நீலச்சாயம் கரைஞ்சுபோச்சு...


அமெரிக்காவின் பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் பல முக்கியத்துறைகளில் பெரும்பாலான பணிகள் ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்கள் மூலமே  செய்யப்படுகின்றன என்றும், அதன் பயன்பாட்டை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.


செய்தி இணைப்பு:
http://www.zdnet.com/blog/open-source/open-source-obama/8289
http://opensourceforamerica.org/

தனியுரிமை மென்பொருள் களைத் தயாரிக்கும் மைக்ரோ சாப்ட், அடோப், ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங் களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, உலகம் முழுவதும் வியாபாரம் செய்வதை ஆதரித் துப் பிரச்சாரம் செய்யும் அமெரிக்க அரசு, தன்னுடைய நாட்டில் மட்டும் அதனை அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக  பாதுகாப்பு, மக்கள் நலன் என்று வரும்போது  ஓப்பன் சோர்ஸை ஆதரித்து பயன்படுத்தி வருகிறது.

ஓப்பன் சோர்ஸ் ஃபார் அமெரிக்கா என்ற அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்காவின் 15 முக்கியத் துறைகள் ஓப்பன் சோர்ஸ்  தரத்திலான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதாகவும், அதில் பாது
காப்புத் துறை அதிகபட்சமாக 82 சதவீதமும், சக்தித்துறையில் 72 சதவீதமும், உடல்நலத்துறை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைகளில் தலா 55 சதவீத
மும், போக்குவரத்துத் துறையில் 53 சதவீதமும் மற்றும் உள்ள பிற துறைகளில் 40 சதவீத அளவிலும் செயல்பாட்டில் உள்ளதாகத் தெரிவிக்கிறது.
இதுமட்டுமல்லாமல் ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் நாசா தயா
ரித்துள்ள  காஸ்மிக் சாப்ட்வேர் கலெக்சன், விஸ்டா மற்றும் உடல் நலக் குறிப்புகளை பதிவு செய்து பாதுகாக்க எலக்ட்ரானிக் ஹெல்த் ரெக்
கார்ட்ஸ் (EHR) என்ற  சிஸ்டம்களை நிர்வகிக்கும் வேர்ல்ட் விஸ்டா, ஓப்பன் விஸ்டா மென் பொருள்களையும் உருவாக்கியுள்ளது.

பாஸ் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், பாரதீய ஓப்பன் ஆபிஸ் ஆகிய ஓப்பன்சோர்ஸ் மென்பொருள்களை இந்திய அரசின் தொழில்நுட்பத் துறை உருவாக்கியிருந்தாலும் பயன்பாட்டளவில் இன்னும் ஓப்பன்சோர்சில் பின்தங்கியே இருக்கிறது.அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டமும், மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென் பொருளுமே பெரும் பகுதி மக்களால் பயன்படுத்தப்படுபவையாக உள்ளன.

இந்தியா பில்கேட்சை வரவேற்பதில் காட்டும் ஆர்வத்தை  இது போன்ற ஓப்பன்சோர்ஸ் மென்பொருள்களை ஊக்குவிப்பதில் காட்டினால் நன்றாக இருக்கும்.  இது நமது நாட்டின் பாதுகாப்பிற்கும் உகந்ததாக இருந்திருக்கும்.  மேலும் நமது நாட்டின் சூழலுக்கு ஏற்பவும் தொழில் நுட்பம் மேம்படும் போது இன்னும் ஒரு படி கூடுதலான வளர்ச்சியை நாம் இந்தத் துறையில் பெற்றிருக்க முடியும். Related Posts with Thumbnails

1 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

திவாண்ணா said...

//இந்திய அரசின் தொழில்நுட்பத் துறை உருவாக்கியிருந்தாலும் பயன்பாட்டளவில் இன்னும் ஓப்பன்சோர்சில் பின்தங்கியே இருக்கிறது.அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டமும், மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென் பொருளுமே பெரும் பகுதி மக்களால் பயன்படுத்தப்படுபவையாக உள்ளன.//
பின்ன ஓபன் சோர்ஸ்ல கமிஷன் கிடைக்காதே!
மெகா ஊழல் ஒண்ணு வந்துகிட்டு இருக்கு. மத்திய அரசு பசங்களுக்கு கணினி கொடுக்கப்போகுதாம். ஓஎஸ்? விண்டோஸ்!

wibiya widget