்டிய தளங்களை அந்தந்த நாளில் பார்க்கும் ‌ டைம்‌டேபிள் வசதியும் இதில் உள்ளது.

பயர்பாக்ஸ் ரீ ஸ்டார்ட் செய்த பிறகு பார்த்தால் அட்ரஸ் பாருக்கு அருகில் காபி கோப்பை போன்ற ஒரு ஐகான் அமர்ந்திருக்கும். அதனை கிளிக் செய்தால் நமக்கான அன்றைய தளங்களை பார்க்கமுடியும். அதன் அருகில் அமைந்துள்ள அம்புக்குறியை அழுத்துவதன் மூலம்  ஒரு மெனு தோன்றும். அதில் அன்‌றைய தளங்களைப் பார்ப்பதற்கான Load My Morning Coffee மற்றும் குறிப்பிட்ட கிழமைக்கான தளங்களை  பார்ப்பதற்கான Add toMy Morning Coffee , புதிய தளங்களை சேர்ப்பதற்கான Configure Morning Coffee ஆகிய மூன்று மெனுக்கள் பட்டியலிடப்பட்டிருக்கும்.
நாம் பட்டியலில் சேர்க்க வேண்டிய தளங்களின் முகவரியை Configure Morning Coffee யை கிளிக் செய்தால் கிழமைகளுக்கான பட்டியலும் அதன் எதிர் பகுதியில் அந்தக் கிழமைக்கான தளங்களை சேர்ப்பதற்கான சாளரம் மற்றும் add என்ற பட்ட‌னும் இருக்கும். குறிப்பிட்ட கிழமையை கிளிக் செய்து பின்னர் பார்க்க வேண்டிய தளத்தின் பெயரை டைப் செய்து ok கொடுக்கவும். பயன்படுத்திப் பாருங்கள். கருத்துக்களை சொல்லுங்கள்.

https://addons.mozilla.org/en-US/firefox/addon/2677/ Related Posts with Thumbnails

பறவைகள் பலவிதம்

பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வோருக்கு மிகவும் பயனுள்ள தளங்கள் இவை. பல நூறுவிதமான பறவைகளைப் பற்றிய செய்திகள், படங்கள், அவை எழுப்பும் ஒலிகள் என அனைத்து செய்திகளையும் கொண்டிருக்கின்றன  இந்தத் தளங்கள்.


 
http://www.welovebirds.org/ 
 
 
Related Posts with Thumbnails

ஓவியம் வரைய உதவும் மென்பொருள்கள்

ஒளிப்படங்களை மாற்ற உதவும் போட்டோஷாப், பிங், பிக்காசா போன்று கணினியில் படம் வரைய விரும்பும் ஓவியர்களுக்கு என்றே பல மென்பொருட்கள் இப்பொழுது கிடைக்கின்றன. கோரல் டிரா, அடோப் இல்லஸ்ட்ரேட்டர், இன்க்ஸ்கேப் போன்ற மென்பொருள்கள் வெக்டார் கிராபிக் வரைபடங்களுக்கு புகழ்பெற்றவை. அதுபோல ஓவியங்கள் வரைவதற்கான மென்பொருள்கள் பல ஓப்பன் சோர்ஸ் தளத்தில் வந்திருக்கின்றன.
அவற்றில் சில:
mypaint-300x259இது ஒரு சிறப்பாக ஓவியம் வரைய உதவும் மென்பொருள். இதன் சிறப்பம்சம் பல்வேறு விதமான பிரஸ்கள், எல்லையற்ற கேன்வாஸ் உபயோகம், லேயர்கள், கிராபிக் டூல்கள் எனப்பல.






