வாட்ஸ்அப் அப்ளிகேஷனை ஏன் வாங்கியது ஃபேஸ்புக்
on திங்கள், 3 மார்ச், 2014
தொழில்நுட்ப உலகின் சமீபத்திய பரபரப்பாக பேசப்படுவது வாட்ஸ்அப் (whats up) மென்பொருளை ஃபேஸ்புக் 19 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி) வாங்கியது பற்றித்தான்.
இத்துறையில் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஒரு நிறுவனம் வாங்கப்படுவது இதுவே முதல் முறை என்பதுதான் பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் அப்படி என்ன இருக்கிறது? ஃபேஸ்புக் ஏன் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து அதனை வாங்கவேண்டும்? என்ற கேள்விகளுக்கு முன்பாக அந்த மென்பொருளைப் பற்றி நாம் அறிந்து கொள்ளவேண்டும்.
வாட்ஸ் அப் என்பது ஆண்ட்ராய்ட், ஆப்பிள், பிளாக்பெர்ரி, விண்டோஸ், சிம்பியன் ஆகிய இயங்குதள ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப் படக்கூடிய ஒரு அப்ளிகேஷன் புரோகிராமாகும்.
இந்த அப்ளிகேஷன் நிறுவப்பட்ட எந்தவொரு ஸ்மார்ட் போனிலிருந்தும் மற்றொரு வாட்ஸ்அப் நிறுவப்பட்ட போனுக்கு (இணையவசதி இருக்க
வேண்டும்) குறுஞ்செய்திகள், படங்கள், வீடியோக்கள், குரல் பதிவுகள் ஆகிய
வற்றை பரிமாறிக் கொள்வது எளிதானதாகும்.
இதனை உருவாக்கியவர்கள் பிரைன் அக்டன் மற்றும் ஜேன் கோம். பிரைன் அக்டன் யாகூ நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்
றியவர். வாட்ஸ்அப் முதன்முதலில் குறுஞ்செய்திகளுக்கு மாற்றாகவே உருவாக்கப்பட்டது. சாதாரணமாக தங்கள் நண்பர்களுக்குள் செய்தி பரிமாறிக்கொள்ள உருவாக்கப்பட்ட இந்த அப்ளிகேஷன் இன்று எந்த விளம்பரமும் இன்றி ஐந்தே ஆண்டுகளில் 45 கோடிக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படுவது ஆச்சரியப்படத்தக்கதாகும்.
அதற்குக் காரணம், குறுஞ்செய்தி அனுப்புவதில் இதன் எளிமையும் வேகமும்தான்.
ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை விட ஸ்மார்ட் போனில் வாட்ஸ் அப் பயன்படுத்த எளிதானதாக இருக்கிறது. அத்துடன் பகிரப்படும் செய்தி மற்றும் அனுப்புபவரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதாகவும் இந்த அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் யார் வேண்டுமானாலும் போலியான பெயரில் கணக்குத் தொடங்கி செய்திகளை வெளியிட முடியும். ஆனால், வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் அவ்வாறு செய்வது எளிதல்ல. காரணம் உங்கள் தொடர்பில் உள்ள நண்பர்களின் மொபைல் எண்கள் அனைத்தும் உங்கள் ஃபோன்புக்கில் இருக்கும். ஃபேஸ்புக், கூகுள் பிளஸ், டிவிட்டர் போன்றவற்றில் எண்ணற்ற நண்பர்கள் இருந்தாலும் அனைவருடனும் எப்போதும் தொடர்பில் இருக்க முடியாது. ஆனால், வாட்ஸ் அப் அப்ளிகேஷனின் குரூப் வசதி அனைவருடனும் தொடர்பில் இருக்கும் வசதியைத் தருகிறது.
அத்துடன் ஒருவர் வெளியிடும் செய்தியை மற்றொருவர் திருடி வெளியிடு
வது ஃபேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் எளிதில் நடைபெறக் கூடியது. வாட்ஸ் அப் பயன் படுத்துவோருக்கு அத்தகைய பிரச்சினை இல்லை.
ட்விட்டர் தளத்தில், வாட்ஸ் அப் வெளியிட்ட தகவலில், 24 மணி நேரத்தில், 2,700 கோடி செய்திகளும், 32 கோடியே 50 லட்சம் போட்டோக்களும் பரிமாறிக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வாட்ஸ் அப் அப்ளிகேஷனைத் தொடர்ந்து பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இன்று வாட்ஸ்அப் போலவே வேறு சில அப்ளிகேஷன்களும் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை ஸ்கைப் (Skype), வைபர் (Viber), வீசேட் (wechat) ஆகியவையாகும்.
