ரேப்பிட்சேரில் தேட, எளிதாக டவுன்லோட் செய்ய

ரேப்பிட்சேர் (Rapidshare) மெகாஅப்லோட் மற்றும் டோரன்ட் வகை தளங்களுக்கான இன்ஸ்ட்ண்ட் தேடல் வசதியை கூகுள் தடைசெய்துள்ளது.  இதனை சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது ரேப்பிட்சேர் தளத்தில் தேடுவதற்கென்று ஒரு தளம் இருந்ததை அறிந்தேன். ரேப்பிட்சேரில் பதியப்படும் சாப்ட்வேர்கள், படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை இதில் தேடிப் பெறலாம். இந்தத் தளத்தில் நமக்கு வேண்டிய தகவல் குறித்த வார்த்தையை மட்டும் டைப் செய்தால் போதும் அந்த வார்த்தையுடன் பதியப்பட்ட கோப்புகளைத் தேடிப் பட்டியலிடும். அதில் நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து டவுன்லோட் லிங்க்கைப் பெறலாம். ரேப்பிட்மேனியாக் (Rapidmaniac) என்ற இத்தளத்தில் ஃபைல் அளவு, போட்டோ, ஆடியோ, வீடியோ,  சாப்ட்வேர், டாக்குமெண்ட் எனப் பல பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துத் தேடும் வசதி உள்ளது.
இத்தளத்தின் முகவரி: http://www.rapidmaniac.com/


ரேப்பிட்சேர் (Rapidshare) போன்ற தளங்களில் டவுன்லோட் செய்யும்போது இலவச பயனர்கள் சிறிது நேரம் காத்திருக்க நேரும் அல்லது பணம் செலுத்தி பிரிமியம் மெம்பராக வேண்டும். அப்பொழுதுதான் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று இணைப்புகளை டவுன்லோட் செய்யும் வசதி, வேகமாக டவுன்லோட் செய்தல் ஆகியவற்றைக் கையாளமுடியும்.
இதற்கு மாற்றாக இது போன்ற தளங்களுக்கு பணம் செலுத்தவும் சேவைக்காகவும் சிறிய அளவில் (சுமார் 6 டாலர்) கட்டணத்தை பல பயனர்களிடம் பெற்று அப்பணத்தில் ஒன்றிரண்டு பிரிமியம் அக்கவுண்ட்டுகளை வாங்கி எல்லோருக்கும் பிரித்துக் கொடுக்கும் வேலையை செய்கிறது ரேப்பிட்8  என்ற இத்தளம்.
இத்தளத்தில்  ரேப்பிட்சேர் மட்டுமல்லாது ஃபைல் சோனிக் (FileSonic(Premium), ஷேரிங் மேட்ரிக்ஸ் (SharingMatrix(Premium), ஈஸி சேர் (Easy-Share, கிகா சேர் (GigaShare(Premium), மெகா சேர் (MegaShares), அப்லோட்.டூ (Uploaded.to), அப்லோடிங்.காம் (Uploading.com), நெட்லோட் (Netload.in(Premium), டெபாசிட் ஃபைல்ஸ் (DepositFiles), டர்போபிட் (Turbobit.net), ஃபைல் பேக்டரி (FileFactory), ஹாட் ஃபைல் (HotFile),  4 சேர்டு (4Shared), மீடியா ஃபயர் (MediaFire) ஆகிய தளங்களின் பிரிமியம் சேவையை இலவசமாகப் பெறமுடியும். அதற்கு நாம் செய்யவேண்டியது டவுன்லோட் லிங்க்கை இத்தளத்தில் உள்ள கட்டத்தில் இட்டு டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
தளத்தின் முகவரி: http://www.rapid8.com/ 
•  Related Posts with Thumbnails

