கணினி தொழில்நுட்பம் 2010

இந்த ஆண்டில் கணினித் துறை பல நிலைகளிலும் வளர்ச்சி பெற்றது. 2009ஆம் ஆண்டின் பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட பாதிப்பு  சற்றே குறைந்தது, தொழில் நுட்பத் துறை வளர்ச்சிக்குக்கு சாதகமாக அமைந்தது.
மைக்ரோசாப்ட், ஆரக்கிள், அடோப் மென்பொருள் நிறுவனங்கள் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மென்பொருள்களை அறிமுகப்படுத்தின. புதிய வியாபார முயற்சிகளையும் மேற்கொண்டன.
கூகுள், பேஸ்புக், டிவிட்டர், யாகூ  ஆகிய இணையதள நிறுவனங்களும் பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தின. அதே நேரத்தில் சில பழைய, பயன்பாடு குறைந்த வசதிகளைத் திரும்பப்பெற்றன.
மைக்ரோசாப்ட் பிங் - யாகூ ஒப்பந்தம், பேஸ்புக் - கூகுள் மோதல், விக்கிலீக்ஸ்  ‌‌வெளியிட்ட அமெரிக்க தூதரகக் ‌கேபிள் தகவல்கள், அதைத் தொடர்ந்து ஜூலி‌யன் அஸெஞ்ச் கைது, சீனாவின் அதி‌வேக சூப்பர் கம்ப்யூட்டர் எனப் பல நிகழ்வு‌கள் முக்கிய செய்திகளாயின. அதன் சிறு தொகுப்பே இப்பட்டியல். இது என் நினைவில் நின்றவை மட்டுமே பட்டியலில் உள்ளன. உங்களுக்கு வேறு ஏதேனும் தகவல் தெரிந்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். அவற்றையும் சேர்த்துக் கொள்கிறேன்.

ஜனவரி
 • கூகுள் நெக்ஸஸ் ஒன் ஆண்ட்ராய்ட் போனை வெளியிட்டது.
 • புகழ் பெற்ற ஸ்டார் ஆபிஸ், ஓப்பன் ஆபிஸ், ஜாவா ஆகிய மென்பொ ருள்களை உருவாக்கிய சன் மைக்ரோ சிஸ்டத்தை ஆரக்கிள் நிறுவனம் கையகப்படுத்தியது.

