'பாஸ்' சொல்றதக் கேளுங்க

அரசின் சி-டாக் நிறுவனம் பாஸ் (BOSS)என்ற ஆப்பரேடிங் சிஸ்டத்தை உருவாக்கியுள்ளது. பாரத் ஆப்பரேடிங் சிஸ்டம் சொல்யூசன்ஸ் (Bharat Operating System Solutions) என்பதன் சுருக்கமே பாஸ். நாம் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் விண்டோஸ் மற்றும் மேக் கட்டமைப்பிற்கு மாற்றாக ஓப்பன் சோர்ஸ் முறையில் இந்திய அரசின் சி-டாக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இயங்கு தள (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) மென்பொருளாகும் இது.
தற்போது விலைகொடுத்து வாங்கும் எந்தவொரு வணிகரீதியான மென்பொருளுக்கும் நீங்கள் பயனாளராக மட்டுமே இருக்கிறீர்கள். அவை உங்களுக்கு சொந்தமானதல்ல. அதில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற மாறுதல்கள் செய்யவோ, உங்கள் தேவைக்குப் பிறகு நண்பருக்கோ, மற்றொரு பயனருக்கு மறு விற்பனை அல்லது இலவசமாக தருவதற்கோ இயலாதவை. அப்படிப் பயன்படுத்துவதும், விற்பதும் காப்பிரைட் சட்டப்படி குற்றமாக கருதப்படும். இதற்கு சம்மதித்தே நீங்கள் பல ஆயிரமும் லட்சங்களையும் செலவழித்து மென்பொருள்களை வாங்கிப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள். அப்படி விலை கொடுக்காமல் ஏதாவது காப்பிரைட் மென்பொருளை தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தி வந்தால் அது பைரேட்டட் அதாவது திருடப்பட்ட மென்பொருளாக கருதப்படும்.
இதற்கு மாறாக, அறிவு மனிதர்களுக்கு பொதுச்சொத்து, அந்த அறிவால் உண்டாகும் நன்மையும் பயனும் அந்தந்த மனிதர்களின் தேவைக்கு உட்பட்ட மாற்றங்களுடன் பயன்படுத்திக் கொள்வதற்கும் பிறருடன் பகிர்ந்து
கொள்வதற்குமான சுதந்திரத்தை வழங்கவேண்டும் என்ற அறைகூவலுடன் திறந்த மூல மென்பொருள்களுக்கான இயக்கம் 1983ல் துவங்கியது.  இதன் அடிப்படையில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு மென்பொருளும் காப்பி
லெப்ட் செய்யப்படவேண்டும் என்பதை இவ்வியக்கம் வலியுறுத்துகிறது.
மென்பொருள் பயன்படுத்துபவருக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்குவதே இவ்வியக்கத்தின் குறிகோளாகும்.  பிறருடன் பகிர்ந்து கொள்ளுதல், மாற்றியமைத்தல், மேம்படுத்துதல் என்பதுடன் வைரஸ்கள், தகவல் திருட்டு, கிரிடிட் கார்டு மோசடி போன்ற தொழில்நுட்ப எதிரிகளிடமிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள திறந்த மூல கட்டமைப்பே உதவும் என்று உவகின் பல நாடுகள் கருதுகின்றன.
ஆகவேதான் ஒவ்வொரு நாடும் தனக்கான மென்பொருளை திறந்தமூலநிரல் அடிப்படையிலேயே உருவாக்கி வருகின்றன. பிரேசில், லத்தீன் அமெரிக்க நாடுகள், ஜெர்மனி, ரஷ்யா, டென்மார்க், இங்கிலாந்து போன்ற பல நாடுகளும் தங்களுக்கான ஓப்பன் சோர்ஸ் இயங்குதளத்தையும், மென்பொருட்களையும் உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