தமிழ்த் தட்டச்சு பழகுவோம்

தமிழ் மொழி இன்றைய கணினிச் சூழலில் தமிழ்க் கணிமை, இணையத் தமிழ் என்று பல பெயர்களுடன் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளோடு சற்றும் சளைக்காமல் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் தமிழ் இணைய தளங்கள் மற்றும் பிளாக்குகளின் எண்ணிக்கையோ பல லட்சங்களைத் தாண்டும்.
ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் இணையதளங்களை பார்ப்பதே அபூர்வம். அதிலும் தமிழைப் படிப்பதென்பது அதை விடக் கடினம். ஒவ்வொரு தளமும் வெவ்வேறு வகை எழுத்துருக்களில் தட்டச்சு செய்யப்பட்டிருக்கும். அந்த எழுத்துருக்களை டவுன்லோட் செய்து படிப்பதற்குள் செய்தியின் மீதான ஆர்வமே போய்விடும். ஆனால் இன்று யுனிக்கோட் எழுத்துருவே பொதுவானது என்ற நிலை உருவான பின் எந்த ஒரு எழுத்துருவையும் பதிவிறக்காமல் படிக்க முடிகிறது. இந்த வளர்ச்சியில் கூகுளின் ஆன் லைன் டிரான்ஸ்லிட்ரேசன் மென் பொருளின் பங்கு குறிப்பிடத்தக்கது. இதில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தமிழில் பெறும் தமிங்கல தட்டச்சு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய தமிழ் இணையப் பயனர்கள் இதனையே அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.
இணையம் தவிர்த்து கணினியில் மட்டும் பயன்படுத்துவதற்கான தமிழ் எழுத்துரு வகைகள் சுமார் 150ஐத் தாண்டும். அவற்றில் அதிகமாக பயன் பாட்டில் உள்ளவை ஒரு சிலதான். அவையும் அச்சுத் துறையினர் பயன்படுத்தும் இன்டோவேர்ட், ஸ்ரீலிபி, டேம், டேப், செந்தமிழ், இளங்கோ, அனு, சாப்ட் வியு, ஜீவா என பத்து பதினைந்து தனியுரிமை வணிக மென்பொருள்களே. இவற்றைத் தவிர்த்து சாதாரண கணினிப் பயனரால் பயன்படுத்தப்படுபவை என்று பார்த்தால் பாமினி, அமுதம், பெரியார், திஸ்கி வகை எழுத்துருக் களைக் குறிப்பிடலாம்.
நம்மில் பலருக்கு ஆங்கிலத் தட்டச்சு பயில உள்ள ஆர்வம் தமிழ் தட்டச்சு பயில்வதில் இல்லை. தமிழுக்கு 247 எழுத்துக்கள் ஆங்கிலத்திற்கு வெறும் 26 எழுத்துக்கள்தான் என்று கூறித் தமிழை கற்பது கடினம் என்ற மாயை பொதுவாக உண்டு. ஆனால் உண்மையில் தமிழ் தட்டச்சில் நாம் கற்கவேண்டிய எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள் 12, உயிர் மெய் எழுத்துக்கள் 18 மற்றும் துணை எழுத்துக்கள், கிரந்த எழுத்துக்களென மொத்தமாக ஐம்பதிற்கும் குறைவான எழுத்துக்களுக்கான விசைகளைக் கற்றாலே போதுமானது. பிற எழுத்துக்கள் மேற்கூறிய எழுத்துக்களின் கூட்டு விசையாகவே அமைகின்றன.
கணினியிலும் இணையத்திலும் தமிழைத் தட்டச்சு செய்ய உதவும் மென்பொருள்கள் பல இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றில் சிறந்த மூன்று இலவச மென்பொருள்கள்:
பதிப்பு-250: பனேசியா ட்ரீம்வீவர் நிறுவனத்தின் திறந்த மூல நிரல் கட்டமைப்பில் உருவானது.  இம்மென்பொருளை பதிவிறக்க: http://pdsoftware.in/pathippu.html
இ-கலப்பை: யுனிக்கோட் எழுத்துருவை தட்டச்சு செய்யப் பயன்படுகிறது. இதனை பதிவிறக்க: http://thamizha.com/ekalappai-tamil99
என்ஹெச்எம் ரைட்டர்: நியு ஹாரிசோன் மீடியாவின் தனியுரிமை மென்பொருள். இதில் யுனிக்கோட் எழுத்துருவுடன் டேம், டேப், ஸ்ரீலிபி, வானவில் வகை எழுத்துருக்களையும் தட்டச்சு செய்ய முடியும். இதனை பதிவிறக்க: http://software.nhm.in/products/writer
* Related Posts with Thumbnails

