இனி காப்பி பேஸ்ட் செய்வது எளிதாகும்..

விண்டோஸ் கட், காப்பி, பேஸ்ட் வழிமுறையில் கோப்புகளை‌ இடம் மாற்றுவதைவிட வேகமாகவும் பல கூடுதல் பயன்களுடனும்  சிறிய யுட்டிலிட்டி மென்பொருள்கள் கிடைக்கின்றன. சாதாரண காப்பி பேஸ்ட் செய்வது போலல்லாமல் இவற்றில் இடையில் நிறுத்தி வைத்தும், காப்பியாகும்போது ஏற்கனவே அதே கோப்பு இருந்தால்  அதனை ஓவர் ரைட் அல்லது ஸ்கிப் கமாண்ட்கள் கொடுத்தும் தொடர்ந்து காப்பி செய்யமுடியும். சில கோப்புகள் காப்பியாகவில்லையென்றால் அவை எவையெவை என்பதைப் பட்டியலிட்டுக் காட்டும். இச்சிறப்பான வசதிகளுடன் அமைந்த எண்ணற்ற மென்பொருள்கள் இருந்தாலும் அதில் குறிப்பிட்ட சிறந்த 13 மென்பொருள்கள் மட்டும் உங்களுக்காக...
  1. பாஸ்ட் காப்பி ( FastCopy  2.08)
  2. எக்ஸ்ட்ரீம் காப்பி ( ExtremeCopy Pro 1.5.1)
  3. டெர்ரா காப்பி ( TeraCopy 2.12 )
  4. ரிச் காப்பி (RichCopy 4.0.217 )
  5. கில் காப்பி (KillCopy 2.85)
  6. அல்ட்ரா காப்பியர் (Ultracopier 0.2.0.15)
  7. ரிஜி காப்பி ( PerigeeCopy 1.2)
  8. காப்பி ஹேண்ட்லர் ( Copy Handler 1.32.276)
  9. மினி காப்பியர் ( MiniCopier 0.5)
  10. காப்பி விஸ் ( Copywhiz 4.0 Build 3)
  11. சூப்பர் காப்பியர் ( SuperCopier 2.2)
  12. அன்ஸ்டாப்பபிள் காப்பியர் (Roadkil’s Unstoppable Copier 5.2)
  13. கியூ காப்பி ( QCopy 1.0.2)
.
Related Posts with Thumbnails

பேசும் கிரெடிட் கார்டுகள்

40 ஆண்டுகளுக்குப் பிறகு பண அட்டைகளில் குறிப்பிடத்தக்க மாற்றமாக கணக்கு வரவு செலவை அட்டையிலேயே அறிந்து கொள்ளும் வகையில் எல்சிடி திரையுடன் கூடிய நவீன பண அட்டையை மாஸ்டர்கார்டு, விசா  நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த அட்டைகளில் மைக்ரோ டிரான்ஸ்மீட்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன. அட்டையில் 1 முதல் 0 வரையிலான எண்களும் மெனு பட்டன்களும் உள்ளன. நம்முடைய பின் எண்ணை அழுத்தினால் நம் கணக்கு விபரங்களை திரையில் காட்டுவதுடன், ஸ்பீக்கர்கள் மூலமாக சொல்லவும் செய்யும். தற்போது சோதனையில் உள்ள இக்கார்டுகள் அடுத்த மூன்றாண்டுகளில் பரவலாக பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல சிட்டி பேங்க் நிறுவனமும் ஒரு அட்டையை வெளி்யிட்டுள்ளது.ஆனால் அதில் மேற்கூறிய வசதிகள் இல்லை.அதில் இரண்டு பட்டன்கள் மட்டுமே உள்ளன. அதன் மூலம் சலுகை மற்றும் க‌டன் ஆகிய இருபணிகளை மட்டுமே மேற்கொள்ள முடியும்.  