கிரிட்டா (Krita)
krita_digital_painting-300x224  இது புகழ்பெற்ற கே ஆபிஸ் மென்பொருள் வெளியீட்டாளர்களிடமிருந்து வந்திருக்கிறது. கேலிச்சித்திரங்கள், ஓவியங்கள் எனப்பலவும் இதன் வரையலாம். லேயர் மற்றும் மாஸ்க் பயன்பாடு உள்ளது. பிரஸ், பில்டர்கள், வெக்டார், ராஸ்டர் டூல்கள் என படம் வரைய பல்வேறு வசதிகள் இதில் உள்ளது. கேஆபிஸ் மென்பொருளுடன் இணைந்தே இது கிடைக்கிறது. http://www.koffice.org/download/
drawpile-logo
இதுவும் ஓவியம் வரைவதற்கான மென்பொருள்தான். இதில் கேன்வாஸை சுழற்றி அமைக்கும் வசதி, நாம் வரையும் அதே நேரத்தில் இணையம் மூலமாக பிற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி ஆகியவை புதியது. http://drawpile.sourceforge.net/get/

ஓவியம் வரைய உதவும் மேலும் சில மென்பொருள்கள்:
ஃப்ளோ பெய்ண்ட் (Flowpaint)
http://www.flowpaint.org/flowpaint-screenshot










கியூ அக்வாரில்(Qaquarelle)
- http://qaquarelle.sourceforge.net/qaquarelle-screenshot-300x234
அல்கெமி (Alchemy) - http://al.chemy.org/
 
சிபி பெய்ண்ட் (chibipaint) - http://www.chibipaint.com/
எம்டிபெய்ண்ட் (Mtpaint)  - http://mtpaint.sourceforge.net/mtPaint-300x180
ஹார்மோனி (Harmony) - இது ஒரு ஆன்லைன் மென்பொருள்  http://mrdoob.com/projects/harmony/-
Related Posts with Thumbnails

விருப்ப வாசகத்துடன் ஸ்கிரீன் சேவர் வேண்டுமா?


மொபைல் போன்களில் அழகிய ஸ்கிரீன் சேவர்களை நாம் பயன்படுத்துவோம். அதில் நமது பெயரையோ, நமக்‌குப் பிடித்தவர் பெயரையோ, பிடித்த வாசகத்தையோ பயன்படுத்துவதற்கு வாய்ப்பின்றி இருப்போம். அதுவே போட்டோ‌‌ஷாப் போன்ற மென்பொருள் தெரிந்தவராக இருந்தால் கொஞ்சம் நேரம் செலவழித்து உருவாக்கி பயன்படு்த்தலாம். ஆனால் இதுபோன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வாக வந்துள்ளது Reddodo என்ற இணையதளம். இதில் 60க்கும் மேற்பட்ட தயார் நிலையிலான பல்வேறு ஸ்கிரீன் சேவர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் நமக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் எடிட் பக்கத்திற்கு செல்லும். அங்கு முதலில் நமது மொபைல் மாடல் அல்லது 240x320, 176x220, 176x208, 176x144, 128x160, 128x128 ஆகிய ஸ்கிரீன் அளவுகளில் தேவையானதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். அதன்பிறகு நாம் விரும்பும் பெயரையோ வாசகத்தையோ டைப் செய்து பிரிவியூ கொடுத்தால் அருகில் நம்முடைய வாசகத்துடன் படம் தெரியும். ஸ்கிரீன் சேவராகவோ அல்லது வால்பேப்பராகவோ சேவ் செய்வதற்கு அ‌ருகிலேயே ஆப்சன் உள்ளது. பிரிவியூ ‌விண்டோவில் ரைட் கிளிக் செய்து படத்தை அப்படியே காப்பி செய்து பயன்படுத்தலாம் அல்லது  வேப் வசதியிருந்தால் நேரடியாக மொபைல் போனுக்கே அனுப்பிவிடமுடியும்.
இணையதள முகவரி்‌ - http://reddodo.com/ Related Posts with Thumbnails