ஒளியும் ஒலியும்

 நம் கணினி, டிவிடி பிளேயர், செல்போன், ஐபேட் ஆகியவற்றில் எம்பி3 (MP3), டேட் (DAT), விஓபி (VOB), எம்பி4(MP4), 3ஜிபி(3GP), ஏவிஐ(AVI), எம்பெக்-1(MPEG-1), எம்பெக்-2 (MPEG-2) எனப் பல விதமான ஆடியோ மற்றும் வீடியோ ஃபைல்களைப் பயன்படுத்தி வருகிறோம்.
    இத்தனை விதமான பைல்கள் எதற்கு ஏதோ ஒன்றை மட்டும் பயன்படுத்தினால் போதாதா என்று யோசிக்கலாம். அப்படி இருந்தால் நல்லதுதான். ஆனால், உண்மையில் அவை ஒவ் வொன்றும் ஒவ்வொரு விதமான தொழில் நுட்பத்தில் வேறு வேறு பயன்பாடுகளை எதிர்நோக்கி உருவாக்கப்பட்டவை.
நம் வீட்டு திருமண மற்றும் பொது நிகழ்ச்சிகளை பதிவு செய்யும் வீடியோ கேமராக்களில்  பயன்படுத்தப்படுவது டிஜிட்டல் வீடியோ (DV) கேசட்டுகளில் பதியப்படும் படங்கள் ஏவிஐ (AVI) ஃபைல் ஃபார்மேட்டுக்கு இணையானவை ஆகும். ஏவிஐ (AVI) என்பது விண்டோஸின் தயாரிப்பு. இது பெரும்பாலான முன்னணி வீடியோ கேமராக்களில் பயன்படுத்தப்படுவதாகும். இதில் உருவாக்கப்படும் வீடியோ மிகத் துல்லியமானதாகவும் தரமுள்ளதாகவும் இருக்கும்.
இதற்கு அடுத்து எம்பெக்-2 (MPEG-2) இது ஏவிஐ விட சற்றே தரம் குறைவானது. இது டி.வி.டி.(Digital Video Disc)க் களில் பயன்படுத்தப்படுகிறது. எம்பெக்-1 (MPEG-1) என்பது வி.சி.டி.(Video Compact Disc) தரமுள்ளது. இதே தரத்தில் குறைந்த அளவு கொள்ளளவில் அமைந்தவை எம்பெக்-4 (MPEG-4) மற்றும் டிவ்எக்ஸ் (DivX) வீடியோ வகைகளாகும். இவையெல்லாம் கணினி, வி.சி.டி. மற்றும் டி.வி.டி. பிளேயர்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வீடியோ ஃபைல் வகைகளாகும்.
அதற்கு அடுத்து  செல்போன்கள் மற்றும் ஐபேட்களில் 3ஜிபி (3GP) என்ற வகை வீடியோக்கள் அதிகமாக பயன் படுத்தப்படுகின்றன. அத்துடன் எம்பெக்4 (MPEG-4), எம்கேவி (MKV), தரம் குறைக்கப்பட்ட ஏவிஐ(AVI), எம்பெக்-2 (MPEG-2), எம்பெக்-1 (MPEG-1) வகை ஃபைல்களும் பயன்படுத்தப்படுகின்றன. வீடியோ ஃபைல்களைப் பொறுத்தவரை அளவுகளை சுருக்குவது மற்றும் ஃபிரேம் எண்ணிக்கையை குறைப்பது ஆகியவற்றின் மூலமே ஃபைலின் அளவு பொதுவாகக் குறைக்கப்படுகிறது.

