பயர்பாக்ஸ் ரீ ஸ்டார்ட் செய்த பிறகு பார்த்தால் அட்ரஸ் பாருக்கு அருகில் காபி கோப்பை போன்ற ஒரு ஐகான் அமர்ந்திருக்கும். அதனை கிளிக் செய்தால் நமக்கான அன்றைய தளங்களை பார்க்கமுடியும். அதன் அருகில் அமைந்துள்ள அம்புக்குறியை அழுத்துவதன் மூலம் ஒரு மெனு தோன்றும். அதில் அன்றைய தளங்களைப் பார்ப்பதற்கான Load My Morning Coffee மற்றும் குறிப்பிட்ட கிழமைக்கான தளங்களை பார்ப்பதற்கான Add toMy Morning Coffee , புதிய தளங்களை சேர்ப்பதற்கான Configure Morning Coffee ஆகிய மூன்று மெனுக்கள் பட்டியலிடப்பட்டிருக்கும்.
நாம் பட்டியலில் சேர்க்க வேண்டிய தளங்களின் முகவரியை Configure Morning Coffee யை கிளிக் செய்தால் கிழமைகளுக்கான பட்டியலும் அதன் எதிர் பகுதியில் அந்தக் கிழமைக்கான தளங்களை சேர்ப்பதற்கான சாளரம் மற்றும் add என்ற பட்டனும் இருக்கும். குறிப்பிட்ட கிழமையை கிளிக் செய்து பின்னர் பார்க்க வேண்டிய தளத்தின் பெயரை டைப் செய்து ok கொடுக்கவும். பயன்படுத்திப் பாருங்கள். கருத்துக்களை சொல்லுங்கள்.
https://addons.mozilla.org/en-US/firefox/addon/2677/
0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:
Post a Comment