பிப்ரவரி
 • கூகுள் பஸ் சமூக வலைத்தள சேவையை அறிமுகப்படுத்தியது. இது போதிய வரவேற்பைப் பெறவில்லை.
 • கூகுளின் போட்டியை சமாளிக்க மைக்ரோசாப்ட் - யாகூ நிறுவனங்கள் கூட்டாக இணைந்து செயல்படுவதற்கான உடன்படிக்கையை செய்து கொண்டன. இதன்படி பிங்கின் தேடல் நுட்பத்தை யாகூவும், யாகூவின் விளம்பர பரிவர்த்தனையை மைக்ரோசாப்ட்டும் பயன்படுத்திக்கொள்கின்றன.
மே
 • தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கான 3 ஜி அலைக் கற்றை ஒதுக்கீட்டு ஏலம் நடந்தது. இதன் மூலம் அரசுக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி வரையிலான வருமானம் கிடைத்தது. இந்த ஏலமே 2ஜி அலைக்கற்றை ஊழல் தொகையான 1,76,000 கோடி ரூபாயை மதிப்பிட உதவியது.
 • அதிவேக இணையத்திற்கான முயற்சிகளை ‌மேற்கொண்டிருக்கும் கூகுள் இணைய வழியில் தொலைக்காட்சி ஒளிபரப்பை‌ மேற்கொள்ள தி்ட்டமிட்டுள்ளது. இதற்கென  கூகுள் இண்டெர்நெட் டிவியை துவக்குவதாக அறிவித்தது.
ஜூன்
 • உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் உலக இணை ய மாநாடு 2010 கோவையில்  நடத்தப்பட்டது. அர சின் அதிகாரப்பூர்வ எழுத்துருவாக 16 பிட் யுனிக்கோட் அங்கீகரிக்கப்பட்டது.
 • இதே நிகழ்வில் பனேசியா ட்ரீம்வீவர் நிறுவனத்திற்கு சிறந்த தமிழ் மென்பொருள் தயாரிப்பிற்கான விருதும் வழங்கப்பட்டது. 
ஜூலை
 • இந்திய ரூபாய்க்கு புதிய அடையாளச் சின்னம் ஜூலை 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சின்னம் தமிழ் நாட்டைச் சேர்ந்த உதயகுமாரால் உருவாக்கப் பட்டது.
ஆகஸ்ட்
 • இந்திய ரூபாய்க்கான புதிய  சின்னம் யுனிக்கோட் கன்சார்டியத்தால் அங்கீகரிக்கப்பட்டு எழுத்துருவில் சேர்க்கப்பட்டது.
 • கூகுள் ஆர்ப்பாட்டமாக அறிமுகப்படுத்திய கூகுள் வேவ்  தகவல் பரிமாற்ற மென்பொருளின் கட்டமைப்புத் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது. தட்டச்சு செய்யும்போதே   தேடல் முடிவு களை பட்டிய லிடும் இன்ஸ்டன்ட் சர்ச் வசதியை கூகுள் அறிமுகம் செய்தது.
அக்டோபர்
 • மைக்ரோசாப்ட் கிளவுட் கம்ப்யூட்டிங் முறையிலான ஆன்லைன் ஆபிஸ் தொகுப்பான ஆபிஸ் 365-ஐ அறிமுகம் செய்தது.
 • ஆப்பிள் ஐபோன், கூகுள் ஆண்ட் ராய்ட் போனுக்குப் போட்டியாக மைக்ரோசாப்ட் விண்டோஸ் மொபைல் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய மொபைலை சாம்சங், ஹெச்டிசி நிறுவனங்கள் மூலமாக வெளியிட்டது.
நவம்பர்
 • சீனா உலகின் அதிவேக கணினி தயாங்கி-1ஏ சூப்பர் கம்ப்யூட்டரைத் தயாரித்தது. • செல்போன் எண்ணை மாற்றாமல் சேவை நிறுவனத்தை மாற்றிக் கொள்ளும் மொபைல் நெம்பர் போர்ட்டபிலிட்டி (MNP) சேவை முதன் முறையாக  இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில்  அறிமுகமானது.

 • விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்கத் தூதரகங்களின்  தகவல் பரிமாற்ற கேபிள் ரகசியங்களை வெளியிட்டது.  இது அமெரிக்காவின் உண்மை முகத்தை உலகுக்குக் காட்டியது.
டிசம்பர்
 • அமெரிக்காவின் நெருக்குதலால் பேபால், அமெசான் தளங்கள் விக்கிலீக்சுக்கான சேவையை நிறுத்தின. அதனைத் தொடர்ந்து விக்கி லீக்ஸ் அதிபர் ஜூலியன் அஸெஞ்ச் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய் யப்பட்டார். விக்கிலீக்ஸ் தளத்தை முடக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. பின் னர் அஸெஞ்ச் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். • கூகுளுடனான மோதலின் உச்சகட்டமாக பேஸ்புக் இமெயில் சேவையை வழங்கப்போவதாக அறிவித்தது.