வீடியோ அளவை (ரெசல்யூசன்) குறைப்பதன் மூலமாகக் கனிசமான அளவு ஃபைல் அளவை சுருக்கமுடியும்.
சுருக்கப்படும் அளவுகள் இவ்வாறு இருக்கலாம்.      
320x200, 320x240, 640x480, 720x480, 720x576, 1024x768, 1280x720, 1920x1080

அளவுகள் குறித்து மேலும் படிக்க விக்கிபீடியாவின் இந்த லிங்க் உதவும் http://en.wikipedia.org/wiki/Display_resolution

அடுத்ததாக ஃபிரேம்களின் எண்ணிக்கையைக் குறைப்பது. தொடர்ச்சியான காட்சியமைப்புகளைக் கெர்ண்ட ஒளிப்படங்கள் தொடர்ச்சியாக நகர்வதால் ஏற்படுத்தப்படும் சலனத் தோற்றமே ஒரு வீடியோவாகிறது. அத்தகைய ஒவ்வொரு ஒளிப்படமும் ஒரு ஃபிரேம் என அழைக்கப்படுகிறது. ஒரு வினாடியில் நகரும் ஃபிரேம்களின் எண்ணிக்கையை FPS (Frames Per Second) என்று குறிப்பிடுவர்.
 என்பதே ஒரு சராசரி வீடியோவிற்கு 30 ஃபிரேம்கள் பயன்படுத்தப்படுவ்து வழக்கம். திரைப்பட பிலிம்களில் 24 ஃபிரேம்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஐமேக்ஸ் போன்றவற்றில் 48, 60 ஃபிரேம்கள் கூடப் பயன்படுத்தப்படுகின்றன.
மிகக் குறைந்த அளவாக 16 ஃபிரேம்கள் வரை குறைத்தும் பயன்படுத்தப்படுகிறது.

வீடியோ அளவைக் குறைக்க வேறு தரத்திற்கு மாற்ற உதவும் இலவச மென்பொருள்கள் சில:
Format Factory
http://www.formatoz.com/download.html
Any Video Converter
http://www.any-video-converter.com/products/for_video_free/
Hamster Free Video Converter
http://videoconverter.hamstersoft.com/

இணைய தளங்களில் அடோப் ஃபிளாஸ் (FLV) மற்றும் கூகுளின் யூட்யூப்(YouTube)  வகை வீடியோக்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

ஆடியோ பிரிவில் இன்று முன்னணியில் இருப்பது எம்பி3 வடிவம். இது எம்பெக் வகை வீடியோ ஃபைலை உருவாக்கிய மூவிங் பிக்சர்ஸ் எக்ஸ்பர்ட்ஸ் குழுவினால் எம்பெக் வீடியோவில் ஒலியைச் சேர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமாகும்.

