பொங்கல் - உழவும் மரபும் கலைப் போட்டிகள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு - செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில்

பொங்கல் - உழவும் மரபும்
கலைப் போட்டிகள் அறிவிப்பு



1. கோலப் போட்டிகள்:

கருப்பொருள்: பொங்கல் பண்டிகை மற்றும் தமிழர்  மரபுகளைக்   காட்சிப்படுத்தும்  கோலங்கள். 

2.  ஓவியப் போட்டிகள்(Drawing):

கருப்பொருள்: உழவர் பொங்கல்  திருநாள்  பற்றிய ஓவியங்கள்

வகைகள்  - (பெயிண்டிங், பென்சில், ஸ்கெட்ச், க்ரேயன்ஸ்).

3. புகைப்படப் போட்டி (Photography):

கருப்பொருள்:  ஜல்லிக்கட்டு மற்றும் பொங்கல் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகள் பற்றிய  காட்சிகள்,  பாரம்பரிய உடைகள், பொங்கல் நாட்களின் போது நடக்கும் நிகழ்வுகள், கால்நடைகள் அலங்காரம் போன்றவற்றைப் புகைப்படமாக எடுத்து அனுப்ப வேண்டும்.

4. Reels போட்டிகள்: ஒரு நிமிடத்திற்குள் ( within 1 min)

கருப்பொருள்:  நாட்டுப்புறக் கதைகள் / நாட்டுப்புறப் பாடல்கள் / சிலம்பாட்டம் / கரகாட்டம் / ஏறுதழுவுதல் / ஜல்லிக்கட்டு காளை மாடுகளைத் தயார்படுத்துதல்.

5. பாரம்பரிய உடைப் போட்டிகள்:

 1 வயது  முதல் 13 வயது வரை மட்டுமே.

6. மண்பானை அலங்கரித்தல் போட்டி:

7. சுயமிப்  போட்டிகள்(Selfie):

 கருப்பொருள்: பொங்கல் பானையுடன்  ஒரு  செஃல்பி / ஜல்லிக்கட்டு காளையுடன் ஒரு செஃல்பி / பொங்கல் நிகழ்ச்சிகள் உடன் செஃல்பி எடுத்து அனுப்பவும்.

 8. ஆவணப்படம்(Documentary):

கருப்பொருள்: தமிழ்நாடு பொங்கல் பண்டிகையை எவ்வாறு சிறப்பாகக் கொண்டாடுகிறது / ஜல்லிக்கட்டு விளையாட்டு /  ஜல்லிக்கட்டு காளை குறித்த பதிவுகள்.

போட்டிகளில் அனைவரும் பங்கேற்று  பொங்கலை கொண்டாடி  மகிழலாம்.
படைப்புகள் வேறு எவராலோ, வேறு எங்கும் இதற்கு முன்னர் பதிவிட்டதாக இருத்தல் கூடாது. உங்கள் சுயமான படைப்பாக இருக்க வேண்டும்.

போட்டியாளர்கள் தங்கள் படைப்புகளை 20 - 01- 2025க்குள் அனுப்பி வைக்கவும்.

கீழ்க்கண்ட கூகுள் ஃபார்மில் பூர்த்தி செய்து படைப்புகளை அனுப்பவேண்டும். https://docs.google.com/forms/d/1YVZ1hek_3irPkSZtCpP5H2_hGZJaJRcqinXK2yrvYdI/viewform?edit_requested=true போட்டியாளர்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப முடியவில்லை என்றால் (tndiprmhpongal2025@gmail.com) மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவும்.

Related Posts with Thumbnails

0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

wibiya widget