 • கூகுள் எர்த் மூலம் உலகின் மூலை முடுக்கெல்லாம் காட்டிய கூகுள் அடுத்ததாக மனித உடலமைப்பை முப்பரிமாணத்தில் பார்க்க  உதவும் கூகுள் பாடி பிரௌசர் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியது. இது வெப் ஜிஎல் (Web GL) என்ற தொழில் நுட்பத்தில் இயங்குகிறது. இதனைப் பார்க்க கூகுள் குரோம் பீட்டா, பயர்பாக்ஸ் 4 பீட்டா பிரளெசர்க்ளை பரிந்துரைக்கிறது. http://bodybrowser.googlelabs.com/
 • கூகுள் இணைய வழியில் இயங்கும் கிளவுட் கம்ப்யூட்டிங் அடிப்படையிலான குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிஆர்-48   (Chrome OS CR-48 Netbook)  ஐ டிசம்பர் 7ல் அறிமுகம் செய்தது.
 • ஓப்பரா பிரௌசரின் 11ஆம் பதிப்பு வெளியானது.
  http://www.opera.com/browser/download/
Related Posts with Thumbnails

100 MB பைல்களை அனுப்பலாம் எளிதாக

‌ஜிமெயில் அக்கவுண்ட்டில் 25 எம்பி அளவு பைல் மட்டுமே மெயில்  அனுப்பமுடியும். இன்.காம் மூலமாக 50 எம்பி பைலை அனுப்பமுடியும். ஆனால் 100 எம்பி  பைலை அனுப்ப  4 சேர்டு (4 Shared), டெபாசிட் ‌பைல்ஸ் (Deposit files), ரேப்பிட் சேர் (Rapidshare), மீடியா பைர் (Media Fire) ஆகிய சர்வர்களைப் பயன்படுத்துவதை விட நம்பகமான  அடோப் நிறுவனத்தின் புதிய சென்ட் நவ் (Send Now) இணையதளம் மூலமாக இப்போது அனுப்பலாம்.
இதற்கு சென்ட் நவ் இணையதளத்தில் ஒரு இலவசக் கணக்கை துவங்க வேண்டும். பதிவு செய்தவுடன் உங்களுக்கான இன்பாக்ஸ் பகுதி காட்டப்படும். எளிமையாக இருக்கிறது. இதில் இலவசமாக அனுப்புவதற்கு டிரைல் (Trial)  பிரிவில் 500 எம்பி இலவச இடம் தருகிறார்கள். நீங்கள் அனுப்பவேண்டிய பைலை அப்லோட் செய்து பெறவேண்டியவரின் இமெயில் முகவரியையும் கொடுத்துவிட்டால் போதும். அவருடைய மெயிலுக்கு டவுன்லோட் லிங்கை அனுப்பிவைத்துவிடும்.
100 எம்பி அள‌விற்கு உட்பட்ட பைல்களே அனுமதிக்கப்படுகிறது. 7 நாட்கள் மட்டுமே சர்வரில் இருக்கும். அதற்குள்ளாக அதிகபட்சம் 100 முறை டவுன்லோட் செய்து‌ கொள்ளலாம்.
இதுவே நீங்கள் கட்டணத்திட்டத்தில் சேர்ந்தால் 2 ‌ஜிபி அளவு பைலை அனுப்பும் வசதியும், அன்லிமி்டெட் டவுன்லோட்/ ஸ்டோரேஜ் வசதியும் தருகிறது. வைரஸ் ஸ்கேனர், ‌சென்ட் வெரிபிகே‌‌ஷன் ஆகிய வசதிகளும் உள்ளடங்கியுள்ளது.
இணைய முகவரி: https://sendnow.acrobat.com/welcome.html
தற்போது வெளியாகியுள்ள அடோப் ரீடரின் பத்தாவது பதிப்பில் (Adobe Acrobat Reader X) பிடிஎப் பைல்களை ரீடரிலிருந்து நேரடியாக சென்ட் நவ் தளத்திற்கு அப்லோட் செய்யும் வசதி உள்ளது. அத்துடன் மார்க்கர், எடிட்டர் ஆகிய வசதிகளும் சேர்க்கப்பட்டு உள்ளது.‌ Related Posts with Thumbnails

நீங்கள் கணினியில் அதிக நேரம் பணிபுரிபவரா?