எம்பி3இல் செவிப்புலன் உணராத ஒலிகளை நீக்கும் வழிமுறை கையாளப் பட்டிருக்கிறது. இது ஃபைல் அளவைக் குறைப்பதற்கும், அவ்வாறு குறைக்கப் பட்ட பின்னர் கேட்கப்படும் ஒலியில் வேறுபாடின்றியும் இருக்கும்படியாக உருவாக்கப்பட்டது.
ஒரு எம்பி3 கோப்பு 128 கி.பிட்/நொடி (kbps) என்பதை வரையறையாகக் கொண்டது. இது மூல ஆடியோ தரத்தைவிட பதினொன்றில் ஒரு பங்கு அளவாகும். அதாவது 110 எம்.பி. அளவு கொண்ட ஒரு ஆடியோ சி.டி., எம்பி3 வடிவிற்கு மாற்றப்படும்போது 10 எம்.பி. அளவிலான ஃபைலாக உருவாகும். ஒரு எம்பி3 ஃபைலை 32, 64, 96, 256, 320 கி.பிட்/நொடி (kbps) ஆகிய பல அளவுகளிலும் உருவாக்க முடியும். பிட்களின் அளவைப் பொறுத்து தரமும் மாறுபடும்.
அடுத்ததாக விண்டோஸ் கணினி களில் பயன்படுத்தப்படும் வேவ் (WAV) மற்றும் டபுள்யூஎம்ஏ(WMA) ஃபைல்கள், ரியல் பிளேயரின் ஆர்ஏ (RA)மற்றும் ஆர்எம் (RM) வகை ஃபைல்கள், ஏஎம்ஆர்,(AMR) எம்பெக்4, ஏஏசி(AAC) ஆகியவையும் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கும் ஆடியோ ஃபைல் வகைகளாகும். Related Posts with Thumbnails

தேடல் இங்கிருந்தே துவங்கும்...

ஜனவரி 15 : விக்கிப்பீடியாவுக்கு பிறந்த நாள்

எப்போதும் எதையாவது தேடிக் கொண்டிருக்கும் மனித மூளைக்கு அறிவு சார் தேடலில் முன்பெல்லாம் புத்தகங்களே வடிகாலாயிருந்தன. புத்தகங்களைத் தேடுவதும்,  படிப்பதும், படித்ததை பகிர்வதும் ஓர் அலாதியான அனுபவம். ஆனால் இன்றைய நவீன இணைய உல கில் தகவல் தேடல் என்பது மிகச் சுலபமானதாக மாறியிருக்கிறது. கூகுள், யாகூ, பிங் எனத் தேடித்தர இணையதளங்கள் நிறைய உண்டு.
நாம் அறிந்த சச்சின் டெண்டுல்கரைப் பற்றியோ, நாம் அறியாத அண்டார்டிகாவின் பனி மலை, அமேசான் காடுகள் என எதைக் குறித்த தேடலானலும் பெரும்பாலான தேடல் முடிவுகளில் முன்னிலையில் வந்து நின்று தகவல் தரும் தளமாக விக்கிபீடியாவைப் பார்க்க முடியும்.
ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால் 2001, ஜனவரி 15இல் துவக்கப்பட்ட இத்தளம் இன்று உலகம் முழுவதிலுமிருந்து 36 கோடிக் கும் அதிகமான மக்க ளால் படிக்கப்படும் தளமாக உள்ளது.
விக்கிபீடியா கணினி உலகின் கலைக்களஞ்சியம் என்ற அங்கீகாரத்துடன் கடந்த 10 ஆண்டுகளில் 270 மொழிகளில், 1 கோடியே 70 லட்சம் கட்டுரைகளுடன் இன்று  மாபெரும் வளர்ச்சியை பெற்றுள்ளது. இதுவரை வெளிவந்துள்ள என்சைக்ளோபீடியா என்றழைக்கப்படும் கலைக்களஞ்சியத் தொகுப்புகளையெல்லாம் விஞ்சி, அதிகமான தகவல் கட்டுரைகளைத் தாங்கி நிற்கிறது. உலகில் பேசப்படும் பெரும்பாலான மொழிகளில் கட்டுரைகள் கிடைப்பதே இதன் பலம். அகரவரிசை, வார்த்தைத் தேடல், பொருள் வாரியான தேடல் என்று எல்லா வகையிலும் கட்டுரைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
விக்கிபீடியா திட்டம் ஓப்பன் சோர் எனப்படும் சுதந்திர திறமூல வகை சார்ந்த தாகும். அதனால் எவரும் எளிதில் அணுகி தங்களுக்குத் தெரிந்த தகவல்களைக் கொண்டு கட்டுரைகள் எழுதலாம் அல்லது எழுதப்பட்ட கட்டுரைகளில் பிழைகள் இருந்தால் நீக்கலாம் - மேம்படுத்தலாம். இதற்காக விக்கி பீடியாவில் பயனராக பதிவு செய்து கொண்டால் மட்டும் போதும். எவ்விதக் கட்டணமும் கிடையாது. தகவல் தேடுபவர்களும் முழு சுதந்திரத்துடன் தகவல்களைப் பெறலாம்.
ஆனால், இத்தகைய திறந்த மூலத் தன்மை தவறான தகவல்களைப் பதிவதற்கும் காரணமாக உள்ளதால் இதன் நம்பகத்தன்மை குறித்த சந்தேகம் எப்போதும் உண்டு. கடந்த கால அனுபவங்களைக் கொண்டு பார்க்கையில் இத்தளத்தில் அத்தகைய தவறான தகவல்கள் குறுகிய காலத்திலேயே நீக்கப்பட்டு சரிசெய்யப்பட்டிருக்கின்றன என்ற விக்கிபீடியாவின் கருத்தும் கவனிக்கத்தக்கது. இதற்கென விக்கிப்பீடியாவின் அங்கீகாரத்துடன் உலகமெங்குமிருந்து விக்கிகள் (உறுப்பினர்கள் இப்பெயரில்தான் அழைக்கப்படுகிறார்கள்)  பலர் தன்னார்வத்துடன் பங்காற்றி வருகின்றனர்.
விக்கீபீடியா தளத்தை விக்கிமீடியா என்ற அமைப்பு நிர்வகித்து வருகிறது. இதன் துணைத் திட்டங்கள் விக்கி செய்திகள், விக்கி புக்ஸ், விக்சனரி, விக்கி மேற்கோள்கள், விக்கி பல்கலைக்கழகம்,  விக்கி இனங்கள், விக்கி பொது, விக்கி மூலம் ஆகியவையாகும்.
விக்கிபீடியா தளத்தின் தமிழ் பதிப்பில் சுமார் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. சுமார் 1300 பயனர்கள் பதிவு செய்திருந்தாலும், சில நூறு பேரே தொடர்ந்து தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். தமிழில் அதிகக் கட்டுரைகளை உருவாக்க விக்கிபீடியா வகுப்புகள் தமிழகத்தில் பல இடங்களிலும் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. Related Posts with Thumbnails