'பாஸ்' சொல்றதக் கேளுங்க

அரசின் சி-டாக் நிறுவனம் பாஸ் (BOSS)என்ற ஆப்பரேடிங் சிஸ்டத்தை உருவாக்கியுள்ளது. பாரத் ஆப்பரேடிங் சிஸ்டம் சொல்யூசன்ஸ் (Bharat Operating System Solutions) என்பதன் சுருக்கமே பாஸ். நாம் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் விண்டோஸ் மற்றும் மேக் கட்டமைப்பிற்கு மாற்றாக ஓப்பன் சோர்ஸ் முறையில் இந்திய அரசின் சி-டாக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இயங்கு தள (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) மென்பொருளாகும் இது.
தற்போது விலைகொடுத்து வாங்கும் எந்தவொரு வணிகரீதியான மென்பொருளுக்கும் நீங்கள் பயனாளராக மட்டுமே இருக்கிறீர்கள். அவை உங்களுக்கு சொந்தமானதல்ல. அதில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற மாறுதல்கள் செய்யவோ, உங்கள் தேவைக்குப் பிறகு நண்பருக்கோ, மற்றொரு பயனருக்கு மறு விற்பனை அல்லது இலவசமாக தருவதற்கோ இயலாதவை. அப்படிப் பயன்படுத்துவதும், விற்பதும் காப்பிரைட் சட்டப்படி குற்றமாக கருதப்படும். இதற்கு சம்மதித்தே நீங்கள் பல ஆயிரமும் லட்சங்களையும் செலவழித்து மென்பொருள்களை வாங்கிப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள். அப்படி விலை கொடுக்காமல் ஏதாவது காப்பிரைட் மென்பொருளை தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தி வந்தால் அது பைரேட்டட் அதாவது திருடப்பட்ட மென்பொருளாக கருதப்படும்.
இதற்கு மாறாக, அறிவு மனிதர்களுக்கு பொதுச்சொத்து, அந்த அறிவால் உண்டாகும் நன்மையும் பயனும் அந்தந்த மனிதர்களின் தேவைக்கு உட்பட்ட மாற்றங்களுடன் பயன்படுத்திக் கொள்வதற்கும் பிறருடன் பகிர்ந்து
கொள்வதற்குமான சுதந்திரத்தை வழங்கவேண்டும் என்ற அறைகூவலுடன் திறந்த மூல மென்பொருள்களுக்கான இயக்கம் 1983ல் துவங்கியது.  இதன் அடிப்படையில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு மென்பொருளும் காப்பி
லெப்ட் செய்யப்படவேண்டும் என்பதை இவ்வியக்கம் வலியுறுத்துகிறது.
மென்பொருள் பயன்படுத்துபவருக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்குவதே இவ்வியக்கத்தின் குறிகோளாகும்.  பிறருடன் பகிர்ந்து கொள்ளுதல், மாற்றியமைத்தல், மேம்படுத்துதல் என்பதுடன் வைரஸ்கள், தகவல் திருட்டு, கிரிடிட் கார்டு மோசடி போன்ற தொழில்நுட்ப எதிரிகளிடமிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள திறந்த மூல கட்டமைப்பே உதவும் என்று உவகின் பல நாடுகள் கருதுகின்றன.
ஆகவேதான் ஒவ்வொரு நாடும் தனக்கான மென்பொருளை திறந்தமூலநிரல் அடிப்படையிலேயே உருவாக்கி வருகின்றன. பிரேசில், லத்தீன் அமெரிக்க நாடுகள், ஜெர்மனி, ரஷ்யா, டென்மார்க், இங்கிலாந்து போன்ற பல நாடுகளும் தங்களுக்கான ஓப்பன் சோர்ஸ் இயங்குதளத்தையும், மென்பொருட்களையும் உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
