இந்திய ரயில்வேயின் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு! 32438 பணியிடங்கள்!

இந்திய ரயில்வேயின் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025

32438 பணியிடங்கள்! 

10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!

RRB Recruitment 2025 Vacancy 32438: 

இந்தியாவிலேயே முதன்முறையாக மிகப்பெரிய மாபெரும் வேலைவாய்ப்பாக இந்திய ரயில்வேயில் 32,438 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஆர்வமும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

10ஆம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.  மேலும் இப்பணிக்கு ஜனவரி 23ஆம் தேதி முதல் பிப்ரவரி 22ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 32,438

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.தொடர்புடைய வர்த்தகத்தில் ஐடிஐ அல்லது டிப்ளமோ சான்றிதழ் கூடுதல் நன்மையாகும்.

வயது வரம்பு:

  • Minimum Age: 18 years.
  •  Maximum Age: 33 years.
  • Age Relaxation:
    • SC/ST: 5 years
    • OBC: 3 years
    • PWD: 10 years

ஊதியம்:

  • வேலை செய்யும் இடம் இந்தியா முழுவதும் பரவியுள்ளது, மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சம்பளம் மாதத்திற்கு ₹18,000 ஆகும்.

தேர்வு செய்யப்படும் முறை:

 Computer Based Test (CBT) மூலம் தேர்வு

 விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தினை பெற்று டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து Online மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்
  • உங்களை நீங்களே பதிவு செய்யுங்கள்
  • “New Registration” இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • பெயர், மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் போன்ற உங்கள் அடிப்படை விவரங்களை உள்ளிடவும்.
  • விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
  • உங்கள் பதிவுச் சான்றுகளுடன் உள்நுழையவும்.
  • தனிப்பட்ட, கல்வி மற்றும் பிற தேவையான விவரங்களை நிரப்பவும்.
  • ஆவணங்களைப் பதிவேற்றவும்.
  • உங்கள் புகைப்படம், கையொப்பம் மற்றும் கல்விச் சான்றிதழ்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பதிவேற்றவும்.
  • கோப்பு அளவு மற்றும் வடிவம் குறிப்பிட்ட தேவைகளுக்கு பொருந்துவதை உறுதிசெய்யவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்துங்கள்.
  • நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது UPI மூலம் பணம் செலுத்துங்கள்.
  • உறுதிப்படுத்தலைச் சமர்ப்பித்து பதிவிறக்கவும்.
  • ஏதேனும் பிழைகள் உள்ளதா என உங்கள் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்யவும்.
  • விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்து, எதிர்கால குறிப்புக்காக உறுதிப்படுத்தல் ரசீதைப் பதிவிறக்கவும்.

விண்ணப்பிக்க தொடக்க நாள்                             : January 23, 2025

விண்ணப்பிக்க கடைசி தேதி (Apply Last Date)  : February 22, 2025

அறிவிப்வைப் பார்க்க (RRB notification 2025):
https://tamilnewszone.in/wp-content/uploads/2025/01/rrb-notification-2025.html

அதிகார்ப்பூர்வ இணையதளம் (Official Website)
https://indianrailways.gov.in/railwayboard/view_section.jsp?lang=0&id=0,7,1281

மேலும் விபரங்களுக்கு:  Click Here
https://tamilnewszone.in/

Related Posts with Thumbnails

பொங்கல் - உழவும் மரபும் கலைப் போட்டிகள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு - செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில்

பொங்கல் - உழவும் மரபும்
கலைப் போட்டிகள் அறிவிப்பு



1. கோலப் போட்டிகள்:

கருப்பொருள்: பொங்கல் பண்டிகை மற்றும் தமிழர்  மரபுகளைக்   காட்சிப்படுத்தும்  கோலங்கள். 

2.  ஓவியப் போட்டிகள்(Drawing):

கருப்பொருள்: உழவர் பொங்கல்  திருநாள்  பற்றிய ஓவியங்கள்

வகைகள்  - (பெயிண்டிங், பென்சில், ஸ்கெட்ச், க்ரேயன்ஸ்).

3. புகைப்படப் போட்டி (Photography):

கருப்பொருள்:  ஜல்லிக்கட்டு மற்றும் பொங்கல் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகள் பற்றிய  காட்சிகள்,  பாரம்பரிய உடைகள், பொங்கல் நாட்களின் போது நடக்கும் நிகழ்வுகள், கால்நடைகள் அலங்காரம் போன்றவற்றைப் புகைப்படமாக எடுத்து அனுப்ப வேண்டும்.

4. Reels போட்டிகள்: ஒரு நிமிடத்திற்குள் ( within 1 min)

கருப்பொருள்:  நாட்டுப்புறக் கதைகள் / நாட்டுப்புறப் பாடல்கள் / சிலம்பாட்டம் / கரகாட்டம் / ஏறுதழுவுதல் / ஜல்லிக்கட்டு காளை மாடுகளைத் தயார்படுத்துதல்.

5. பாரம்பரிய உடைப் போட்டிகள்:

 1 வயது  முதல் 13 வயது வரை மட்டுமே.

