குளோனிங் ஆடு, எருது என்று தொடங்கி செயற்கை இதயம், இரத்தம், நுரையீரல் என்று மனித பாகங்களுக்கு மாற்று கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ள விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருப்பது மனித மூளை மட்டுமே. காரணம் மனித மூளை தானே சிந்தித்து செயல்படக்கூடியது. சிக்கலான பல இணைப்புகளுடன் முழு உடலையும் நிர்வகிக்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நியுரான்களையும் கொண்டது. அத்தகைய ஒன்றை உருவாக்குவது இயற்கைக்கு முரணானதாகவும், அதே நேரத்தில் அப்படி ஒன்று உருவானால் தற்போதைய மனித இனத்திற்கு அதனால் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகள் குறித்த பரவலான பயமும் உலகளவில் இயற்கை ஆர்வலர்களிடமும், சாதாரண மக்களிடத்திலும் உள்ளது.
மனிதர்களுக்கான செயற்கை மூளையை உருவாக்குவது குறித்த ஆராய்ச்சிக்காக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஈபிஎப்எல் அமைப்பு 2005ஆம் ஆண்டில் ப்ளூ பிரெய்ன் திட்டம் என்ற பெயரில் துவக்கியது. இத்திட்டத்தின் தலைவராக மூளை நரம்பியல் துறை ஆராய்ச்சியாளர் டாக்டர் ஹென்றி மார்க்ரம் உள்ளார். இவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக மழைக்காடுகளில் சுற்றி பல்வேறு மரங்களின் வளரும் தன்மை, அமைவிடம், வடிவமைப்பு, புறக்கட்டமைப்பு குறித்து பல்வேறு தகவல்கள் திரட்டியுள்ளார். அதனடிப்படையில் இவை அனைத்திற்கும் உள்ள பொதுவான தொடர்புகள் குறித்து ஒரு வரையறையை கண்டறிந்தார். அதனை அடிப்படையாகக் கொண்டு பல்லாயிரக்கணக்கான நியுரான்களின் செயல்பாடுகளை - ஒன்றுக்கொன்று மாறுபட்ட செயல்பாடுகளைக் கொண்டதாக - தனித்தன்மை வாய்ந்ததாக - பொதுவான மூளைச் செயல்பாடுகள் ஒன்றுக்கொன்று பகிர்ந்துகொள்ளக் கூடியதான கட்டமைப்புக் கொண்ட மென்பொருளை உருவாக்கும் முயற்சியில் இவர் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே எலிகளுக்கான முழுமையான மூளையை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை 21 முதல் 24 வரை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த டெட் கருத்தரங்கில் உலகளா
விய விஞ்ஞானிகள் முன்னிலையில் விஞ்ஞானி ஹென்றி மார்க்ரம் தங்களது ஆராய்ச்சி குறித்து உரை நிகழ்த்தினார். அதில், உலக அளவில் இருநூறு கோடி மக்கள் மூளை சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எங்கள் ஆராய்ச்சி மூலமாக இன்னும் பத்தாண்டுகளில் கணினி மென்பொருள் உதவியுடன் செயற்கை மூளையை உருவாக்கித் தரமுடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பல்லாயிரக்கணக்கான நியுரான்களைக் கொண்ட மூளைக்கு இணையான செயற்கை மூளையை தயாரிக்க ஒரு நியுரானுக்கு ஒரு லேப்டாப் கணினி என்ற அடிப்படையில் தனித்தனித் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் பத்தாயிரம் லேப்டாப்புகளின் செயல்திறன் கொண்ட ஐபிஎம் நிறுவனத்தின் பத்தாயிரம் கணினி பிராசசர்களுடன் கூடிய ஜெனி என்ற சூப்பர் கம்ப்யூட்டரை பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் செயல்பாடு குறித்து மேலும் அவர் கூறுகையில் ஒரு மலரின் படத்தைக் காட்டும்போது நிறம், வடிவம் என்று பிரித்து தன்னுடைய மின்னணு தகவல் கட்டமைப்பிலிருந்து தரம்பிரித்து சரிபார்த்து அதனை மலர் என்று கூறும். அதற்கேற்றவகையில் சுய திறனுடன் கூடிய தகவல்களை வெளியிடும் வகையில் மென்பொருளை உருவாக்கி வருகிறோம். தற்போது பல்வேறு பாலூட்டிகள் மற்றும் விலங்குகளுக்கான மாடல் மென்பொருள்களை உரு
வாக்கியும், பரிசோதித்தும் வருகிறோம் என்றார்.
0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:
Post a Comment