உலகளவில் கோலோச்சி வரும் மைக்ரோசாப்ட், அடோப், ஆப்பிள், மேக் போன்ற நிறுவன காப்பிரைட் மென்பொருள்களுக்கு மாற்றாக பல்வேறு நாடுகளும் தன்னார்வ அமைப்புகளும் காப்பிலெப்ட் மென்பொருட்கள் பலவற்றை  உருவாக்கி வருகின்றன. ஓப்பன் சோலாரிஸ், உபுண்டு லினக்ஸ், மற்றும்  கியூபாவின் நோவா  (Nova)ஓஎஸ், சைனாவின் கைலின் (Kylin) ஓஎஸ் மற்றும் ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அரேபிய நாடுகளின் அரசு சார் இயங்கு தளங்கள் இதில் குறிப்பிடத்தக்கவையாகும். விண்டோசில் பழகிய நமக்கு பாஸ் ஆப்பரேடிங் சிஸ்டம் எவ்வாறு உதவும் என்ற கேள்வி எழலாம். ஆனால் கடந்த 25 ஆண்டிற்கும் மேலாக லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படையில் வெற்றிகரமாக பல்லாயிரம் கணினி வல்லுனர்களின் பங்களிப்பில் மேம்படுத்தப்பட்ட ஓப்பன் சோர்ஸ் நிரலில், இந்திய சூழலுக்கு ஏற்றவகையிலான மாற்றங்களை செய்து  வெளிவந்திருப்பதுதான் பாஸ் ஜிஎன்யு /லினக்ஸ் (அப்படித்தான் அழைக்கிறார்கள்). பாஸுடன் கூடுதலாக தரப்படும் 22 பயன்பாட்டு மென்பொருள்களில் பல விண்டோஸ் பயனாளர்களால் மிகவும் விரும்பிப்பயன்படுத்தப்படுபவை என்பதும் குறிப்பிடத்தக்கது..  ஆகவே பாஸின் செயல்திறன் குறித்து நாம் அச்சப்படவேண்டியதில்லை. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மென்பொருள் தயாரிப்புத் திட்டம் செயல்பாட்டில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ இயங்கு தள மென்பொருள் ஒன்று வெளியாவது தற்போதுதான்.  இதில் சிறப்பம்சம் என்னவென்றால் ஆங்கிலம் மட்டுமல்லாது தமிழ், இந்தி, பஞ்சாபி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, சமஸ்கிருதம், தெலுங்கு, உருது, போடோ, காஷ்மீரி, மைதிலி, கொங்கனி, மணிபூரி போன்ற இந்தியாவின் பல்வேறு மக்கள் பேசும் மொழியிலும் இவ்வியங்குதளம் வெளியிடப்பட்டிருப்பதுதான்.
நீங்களும் பாஸ் ஜிஎன்யு / லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்த நினைத்தால் இலவச சிடியை அருகிலுள்ள சி-டாக் அலுவலகத்தில் நேரிலோ அல்லது பாஸ் லினக்ஸ் (http://bosslinux.in/) இணையதளம் மூலமாக  உங்கள் முகவரியை அளித்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது அத்தளத்திலிருந்து நேரடியாக பதிவிறக்கியும் நமது கணினியில் நிறுவிக்கொள்ளமுடியும். இதற்கான வழிகாட்டிக் கையேடும் அந்த இணையதளத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது. முன்பு வெளியிடப்பட்ட அலுவலக பயன்பாட்டு மென்பொருள் பாரதீய ஓப்பன் ஆஃபிஸ் தொகுப்பு அரசு அலுவலகங்கள் தவிர்த்து இன்னும் தனியாரிடமும், பெரும்பாலான மக்களிடமும் சென்று சேராத நிலையில் பாஸ் ஓஎஸ் மக்களின் பயன்பாட்டிற்கு எப்போது முழுமையாக வரும் என்ற கவலையும் ஏற்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசுசார் நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் பாஸ் பயிலரங்குகளை சி-டாக் நிறுவனம் தற்போது நடத்தி வருகிறது. அதனை மேலும் விரிவாக்கி பொதுமக்களுக்கும் இதன் பயன் கிடைக்கச்செய்யவேண்டும் என்பதே நமது விருப்பம் Related Posts with Thumbnails