6. மண்பானை அலங்கரித்தல் போட்டி:

7. சுயமிப்  போட்டிகள்(Selfie):

 கருப்பொருள்: பொங்கல் பானையுடன்  ஒரு  செஃல்பி / ஜல்லிக்கட்டு காளையுடன் ஒரு செஃல்பி / பொங்கல் நிகழ்ச்சிகள் உடன் செஃல்பி எடுத்து அனுப்பவும்.

 8. ஆவணப்படம்(Documentary):

கருப்பொருள்: தமிழ்நாடு பொங்கல் பண்டிகையை எவ்வாறு சிறப்பாகக் கொண்டாடுகிறது / ஜல்லிக்கட்டு விளையாட்டு /  ஜல்லிக்கட்டு காளை குறித்த பதிவுகள்.

போட்டிகளில் அனைவரும் பங்கேற்று  பொங்கலை கொண்டாடி  மகிழலாம்.
படைப்புகள் வேறு எவராலோ, வேறு எங்கும் இதற்கு முன்னர் பதிவிட்டதாக இருத்தல் கூடாது. உங்கள் சுயமான படைப்பாக இருக்க வேண்டும்.

போட்டியாளர்கள் தங்கள் படைப்புகளை 20 - 01- 2025க்குள் அனுப்பி வைக்கவும்.

கீழ்க்கண்ட கூகுள் ஃபார்மில் பூர்த்தி செய்து படைப்புகளை அனுப்பவேண்டும். https://docs.google.com/forms/d/1YVZ1hek_3irPkSZtCpP5H2_hGZJaJRcqinXK2yrvYdI/viewform?edit_requested=true போட்டியாளர்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப முடியவில்லை என்றால் (tndiprmhpongal2025@gmail.com) மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவும்.

Related Posts with Thumbnails

வெப்ப அதிகரிப்பிற்கும், மழைப் பொழிவிற்கும் காரணம் சின்னப் பையனா? சின்னப் பெண்ணா?

பருவநிலை மாறுபாடுகளைக் பற்றிய கணிப்பு என்பது கடந்த இரண்டு மூன்று நூற்றாண்டு காலத்தில் பதிவான வெப்பம், மழை, குளிர், புயல் போன்ற இயற்கை நிகழ்வுகளின் தரவுகளை அலசி ஆராய்ந்து தீர்வுகளை சொல்லும் அறிவியல் முறையாகும். தீக்கதிர் அறிவியல் கதிரில் பேராசிரியர் ராஜூ எழுதிய கட்டுரை ஒன்று வெளிவந்திருந்தது. அதைப் படித்தபிறகு தற்போதைய பருவநிலை மாறுபாட்டு நிகழ்வுகள் குறித்த கணிப்பின் உண்மை வெளிப்படுகிறது.

உலகளவில் 1850ஆம் ஆண்டிலிருந்து பதியப்பட்ட வெப்பத்தை ஒப்பிட்டு, சென்ற ஆண்டு(2023) அதிக வெப்பமான ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆண்டின் சராசரி வெப்பம் 18ஆம் நூற்றாண்டு வெப்பத்தைவிட 1.4டிகிரி செல்சியசும் 19ஆம் நூற்றாண்டைவிட 1.18 டிகிரி அதிகமாகவும் இருந்ததாம். இது ஒரு ஆண்டில் மட்டும் காணப்பட்டதல்ல. 2014-2023 ஆண்டுகளே அதிக வெப்பமான 10 ஆண்டுகளாகும். இந்த அதிக வெப்பமானது *‘எல் நினோ’(El Niño)* எனப்படும் நிகழ்வினால் இன்னும் அதிகமாகியது. ‘சின்னப் பையன்’ என்று பொருள்படும் இந்நிகழ்வு கடல் வெப்பம், வளிமண்டல அழுத்தம் இரண்டின் கூட்டுக் கலவையாகும்.

இதற்கு எதிர்மறையாக *‘லா நினா’ (La Niña)* எனப்படும் (சின்னப் பெண்) குளிர் நிகழ்வும் நடைபெறும்.  புவிவெப்பம் அதிகமாவதற்கு இந்த நிகழ்வுகள் காரணமல்ல; ஆனால் இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு நடுப்பகுதி வரை எல் நினோ தொடர்ந்து நீடித்ததனால், இந்திய தீபகற்ப பகுதியில் பருவ மழை பலவீனமாகவும், வெப்பம் அதிகரித்தும் காணப்பட்டது. ஜூன் மாத மழையளவு நீண்ட கால சராசரியை விட 20 விழுக்காடு குறைவாக இருந்தது. இதுவும் அதி வெப்பத்திற்கு ஒரு காரணம். 

இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் எல் நினோ, ஜூன் மாதத்தில் லா நினாவாக மாறும் என்று பருவநிலை அறிவியலாளர்கள் கணித்திருந்தனர். அந்தக் கணிப்பு சரியாகவே அமைந்துள்ளது. தற்போதைய மழைப் பொழிவிற்கும், குளிர்ந்த வானிலைக்கும் லா நினா எனப்படும் சின்னப்பெண்தான் காரணமாக இருக்கக்கூடும் என்பதைக் கண்கூடாகக் காண்கிறோம்.

Related Posts with Thumbnails

wibiya widget