ஜிமெயிலுக்கான மின்னஞ்சல் நினைவூட்டி

ஒன்றிற்க்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு புதிய மின்னஞ்சல்கள் வந்தவுடன் நினைவூட்டும் சிறிய யுட்டிலிட்டிதான் Spiffy Gmail notifier இது முற்றிலும் இலவசமானது. இதில் 5 ஜி‌மெயில் கணக்குகளை பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட நேர இடைவெளியில் புதிய மின்னஞ்சல்கள் குறித்த தகவல்கள் ட்ரே ஐகான் பகுதியில் 5 செகண்டுகள் என்ற அளவில் காட்டப்படும். ஒரு எம்பிக்கும் குறைவான இம்மென்பொருளை நிறுவுவது எளிது.


நிறுவியபின் திறக்கும் விண்டோவில் ஆப்சன்ஸ் (Options) மெனு சென்று அக்கவுண்ட்ஸ் (Accounts) என்பதை கிளிக் செய்யவும். அதில் நாம் வைத்துள்ள ஜிமெயில் அக்கவுண்ட்களின் யூசர் நேம். பாஸ்வேர்டை ஒவ்வொன்றாக பதிவு செய்யவும்.
பிறகு கான்பி‌கிரேசன் (Configuration) என்பதை கிளிக் செய்து நமக்குத் தேவையான வகையில் செட்டிங்குகளை மாற்றிக் கொள்ளவும். ‌இந்த யுட்டிலிட்டியில் ஜிமெயில் அப்ளிகேசன் மூலம் பெறப்படும் தனிப்பட்ட டொமைன்களுக்கான மின்னஞ்சல்களையும் பெறமுடியும் என்பது கூடுதல் வசதியாகும்.

இம்மென்பொருளை பதிவிறக்க இங்கு செல்லவும்
http://www.snapfiles.com/get/spiffy.html

மேலும் விபரங்களுக்கு
http://members.multiweb.nl/kevin/spiffy/ Related Posts with Thumbnails

பயனுள்ள பயர்பாக்ஸ் நீட்சி - மார்னிங் காபி

காலையில் பார்க்கும் செய்தித்தாள் தளங்கள், நமது இமெயில் தளங்கள் ஆகியவற்றை ஒரே கிளிக்கில் வரவழைக்க உதவும் பயர்பாக்ஸ் நீட்சி (ஆட்ஆன்) தான் மார்னிங் காபி. இதனைப் பயன்படுத்தி தினசரி பார்க்கும் தளங்கள் மட்டுமல்லாது குறிப்பிட்ட கிழமையில் பார்க்கவேண்டிய தளங்களை அந்தந்த நாளில் பார்க்கும் ‌ டைம்‌டேபிள் வசதியும் இதில் உள்ளது.

பயர்பாக்ஸ் ரீ ஸ்டார்ட் செய்த பிறகு பார்த்தால் அட்ரஸ் பாருக்கு அருகில் காபி கோப்பை போன்ற ஒரு ஐகான் அமர்ந்திருக்கும். அதனை கிளிக் செய்தால் நமக்கான அன்றைய தளங்களை பார்க்கமுடியும். அதன் அருகில் அமைந்துள்ள அம்புக்குறியை அழுத்துவதன் மூலம்  ஒரு மெனு தோன்றும். அதில் அன்‌றைய தளங்களைப் பார்ப்பதற்கான Load My Morning Coffee மற்றும் குறிப்பிட்ட கிழமைக்கான தளங்களை  பார்ப்பதற்கான Add toMy Morning Coffee , புதிய தளங்களை சேர்ப்பதற்கான Configure Morning Coffee ஆகிய மூன்று மெனுக்கள் பட்டியலிடப்பட்டிருக்கும்.
நாம் பட்டியலில் சேர்க்க வேண்டிய தளங்களின் முகவரியை Configure Morning Coffee யை கிளிக் செய்தால் கிழமைகளுக்கான பட்டியலும் அதன் எதிர் பகுதியில் அந்தக் கிழமைக்கான தளங்களை சேர்ப்பதற்கான சாளரம் மற்றும் add என்ற பட்ட‌னும் இருக்கும். குறிப்பிட்ட கிழமையை கிளிக் செய்து பின்னர் பார்க்க வேண்டிய தளத்தின் பெயரை டைப் செய்து ok கொடுக்கவும். பயன்படுத்திப் பாருங்கள். கருத்துக்களை சொல்லுங்கள்.

https://addons.mozilla.org/en-US/firefox/addon/2677/ Related Posts with Thumbnails

wibiya widget