ஒன்றிற்க்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு புதிய மின்னஞ்சல்கள் வந்தவுடன் நினைவூட்டும் சிறிய யுட்டிலிட்டிதான் Spiffy Gmail notifier இது முற்றிலும் இலவசமானது. இதில் 5 ஜிமெயில் கணக்குகளை பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட நேர இடைவெளியில் புதிய மின்னஞ்சல்கள் குறித்த தகவல்கள் ட்ரே ஐகான் பகுதியில் 5 செகண்டுகள் என்ற அளவில் காட்டப்படும். ஒரு எம்பிக்கும் குறைவான இம்மென்பொருளை நிறுவுவது எளிது.நிறுவியபின் திறக்கும் விண்டோவில் ஆப்சன்ஸ் (Options) மெனு சென்று அக்கவுண்ட்ஸ் (Accounts) என்பதை கிளிக் செய்யவும். அதில் நாம் வைத்துள்ள ஜிமெயில் அக்கவுண்ட்களின் யூசர் நேம். பாஸ்வேர்டை ஒவ்வொன்றாக பதிவு செய்யவும்.
பிறகு கான்பிகிரேசன் (Configuration) என்பதை கிளிக் செய்து நமக்குத் தேவையான வகையில் செட்டிங்குகளை மாற்றிக் கொள்ளவும். இந்த யுட்டிலிட்டியில் ஜிமெயில் அப்ளிகேசன் மூலம் பெறப்படும் தனிப்பட்ட டொமைன்களுக்கான மின்னஞ்சல்களையும் பெறமுடியும் என்பது கூடுதல் வசதியாகும்.
இம்மென்பொருளை பதிவிறக்க இங்கு செல்லவும்
http://www.snapfiles.com/get/spiffy.html
மேலும் விபரங்களுக்கு
http://members.multiweb.nl/kevin/spiffy/






2 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:
thanks for sharing. good post.
அருமை. ! இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!
http://erodethangadurai.blogspot.com/
Post a Comment