வீடியோ ஆடியோக்களை சிடி, டிவிடிக்களிலிருந்து மொபைல்களில் பதியவும், வேறு தரத்திற்கு மாற்றவும் வணிக மென்பொருள்களுக்கு நிகரான வசதிகளுடன் இலவசமாக பல மென்பொருள்கள் வந்துவிட்டன. அதில் குறிப்பிடத்தக்க 5 இலவச வீடியோ/ ஆடியோ கன்வர்சன் மென்பொருள்களும் ஒரு டிவிடி ரைட்டர் மென்பொருளும் உங்களுக்காக:
1.
ஃபிரி ஸ்டூடியோ (FreeStudio)
டிவிடி வீடியோ சாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பு. 58 எம்பி அளவுள்ளது. ஐபோன் ஐபேட் களுக்கான வீடியோக்களை கன்வர்ட் செய்யும் வசதி இதன் சிறப்பம்சம்
.
இதனை டவுன்லோடு செய்ய:
http://www.dvdvideosoft.com/free-dvd-video-software.htm
2.
டானியுசாப்ட் வீடியோ கன்வர்டர் (Daniusoft Video Converter)
இதுவும் ஐபோன் ஐபேட் வீடியோக்களைக் கன்வர்ட் செய்யும். அத்துடன் AVI, MP4, WMV, MOV, MPEG1, MPEG2, FLV, MP3, WAV, WMA ஆகியவற்றையும் ஆதரிக்கிறது. இதன் அளவு 18 எம்பி.
இதனை டவுன்லோடு செய்ய:
http://www.daniusoft.com/video-converter-free.html
3.
எனி வீடியோ கன்வர்டர் (Any Video Converter)
இது தோற்றத்தில் அழகாகவும் அதிகமான வீடியோ பார்மட்களை ஆதரிப்பதாகவும் இருக்கிறது. அத்துடன் வீடியோ பிட்ரேட்களை மாற்றியமைக்கும் வசதியும் உள்ளது.
இதனை டவுன்லோடு செய்ய:
http://www.any-video-converter.com/products/for_video_free/
4.
குயிக் மீடியா கன்வர்டர் (Quick Media Converter)
பல்வேறு வீடியோ பார்மட்களை ஆதரிக்கிறது. கலர்புல்லான தோற்றம். வீடியோ பார்மட்களைத் தேர்ந்தெடுக்க ஐகான்களின் பட்டியல். வீடியோவை பிளே செய்து பார்க்கும் வசதி, கர்வர்சன் முடிவதற்கான நேரத்தைக் காட்டுதல் இதன் சிறப்பு. இதன் அளவு 28 எம்பி.
இதனை டவுன்லோடு செய்ய:
http://www.cocoonsoftware.com/
5.
ஃபார்மேட் பேக்டரி (Format Factory)
ஓப்பன் சோர்ஸில் கிடைக்கும் மிகச்சிறந்த வீடியோ/ ஆடியோ/இமேஜ் கன்வர்டர். ISO கன்வர்ட்டர், ஆடியோ எடிட்டர், வீடியோ கட்டர் எனப் பல வசதிகளும் ஒருங்கிணைந்தது. இதன் அளவு 38 எம்.பி.
இதனை டவுன்லோடு செய்ய:
http://www.formatoz.com/index.html
வின்எக்ஸ் டிவிடி ஆதர் (WinX DVD Author)
சிறந்த வீடியோ கன்வர்ட்டர் & டிவிடி ரைட்டர் மென்பொருளான இது சென்ற மாதம் வரை கட்டண மென்பொருளாக இருந்தது. தற்போது இலவசமாகியுள்ளது. இம்மென்பொருள் மூலம் குறிப்பிடத்தக்க 10 விதமான வீடியோ பார்மாட்களை டிவிடியாக மாற்ற முடியும்.
AVI to DVD, MP4 to DVD, MKV to DVD, M2TS to DVD, M4V to DVD, FLV to DVD, ASF, MOV, RM, RMVB, H.264, OGG, QT, MPEG to DVD மற்றும் யூடியூப் (Youtube) போன்ற இணைதள வீடியோக்களையும் கன்வர்ட் செய்ய முடியும்.
அத்துடன் விரும்பிய படத்தை பேக்கிரவுண்டாக வைத்து வீடியோ மெனு அமைக்கலாம், டால்பி ஆடியோ வசதியை ஆதரிக்கிறது. PAL, NTSC மோட்களுக்கு மாற்றும் வசதியும் உள்ளது.
இதில் உள்ள இரண்டு குறைபாடுகள்
டிவிடியை பிளே செய்யும் போது வீடியோ மெனுவை டிஸ்ப்ளே 5 செகண்ட் அளவிற்கு மேல் குறைக்க முடியாது. அதில் WinX DVD Author 5.6 என்பதும் இணைந்தே தெரியும். (படம் பார்க்க)
இரண்டாவது வீடியோவை ISO பார்மட்டிற்கு மாற்றும் வசதி இதில் இல்லை.
இதனை டவுன்லோடு செய்ய:
http://www.winxdvd.com/dvd-author/
.