பிடிஎப் கோப்புகளை ஒளிப்படமாக மாற்ற

பிடிஎப் கோப்புகளை ஜெபெக் கோப்பாகவும், ஜெபெக் கோப்புகளை பிடிஎப் வடிவத்திற்கு மாற்றவும் ஃபோட்டோஷாப் அல்லது அடோப் பிடிஎப் புரொபஷனல் ஆகிய வணிக மென்பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்.


இவற்றைப் பயன்படுத்தாமல் இலவசமாக கோப்புகளை மாற்ற உதவும் மென்பொருள்களை http://www.fm-pdf.com/pdf-to-jpg-free.html என்ற இணைய தளம் வழங்குகிறது.
இம்மென்பொருளில் பிடிஎப் கோப்புகளை தேடும் வசதி, HTTP மற்றும் FTP மூலம் கோப்புகளைப் பெறும் வசதி, கோப்புகளில் நீரெழுத்துக் குறியீடுகளை அமைக்கும் வசதி ஆகிய வசதிகளும் உள்ளது.
. Related Posts with Thumbnails

இணையதள வீடியோவிற்கு ஏற்றம் தந்த யு ட்யூப்


ணைய உலகில் உள்ள நிறுவனங்களிடையே கடும் போட்டிகளும், அதனால் தோன்றும் புதிய புதிய வசதிகளும் பெருகிக் கொண்டே போகின்றன.
பத்தாண்டுகளுக்கு முன்பு ஆமை வேகத்தில் இருந்த இணையம் இன்று பல மடங்கு மேம்பட்டிருக்கிறது. இத்தகைய இணைய வேகம் கொடுத்த வசதிகளில் ஒன்று வீடியோக்களை பதிவேற்றும் வசதி.
வீடியோ பதிவுகளை வெளியிட பல இணையதளங்கள் இன்று தோன்றியிருந்தாலும் கூகுள் நிறுவனத்தின் யு ட்யூப் இணையதளம்தான் தற்போது முதலிடத்தில் இருக்கிறது.
அதிகம் பேர் பார்க்கும் இணையதளங்களின் வரிசையில் கூகுள், ஃபேஸ்புக்கிற்கு அடுத்து 3வது இடத்தை யு ட்யூப் தளம் பெற்றுள்ளது.


யு ட்யூப் இணையதளத்தைப் முதலில் உருவாக்கியது பேபால் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான சட் ஹர்லே, ஸ்டீவ் சான் மற்றும் ஜாவத் கரீம் ஆகிய மூவர்தான். 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று யுட்யூப் டாட் காம் என்ற பெயரில் இணையதளத்தை தொடங்கினர்.

இத்தளத்தை 2006 அக்டோபரில் 165 கோடிக்கு கூகுள் நிறுவனம் கையகப்படுத்தியது. அதன் பிறகு பல புதிய மாற்றங்களை கொண்டு வந்தது. இன்று வரை அதன் மேம்படுத்தும் பணி நிற்கவில்லை.
ஆரம்பத்தில் அடோப் ஃபிளாஸ் வீடியோவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்தளம் இன்று விண்டோஸ், ஆப்பிள், லினக்ஸ் வகைக் கணினிகளுக்கு ஏற்ற வகையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு தரப்படுத்தப்பட்டுள்ளது. மேம்பட்ட வீடியோ தரமான ஹெச்டி (HD) வடிவத்திலும், 3டி (3D) மற்றும் ஹெச்டிஎம்எல்5 (HTML 5) தொழில் நுட்பங்களும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
செல்பேசிகளில் பார்ப்பதற்கு வசதியாக 3ஜிபி (3gb) என்ற வீடியோ தரத்தைப் பின்பற்றுகிறது. இது இணைய வசதியுள்ள பெரும்பாலான செல்பேசிகளில் வீடியோக்களை காண உதவும் வசதியாகும்.
செல்பேசி வழியாக பயன்படுத்த விரும்புவோர் www.m.youtube.com என்று இணைய முகவரியைப் பயன்படுத்தவேண்டும்.