போன்சாய் மென்பொருள்கள்


கண்டுபிடிக்கப்பட்ட மென்பொருள்கள் அனைத்துமே நமக்கு பயன்படும் என்பது இல்லை, எல்லோருக்கும் ஏதாவது ஒரு சில மென்பொருள்களோடு வேலை முடிந்துவிடும், ஒரு சிலருக்கோ வேறு வேறு ‌‌‌ரூபங்களில் புதிய புதிய மென்பொருள்க‌ளின் தேவை இருந்துகொண்டே இருக்கும், என்றாவது ஒருநாள் பயன்படுத்தப்படும் மென்பொருள்களை தேடிப்பிடித்து வாங்கி கணினிக்குள் அடைத்துவைப்பது என்பது கணினிக்கு பளு, அதுவே தேவைக்கு உபயோ‌கிக்கும் வகையில் ஒரு கிளிக்கில் ஓப்பனாகக்கூடிய, இடத்தை அதிகம் பிடிக்காததாக இருந்தால் நல்லதுதானே.
இன்று மிகப்பெரிய மென்பொருள்கள் பலவும் போன்சாய் மரங்களைப்போல சுருங்கி போர்ட்டபிள் மென்பொருள்களாக உலா வந்து கொண்டிருக்கின்றன.இவை யுஎஸ்பி டிரைவுகளில் பதிந்து ‌வைத்து எளிதில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை, தேவை கருதி கணினியிலும் பதிந்து பயன்படுத்தலாம்,
இதன் மூலம் இரண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும், முதலாவது ஒரு நிறுவனத்தின் பழைய அல்லது புதிய பதிப்பு மென்பொருளை விரும்பி பயன்படுத்துபவர்கள் அதே நிறுவனத்தின் முந்தைய அல்லது புதிய பதிப்பின் போர்ட்டபிளை வைத்துக்கொள்ளலாம், (எதற்காக என்றால் விண்டோஸ் ஆபிஸ் 97.2003. எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் புதிய விண்டோஸ் 2007 ல் உருவாக்கப்பட்ட கோப்புகளை படிக்க முடியாது, அ‌ச்சமயத்தில் உங்களிடம் ஓப்பன் ஆபிஸ் மென்பொருளின் போர்ட்டபிள் இருந்தால் அதில் எளிதாக ஓப்பன் செய்து சேவ்ஏஸ் செய்து ஆபிஸ் 97.2003 க்கு ஏற்றதாக மாற்றிக்கொள்ளமுடியும்)
அடுத்தது தினம் ஒரு இடத்திற்கு பயணிப்பவர்களுக்கு லேப்டாப் இல்லாத சூழலில் போர்ட்டபிள் மென்பொருள்கள் பதிந்த யுஎஸ்பி டிரைவ்களை பயன்படுத்தி எந்த ஒரு பிரௌசிங் சென்டரிலும் அல்லது நண்பர்க‌ளின் கணினிகளிலும் இன்ஸ்டால் செய்யாமல் சிறிது நேரம் பயன்படுத்தி நம்முடைய வேலையை எளிதாக முடித்துக்கொள்ளமுடியும். அந்த வகையில் தற்போது முன்னணியில் உள்ள மென்பொருள்கள் பலவும் அனுமதி பெற்றும். பெறாமலும் என்று இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன, இவை உங்களுக்கும் பயன்படக்கூடும் என்பதற்காகவே இந்த பதிவு,
(எச்சரிக்கை அனு‌மதியில்லாத மென்பொருள்களை வைரஸ் சோதனை செய்து பயன்படுத்தவும், மால்வேர். ஆட்வேர். ட்ரோஜான் ‌‌ஹார்ஸ் போன்ற வைரஸ்கள் இருக்கக்கூடும்)
அப்படிப்பட்ட போர்ட்டபிள் மென்பொருகள் கி்டைக்கக்கூடிய தளங்களின் பட்டியல்
Open Source Portable Software's:
http://www.portablefreeware.com
http://portable-applications.blog.com/
http://www.lupopensuite.com
http://en.wikipedia.org/wiki/List_of_portable_software

தேவையான மென்பொருள்களை தேர்ந்தெடுத்து ஒரே கோப்பாக யுஎஸ்பியில் /கணினியில் இன்ஸ்டால் செய்ய

www.liberkey.com


Portable Games:

http://en.wikipedia.org/wiki/List_of_portable_computer_games
http://noportable.blogspot.com
http://portableappz.blogspot.com/

Professional Portable Software's:
(adobe, corel, microsoft, etc...)
http://baltagy.blogspot.com Related Posts with Thumbnails

wibiya widget