புகைப்படங்களுக்கு மெருகூட்ட, இணையதளப் பக்கங்களை வடிவமைக்க என்று பல வேலைகளுக்கும் பேருதவியாக இருப்பது அடோப் போட்டோஷாப் (Adobe Photoshop)மென்பொருளாகும்.
1988ஆம் ஆண்டில் அடோப் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இது பல மேம்படுத்தல்களைப் பெற்று இன்று சிறப்பான இடத்தை அடைந்துள்ளது.
இதேபோன்ற பயன்பாட்டுடன் பல நிறுவனங்களும் மென்பொருள்களை வெளியிட்டுள்ளன. செரீப் போட்டோபிளஸ் (Serif Photoplus), கோரல் போட்டோ பெய்ண்ட் (Corel Photo Paint), ஓப்பன் சோர்ஸ் கிம்ப் (Gimp) ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவையாகும்.
புகைப்படம் சார்ந்த பணிகளுக்கென்று பயன்படுத்த எளிதாக பிக்காசா (Picasa), இர்பான் வியூ (Irfan View), ஏசிடிசி (Acdcee) ஆகிய மென்பொருள்கள் கிடைக்கின்றன.
கறுப்பு - வெள்ளை, கிரேஸ்கேல், கூடுதல் வண்ணம் சேர்த்தல், பிரேம்கள் இணைத்தல், சிலைட்ஷோ எனப்படும் புகைப்படங்களை வீடியோவாக மாற்றும் வசதி ஆகிய பல சிறு சிறு வேலைகளை இம்மென்பொருள்களைக் கொண்டே எளிமையாக எவரும் செய்யலாம்.
இதற்கென இம்மென்பொருள்களில் முன்பே செட் செய்யப்பட்ட டெம்ப்ளேட் (Template) வசதிகள் உதவுகின்றன.
ஆனால் போட்டோஷாப், கிம்ப் மென்பொருள்களில் பணிபுரிய கூடுதலான திறமையும், மென்பொருள் குறித்த முழுமையான அறிவும் தேவை.
போட்டோஷாப் புதிதாகக் கற்றுக் கொள்பவர்களுக்கென தமிழில் பல புத்த
கங்கள் கிடைக்கின்றன. இணையத்திலும் வீடியோக்களுடன் சொல்லிக் கொடுக்கக்கூடிய டியூட்டர் தளங்கள் இருக்கின்றன. ஓய்வு நேரத்தில் இவற்றைப் பயன்படுத்தி எவரும் கற்றுக் கொள்ள முடியும்.
போட்டோஷாப் மென்பொருளில் டூல்களை முழுமையாக அறிந்து கொள்ள http://simplephotoshop.com/ என்ற இணையதளம் உதவும்.
போட்டோஷாப் மென்பொருளைக் கற்றுக் கொள்ள உதவும் தளங்கள் சில:
www.photoshopintamil.blogspot.in
www.tamilpctraining.blogspot.in
www.photoshopcafe.com
www.metaeffect.com
www.deaddreamer.com
www.planetphotoshop.com
www.photoshoptechniques.com
போட்டோஷாப் அளவிற்கு இல்லாவிட்டாலும் முக்கியமான அனைத்து வேலைகளையும் செய்ய உதவும் மாற்று மென்பொருள் கிம்ப். இது ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் அமைந்த இலவச மென்பொருளாகும்.
விண்டோஸ், லினக்ஸ் இயங்குதளங்களில் பணிபுரியக்கூடியது. போட்டோஷாப் மென்பொருளை விலை கொடுத்து வாங்க விரும்பாதவர்கள் கிம்ப் பயன்படுத்தலாம். தொடர்ந்து மேம்படுத்தல்கள் நடைபெறுவதால் விரைவில் போட்டோஷாப்பிற்கு இணையாக மாறும் என்று எதிர்பார்க்கப்
படுகிறது. கிம்ப் டவுன்லோட் செய்ய: www.gimp.org
கிம்ப் மென்பொருளை கணினியில் எப்படி பதிவது என்பதை அறிந்து கொள்ள
www.gimp.suthanthira.menporul.com
கிம்ப் கற்றுக் கொள்ள:
ww.techtamil.com/category/tutorials/gimp-tutorial/
gimp-tutorials.net
www.gimp-tutorials.com/
www.tutorialized.com/tutorials/Gimp/1
,
