ஒளிப்படங்களை மாற்ற உதவும் போட்டோஷாப், பிங், பிக்காசா போன்று கணினியில் படம் வரைய விரும்பும் ஓவியர்களுக்கு என்றே பல மென்பொருட்கள் இப்பொழுது கிடைக்கின்றன. கோரல் டிரா, அடோப் இல்லஸ்ட்ரேட்டர், இன்க்ஸ்கேப் போன்ற மென்பொருள்கள் வெக்டார் கிராபிக் வரைபடங்களுக்கு புகழ்பெற்றவை. அதுபோல ஓவியங்கள் வரைவதற்கான மென்பொருள்கள் பல ஓப்பன் சோர்ஸ் தளத்தில் வந்திருக்கின்றன.
அவற்றில் சில:
மை பெய்ண்ட் (Mypaint)
இது ஒரு சிறப்பாக ஓவியம் வரைய உதவும் மென்பொருள். இதன் சிறப்பம்சம் பல்வேறு விதமான பிரஸ்கள், எல்லையற்ற கேன்வாஸ் உபயோகம், லேயர்கள், கிராபிக் டூல்கள் எனப்பல.
கிரிட்டா (Krita)
இது புகழ்பெற்ற கே ஆபிஸ் மென்பொருள் வெளியீட்டாளர்களிடமிருந்து வந்திருக்கிறது. கேலிச்சித்திரங்கள், ஓவியங்கள் எனப்பலவும் இதன் வரையலாம். லேயர் மற்றும் மாஸ்க் பயன்பாடு உள்ளது. பிரஸ், பில்டர்கள், வெக்டார், ராஸ்டர் டூல்கள் என படம் வரைய பல்வேறு வசதிகள் இதில் உள்ளது. கேஆபிஸ் மென்பொருளுடன் இணைந்தே இது கிடைக்கிறது. http://www.koffice.org/download/

டிராபைல் (DrawPile)
இதுவும் ஓவியம் வரைவதற்கான மென்பொருள்தான். இதில் கேன்வாஸை சுழற்றி அமைக்கும் வசதி, நாம் வரையும் அதே நேரத்தில் இணையம் மூலமாக பிற நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி ஆகியவை புதியது. http://drawpile.sourceforge.net/get/
அல்கெமி (Alchemy) - http://al.chemy.org/
சிபி பெய்ண்ட் (chibipaint) - http://www.chibipaint.com/
எம்டிபெய்ண்ட் (Mtpaint) - http://mtpaint.sourceforge.net/
ஹார்மோனி (Harmony) - இது ஒரு ஆன்லைன் மென்பொருள் http://mrdoob.com/projects/harmony/-
1 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:
thank you
Post a Comment