உலகளவில் கோலோச்சி வரும் மைக்ரோசாப்ட், அடோப், ஆப்பிள், மேக் போன்ற நிறுவன காப்பிரைட் மென்பொருள்களுக்கு மாற்றாக பல்வேறு நாடுகளும் தன்னார்வ அமைப்புகளும் காப்பிலெப்ட் மென்பொருட்கள் பலவற்றை  உருவாக்கி வருகின்றன. ஓப்பன் சோலாரிஸ், உபுண்டு லினக்ஸ், மற்றும்  கியூபாவின் நோவா  (Nova)ஓஎஸ், சைனாவின் கைலின் (Kylin) ஓஎஸ் மற்றும் ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அரேபிய நாடுகளின் அரசு சார் இயங்கு தளங்கள் இதில் குறிப்பிடத்தக்கவையாகும். விண்டோசில் பழகிய நமக்கு பாஸ் ஆப்பரேடிங் சிஸ்டம் எவ்வாறு உதவும் என்ற கேள்வி எழலாம். ஆனால் கடந்த 25 ஆண்டிற்கும் மேலாக லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படையில் வெற்றிகரமாக பல்லாயிரம் கணினி வல்லுனர்களின் பங்களிப்பில் மேம்படுத்தப்பட்ட ஓப்பன் சோர்ஸ் நிரலில், இந்திய சூழலுக்கு ஏற்றவகையிலான மாற்றங்களை செய்து  வெளிவந்திருப்பதுதான் பாஸ் ஜிஎன்யு /லினக்ஸ் (அப்படித்தான் அழைக்கிறார்கள்). பாஸுடன் கூடுதலாக தரப்படும் 22 பயன்பாட்டு மென்பொருள்களில் பல விண்டோஸ் பயனாளர்களால் மிகவும் விரும்பிப்பயன்படுத்தப்படுபவை என்பதும் குறிப்பிடத்தக்கது..  ஆகவே பாஸின் செயல்திறன் குறித்து நாம் அச்சப்படவேண்டியதில்லை. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மென்பொருள் தயாரிப்புத் திட்டம் செயல்பாட்டில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ இயங்கு தள மென்பொருள் ஒன்று வெளியாவது தற்போதுதான்.  இதில் சிறப்பம்சம் என்னவென்றால் ஆங்கிலம் மட்டுமல்லாது தமிழ், இந்தி, பஞ்சாபி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, சமஸ்கிருதம், தெலுங்கு, உருது, போடோ, காஷ்மீரி, மைதிலி, கொங்கனி, மணிபூரி போன்ற இந்தியாவின் பல்வேறு மக்கள் பேசும் மொழியிலும் இவ்வியங்குதளம் வெளியிடப்பட்டிருப்பதுதான்.
நீங்களும் பாஸ் ஜிஎன்யு / லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்த நினைத்தால் இலவச சிடியை அருகிலுள்ள சி-டாக் அலுவலகத்தில் நேரிலோ அல்லது பாஸ் லினக்ஸ் (http://bosslinux.in/) இணையதளம் மூலமாக  உங்கள் முகவரியை அளித்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது அத்தளத்திலிருந்து நேரடியாக பதிவிறக்கியும் நமது கணினியில் நிறுவிக்கொள்ளமுடியும். இதற்கான வழிகாட்டிக் கையேடும் அந்த இணையதளத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது. முன்பு வெளியிடப்பட்ட அலுவலக பயன்பாட்டு மென்பொருள் பாரதீய ஓப்பன் ஆஃபிஸ் தொகுப்பு அரசு அலுவலகங்கள் தவிர்த்து இன்னும் தனியாரிடமும், பெரும்பாலான மக்களிடமும் சென்று சேராத நிலையில் பாஸ் ஓஎஸ் மக்களின் பயன்பாட்டிற்கு எப்போது முழுமையாக வரும் என்ற கவலையும் ஏற்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசுசார் நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் பாஸ் பயிலரங்குகளை சி-டாக் நிறுவனம் தற்போது நடத்தி வருகிறது. அதனை மேலும் விரிவாக்கி பொதுமக்களுக்கும் இதன் பயன் கிடைக்கச்செய்யவேண்டும் என்பதே நமது விருப்பம் Related Posts with Thumbnails