இந்தப் பண அட்டைகளைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம்
ணிக ரீதியாகவும், பணத்தின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டுமே பண அட்டைகள் உருவாக்கப்பட்டன. பணத்தின் மதிப்பு கடனாகவோ அல்லது வங்கி ரொக்கமாகவோ இருக்கும்படியான அட்டைகளே அதிகம்  பயன்பாட்டில் உள்ளன.
கடன் அட்டை  (Credit Card)
1920களில் வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க கடன் அட்டை முறையை உருவாக்கின. ஆனால் 1959ல்தான் வங்கிப் பயன்பாட்டிற்கான கடன் அட்டையான `பாங்க் அமெரி கார்டு' அறிமுகமானது. அதுவே பிறகு `விசா' கார்டு என்றானது. 1960களில் காந்தப் பட்டையில் தகவல் பதியப்பட்ட அட்டைகளை ஐபிஎம் நிறுவனம் உருவாக்கியது. இதில் 70 பைட்டுகள் அளவில் தகவல்களைப் பதிய முடியும். அதற்கடுத்து 1966-ல் `மாஸ்டர் கார்டு' வெளிவந்தது.
கடன் அட்டை என்பது பொருளை வாங்கிய பின் பணத்தை மொத்தமாகவோ தவணை முறையிலோ வட்டியுடன் செலுத்துவதாகும். ஒருவரின் பொருளாதார நிலையைப் பொறுத்து பிளாட்டினம் கார்டு, கோல்டு கார்டு, சில்வர் கார்டு  என்று பல தர வரிசைகளை உருவாக்கி வங்கிகள்  கடன் அட்டையை வழங்குகின்றன. அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட இக்கார்டுகள் பொருளாதார வீழ்ச்சி என்ற சுனாமியால் தாக்குண்டு பெரும்பாலான அமெரிக்கவாசிகளின் தூக்கத்தைக் கெடுத்த கதையும் அரங்கேறியது. கிரெடிட் கார்டுகளுக்கு வட்டி விகிதம் அதிகம், குறிப்பிட்ட காலத்திற்குள் பணம் கட்டத் தவறும் பட்சத்தில் கூடுதல் வட்டி, அபராதம் என்று மிகப் பெரிய தொகையாக மாறும் சூழலும் நிகழ்கிறது. 
பற்று அட்டை (Debit Card)
இது கடன் அட்டை போல இல்லாமல் நம் வங்கி இருப்பில் இருக்கும் பணத்தின் அளவிற்கு உட்பட்டு பொருட்களை வாங்குவது அல்லது கட்டணம் செலுத்துவதற்கு உதவுகிறது.
விசா நிறுவனத்தால் தற்போது விசா டெபிட் அட்டை புதிதாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதைப் பயன்படுத்தி இணையதளம் மற்றும் தொலைபேசி முலமாக கடன் அட்டைகளைப் போலவே பொருட்களை வாங்க முடியும்.
தானியங்கி பண வழங்கி அட்டை (ATM Card)
வங்கியில் சேமிப்புக் கணக்கு துவங்கியுள்ள ஒவ்வொருவருக்கும் இன்று  ஏடிஎம் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கவும், விசா அல்லது மாஸ்டர் நிறுவனச் சேவை இணைந்திருந்தால் பொருட்களை வாங்க உதவும் டெபிட் கார்டாகவும் இவற்றைப் பயன்படுத்த முடியும். Related Posts with Thumbnails

5+1 இலவச வீடியோ கன்வர்ட்டர் மென்பொருள்கள்

வீடியோ ஆடியோக்களை சிடி, டிவிடிக்களிலிருந்து மொபைல்களில் பதியவும், வேறு தரத்திற்கு மாற்றவும் வணிக மென்பொருள்களுக்கு நிகரான வசதிகளுடன் இலவசமாக பல மென்பொருள்கள் வந்துவிட்டன. அதில் குறிப்பிடத்தக்க 5 இலவச வீடியோ/ ஆடியோ கன்வர்சன் மென்பொருள்களு‌ம் ஒரு டிவிடி ரைட்டர் மென்பொருளும் உங்களுக்காக:
1.  ஃபிரி ஸ்டூடியோ (FreeStudio)
      டிவிடி ‌வீடியோ சாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பு. 58 எம்பி அளவுள்ளது. ஐபோன் ஐபேட் களுக்கான வீடியோக்களை கன்வர்ட் செய்யும் வசதி இதன் சிறப்பம்சம்.
இதனை டவுன்லோடு செய்ய: http://www.dvdvideosoft.com/free-dvd-video-software.htm

2.  டானியுசாப்ட் வீடியோ கன்வர்டர் (Daniusoft Video Converter)
     இதுவும் ஐபோன் ஐபேட் வீடியோக்களைக் கன்வர்ட் செய்யும். அத்துடன் AVI, MP4, WMV, MOV, MPEG1, MPEG2, FLV, MP3, WAV, WMA ஆகியவற்றையும் ஆதரிக்கிறது. இதன் அளவு 18 எம்பி.
இதனை டவுன்லோடு செய்ய: http://www.daniusoft.com/video-converter-free.html

