பின் தங்கிய கங்காருகள்

கிரிக்கெட் உலகில் ஆஸி. என்கிற ஒரே அணியின் 14 வருட ஆதிக்கம் கடந்த ஆஷஸ் தொடருடன் முடிவு பெற்றது. எந்த அணியாலும் வெல்ல முடியாது என இருமாப்புடன் உலகை வலம் வந்த ஆஸி.கிரிகெட் அணியினர் தோல்வி முகத்துடன் தொடர்கள் முடிந்த பிறகும் திரும்பியிருக்கின்றனர். சரியாக இருப்பத்திஐந்து ஆண்டுக்ளுக்கு முன்பு ஆஸி.ஆணியினர் ஜாம்பவான்காளன டென்னில்லில்லி, கிரேக் சேப்பல், ராட் மார்ஷல் போன்றறோர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு இன்று மீண்டும் ஆஸி. அணிக்கு ஏற்பட்டுள்ளது.
ஒரு நாள் போட்டி தொடரில் தொடர்ந்து மூன்று முறை உலகக் கோப்பையை வென்ற ஒரு அணி குறுகிய காலத்திற்குள் அடுக்கி வைக்கப்பட்ட சீட்டு கட்டுகளை போல மளமளவென சரிந்தது. எதனால், ஆஸி அணியால் கடைசியாக விளையாடிய ஐந்து டெஸ்ட் தொடர்களில் இரண்டில் மட்டுமே கோப்பையை கைப்பற்ற முடிந்தது. அதிலும் தனது சொந்த மண்ணில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மண்ணை கவ்வியது. அதேபோல் கடைசியாக விளையாடிய நான்கு ஒருநாள் போட்டி தொடர்களில் ஒன்றை மட்டுமே பெற முடிந்தது. இவற்றை காட்டிலும் மிக மோசமாக உலகக்கோப்பை 20-20 போட்டியில் முதல் சுற்றிலேயே தோல்வியுற்று போட்டியிலிருந்து வெளியேறியது. இரண்டு ஆண்டுகளாக தள்ளாட்டம் போட்டு வந்த ஆஸி அணி கடைசியாக நடைபெற்ற புகழ் பெற்ற அஷஸ் தொடரில் தோல்வியடைந்த கோப்பையை பறிகொடுத்தது. இதன் மூலம் ஐசிசியின் தரப்பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்ட 2003-ம் ஆண்டு முதல் தொடர்ந்து தான் வகித்து வந்த முதலிடத்தை இழந்து நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டது. கிரேக் சேப்பல், டென்னிஸ் லில்லி, ராட் மார்ஷல் ஆகியோர் ஓய்வுக்கு பிறகு சற்று பலவினமான அணியாக கருதப்பட்ட ஆஸி. அணி 1995-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் பலமான மேற்கு இந்திய அணியை மார்க் டெய்லர் தலைமையிலான அணி தோல்வியுற செய்து தனது சகாப்தத்தை ஆரம்பித்தது. அன்றுமுதல் தொடர்ந்து பல தொடர்களில் வெற்றிபெற்று தன்து அணியை முதலிடம் நோக்கி சென்று கொண்டிருக்கையில் மார்க் டெய்லர் தனது ஓய்வினை அறிவித்து அதிர்ச்சியளித்தார். பின்னர் தலைமையேற்ற அனுபவ வீரர் ஸ்டீவ்வாக் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இன்றி தனது அணியை மேலும் மெருகேற்றியதுடன் ஒரு புதிய இளம் வீரர்களை கொண்ட பாண்டிங், கில்கிறிஸ்ட், மெக்ராத், கில்லெஸ்பி போன்ற வீரர்களையும், வார்னே போன்ற அனுபவ வீரர்களையும் ஒருங்கிணைத்து உலகில் மிகச்சிறந்த அணியை உருவாக்கினார்.