கணினியில் அதிக நேரம் பணிபுரிபவர்களுக்கு பல்வேறு விதமான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. நாம் கணினியை வைத்திருக்கும் இடம், உட்காரும் நிலை, கீபோர்டு, மெளஸை தவறாகக் கையாளுதல் ஆகியவையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
தற்போது 100 கோடிக்கும் அதிகமான கணினிகள் பயன்பாட்டில் உள்ளன. எதிர்வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் பன்மடங்கு உயரும். அப்போது கணினி சார்ந்த பாதிப்புகளால் பல்லாயிரம் மக்கள் தாக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
எனவே, காற்றோட்டமான அறையில், தெளிவான, சரியான வெளிச்சத்தில், அளவான ஒளியுடன், ஒன்றரை அடி தூரத்தில் இருக்கும்படியான கணினித் திரையும், பயன்படுத்த எளிதான கீபோர்டு மற்றும் மௌசும் இருக்க வேண்டும்.
கீபோர்ட், மௌஸ் உபயோகிக்கும்போது மணிக்கட்டை வளைக்காமல் நேராக கைகளை  வைத்தும், முதுகுப்பகுதி ஒரே நேர் கோட்டில் இருக்கும்படியாக (படம்)  சாய்வதற்கு ஏற்ற நாற்காலியையும் பயன்படுத்த வேண்டும். அதே போல தொடர்ந்து கணினி முன்பாக அமர்ந்திருக்காமல் அரை மணி நேரத் திற்கு ஒரு முறை எழுந்து சிறிது நடந்து பின் அமர்வதும், கைகளை வளைத்து சிறிது பயிற்சி செய்வதும் நல்லது. அதேபோல அடிக்கடி கண் இமைகளை மூடித்திறப்பதும் கண்களுக்கு நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். Related Posts with Thumbnails

வேதியியல் மாணவர்களுக்கு பயனுள்ள இணையதளம்

வேதியியல் ( Chemistry ) துறை சார்ந்த மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு உதவிடும் வகையில் பீரியடிக் டேபிள் ஆப் எலிமெண்ட்ஸ் (Periodic Table of Elements) என்ற பெயரில் ஐசோடோப்புகளின் வேதிவினை செயல்பாடுகளை விளக்கும் வகையில், அழகிய வண்ணத்தில் குறியீடுகளுடன் கூடிய தெளிவான விளக்கப் படங்கள், தகவல்கள், வீடியோக்களுடன் இந்த இணையதளம் அமைந்துள்ளது. இணையதள முகவரி: http://ptable.com/
. Related Posts with Thumbnails

தமிழில் கல்வித் தகவல்களைத் தரும் இணையதளம்

மாணவர்களின் படிப்பிற்கு தேவையான அனைத்து தகவல்களையும் இணையத்தில் தமிழிலேயே பெற்றிடலாம். அதற்கென்று ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் வினாத்தாள்கள், படக்குறிப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கிடைக்கிறது. இதில் சாதாரண தரம், உயர் தரம் என்று இருவகைக் கல்வி முறைக்கும் தனித்தனியாக பாடங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
கணிதம், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம், வரலாறு, உயிரியல், பௌதீகவியல், நடனம், வணிகம், இராசாயனவியல், புவியியல் போன்ற பாடங்களில் மாதிரித் தேர்வையும் எழுதி தங்களின் திறனை பரிசோதித்து கொள்ளலாம். மேலும் வெளிநாட்டுக் கல்வி, பல்கலைக் கழகங்கள் குறித்த தகவல்கள், கணினித் தொழில் நுட்பம், மென்பொருள், இணையம் தொடர்பான தகவல்கள் எனப் பலவும் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கியுள்ளது. மாணவர்களுக்கு பயனுள்ள தளமாக இது இருந்து வருகிறது.
இதன் இணைய முகவரி: http://www.gatherpage.com/
. Related Posts with Thumbnails

இ-மெயிலைப் பாதுகாப்பது எப்படி?