3.  எனி வீடியோ கன்வர்டர் (Any Video Converter)
இது தோற்றத்தில் அழகாகவும் அதிகமான வீடியோ பார்மட்களை ஆதரிப்பதாகவும் இருக்கிறது. அத்துடன் வீடியோ பிட்ரேட்களை மாற்றியமைக்கும் வசதியும் உள்ளது.
இதனை டவுன்லோடு செய்ய: http://www.any-video-converter.com/products/for_video_free/

4.  குயிக் மீடியா கன்வர்டர் (Quick Media Converter)
பல்வேறு வீடியோ பார்மட்களை ஆதரிக்கிறது. கலர்புல்லான தோற்றம். வீடியோ பார்மட்களைத் தேர்ந்தெடுக்க ஐகான்களின் பட்டியல். வீடியோவை பிளே செய்து பார்க்கும் வசதி, கர்வர்சன் முடிவதற்கான ‌நேரத்தைக் காட்டுதல் இதன் சிறப்பு. இதன் அளவு 28 எம்பி.
இதனை டவுன்லோடு செய்ய: http://www.cocoonsoftware.com/

5. ஃபார்மேட் பேக்டரி (Format Factory)
ஓப்பன் சோர்ஸில் கிடைக்கும் மிகச்சிறந்த வீடியோ/ ஆடியோ/இமேஜ் கன்வர்டர். ISO கன்வர்ட்டர், ஆடியோ எடிட்டர், ‌வீடியோ கட்டர் எனப் பல வசதிகளும் ஒருங்கிணைந்தது. இதன் அளவு 38 எம்.பி.
இதனை டவுன்லோடு செய்ய: http://www.formatoz.com/index.html
 
வின்எக்ஸ் டிவிடி ஆதர் (WinX DVD Author)

சிறந்த வீடியோ கன்வர்ட்டர் & டிவிடி ரைட்டர் மென்பொருளான இது சென்ற மாதம் வரை கட்டண மென்பொருளாக இருந்தது. தற்போது இலவசமாகியுள்ளது. இம்மென்பொருள் மூலம் குறிப்பிடத்தக்க 10 விதமான வீடியோ பார்மாட்களை டிவிடியாக மாற்ற முடியும்.
AVI to DVD, MP4 to DVD, MKV to DVD, M2TS to DVD, M4V to DVD, FLV to DVD, ASF, MOV, RM, RMVB, H.264, OGG, QT, MPEG to DVD மற்றும்  யூடியூப் (Youtube) போன்ற இணைதள வீடியோக்களையும் கன்‌வர்ட் செய்ய முடியும்.
அத்துடன் விரும்பிய படத்தை பேக்கிரவுண்டாக வைத்து வீடியோ மெனு அமைக்கலாம்,  டால்பி ஆடியோ வசதியை ஆதரிக்கிறது. PAL, NTSC மோட்களுக்கு மாற்றும் வசதியும் உள்ளது.
இதில் உள்ள இரண்டு குறைபாடுகள்

டிவிடியை பிளே செய்யும் போது வீடியோ மெனுவை டிஸ்ப்ளே 5 செகண்ட் அளவிற்கு மேல் குறைக்க முடியாது. அதில் WinX DVD Author 5.6 என்பதும் இணைந்தே தெரியும். (படம் பார்க்க)
இரண்டாவது வீடியோவை ISO பார்மட்டிற்கு மாற்றும் வசதி இதில் இல்லை.
இதனை டவுன்லோடு செய்ய:  http://www.winxdvd.com/dvd-author/
. Related Posts with Thumbnails

மேக் ( MAC ) கணினிக்கான ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்கள்

விண்டோஸ் கணினியைவிட மேக் கணினியை வாங்குவதும் அதற்கான மென்பொருள்களை பயன்படுத்துவதும் பலருக்கும் செலவு பிடிக்கக்கூடியது. விண்டோஸ் விற்பனையில் முன்னணியில் இருந்தாலும் மேக் கணினிக்கென்று தனியாக ரசிகர் பட்டாளம் இருக்கத்தான் செய்கிறது. மேக் சிஸ்டம் வைத்தி்ருப்பவர்கள் வணிக ரீதியான மென்பொருள்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக இலவச ஓப்பன் சோர்ஸ் ‌மென்பொருள்களைப் பயன்படுத்தலாம். எனக்குத் தெரிந்த சில மென்பொருள்களை உங்களுக்கு அறிவதற்குத் தருகிறேன். இதனை ஏற்கனவே பயன்படுத்தி வருபவர்கள் தங்கள் கருத்துக்களை‌ப் பகிர்ந்துகொள்ளுங்கள். புதியவர்களுக்குப் பயன்படுமே..

