
தற்போது பல வகையான பிரௌசர்கள் வலையுலகில் உலவிக் கொண்டுள்ளன. அதில் அதிகம் பிரபலமானது இன்டர்நெட் எக்ஸ்புளோரர்தான். ஆகஸ்ட் மாத சந்தை நிலவரப்படி இன்டர்நெட் பயன்பாட்டாளர்களில் 73 சதவீதம் பேர் இதைத்தான் பயன்படுத்துகின்றனர். இதுதவிர ஃபயர்பாக்ஸ் (19.73 சதவீதம் ), சஃபாரி (6.73 சதவீதம் ), ஒபேரா (0.74 சதவீதம் ) ஆகிய பிரவுசர்களும் புழக்கத்தில் உள்ளன. முன்பு இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பங்கு 90 சதவீதமாக இருந்தது. ஆனால்
பயர்பாக்ஸ் வந்த பின்னர் எக்ஸ்புளோரரின் பங்கு குறைந்து விட்டது. இந்நிலையில் மைக்ரோசாப்ட்டுக்கு இன்னொரு அடியாக கூகுளும் பிரௌசர் உலகில் கால் எடுத்து வைக்கிறது. இந்த பிரௌசர் பல சிறப்புகளை உள்ளடக்கியதாக உள்ளது. தேடுதல், வீடியோ ஸ்ட்ரீமிங், இமேஜ் சர்ச், இமெயில் உள்ளிட்ட பல பயன்பாடுகளை தற்போது கூகுள் தன் பக்கம் வைத்துள்ளது. இந் நிலையில் தனது 'குரோம் பிரௌசர்' மூலம் இன்டர்நெட் பயன்பாட்டாளர்களை ஒட்டுமொத்தமாக தன் பக்கம் இழுக்க திட்டமிட்டுள்ளது கூகுள்.
இன்டர்நெட் உலகம், குரோம் 'பேட்டை' ஆகுமா, கூகுள் சவாலை எக்ஸ்புளோரரும், பயர்பாக்ஸும் சமாளிக்குமா என்பதை என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். குரோம் பிரவுசர் உபயோகித்ததில் சாதாரணமாக தெரிந்த சில நல்ல விஷயங்கள்: தரவிறக்கம் எளிதில் ஆகிறது. தரவிறக்கம் செய்வதற்கு ஃபயர் பாக் போலவே தனி தரவிறக்க அமைப்பு. அட்ரஸ் பாரில் வலை முகவரி தட்டச்சு செய்யும் பொழுதே நாம் தேடும் வலைத்தளம் இதுவா எனும்படி (கூகிள் தேடல் டூல்பார் மாதிரி) குறிப்புகள் பட்டியலிடப்படுகின்றன. ஒரே சன்னலில் பல பக்கங்கள் திறக்கும் வழி (டேப் பிரௌசிங்) இதிலும் இருக்கிறது. வேகமாக வலைகள் திறக்கின்றன.
அப்புறம் சில குறைகளும் தெரிகின்றன. அதில் குறிப்பாக, தமிழ் இணைய பயன்பாட்டாளர்களுக்கு உதவும் இ-கலப்பையை இதில் உபயோகப்படுத்த முடிவதில்லை. பிரௌசர் வழி செயல்படும் மென்பொருள்கள் (அப்ளிக்கேஷன்கள்), குறிப்பாக ஜாவாவினால் இயங்கும் மென்பொருள்கள் செயல்படுவதில்லை. (உதாரணமாக ஆரக்கிள் இ-பிஸினஸ் சூட்). இன்னும் மற்ற குறைகள் இனிமேல்தான் கவனிக்கவேண்டும்.
குரோம் பிரவுசர் தற்போது சோதனை வெளியீடு என்பதால் இந்த குறைகள் முழுப்பதிப்பில் சரிசெய்யப்படலாம் என்று நம்பலாம்.
சரி... ஏன் இந்த பிரௌசரை கூகிள் அவசரம் அவசரமாக வெளியிட்டது தெரியுமா? புதிதாக வெளிவந்துள்ள மைக்ரோசாப்ட் இண்டர்னெட் எக்ஸ்புளோரர்-8 -ல் விளம்பரங்கள் ஆகியவற்றை வடிகட்ட (Filter) செய்யும் வசதி உள்ளது. இதனால் கூகிள் விளம்பரங்கள் (கூகுள் ஆட்சென்ஸ்) பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதன் காரணமாகவே இண்டர்நெட் எக்புளோரர் பயன்பாட்டை குறைக்கும் வகையில் தனது பிரவுசரை களத்தில் இறக்கியிருக்கிறது கூகுள் என்று வியாபார வட்டாரங்கள் கூறுகின்றன.
கூகுள் பிரவுசரை தரவிறக்கம் செய்ய:http://www.google.com/chrome

0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:
Post a Comment