ஆன்லைனில் ஒரு கணக்குப் புலி

நம்மிடம் உள்ள கால்குலேட்டர்கள் கூட்ட, கழிக்க, பெருக்க, வகுக்க, சதவீதம் காண என நாம் கொடுக்கும் எண்களைக் கொண்டு மட்டுமே கணக்கீடுகளைச் செய்யும்.

ஆனால் குறிப்பிட்ட தூரத்தை கிலோ மீட்டரிலிருந்து சென்டி மீட்டர், மீட்டர், அடி, மைல், கடல் மைல் எனப் பல்வேறு அளவுகளுக்கும் மாற்ற, சென்டி கிரேடில் உள்ள வெப்ப அளவை பாரன் ஹீட் அளவுக்கு மாற்ற, இடத்தின் நீள, அகலத்தை வைத்து பரப்பளவை கணக்கிட, அல்ஜீப்ரா, மெட்ரிக் கணக்கீடுகள், உடல் உயரம், பருமன், கலோரி கணக்கிடுதல், கட்டடக் கட்டுமானத் துறைக்கான கணக்கீடுகள் என 36 வகையான கணக்கீடுகளை இத்தளத்தில் மேற்கொள்ளமுடியும். அத்துடன் சில கணித விளையாட்டுக்களும் இடம்பெற்றுள்ளன. மாணவர்களுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் பயனுள்ளது இத்தளம்.
தள முகவரி: http://easycalculation.com/ Related Posts with Thumbnails

