ராமேசுவரம் கோயிலில் 76 பேருக்கு வேலைவாய்ப்பு! 12.03.2025க்குள் விண்ணப்பிங்க!
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 76 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12.03.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
தமிழ் புலவர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: தமிழ் பாடத்தில் பி.லிட் அல்லது பி.ஏ அல்லது எம்.லிட் அல்லது எம்.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,500 – 58,600
பிளம்பர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: பிளம்பர் பிரிவில் ஐ.டி.ஐ படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,000 – 56,900
காவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 18
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,900 – 50,400
கருணை இல்லம் காப்பாளர் (பெண்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,900 – 50,400
துப்புரவு பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 27
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 10,000 – 31,500
தூர்வை
காலியிடங்களின் எண்ணிக்கை: 26
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 10,000 – 31,500
கால்நடை பராமரிப்பு (கோசாலை)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 10,000 – 31,500
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://rameswaramtemple.in/ என்ற இணையதளப் பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.
முகவரி:
இணை ஆணையர்/ செயல் அலுவலர்,
அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில்,
இராமேசுவரம் நகர் மற்றும் வட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் - 623526
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.03.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.
https://drive.google.com/file/d/1bNJSKtyD7IZF6VQL8N-ibij_TKpl8ad9/view?usp=sharing
