10 நிமிடம் போதும் உங்கள் பாஸ்வேர்டைத் திருட..

ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன.  ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும்   பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் நமக்கு மட்டும் உரியதாக இருக்கவேண்டும். அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாதுகாப்பு கேள்விக்குரியதாகிவிடும்.

நீங்கள் பயன்படுத்தும் எழுத்துகள் எளிமையானதாக இருந்துவிட்டால் ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்களுக்கு கொண்டாட்டம்தான். உங்கள் வங்கிக் கணக்கும், மின்னஞ்சலும் அவர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் சொந்தமாகிவிடும்.

பொதுவாக உலகம் முழுவதுமே பாஸ்வேர்டுகளை/பின் எண்களைப் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களையே (Small Case) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதுவும் ஆறு எழுத்துக்கள் என்ற அளவில் என்று கடந்த டிசம்பர் 2010ல் புளூம்பெர்க் (Bloomberg) நிறுவனம் நடத்திய பாஸ்வேர்டு பயன்பாடு குறித்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
எழுத்துக்களில் abc யும், எண்களில் 123456 ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகில் 50 சதவீதம் பேர் பாஸ்வேர்ட்களாக  பயன்படுத்துகின்றனர் என்றும், இது போன்ற 6 இலக்க பாஸ்வேர்டை ஹேக்கர்கள் கண்டறிய பத்து நிமிடங்கள் போதுமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இதற்கு மாற்றாக ஆங்கிலப் பெரிய எழுத்துக்களுடன் (Upper Case) சிறப்புக் குறியீடுகளைச் சேர்த்துப் பயன்படுத்தினால் அதனைக் கண்டுபிடிக்க அதிகபட்சமாக 44,530 வருடங்கள் பிடிக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.
மேலும் இந்த ஆய்வு பாஸ்வேர்டுகளை எப்படி அமைக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளது.
அதன்படி பாஸ்வேர்டுகளை ஆறு இலக்கமாக வைக்க வேண்டாம் என்றும் அதனை குறைந்தபட்சம் ஒன்பது இலக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
அந்த எழுத்துக்கள் ஆங்கிலப் பெரிய எழுத்தில் இருப்பதும், அதில் எண்களுடன் கலந்திருக்கும்படியும் அமைக்க வேண்டும். அத்துடன் சிறப்புக் குறியீடுகள் (Special Symbols) கலந்து  அமைப்பது மிகவும் நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எத்தகைய பாஸ்வேர்டு அமைத்தால் பாதுகாப்பு?
இதோ இந்தப் பட்டியலைப் பாருங்கள், உங்கள் பாஸ்வேர்ட் எத்தகையது என்பதை முடிவு செய்யுங்கள்.

6 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள்         (Lower Case)         : 10 நிமிடங்கள்
+ பெரிய எழுத்துடன்      (Upper Case)          : 10 மணி நேரம்
+ எண்கள், குறியீடுகள் (Num & Symbols)   : 18 நாட்கள்
7 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள்              (Lower Case)         :   4 மணி நேரம்
+ பெரிய எழுத்துடன்           (Upper Case)          : 23 நாட்கள்
+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols)    : 18 நாட்கள்
8 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள்             (Lower Case)         : 4 நாட்கள்
+ பெரிய எழுத்துடன்          (Upper Case)          : 3 வருடங்கள்
+ எண்கள்,குறியீட்டுடன்  (Num & Symbols)  : 463 வருடங்கள்
9 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள்             (Lower Case)         : 4 மாதங்கள்
+ பெரிய எழுத்துடன்          (Upper Case)          : 178 வருடங்கள்
+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols)   : 44,530 வருடங்கள்
. Related Posts with Thumbnails

10 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

middleclassmadhavi said...

பழைய பாஸ்வேர்டை உடனே மாத்திடறேன்!!

Charles said...

good info... keep it up...

Abarajithan said...

அத்துடன் பயன்படுத்தும் எல்லா கணக்குகளுக்கும் ஒரே பாஸ்வோர்ட் வைத்திராமல், மாஸ்டர் பாஸ்வோர்ட் உடன் அந்தத்த வெப்சைட்-க்கான suffix சேர்த்து தனித்தனி பாஸ்வோர்ட் உருவாக்கலாம் இல்லையா?

eg: Master password: pwd
Google : pwdg
facebook : pwdf
yahoo : pwdy

இப்படி...

அதேபோல், எழுத்துக்கள் போலவே தோற்றமளிக்கும் எண்களை, சொற்களுக்கிடையே சேர்க்கலாம்...

Abarajithan = 484r4j1th4n இப்படி...

0-o
1-i
2-z
3-E
4-A
5-S
6-b,d
8-B
9-g,q

--
அபராஜிதன்...

Philosophy Prabhakaran said...

http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_23.html

கோவை செய்திகள் said...

மிக சிறந்த பதிவு. தவறாக எடுத்துக்கொள்ள கூடது..... இந்த பதிவுகளுக்கான சான்றுகள் எதாவது இருக்கிறதா? இருப்பினும் தங்களின் பதிவின் தரம் சிறப்பாக இருக்கிறது. உங்கள் அனுமதி இன்றி எமது தளத்தில் வெளியிட்டுவிட்டோம். தவறுதான். தாங்கள் விரும்பினால் நீக்கிவிடுகிறோம்! தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்.

கோவை செய்திகள் said...

மிக்க மகிழ்ச்சி. இன்னும் சிறந்த பதிவுகளை தங்களின் வலைப்பூவில் எதிர்பார்க்கிறோம்.

மு.ஜபருல்லாஹ் said...

பலருக்கும் பயன் தரும் அருமையான பதிவு.வாழ்த்துக்கள்!

ந.ர.செ. ராஜ்குமார் said...

தெரிந்தும் அலட்சியமாய் இருப்பது மடத்தனம்தான். இந்த மடையனுக்கு விழிப்புணர்வு தந்ததற்கு நன்றி. என்னுடைய அனைத்து பாஸ்வேர்ட்களையும் மாற்றியாக வேண்டும். அபராஜிதனின் மறுமொழி பயனுள்ள ஒன்று.

தங்கம்பழனி said...

தகவலுக்கு நன்றி..!!

தங்கம்பழனி said...

எனது வலையில்

வெற்றியின் அடிப்படையில் உடல்நலம்

உங்கள் internet speed உடனடியாக தெரிந்துகொள்ள

நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

wibiya widget