இலவசமாக கிளிப் ஆர்ட் படங்கள் வேண்டுமா?

வெப்டிசைனர்கள், பள்ளி. கல்லூரி மாணவர்கள் தங்களுக்குத் தேவையான கிளிப் ஆர்ட் இமெஜ்களை கூகுளில் தேடிப் பயன்படுத்துவர். அப்படி எடுக்கும் படங்க‌ளை‌ப் பயன்படுத்துவதில் காப்பிரைட் சிக்கல்கள் உண்டு. ஆனால் எந்தவித கட்டுப்பாடும் இன்றி கிளிப் ஆர்ட் இமெஜ்களை இலவசமாக தரவிறக்கம் செய்ய ஓப்பன் சோர்ஸ் இணையதளங்கள் இரண்டு உள்ளன.
1. WP ClipArt
 WP ClipArt தளத்தில் 1.2 ஜிபி அளவிலான படங்கள் உள்ளன. அவற்றை ஜிப் பைலாக மொத்தமாக தரவிறக்க முடியும். அத்துடன் கணினியில் தரவிறக்கப்பட்ட இந்தக் கிளிப் ஆர்ட் படங்களைக் கணினியில் தே‌டிப் பார்க்க /எடிட் செய்ய ஒரு சிறிய உபயோககரமான  மென்பொருளையும் தருகிறார்கள். இம்மென்பொருளிலி்ல் இருந்து காப்பி செய்து வேர்டு, பவர்பாய்ண்ட் மென்பொருள்களில் தேவையான பக்கங்களில் பேஸ்ட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். 
2. Open Clip Art
இத்தளத்தில் உள்ள படங்களை ட‌வுன்லோட் செய்து விருப்பப்படி மாற்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் நாம் வரைந்த கிளிப் ஆர்ட்களை அப்‌லோட் செய்து நம்மைப் போன்ற பிறருக்கும் உதவலாம்.

இந்த இரண்டு தளங்களும் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும், முயற்சி செய்து பாருங்கள். Related Posts with Thumbnails

0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

wibiya widget