போன்சாய் மென்பொருள்கள்


கண்டுபிடிக்கப்பட்ட மென்பொருள்கள் அனைத்துமே நமக்கு பயன்படும் என்பது இல்லை, எல்லோருக்கும் ஏதாவது ஒரு சில மென்பொருள்களோடு வேலை முடிந்துவிடும், ஒரு சிலருக்கோ வேறு வேறு ‌‌‌ரூபங்களில் புதிய புதிய மென்பொருள்க‌ளின் தேவை இருந்துகொண்டே இருக்கும், என்றாவது ஒருநாள் பயன்படுத்தப்படும் மென்பொருள்களை தேடிப்பிடித்து வாங்கி கணினிக்குள் அடைத்துவைப்பது என்பது கணினிக்கு பளு, அதுவே தேவைக்கு உபயோ‌கிக்கும் வகையில் ஒரு கிளிக்கில் ஓப்பனாகக்கூடிய, இடத்தை அதிகம் பிடிக்காததாக இருந்தால் நல்லதுதானே.
இன்று மிகப்பெரிய மென்பொருள்கள் பலவும் போன்சாய் மரங்களைப்போல சுருங்கி போர்ட்டபிள் மென்பொருள்களாக உலா வந்து கொண்டிருக்கின்றன.இவை யுஎஸ்பி டிரைவுகளில் பதிந்து ‌வைத்து எளிதில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை, தேவை கருதி கணினியிலும் பதிந்து பயன்படுத்தலாம்,
இதன் மூலம் இரண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும், முதலாவது ஒரு நிறுவனத்தின் பழைய அல்லது புதிய பதிப்பு மென்பொருளை விரும்பி பயன்படுத்துபவர்கள் அதே நிறுவனத்தின் முந்தைய அல்லது புதிய பதிப்பின் போர்ட்டபிளை வைத்துக்கொள்ளலாம், (எதற்காக என்றால் விண்டோஸ் ஆபிஸ் 97.2003. எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் புதிய விண்டோஸ் 2007 ல் உருவாக்கப்பட்ட கோப்புகளை படிக்க முடியாது, அ‌ச்சமயத்தில் உங்களிடம் ஓப்பன் ஆபிஸ் மென்பொருளின் போர்ட்டபிள் இருந்தால் அதில் எளிதாக ஓப்பன் செய்து சேவ்ஏஸ் செய்து ஆபிஸ் 97.2003 க்கு ஏற்றதாக மாற்றிக்கொள்ளமுடியும்)
அடுத்தது தினம் ஒரு இடத்திற்கு பயணிப்பவர்களுக்கு லேப்டாப் இல்லாத சூழலில் போர்ட்டபிள் மென்பொருள்கள் பதிந்த யுஎஸ்பி டிரைவ்களை பயன்படுத்தி எந்த ஒரு பிரௌசிங் சென்டரிலும் அல்லது நண்பர்க‌ளின் கணினிகளிலும் இன்ஸ்டால் செய்யாமல் சிறிது நேரம் பயன்படுத்தி நம்முடைய வேலையை எளிதாக முடித்துக்கொள்ளமுடியும். அந்த வகையில் தற்போது முன்னணியில் உள்ள மென்பொருள்கள் பலவும் அனுமதி பெற்றும். பெறாமலும் என்று இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன, இவை உங்களுக்கும் பயன்படக்கூடும் என்பதற்காகவே இந்த பதிவு,
(எச்சரிக்கை அனு‌மதியில்லாத மென்பொருள்களை வைரஸ் சோதனை செய்து பயன்படுத்தவும், மால்வேர். ஆட்வேர். ட்ரோஜான் ‌‌ஹார்ஸ் போன்ற வைரஸ்கள் இருக்கக்கூடும்)
அப்படிப்பட்ட போர்ட்டபிள் மென்பொருகள் கி்டைக்கக்கூடிய தளங்களின் பட்டியல்
Open Source Portable Software's:
http://www.portablefreeware.com
http://portable-applications.blog.com/
http://www.lupopensuite.com
http://en.wikipedia.org/wiki/List_of_portable_software

தேவையான மென்பொருள்களை தேர்ந்தெடுத்து ஒரே கோப்பாக யுஎஸ்பியில் /கணினியில் இன்ஸ்டால் செய்ய

www.liberkey.com


Portable Games:

http://en.wikipedia.org/wiki/List_of_portable_computer_games
http://noportable.blogspot.com
http://portableappz.blogspot.com/