வேகமாக வளர்ந்துவரும் ஸ்மார்ட் போன் சந்தையில் வாட்ஸ் அப் போன்ற ஒரு மென்பொருளை உருவாக்கி வெளியிடுவதொன்றும் ஃபேஸ்புக்கிற்கு பெரிய காரியமல்ல. ஆனால், ஏற்கனவே 45 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் வாட்ஸ் அப்பின் இடத்தை அடைய முடியமா என்பது சந்தேகம்தான்.
தொழிற் போட்டியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வலுவான பல சிறு சிறு நிறுவனங்களை கேட்கும் விலை எத்தனையாயினும் கொடுத்து வாங்குவதென்பது முதலாளித்துவ சூழலில் நாம் பார்க்கக்கூடிய நிகழ்வுதான்.
ஆன்லைன் வீடியோ உரையாடலுக்கு புகழ்பெற்ற ஸ்கைப் மென்பொருள் நிறு
வனத்தை மைக்ரோசாப்ட் 40 ஆயிரம் கோடிக்கு ஏற்கெனவே விலைக்கு வாங்கியிருக்கிறது. அந்த வகையில், ஃபேஸ்புக் இதனை வாங்கியிருக்காவிட்டால் கூகுளோ அல்லது வேறு ஒரு நிறுவனமோ இன்றோ அல்லது இன்னும் சில மாதங்களிலோ இதை விட நல்ல விலைக்கு வாங்கிவிடும் என்பதுகூட மறுக்க முடியாத விஷயம்தான்.
இதில் வேடிக்கை என்னவென்றால் வாட்ஸ் அப் அப்ளிகேஷனை உருவாக்கிய பிரைன் அக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகிய இருவரும் ஒருகாலத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்தால் வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் என்பதுதான்.
வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தவும் அதனைப் பற்றி அறிந்து கொள்ளவும் www.whatsapp.com என்ற இணைய தளத்திற்கு செல்லவும்.
.

அறிந்து கொள்வோம்: கோப்பு சுருக்கமும், ரகசிய குறிமுறையாக்கமும்
on புதன், 11 டிசம்பர், 2013
சிறு சிறு ஃபைல்களை வகை பிரித்து தனித்தனி ஃபோல்டர்களில் பிரித்து வைப்பது தகவல் காப்பக மேலாண்மையில் முக்கியமாகும்.
ஃபைல்களை பொதுவில் வைக்காமல் அதனை சுருக்கியோ (Compression) அல்லது எளிதில் பிறர் அறிந்த கொள்ள முடியாத வகையில் சங்கேத குறிமுறைக்கு (Encrypt) மாற்றிப் பாதுகாப்பதும் தற்காலக் கணினி நுட்பத்தில் முக்கிய நடைமுறையாகும்.
பல கோப்புகளை ஒன்றாக சேர்த்து கட்டி ஒரே கோப்பாக மாற்றுதல் (Archive), பெரிய அளவு கோப்பை சுருக்கி சிறிய அளவாக மாற்றுவது, இவ்வாறு மாற்றப்படும் கோப்புகளை பாஸ்வேர்டு கொடுத்து பாதுகாப்பது எனப் பல வேலைகளையும் செய்து கொள்ள மென்பொருள்கள் உள்ளன. உதாரணமாக நாம் பயன்படுத்தும் வின்ஜிப் மற்றும் வின்ரேர் மென்பொருள்களைக் குறிப்பிடலாம்.
மேற்கண்ட மென்பொருள்களைப் போன்ற அல்லது மேம்பட்ட எண்ணற்ற மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மென்பொருளிலும் ஒவ்வொரு விதமான வசதி மற்றும் சுருக்கும் வழிமுறைகளில் மாற்றம் இருக்கும். ஒரு சில மென்பொருள் கோப்புகளை சுருக்குவதுடன் ரகசிய குறிமுறைக்கு மாற்றிக் கொள்ளும் வசதியையும் சேர்த்தே தருகின்றன.
பல்வேறு சுருக்க வழிமுறைகள்
லெம்பல் சிவ் மார்கோவ் (LZMA/LSMA2) எனப்படும் சங்கிலித் தொடர் போன்ற அமைப்பில் தரவுகளை இழப்பின்றி சுருக்கித் தரும் ஒரு முறையாகும். இது தரவுகளை சுருக்குதல் மற்றும் விரித்தலை ஆதரிக்கிறது .
பர்ரேஸ் வீலர் வழிமுறை (BWT) இம்முறையில் ஒரே வகை எழுத்துக்கள், குறியீடுகள் மீண்டும் வரும் இடங்களில் நீக்கி கோப்பின் அளவை சுருக்கும் ஒரு வழிமுறையாகும். மீண்டும் அக்கோப்பு டிகிரிப்ட் செய்யப்படும்போது நீக்கப்பட்டவை சேர்க்கப்பட்டு கோப்பு முழுமையாகக் காட்டப்படும்.