அத்தகைய அனுபவமும் திறமையையும் கொண்ட ஆஸி. அணி 1999-ல் நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் போட்டி தொடரை வென்று ஆஸி. சகாப்த்தத்தில் மிகப்பெரிய கீரிடம் தனது தலைமையில் சூட்டிக்கொண்டார். அன்றுமுதல் இக்கோப்பையை அந்நாட்டிலிருந்து மற்ற அணி அணியினர் தனதாக்கி கொள்ள முடியாமல் தத்தலித்தது வருகின்ற சூழ்நிலை ஆஸி. அணி உருவாக்கியது. ஸ்டீவ்வாக் ஒருநாள் போட்டிகளிலிருந்து முதலில் விலகி பின்பு 2004-ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஒய்வு பெற்றார். அச்சூழ்நிலையில் தலைமையேற்ற ரிக்கி பாண்டிங் அஸி..அணியின் வியூகங்களையே மாற்றி அமைத்தார். அதிரடி தாக்குதலை கடைபிடித்தும், எதிரணி வீரர்களை பயமுறுத்தும் பந்துவீச்சளர்கள் மெக்ராத், பிரட்லீ போன்றோரின் உதவியுடன் வெற்றிமேல் வெற்றி பெற்றுன அசைக்க முடியாத அணியாக திகழ்ந்தது. இத்தகைய அணியின் தோல்வி முனகல் தற்போது கேட்டுக் கொண்டிருப்பதின் பின்னணி மர்மம், ஸ்டீவ்வாக், பாண்டிங் தலைமையிலான அணியின் ஐம்பாவான்காளக திகழ்ந்த வார்னே, மெக்ராத், ஜஸ்டின் லாங்கர், டேமன் மார்டின் போன்றோர் கடந்த 2006-07-ம் ஆண்டு ஆஷஸ் தொடருடன் ஒரே நேரத்தில் ஒய்வு பெற்றவுடன் அதன் முகம் தோல்வி நோக்கி செல்ல ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. அதன் பிறகு துணை கேப்டனாகவும், ஆஸி. அணியில் அஸ்தான வீக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி மட்டையாளார் கில்கிறிஸ்ட் சில காலங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். ஆட்டத்தின் போக்கையே மாற்றும் இவ்வீரர்கள் ஓய்வு பெற்றவுடன் சுதரித்து எழுவதற்கு முன்பே, சுழல்பந்து வீச்சாளார் ஸ்குவாட் மெக்ரில் மற்றும் அதிரடி வீரர் மேத்யூ ஹெய்டன் போன்றறோர் ஓய்வை அறிவித்து வெறியேறினர். இவ்வாறு ஒரு அணியின் மொத்த வீரர்களில் பாதிக்கும் மேற்பட்டோர். ஒரே காலகட்த்தில் ஓய்வை அறிவித்தது அவ்வணிக்கு பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளது. இத்தகைய இக்கட்டான நிலையில் அணி தோல்வியை சந்தித்து வரும் நிலையில் அண்ட்ரு சைமண்ட்ஸ் போன்ற வீரர்கள் மைதானத்திற்கு வெளியே ஈடுபடும் ஒழுஙகினமான செயல்களால் அணியிலிருந்து நீக்கப்படுகிற சூழல்வரை அவ்வணியை பின்னோக்கி தள்ளியுள்ளது. மேலும் இத்தகைய தோல்வி ஆஸி.அணி இத்துடன் முடியபோவதில்லை இவை மேற்கொண்டும் தொடரும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கணிக்கிறார்கள். பாண்டிங், பிரிட்லீ, ஸ்வார்ட் கிளார்க், சைமன் காடிச், மைக்கேல் ஹசி, கீப்பர் பிராட் எட்டன் போன்ற வீரர்களும் 30 வயது தாண்டி தனது ஓய்வை அறிவிக்கும் காலத்தைநெருங்கி கொண்டிருக்கிறார்கள். வார்னே ஓய்விற்கு பிறகு நிரந்தரமான சிறந்த சூழல்பந்து விச்சாளரை அவ்வணி இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்பதே அவ்வணியின் முதல் தோல்வியாக அறியப்பட்டுள்ளது. மார்க் வாக், ஸ்டீவ் வாக், பாண்டிங் போன்றோரின் தலைமையிலான ஆஸி.கிரிக்கெட் அணியின் பொன்னான சகாப்தம் அஷஸ் தொடரில் ஏற்பட்ட தோல்வியுடன் முடிந்து விட்டது என்பே உண்மையாகும்.
Related Posts with Thumbnails

0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

wibiya widget