ஒவ்வொரு நொடியும் 1 மணி நேரத்திற்கு ஓடக் கூடிய வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.ஒரு நாளில் சுமார் 4 பில்லியன் வீடியோக்கள் யுட்யூப் இணையதளம் வழியாக பார்க்கப்படுகிறது.

இன்று முக்கிய நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பும் செய்யப்படுகின்றன. வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்கள் தொடங்கி கல்வி கற்றுத்தர, குறும்படங்களைப் பகிர்ந்து கொள்ள, நம் இல்லங்களில் நடைபெறும் விழாக்களை வீடியோ பதிவாக்கி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள என்று பல வழிகளிலும் பயனுள்ளதாக யு ட்யூப் தளம்  இருக்கிறது.
சமீபத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி சார்ந்த புதிய பகுதி ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு அறிவியல், கணிதம் என்று கற்பதற்கு கடினமான பாடங்கள் கூட எளிதாக கற்க வீடியோக்களாக்கி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இத்தளத்தை www.youtube.com/education,
www.youtube.com/schools என்ற முகவரியில் சென்று பார்க்கலாம். Related Posts with Thumbnails

கூகுள் பயன்பாட்டில் உதவும் மென்பொருள்கள்


ணையப் பயனரின் முதல் தேர்வாக இருக்கும் கூகுளின் பல்வேறு சேவைகளைப் பயன்படுத்துவோருக்கு உதவும் சிறு சிறு மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அதில் சிலவற்றை இங்கு தருகிறோம்.

கூகுள் மெயில் பேக்கப்:
ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதிலுள்ள அனைத்து மின்னஞ்சல்களையும் கணினிக்கு பதிவிறக்கம் செய்ய இம்மென்பொருள் உதவுகிறது.
இதனை தரவிறக்கம் செய்ய: http://www.gmail-backup.com/

கூகுள் புக் டவுன்லோடர்:
கூகுள் புக் தளத்திலிருக்கும் புத்தகங்களில் உங்களுக்குப் பிடித்ததை பிடிஎப் வகைக் கோப்பாக மாற்றித் தரவிறக்கித் தர உதவும் மென்பொருள் இது.

இதனைத் தரவிறக்கம் செய்ய: http://www.gbooksdownloader.com/

கூகுள் பிக்காசா:
கூகுள் போட்டோஸ் தளத்தில் உங்கள் புகைப்படங்களை பதிவேற்ற, பதிவிறக்க, தேட, எடிட் செய்ய எனப் பல வசதிகளைத் தரும் கூகுளின் பயனுள்ள மென்பொருள்.

தரவிறக்கம் செய்ய: http://picasa.google.com/
. Related Posts with Thumbnails

ஹேக்கர்களிடமிருந்து உங்கள் தகவல்களைப் பாதுகாக்க..

இணையம் சார்ந்த பயன்பாட்டில் உள்ளவர்களுக்கு எப்போதும் ஒரு பயம் இருக்கும். அது நம்முடைய தகவல்களை எவரேனும் திருடிவிட்டால் (hacking) என்ன செய்வது என்பதுதான்.

நான் என்ன அவ்வளவு முக்கியமானவனா? என் தகவல்களை வைத்து என்ன செய்து விடமுடியும்? என்று சிலர் கேட்கலாம். தகவல் திருடர்களுக்கு (ஹேக்கர்) நீங்கள் யார் என்பதைவிட உங்களிடமுள்ள தகவலே முக்கியம். அவர்கள் தேடும் தகவல் உங்களிடம் உள்ளதா என்பதுதான் முதலில்.
அவர்களுக்குத் தேவையானது இல்லையென்றால் அவர்கள் உங்களிடமிருந்து விலகி விடுவார்கள். ஆனால், உங்களிடமிருந்து திருடப்பட்ட கடவுச் சொல், வங்கிக் கணக்கு ஆகிய விபரங்களை மாற்றிவிடவோ அல்லது உபயோகிக்க இயலாத வகையிலோ செய்து விடவோ கூடும். இங்குதான் உங்களுக்குப் பிரச்சனை தொடங்குகிறது.