கணினித்துறைக் கணக்குகள்

தொழில்நுட்ப வல்லுநர்களைத் தவிர்த்து சாதாரண கணினிப் பயனர்களுக்காக எழுதப்பட்டது இக்கட்டுரை. தீக்கதிர் நாளிதழின் கணினிக்கதிர்  பகுதியில் வெளி‌வந்தது.
கணினித்துறை வளர்ச்சி என்பது இன்று வேகம் (Speed) மற்றும் கொள்ளளவை (Storage) அதிகரிப்பதையே மையமாகக் கொண்டிருக்கிறது. கம்ப்யூட்டர் ஹார்ட்வேர்கள் வேகத்தை ஹெர்ட்ஸ் (Hertz) அளவிலும், சேமிப்பகங்களின் அளவுகளைக் குறிப்பிடும் போது பைட் (Byte) என்றும் குறிப்பிடுகிறோம். இந்த அலகுகள் எந்த அடிப்படையில்  அளக்கப்படுகின்றன..?
பைட் (Byte)
ஃபைல்கள் மற்றும் சேமிப்பகங்களை அளக்கும்போது இந்த அளவைப் பயன் படுத்துவோம். கிலோ பைட், மெகா பைட், கிகா பைட் மற்றும் டெரா பைட் ஆகியவை தற்போது அதிகமாக புழக்கத்தில் உள்ள அளவுகளின் பெயராகும்.
கம்ப்யூட்டரின் ஒவ்வொரு செயலும் பிட் என்ற சிறிய அலகால் அளக்கப்படுகின்றது. ஒரு பிட் என்பது கணினியின் அடிப்படை செயல்முறையான பைனரியில் ஒன்று (1) அல்லது பூச்சியம் (0)மாகக் கருதப்படும்.  நாம் தகவல்களைப் பதியும் போது அவை ஒன்றுகளாலும் பூச்சியத்தாலும் மட்டுமே நிரப்பப்படுகின்றன.  பைனரி டிஜிட் (Binary Digit) எனும் வார்த்தைகளிலிருந்ததே பிட் (Bit) எனும் வார்த்தை உருவானது. ஒரு பிட் அளவை மட்டும் கொண்டு ஒரு எழுத்தையோ அல்லது குறியீட் டையோ உருவாக்கிவிட முடியாது. ஒன்றுக்கு மேற்பட்ட பிட்டுகள் ஒரு குழு வாக ஒன்று சேரும்போதே அது அர்த்த முள்ள தகவலாக வெளிப்படுகிறது. இவ் வாறு 4 பிட்களின் சேர்க்கையை நிப்பல் (Nibble) என்றும், 8 பிட்டுகள் சேர்ந்தது ஒரு பைட் (Byte) என்றும். 16 பிட்டுகளின் சேர்க்கையை ஒரு வர்ட் (Word) என்றும் கணக்கிடுவர். ஒரு பைட் மூலம் 256 வெவ்வேறான எழுத்துக்களையோ அல்லது குறியீடுகளையோ வெளிப்படுத்தலாம்.
1024 பைட்டுகள் சேர்ந்தது ஒரு கிலோ பைட்டாகும். 1024 கிலோ பைட்டுகள் ஒரு மெகா பைட் (Mega Byte), 1024 மெகா பைட் ஒரு கிகாபைட் (Giga Byte), 1024 கிகா பைட்டுகள் ஒரு டெரா பைட் (Tera Byte),  1024 டெரா பைட் ஒரு பீட்டா பைட் (Peta Byte), 1024 பீட்டா பைட் ஒரு எக்ஸா பைட் (Exa Byte), 1024 எக்ஸா பைட்கள் 1 ஜெட்டா பைட் (Zeta Byte), 1024 ஜெட்டா பைட்கள் 1 யோட்டா பைட்  (Yota Byte) என்றும் கணக்கிடப்படுகிறது.
ஹார்ட் டிஸ்க், பென் டிரைவ், சிடிக்களில் இந்த அளவுகள் மாறுபடும். இவை டெசிமல் (Desimal) என்ற முறையில் 1000 பைட்டுகள் ஒரு கிலோபைட்டாகவும், 1000 கிலோ பைட்டுகள் ஒரு மெகா பைட்டாகவும், 1000 மெகா பைட்டுகள் 1 கிகா பைட்டாகவும் கணக்கிடப்படுகிறது. ஆகவே 100 ஜிபி அளவு ஹார்ட் டிஸ்க்கில் தகவல் பதியும் இடம் 93 ஜிபி என்ற அளவிலேயே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெர்ட்ஸ் (Hertz)
ஒரு நொடியில் நடைபெறும் மின்னி யல் சுழற்சிகளின் எண்ணிக்கையே ஹெர்ட்ஸ் எனப்படும். ஒரு ஹெர்ட்ஸ் அளவு என்பது ஒரு நொடிக்கு ஒரு சுழற்சி நிகழ்வதைக் குறிக்கும். Hertz என்பதை Hz என்று சுருக்கிக் குறிப்பிடுவர். மின்காந்தவியல் குறித்து ஆராய்ச்சி செய்த ஐன்ரிச் ஹெர்ட்ஸ் என்ற ஜெர்மனியரின் பெயரே இந்த அளவிற்கு வைக்கப் பட்டுள்ளது.
10 லட்சம் ஹெர்ட்ஸ் 1 மெகா ஹெர்ட்ஸாகவும்(Mega Hertz), 1000 மெகா ஹெர்ட்ஸ் ஒரு கிகா ஹெர்ட்ஸாகவும் (Giga Hertz), 1000 கிகா ஹெர்ட்ஸ் ஒரு டெரா ஹெர்ட்ஸாகவும்(Tera Hz) கணினி வாய்ப்பாடு வரையறுக்கிறது.
ஒரு பென்டியம் 4 (P IV) கணினியின் இயங்கு திறன் 2.93 கிகா ஹெர்ட்ஸ் (2.93 Ghz) என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே நம்ம ஊரில் தற்போதைய அடிப்படை நிலைக் கணினியாகவும் (Basic Computer) உள்ளது. Related Posts with Thumbnails

