
மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்திய தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்காக ஒரு புதிய சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பட்ட மேற்படிப்போ, பட்டப்படிப்போ படித்துக்கொண்டிருக்கும் தொழில்நுட்பப்பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது அடையாள அட்டைகளை அருகில் உள்ள அப்டெக், என்.ஐ.ஐ.டி, பியூசன் போன்ற கணினிப் பயிற்சிப் மையங்களில் காண்பித்தால் அவர்களுக்கு மைக்ரோசாப்ட்டின் மென்பொருள்கள் அடங்கிய இலவச டிவிடி வழங்கப்படும்.
அந்த டிவிடியில் விண்டோஸ் சர்வர் 2003, விசுவல் ஸ்டுடியோ 2008, எஸ்க்யூஎல் சர்வர் 2005, மைக்ரோசாப்ட் எக்ஸ்ப்ரசன் ஸ்டுடியோ, விர்ச்சுவல் பிசி ஆகிய மென்பொருள்கள் அடங்கியிருக்கும்.
2009ம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் இந்தச்சலுகை 11, 12ம் வகுப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்படவிருப்பதாகத் தெரிகிறது. இதற்கென பிரத்யேக இணையதளம் ஒன்றையும் மைக்ரோசாப்ட், `ட்ரீம்ஸ்பார்க்இண்டியா என்ற பெயரில் துவக்கியுள்ளது. இத்தளத்தின் மூலமும் மேற்கண்ட மென்பொருட்களை பதிவிறக்கம் செய்யமுடியும்.
தற்போது இந்தியா வந்துள்ள பில்கேட்ஸ் பல்வேறு பொதுசேவைத் திட்டங்களை அறிமுகப்படுத்தும் முகமாக இத்திட்டத்தையும் துவக்கியுள்ளார். இது உலக அளவில் மென்பொருள் துறையில் முன்னணி வகிக்கும் இந்தியாவை தன்னுடைய மென்பொருட்களை கற்க வைப்பதன் மூலம் வேறு மாற்று இல்லாத மாயசூழலை மென்பொருள் சந்தையில் உருவாக்கி அதன் மூலம் மைக்ரோசாப்ட்டை மேலும் பலப்படுத்தும் ஏற்பாடாகவே இதை பார்க்கமுடிகிறது. உலக அளவில் பல்வேறு நாடுகளும் ஓப்பன் சோர்சுக்கு மாறிக்கொண்டிருக்கும் சூழலில் மைக்ரோசாப்ட்டின் இந்த சலுகைத் திட்டம் இந்தியாவில் ஓப்பன் சோர்ஸை முடக்கிவைக்கும் முயற்சியே என்று இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

5 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:
எல்லாம் வியாபாரகாந்த முயற்சியே.
'அரசியலிலே இதெல்லாம் சாதாரணமப்பா : கவுண்டர் சொல்லிட்டுப் போயிட்டார்.
ஆனால் இவங்க இப்போதுதான் இதையே செய்கிறாங்க. இவங்க ரொம்ப லேட்
Here is the link to the story: http://www.tamilish.com/story/11927
இந்தியர்களுக்கு ஓசி என்றால் என்னவும் பண்ணுவார்கள் என்று அறிந்து வைத்திருக்கிறார் மனுசர்.
மனித வளத்துக்கும் குறைவில்லை; மதிநுட்பத்திலும் பின்தங்கவில்லை.
உழைப்பிலும் சளையில்லை.
உலகம் முழுவதிலும் பரவி வாழும் இந்தியத் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஒரு
மாற்று ஏற்பாடு செய்யக்கூடாதா ?
நம் இளைஞர்கள் ஏன் வெளிநாடு செல்ல வேண்டும்?
பிறர் வலைவிரிக்கும் நிலையை ஏன் மாற்றக்கூடாது?
க்யூபாவை ஏன் பின்பற்றக் கூடாது? வேளாண்மையிலும்,
மின்னணுத் துறையிலும் தலைமை வகிக்க நமக்குத் தகுதி இல்லையா ?
தேவ்
நியாயமான ஆதங்கம் ஐயா,
ஆனால் இங்கு சிறு வயதில் இருந்தே நல்ல வேலைக்குப் போகவேண்டும் அதற்கு முதல் மதிப்பெண் எடுக்கவேண்டும் என்று வலியுறுத்திதானே பிள்ளைகளை வளர்க்கிறார்கள்?
இந்த நிலை மாறவேண்டும், நம் திறமைகள் சரியான திசையில் வளர வேண்டும்.
என்றும் அன்புடன்,
இரா. சதீஷ் குமார்.
Post a Comment