தகவல் திருட்டைத் தடுக்க சில அடிப்படையான வேலைகளை உங்கள் கணினியில் செய்யவேண்டும்.

ஆண்டிவைரஸ் மற்றும் ஃபயர்வால் (Antivirus & Firewall)
கணினியில் நல்ல நிலையில் இயங்கக் கூடிய ஆண்டிவைரஸ் மென்பொருளைப் பயன்படுத்தவும். தினமும் அப்டேட் செய்வது அவசியம். அதே போல ஃபயர்வால் தொகுப்பும் சிறப்பாக இயங்கும் வண்ணம் இருக்கவேண்டும். விண்டோஸ் ஃபயர்வால் இருந்தாலும், அதைவிட சிறந்த வேறு பல உள்ளன. அவற்றைப் பயன்படுத்துவது நன்மை தரும்.

பதிவிறக்கம் மற்றும் இணைப்புகள் (Download & Attachments)
மின்னஞ்சல் விளம்பர இணைப்புகள், இலவச மென்பொருள்கள் மற்றும் பதிவிறக்க இணைப்புகளைக் கிளிக் செய்யும் முன் கவனமாக இருக்கவும். பதிவிறக்கினால் முழுமையான வைரஸ் சோதனைக்கு உட்படுத்தவும். அடுத்தது போலி மின்னஞ்சல்கள் உதாரணமாக கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்து கணக்கு விபரங்களைக் கேட்டு வரும்  மின்னஞ்சல்
களைக் குறிப்பிடலாம். இவற்றில் வரும் இணைப்புகளைக் கிளிக் செய்தால் போலியான தளத்திற்கோ, கணினிக்கு தீங்கிழைக்கும் கோப்புகளோ பதிவிறக்கமாகக் கூடும். எனவே கவனம் தேவை.

கடவுச் சொல் (Password)
ஏற்கனவே நாம் குறிப்பிட்டு வருவதுதான். உங்கள் மின்னஞ்சல், சமூக வலைத்தளக் கணக்குகளில் உள்ள உங்கள் கடவுச்சொல்லை எளிதாக கண்டுபிடிக்கும்படியாக இல்லாமல் மூன்றடுக்குப் பாதுகாப்பாக உருவாக்கவேண்டும். அதாவது எண், எழுத்து மற்றும் புள்ளி, கோடு உள்ளிட்ட சிறப்புக் குறியீடுகள் கொண்டதாக உருவாக்க வேண்டும்.
விளக்கமாக அறிய  10 நிமிடம் போதும் உங்கள் பாஸ்வேர்டைத் திருட..  என்ற எனது முந்தைய பதிவைப் படிக்கவும்.

இணையக் கணக்கிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுதல் 
வங்கிக் கணக்கு, மின்னஞ்சல் கணக்கு, சமூக வலைத்தளக் கணக்கிலிருந்து வெளியேறும்போது அதற்கான கட்டளைகளைக் (Sign Out or Log Out) கொடுத்து வெளியேறவும். அதேபோல வெளியிடங்களில் பயன்படுத்தும் கணினிகளில் குக்கீகள், தற்காலிக இணையக் கோப்புகள் ஆகியவற்றை முழுமையாக நீக்கவும். இதற்கு இணைய உலாவி (பிரௌசர்) திறந்திருக்கும் நிலையில் Ctrl+Shift+Del கீகளை ஒரே நேரத்தில் அழுத்தவும்.  வரும் கிளியர் ஆல் ஹிஸ்டரி விண்டோ (Clear all history) வில் எவ்ரிதிங் (Everything) என்பதற்குக் கீழே உள்ள அனைத்தையும் டிக் செய்து கிளியர் நவ் (Clear Now) என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.