Professional Portable Software's:
(adobe, corel, microsoft, etc...)
http://baltagy.blogspot.com Related Posts with Thumbnails

கணினியுகமும் கழுத்துவலியும்


கணினியில் தொடர்ந்து பணியாற்றுபவர்களுக்கு கழுத்து வலி மற்றும் பார்வைக் குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக சமீபத்தில் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கணினிகளால் நாளுக்கு நாள் ஏற்படும் பல்வேறு விதமான புதிய நோய்கள் குறித்த தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அப்படிப்பட்டதொரு தகவல்தான் சப்தர்ஜங் மருத்துவ மைய மருத்துவர்களின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இவ்வாய்வு சப்தர்ஜங் நகரைச் சேர்ந்த கணினித் துறை பணியாளர்கள் மத்தியில் எடுக்கப்பட்டது. இதன் முடிவின்படி 80 சதவீதம் பேர் கண்பார்வை மற்றும் கழுத்து வலி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனர்.
76.5 சதவீதம் பேர் கழுத்துவலியால் பாதிக்கப்பட்டிருந்தனர். சாதாரணமாக மனிதர்களின் கண்கள் சுமார் ஆறு மீட்டர் தொலைவிலுள்ள பொருட்களையே எளிதில் அடையாளம் காணும் தன்மை கொண்டது. ஆனால் கணினியை நாம் ஒரு சில அடி தூரத்திலிருந்தே பார்க்கிறோம். இதனால் கண் தசை நார்களுக்கு மிகுந்த வலியும், சோர்வும் ஏற்படுகிறது. மேலும் இவ்வாய்வின் மூலம் அதிகமாக கணினியை பயன்படுத்துபவர்களுக்கு கண்களில் நீர்வடிதல், கண் வலி, கண் உறுத்தல், சிவந்து போதல், கண் பார்வை மங்குதல், தலைவலி என்று பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவிக்கிறது.
தொடர்ந்து அமர்ந்தபடியே வேலை செய்வதால் முதுகு மற்றும் தண்டுவட பாதிப்புகளும் அதைத் தொடர்ந்து கழுத்து வலியும் வருகிறது. இத்தகைய வலிகள் குறித்த ஆய்வின்படி கழுத்து வலியால் பாதிக்கப்பட்டவர்கள் 48.6 சதவீதமும், தோள்பட்டை வலியால் பாதிக்கப்பட்டவர்கள் 15.7 சதவீதமும், முதுகு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் 35.6 சதவீதமும், கை, விரல், மணிக்கட்டு பகுதிகளில் அயற்சியுடன் கூடிய வலியால் 23.1 சதவீதம் பேர் அவதிப்பட்டதாக தெரிவிக்கிறது. மேலும் கணினி அலுவலகங்களில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் மூலமாக ஆராய்ந்ததில் கணினி பயன்படுத்துபவர்கள் சரியான தூரத்தில், உயரத்தில், சரியான நாற்காலியில் உட்காரததும் முதுகுவலி மற்றும் தலைவலிக்கு காரணம் என்று தெரியவந்தது.
அதேபோல அதிக நேரம் கணினியின் முன் அமர்வதால் ஒருவித மன இறுக்கத்திற்கு ஆளாவதும், அதிக ஒளி உமிழும் கணினித் திரைகள், கணினி திரைக்கு நேர் எதிர்திசையில் விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பது, நாற்காலிகள் நேராக, சீராக இல்லாமலிருப்பது, பயன்படுத்துவதற்கு கடினமான விசைகளைக் கொண்ட கீபோர்டுகள் ஆகியவையே கண், கை, கால் முதுகு மற்றும் கழுத்து வலிகளுக்கு காரணமாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தற்போது 18 லட்சத்திற்கும் அதிகமான கணினிகள் புழக்கத்தில் உள்ளன. சராசரியாக 1000 பேருக்கு 6 கணினி என்ற விகிதத்தில் தற்போது உள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் பல மடங்கு உயரும். அப்போது கணினி சார்ந்த பாதிப்புகளால் பல்லாயிரம் மக்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே, காற்றோட்டமான அறையில், தெளிவான, சரியான வெளிச்சம், அளவான ஒளியுடன், ஒரு அடி தூரத்தில் இருக்கும்படியான கணினித்திரையும், பயன்படுத்துவதற்கு எளிதான கீபோர்டு மற்றும் மௌஸ், முதுகுப்பகுதி ஒரே நேர்கோட்டில் இருக்கும்படியாக சாய்வதற்கு ஏற்ற நாற்காலியையும் பயன்படுத்த வேண்டும். அதே போல தொடர்ந்து கணினி முன்பாகவே அமர்ந்திருக்காமல் சற்றே ஓய்வெடுப்பதும், அடிக்கடி இமைகளை மூடித்திறப்பதும் நல்ல பலன் தரும் என்கின்றனர் மருத்துவர்கள். Related Posts with Thumbnails