அடோப் போட்டோ‌‌ஷாப் (Photoshop) (சுமார் ரூ. 35000/‌‌-) மென்பொருளுக்கு மாற்றாக சீசோர் (Seashore)
போட்டோ‌‌‌‌ஷாப் மென்பொருள் போல இல்லாவிட்டாலும் அடிப்படை பயன்பாடுகளுக்கு உகந்தது. ஓப்பன் சோர்ஸ் பிங் மென்பொருளின் நிரல் அமைப்பைத் தழுவி இம்மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

 பேரலல்ஸ் (Parallels), விஎம்வேர் ‌‌‌‌‌ப்யூசன் ( VMware Fusion) (சுமார் ரூ. 4000/‌‌-) ஆகிவற்றிற்கு மாற்றாக விர்ச்சுவல் பாக்ஸ் (VirtualBox)
விண்டோஸ் இயங்குதளத்தில் பணிபுரியும் அனுபவத்தைத் தரக்கூடிய விர்ச்சுவளிசேஷன் மென்பொருள். வணிக மென்பொருளை விட சற்று குறைவான வசதிகள் இருந்தாலும் சிறப்பானது.


டிரான்ஸ்மிட்(Transmit) (சுமார் ரூ. 2000/‌‌-) மென்பொருளுக்கு மாற்றாக சைபர்டக் (Cyberduck)
இது ஒரு ஓப்பன் சோர்ஸ் FTP கிளையண்ட் மென்பொருள். இதனைப் பயன்படுத்தி அப்லோடிங், டவுன்லோடிங் பணிகளை மேற்கொள்ளலாம்.

அடோப் இன்டிசைன் (InDesign) (சுமார் ரூ. 35000/‌‌-)மென்பொருளுக்கு மாற்றாக ஸ்கிரிபஸ் (Scribus)
பக்க வடிவமைப்பிற்கு உதவும் அடோப் இன் டிசைன் மற்றும் பேஜ்மேக்கர்  மென்பொருள்க‌ளுக்கு மாற்றாக ஸ்கிரிபஸ்ஸைப் பயன்படுத்தலாம்.

ஆப்பிள் பேஜஸ்(Pages) (சுமார் ரூ. 2000/‌‌-) மென்பொரு‌ளுக்கு மாற்றாக ஓப்பன் ஆபிஸ் (OpenOffice.)
 ஆப்பிள் பேஜஸ் வேர்ட் பிராசசிங் மென்பொரு‌ளுக்கு மாற்றாக ஓப்பன் ஆபிஸ் ரைட்டரைப் பயன்படுத்தலாம்.

மெய்ன் மெனு (MainMenu) (சுமார் ரூ. 1000/‌‌-)மென்பொருளுக்கு மாற்றாக ஐஸ்கி‌ளீன்  (IceClean)
மேக் சிஸ்டத்தைப் பராமரிக்கும் மென்பொருளான மெய்ன் மெனுவிற்கு மாற்றாக ஐஸ்கிளீன் பயன்படுத்தலாம். தேவையற்ற கோப்புகள், ஐகான்களை நீக்குதல், சிடி/டிவிடி டிரேவை வெளியே தள்ளுதல், சிஸ்டம் ஸ்கிரிப்ட் பிழை நீக்குதல், பராமரித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள உதவும்.

அடோப் இல்லஸ்ட்ரேட்டர் (Adobe Illustrator) , கோரல் டிரா (Corel Draw) (சுமார் ரூ. 32000/‌‌-) மென்பொருள்களுக்கு மாற்றாக இன்க்ஸ்கேப் (Inkscape)
வெக்டர் இமெஜ்கள் வரையவும், விளம்பரத் துறையிலும் பயன்பாட்டில் உள்ள இல்லஸ்ட்ரேட்டர், கோரல்டிரா மென்பொருள்களுக்கு மாற்றாக இன்க்‌ஸ்கேப் மென்பொருளைப் பயன்படுத்தலாம்.


டெக்ஸ்ட் மேட் (TextMate ) (சுமார் ரூ. 3000/‌‌-) மென்பொருளுக்கு மாற்றாக டெக்ஸ்ட் ரேன்ங்லர் (TextWrangler)
டெக்ஸ் மேட் என்ற சிறந்த கோடிங் டெக்ஸ்ட் எடிட்டர் மென்பொருளுக்கு பேர்போன்ஸ் நிறுவனத்தின் டெக்ஸ்ட் ரேன்ங்லர் மென்பொருள் ஒரு சிறந்த மாற்றாகும். எளிமையான விண்டோ அமைப்பில் அமைந்த இம்மென்பொருளைக் கொண்டு  டெக்ஸ்ட் எடிட் செய்வது எளிதாகும். Related Posts with Thumbnails

wibiya widget