தகவல்களைப் பாதுகாத்தல் (Data Backup)
இவை எல்லாவற்றையும் விட உங்கள் தகவல்களை முறைப்படி எப்போதும் வேறு ஒரு இடத்தில் அதாவது சிடி, ஹார்ட்டிஸ்க் அல்லது வேறொரு கணினியில் பேக்கப் செய்து வைத்துக் கொள்ளவும். இச்செயலை முறைப்படி செய்யக் கூட நல்ல மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றையும் பயன்படுத்தலாம்.
, Related Posts with Thumbnails

லேப்டாப், அல்ட்ராபுக், நெட்புக், டேப்ளட் என்ன வித்தியாசம்


மாநில அரசு லேப்டாப் (மடிக்கணினி) வழங்குவதாக அறிவிக்க, மத்திய அரசோ டேப்ளட் கணினி வழங்குவதாக அறிவிக்கிறது.  கணினி நுட்பம் மனிதனோடு கலந்து இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்ட  சூழலில் பல பெயர்களில் வரும் தொழில் நுட்பங்கள் அனைவரையும் சற்றுக் குழப்பமடைய வைப்பது உண்டு. அப்படிப்பட்ட குழப்பம் லேப்டாப், டேப்ளட், அல்ட்ரா புக், நெட்புக் என்று வரும் கணினிகளைப் பார்க்கையிலும், பெயர்களைக் கேட்கும் போதும் ஒன்றுக்கொன்று என்ன வேறுபாடு என்ற சந்தேகம் ஏற்படும். இவற்றின் பொதுப் பயன்பாடு ஒன்று போல இருப்பினும், பயனரின் தேவை கருதியே இவை உருவாக்கப்படுகின்றன.


மடிக்கணினி (Laptop)
நமக்கு பரிச்சயமான கணினி இதுதான். மடித்து எடுத்துச் செல்லும் வசதியுடன் 2 கிலோ முதல் 3.5 கிலோ அளவிலான எடையும், திரை அளவு 14 அல்லது 15 அங்குல அளவும் இருக்கும். 12 அங்குல அளவிலும் கிடைக்கின்றன. இதன் செயல்பாடு மற்றும் உபயோகம் மேசைக்கணினிக்கு இணையானதாகும்.

நெட்புக் (Net Book)
எடை குறைவாக, 10 அங்குலத் திரை அளவிலும் இருக்கும். சிறிய வகைக் கணினிகளைப் பொறுத்த வரை இணையப் பயன்பாடே பிரதானமாகக் கொள்ளப்படுகிறது.  அத்துடன் வேர்ட், எக்செல், பவர்பாயிண்ட் மென்பொருள்களில் அலுவலகப் பணிகளையும், பிடிஎப் உள்ளிட்ட மின்புத்தகக் கோப்புகளைப் படிக்கவுமே அதிகமாகப் பயன்படுகின்றன. கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்கும் கணினிகளும் இந்த வகையில் வரும். உதாரணமாக குரோம் புக். பெரிய எதிர்பார்ப்போடு வந்து தோல்வியடைந்தது.

அல்ட்ரா புக்  (Ultra Book)
கணினிகளின் அளவைக் குறைப்பது என்பது தொடர்ந்து தொழில்நுட்ப ரீதியாக ஆராயப்பட்டு வரும் ஒரு விஷயமாகும். எடுத்துச் செல்ல எளிதாக இருக்கவேண்டும் அதே நேரத்தில் செயல்பாடும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். அத்தகைய எண்ணத்தில் உருவானவையே அல்ட்ரா புக் கணினிகள். ஒரு அங்குலத்திற்கும் குறைவான தடிமனும், அதிக நேரம் தாக்குப்பிடிக்கும் பேட்டரியும் இக்கணினிகளின் சிறப்பம்சமாகும். ஆனால் இவற்றின் விலை மிக அதிகமாகும்.