போட்டோஷாப் கத்துக்கலாம் வாங்க!

எல்லோருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
 
எல்லோருக்கும ஆசை போட்டோஷாப்  கற்றுக் கொள்ளவேண்டும், அதில் படங்களை வெட்டி ஒட்டி கிராபிக்ஸ் வேலைகள் செய்து ‌பார்க்க வேண்டும் என்று. ஆனால் கற்றுத்தர சரியான ஆள் இல்லையே என்பவர்களுக்காக இந்தப் பதிவு.
போட்டோஷாப் கற்றுத்தரும் டியுட்டர் தளங்கள் இணையத்தில் அநேகம் உண்டு. அவ‌ற்றில் சிறந்தவையாக எனக்குத் தெரிந்ததைத் தந்திருக்கிறேன். படித்துப் பாருங்கள், பிடித்தால் ஓட்டுப் போடுங்கள்.


தமிழ் தளங்கள்
போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்
http://linoj.do.am/publ/82

http://www.computertamil.eu/index.php/photosho.html

நண்பர் வேலன் அவர்களின் பிளாக்கில் போட்டோஷாப் பாடங்கள்

http://tamilpctraining.blogspot.com/


ஆங்கில தளங்கள்
 http://abduzeedo.com/tags/photoshop
You Suck at Photoshop
Tutorial9
PSDTUTS
Good-Tutorials
  Photoshop Lady
  Photoshop Tutorials
  Luxa
Photoshop Contest
PSHero
PSDTop
Photoshop Tutorial
http://www.photoshopessentials.com/ 

போட்டோஷாப் பிரஷ்கள் பெற:
http://findbrushes.com/


.. Related Posts with Thumbnails

wibiya widget