இன்றைய நாளில் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாக இ-மெயில் மாறியிருக்கிறது. இ-மெயில் சேவையை இலவசமாகப் பல நிறுவனங்கள் தருவதால் ஒருவரே எண்ணற்ற இமெயில் முகவரிகளை உருவாக்கிக் கொள்வது என்பது இன்று சர்வ சாதாரண விஷயம்.
அதே நேரத்தில் இன்று தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி ஒருவருடைய இமெயில் தகவல்களை திருடுவதும் அதிகரித்து வருகிறது. இத்தகைய தாக்குதலிலிருந்து நம்முடைய இமெயில் முகவரியை எப்படிப் பாதுகாப்பது என்பது பற்றி அறிந்து கொள்வோம்.
இமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்டைத் திருட ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்கள் பல்வேறு வகையான வழிமுறைகளைக் கையாளுகின்றனர். அதில் ஒன்று ஸ்பை வேர் என்ற நச்சு நிரல்களை உருவாக்கி இணையம் வழியாக பரப்பியும், போலி அல்லது பொழுது போக்கு இணைய தளங்களில் பதிவு செய்யச் சொல்லி அதன் மூலமாகத் தகவல்களைத் திருடுவது எனப் பல வழிமுறைகளைக் கையாளு கின்றனர்.
இவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள முதலில் செய்ய வேண்டியது இமெயில் முகவரி களைத் தேவையில்லாத தளங் களில் பதிவு செய்வதைத் தவிர்ப்பது அல்லது அதற்கென வேறு ஒரு இமெயில் முகவரியை உருவாக்கிப் பயன்படுத்தலாம்.
நம் அலுவலகம் அல்லது வீட்டில் பயன்படுத்தும் கணினி யில் ஆண்டிவைரஸ், ஆண்டி ஸ்பைவேர், ஆட்வேர் ரிமூவர் ஆகிய மென்பொருள்களை நல்ல நிலையில் இயங்கும்படி அப்டேட் செய்து வைத்துக் கொள்ளவும். வெளி இடங் களில் இமெயிலை ஓப்பன் செய்து பார்ப்பதை தவிர்த்தி டுங்கள்
அதேபோல இமெயிலை அனுப்பும்போதும் கவனமாக இருக்கவேண்டும். பலருக்கும் ஒரே செய்தியை அனுப்ப வேண்டியிருந்தால் BCC என்ற கட்டத்திற்குள் முகவரிகளை உள்ளிட்டு அனுப்பவும். இதனால் பெறுபவர்கள் நாம் அனுப்பிய பிற நண்பர்களுடைய முகவரிகளைப் பார்க்க முடியாத வகையில் செய்திட முடியும்.
பாஸ்வேர்ட் திருட்டைத் தடுக்க ஜிமெயில் மற்றும் யாகூ மெயில் பயன்படுத்துவோருக்கு அந்த நிறுவனங்களே கூடுதல் வசதியாக செல்போன் வழிப் பாதுகாப்பைத் தருகின்றன.
இதனைப் பயன்படுத்த நம்முடைய இமெயில் அக்க வுண்ட்டில் நுழைந்து அக்க வுண்ட் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று செல்போன் எண்ணைப் பதிவு செய்யலாம். பதிவு செய்த வுடன் உடனடியாக நம்முடைய செல்போனுக்கு எஸ்எம்எஸ் ஒன்று அனுப்பப்படும். அதில் கொடுக்கப்படும் பாஸ்வேர்டை தளத்தில் பதிந்து உறுதிப்படுத் தவும். அதன்பிறகு நீங்கள் எப்போது பாஸ்வேர்டை மாற்ற முயன்றாலும் உடனடியாக உங்கள் செல்போனுக்கு இதே போன்ற பாஸ்வேர்ட் ஒன்று அனுப்பப்படும்.
இதன் மூலம் மற்றவர்கள் நமக்குத் தெரியாமல் பாஸ் வேர்டை மாற்ற முயற்சித்தால் கண்டுபிடித்துவிடமுடியும்.
. Related Posts with Thumbnails

wibiya widget