விண்டோஸ் 7 க்கு ஏற்ற ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்கள்


மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் 7(Windows 7)க்கு மாறியவர்கள் அதற்கு ஏற்ற அப்டேட்டட் மென்பொருள்களைப் புதிதாக பதிய வேண்டும்.
இந்த கூடுதல் செலவிற்கு மாற்றாக ஓப்பன் சோர்ஸ் அப்ளிகேசன்கள் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு ஏற்றதாக மேம்படுத்தப்பட்டுள்ளன.
அதில் சில:
7 ஜிப் ( 7Zip ) - பைல்களை சுருக்க விரிக்க
ஃபைல் ஜில்லா ( FileZilla )- இணையத்தில் பைல்களை பகிர்ந்து கொள்வதற்கான மென்பொருள்
புட்டி (Putty)- Telnet/SSH மென்பொருள்
விண்எஸ்சிபி (WinSCP) - SFTP, FTP, SCP மென்பொருள்
விஸ் (Azuerus now Vuze)- டோரண்ட் பைல்களை டவுன்லோட் செய்ய
கிகா (Ekiga) - Voip & வீடியோ கான்ஃரன்ஸ் மென்பொருள்
எக்ஸ் - சேட்2 (X-Chat2) - கிராபிக்கல் ஐஆர்சி கிளைண்ட்
பிட்ஜின் (Pidgin) - கூகுள், எம்எஸ்என், யாகூ, எய்ம் போன்றவற்றின் சாட்டிங் தளங்களை இம்மென்பொருள் மூலமே அணுகலாம்.
ஃபயர்பாக்ஸ் (Firefox) (இதப்பத்தி சொல்லவேண்டியதில்லை)
ஓப்பன் ஆபிஸ் (Open Office.org) - மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருளுக்கு இணையான மென்பொருள்.
சன்பேர்ட் (Mozilla Sunbird)- காலண்டர் மென்பொருள்
ஃபாக்சிட் பிடிஎப் ரீடர் (Foxit PDF Reader)
மார்பிள் (Marble)- உலகத்தை இதிலிருந்து பார்க்கலாம். கூகுள் எர்த் போன்றது.
இன்க்ஸ்கேப் (Inkscape) - கோரல்டிரா மென்பொருளுக்கு மாற்றாக வெளிவந்துள்ள வெக்டார் இமேஜ் மென்பொருள்
பிளென்டர் (Blender) - முப்பரிமான படங்களை தயாரிப்பதற்கான மென்பொருள்
ஜிம்ப் (Gimp) - போட்டோஷாப் மென்பொருளுக்கு இணையான பயன்பாடுகள் கொண்ட இமெஜ் எடிட்டிங் மென்பொருள்
டயா (Dia) - டயாகிராம் சார்ட்டுகள் வரைவதற்கான மென்பொருள்
விஎல்சி மீடியா பிளேயர் (VLC Media Player) - முன்னனி ஆடியோ, வீடியோ பார்மட்களை பிளே செய்யும். கன்வெர்ட்டர் மற்றும் ரெக்கார்டிங் ஆப்சன்களும் கொண்டது. Related Posts with Thumbnails

wibiya widget