பிபிஎம் (Prediction by partial matching -PPM) . முந்தைய குறியீடுகளை கணித்து புள்ளி விவர அடிப்படையில் தரவு களை சுருக்கும் ஒரு வழிமுறையாகும்.
டிஃபிலேட் (Deflate) தரவு சுருக்க வழிமுறைகளில் மேம்பட்டதாகவும், சிறந்ததாகவும் உள்ள ஒரு வழிமுறை இதுவாகும். இதில் மேற்கண்ட LZMA மற்றும் PPM ஆகிய வழிமுறைகளும் இணைந்து செயல்படுத்தப்படுகின்றன. இது ஓப்பன் சோர்ஸ் வகை தரவு சுருக்க முறையாகும். எனவே, லினக்ஸ் இயங்குதளப் பயன்பாட்டில் இம்முறை முன்னிலை வகிக்கிறது.
ரகசிய குறியாக்க முறைகள்
தரப்படுத்தப்பட்ட தரவு குறியாக்க நெறிமுறை (Data Encryption Standard - DES) 54 முதல் 64 பிட் அளவுகளுக்குள்ளாக டேட்டாவை குறுக்கு நெடுக்காக மாற்றி குறியாக்கம் செய்வதாகும்.
மேம்படுத்தப்பட்ட குறியாக்கநெறிமுறை (Advanced Encryption Standard). இம்முறை அமெரிக்க நிறுவனங்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் 128, 192 மற்றும் 256பிட் அளவுகளில் டேட்டாவை மாற்றி குறியாக்கம் செய்யப்படுகிறது.
பிளப்ஃபிஸ் (Blowfish) என்ற முறையில் 64 பிட் அளவில் தரவுகளை மாற்றப்படுகின்றன. மேற்கண்ட மூன்று முறைகள்தான் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ள ரகசிய குறியீட்டு முறைகளாகும்.
கோப்பு சுருக்க மென்பொருள்கள்
வின்ஜிப் (WinZip): டிஃபிலேட் முறையில் கோப்புகளை சுருக்கும் இம்மென்பொருள், தரவுகளை இரகசியக் குறிமுறைக்கு மாற்ற AES மற்றும் DES முறைகளை பயன்படுத்துகிறது.
ஜீஜிப் (GZip): இம்மென்பொருள் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் கணினிகளில் பயன்படுத்தப்படுகிறது. டிஃபிலேட் முறையில் கோப்புகளை சுருக்குகிறது. இதில் 7ஜிப், வின்ஜிப், வின்ரேர் உள்ளிட்ட பிற கோப்பு சுருக்கங்களை விரிக்கும் வசதியும் உண்டு.
7ஜிப் (7Zip): ஓப்பன் சோர்ஸ் முறையில் அமைந்த இலவச மென்பொருள் இது. தற்போது பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான கோப்பு சுருக்க வழிமுறை
களையும், இரகசிய குறியீட்டு முறைகளையும் ஆதரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதாகும். தற்போது பிரபலமாக உள்ள விண்டோஸ் கணினிகளுக்கான கோப்பு சுருக்க மென்பொருள் இதுவே எனலாம். ஜீஜிப் போலவே பிற சுருக்க மென்பொருள்களால் உருவாக்கப்பட்ட கோப்பு
களை விரிக்கும் வசதி இதிலும் உண்டு.
வின்ரேர் (Win RAR): 7ஜிப் மென்பொருளைப் போன்றே பல சுருக்க வழிமுறைகளை ஆதரிக்கிறது. இதில் ரகசியக் குறியீட்டு முறையாக AES முறை பயன்படுத்தப்படுகிறது. இது விண்டோஸ் கணினிகளுக்கான தனியுரிமை மென்பொருளாகும். இதனை விலை கொடுத்துப் பெற்றே பயன்படுத்த முடியும்.
விண்டோஸ் மற்றும் மேக் கணினிகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் கோப்பு சுருக்க வடிவம் ஜிப் ஆகும். லினக்ஸ் இயங்குதளத்தைப் பொறுத்தவரை ஜீஜிப் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அதிக அளவு தகவல்களை சுருக்கவும், ரகசியக் குறிமுறைக்கு மாற்றிப் பாதுகாப்பாக வைப்பதற்கும் உதவக்கூடியது வின்ரேர் மற்றும் 7ஜிப் ஆகியவைதான். இதில் 7ஜிப் இலவசமானதும், மிகச்சிறந்த பாதுகாப்பைத் தரக்கூடியதாகவும் உள்ளது.