இந்த வகைக் கணினிகள் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள மேக்புக் ஏர் கணினிக்கு போட்டியாக இருக்கும் என்று சந்தை வல்லுனர்கள் குறிப்பி
டுகின்றனர். இக்கணினிகளை தயாரிப்பதில் இன்டெல் நிறுவனம் பெரும் பங்காற்ற உள்ளது. அசூஸ் மற்றும் ஏசர் நிறுவனங்கள் இக்கணினிகளைத் தயாரித்து சந்தைப்படுத்துவதில் ஆர்வம் காட்டிவருகின்றன. இதில் டிவிடி டிரைவ் கிடையாது. ஆனால் 4ஜி மற்றும் ஒய்ஃபி இணையத் தொழில்நுட்ப வசதிகள் இருக்கும்.

டேப்ளட்  (Tablet PC)
7 அங்குல அளவில் கைக்கு அடக்கமாக, கைபேசியைப் போல வைத்துக் கொள்ள எளிமையாக இருப்பவைதான் டேப்ளட் கணினிகள். இதில் தொடுதிரை வசதியும், இணையத்துடன் தொடர்பு கொள்ள ஜிபிஆர்எஸ், 3ஜி,  ஒய்ஃபி உள்ளிட்ட வசதிகளும் இருக்கும்.

இது இணையத்தில் உலாவ, ஒளிப்படங்களைப் பார்க்க, வீடியோ காட்சிகளைப் பார்க்க, மின்புத்தகங்களைப் படிக்க, கணினி விளையாட்டுக்களை விளையாட உதவும்.
2500 ரூபாய் விலையில் தொடங்கும் ஆகாஷ், அதற்குப் போட்டியாக வந்திருக்கும் பேன்டெல் (ரூ.3250), ஐரா (ரூ.4000), இன்டெக்ஸ் டேப்ளட்.. என்று இன்னும் வரவிருக்கும் பல டேப்ளட்களின் வருகையும் இவற்றை வாங்க லட்சக்கணக்கானோர் ஆன்லைனில் பதிவு செய்து காத்திருப்பதையும் பார்க்கும்போது செல்போன்களுக்கு அடுத்து மக்களிடையே வேகமாக பிரபலமாகவிருப்பது இவையாகத்தான் இ‌ருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.
. Related Posts with Thumbnails

குழந்தைகளின் ஓவியத் திறமையை வளர்க்க உதவும் இணையதளம்

சிறிய குழந்தைகளுக்கு படம் வரையவும், வண்ணங்களை பிரித்தறிந்து கொள்ளவும் ஓவியப் புத்தகங்கள் வாங்கிக் கொடுப்போம். அத்தகைய பல படங்களை இணையத் திலிருந்தே தரவிறக்கி பிரிண்ட் செய்து பயன்படுத்த உதவும் வகையில் கலரிங் என்ற இணையதளம் உள்ளது.

 இத்தளத்தில் வண்ணம் தீட்ட, எண்களை வரிசையாக இணைத்து படம் வரைதல், ஆன்லைனில் விளையாட சிறிய விளையாட்டுக்கள் என்று குழந்தைகளுக்குப் பயன்படும் பல புதுமைகளைக் கொண்டிருக்கிறது.

வண்ணம் தீட்டும் பிரிவில் கார்ட்டூன் படங்கள், விலங்குகள், இயற்கை காட்சிகள் என பல படங்கள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. உங்கள் வீட்டுக் குழந்தை ஓவியர்களுக்கு நல்ல தீனியாகவும், விடுமுறைக் காலத்தை பயனுள்ளதாக மாற்றவும் உதவும்.

தள முகவரி : http://www.coloring.ws
. Related Posts with Thumbnails

wibiya widget