அடோப் போட்டோஷாப் (Photoshop) (சுமார் ரூ. 35000/-) மென்பொருளுக்கு மாற்றாக சீசோர் (Seashore)
போட்டோஷாப் மென்பொருள் போல இல்லாவிட்டாலும் அடிப்படை பயன்பாடுகளுக்கு உகந்தது. ஓப்பன் சோர்ஸ் பிங் மென்பொருளின் நிரல் அமைப்பைத் தழுவி இம்மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
பேரலல்ஸ் (Parallels), விஎம்வேர் ப்யூசன் ( VMware Fusion) (சுமார் ரூ. 4000/-) ஆகிவற்றிற்கு மாற்றாக விர்ச்சுவல் பாக்ஸ் (VirtualBox)
விண்டோஸ் இயங்குதளத்தில் பணிபுரியும் அனுபவத்தைத் தரக்கூடிய விர்ச்சுவளிசேஷன் மென்பொருள். வணிக மென்பொருளை விட சற்று குறைவான வசதிகள் இருந்தாலும் சிறப்பானது.
டிரான்ஸ்மிட்(Transmit) (சுமார் ரூ. 2000/-) மென்பொருளுக்கு மாற்றாக சைபர்டக் (Cyberduck)
இது ஒரு ஓப்பன் சோர்ஸ் FTP கிளையண்ட் மென்பொருள். இதனைப் பயன்படுத்தி அப்லோடிங், டவுன்லோடிங் பணிகளை மேற்கொள்ளலாம்.
அடோப் இன்டிசைன் (InDesign) (சுமார் ரூ. 35000/-)மென்பொருளுக்கு மாற்றாக ஸ்கிரிபஸ் (Scribus)
பக்க வடிவமைப்பிற்கு உதவும் அடோப் இன் டிசைன் மற்றும் பேஜ்மேக்கர் மென்பொருள்களுக்கு மாற்றாக ஸ்கிரிபஸ்ஸைப் பயன்படுத்தலாம்.
ஆப்பிள் பேஜஸ்(Pages) (சுமார் ரூ. 2000/-) மென்பொருளுக்கு மாற்றாக ஓப்பன் ஆபிஸ் (OpenOffice.)
ஆப்பிள் பேஜஸ் வேர்ட் பிராசசிங் மென்பொருளுக்கு மாற்றாக ஓப்பன் ஆபிஸ் ரைட்டரைப் பயன்படுத்தலாம்.
மெய்ன் மெனு (MainMenu) (சுமார் ரூ. 1000/-)மென்பொருளுக்கு மாற்றாக ஐஸ்கிளீன் (IceClean)
மேக் சிஸ்டத்தைப் பராமரிக்கும் மென்பொருளான மெய்ன் மெனுவிற்கு மாற்றாக ஐஸ்கிளீன் பயன்படுத்தலாம். தேவையற்ற கோப்புகள், ஐகான்களை நீக்குதல், சிடி/டிவிடி டிரேவை வெளியே தள்ளுதல், சிஸ்டம் ஸ்கிரிப்ட் பிழை நீக்குதல், பராமரித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள உதவும்.
அடோப் இல்லஸ்ட்ரேட்டர் (Adobe Illustrator) , கோரல் டிரா (Corel Draw) (சுமார் ரூ. 32000/-) மென்பொருள்களுக்கு மாற்றாக இன்க்ஸ்கேப் (Inkscape)
வெக்டர் இமெஜ்கள் வரையவும், விளம்பரத் துறையிலும் பயன்பாட்டில் உள்ள இல்லஸ்ட்ரேட்டர், கோரல்டிரா மென்பொருள்களுக்கு மாற்றாக இன்க்ஸ்கேப் மென்பொருளைப் பயன்படுத்தலாம்.
டெக்ஸ்ட் மேட் (TextMate ) (சுமார் ரூ. 3000/-) மென்பொருளுக்கு மாற்றாக டெக்ஸ்ட் ரேன்ங்லர் (TextWrangler)
டெக்ஸ் மேட் என்ற சிறந்த கோடிங் டெக்ஸ்ட் எடிட்டர் மென்பொருளுக்கு பேர்போன்ஸ் நிறுவனத்தின் டெக்ஸ்ட் ரேன்ங்லர் மென்பொருள் ஒரு சிறந்த மாற்றாகும். எளிமையான விண்டோ அமைப்பில் அமைந்த இம்மென்பொருளைக் கொண்டு டெக்ஸ்ட் எடிட் செய்வது எளிதாகும்.

0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:
Post a Comment