இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் பல பழைய பொருட்கள் வழக்கொழிந்து வருகின்றன. சில மட்டுமே நவீன மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து புதிய மாற்றங்களைத் தாங்கி வெளிவருவதும், அதனால் சந்தை வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வதும் நிகழ்வு. அத்தகைய வரிசையில் புதியதாக மாற்றம் பெற்றிருப்பது, பலரது அன்றாட பயன்பாட்டில் இருக்கும் பேனாக் கத்தி.
இதில் செய்யப்பட்டிருக்கும் புதிய வசதி 32 ஜிபி அளவு நினைவகத்துடன் கூடிய யுஎஸ்பி பிளாஸ் டிரைவ் (கையடக்க தகவல் சேமிப்பகம்), புளூடூத் தொழில்நுட்பம் மற்றும் லேசர் ஸ்கேனர் ஆகியவையும் வழக்கமான கத்திகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் பிளார் டிரைவில் சேகரிக்கப்படும் தகவல்கள் பாதுகாக்க பயனரின் கைரேகையை சோதித்து அனுமதிக்கும் வசதியும் உள்ளது. இக்கத்தி கடந்த வாரம் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த மின்னணு நுகர்வோர் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை சுமார் 250 யூரோக்கள் இருக்கும் என தெரிகிறது.
பேனாக் கத்தியை முதன்முதலில் உருவாக்கிய விக்டோரிநாக்ஸ் நிறுவனமே இதனையும் வெளியிட்டிருக்கிறது. 1884ல் கார்ல் எல்ஸ்னர் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் அவரது பேரன் சார்லஸ் எல்ஸ்னரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆண்டுக்கு 13 மில்லியன் கருவிகளை தயாரித்துவரும் விக்டோரிநாக்ஸ், இதில் பெரும்பாலானவற்றை சுவிட்சர்லாந்து ராணுவப் பயன்பாட்டிற்கே விற்பனை செய்துவிடுகிறது.
1 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:
Nice message.
Post a Comment