- வேட்பாளர் ஒருவர், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் முன்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியதோ அல்லது வாக்குறுதி அளிப்பதோ அவசியமா?
ஆமாம். - வேட்பாளர் ஒருவர் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவோ அல்லது வாக்குறுதி அளிப்பதற்கோ தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள் யார்?
எந்த ஒரு குறிப்பிட்ட தேர்தலுக்கும் முதன்மையாக அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள் அந்தத் தொகுதிக் கான தேர்தல் அதிகாரி மற்றும் துணைத் தலைவர் அதி காரியாவார். சிறையில் அடைக்கப்பட்ட அல்லது முன் னெச்சரிக்கை காவலில் வைக்கப்பட்டவர்களைப் பொ றுத்தவரை சிறை கண்காணிப்பு அலுவலரோ அல்லது காவல் முகாமின் தலைமை அலுவலரோ உறுதிமொழி செய்துவைக்க அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள் ஆவார்கள். உடல் நலக்குறைவாலோ அல்லது மற்ற காரணங்களுக்காகவோ மருத்துவமனையிலோ அல் லது வேறெங்கிலும் இருந்து சிகிச்சை பெற்று வருபவர் களைப் பொறுத்தவரை அந்த மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர்கள் அல்லது அவர் களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் இதற் கான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் வெளிநாட்டில் இருந்தால், இந்திய தூதர் அல்லது ஹை கமிஷனர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ராஜீய பிர திநிதி ஆகியோருக்கும் உறுதிமொழியை செய்துவைக்க அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. - வேட்பாளர் எப்போது உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும்?
வேட்பாளர் தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்த உடனேயே நேரில் வந்து உறுதி மொழியை எடுத்துக் கொள்ள வேண்டும். எவ்வாறாகினும் வேட்பு மனுத் தாக்கல் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நாளுக்கு முந்தைய நாளே உறுதிமொழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். - போட்டியிடும் வேட்பாளர்களுக்கு யார் தேர்தல் சின்னங்களை ஒதுக்கீடு செய்கிறார்?
தேர்தல் அதிகாரி. - ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னம் எவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது?
ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னத்தைப் பெறுவதற்கு வேட்பாளர் தமது வேட்பு மனுவில், சம்பந்தப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சியால் நிறுத்தப்படும் வேட் பாளர் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டும். மேலும் அந்தக் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகியிடமிருந்து தாம்தான் கட்சியால் நிறுத்தப் படும் வேட்பாளர் என்பதைத் தெரிவிக்கும் பி படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பி படிவத்தில் தெரிவிக் கப்பட்டுள்ள அறிவிப்பை ஒப்புக் கொண்டு கட்சி அலு வலர் ஒப்பமிட்டுத்தர வேண்டும். இந்த அலுவலரின் மாதிரி கையொப்பம் எ படிவத்தின் மூலம் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் அதி காரிக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். இந்த இரண்டு படிவங்களும், வேட்பு மனுத்தாக்கலுக்கான கடைசி தினத்தில் பிற்பகல் 3 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். - அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட அலுவல ரின் பெயர், கையொப்பம், ரப்பர் முத்திரை போன்ற வற்றுடன் A மற்றும் B படிவங்களை ஒரு வேட் பாளர் தாக்கல் செய்ய முடியுமா?
முடியும். A மற்றும் B படிவங்களில் அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட அலுவல நிர்வாகி மையால் கையொப்பமிட்டு இருக்க வேண்டும். - பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியின் வேட்பாளர் அல்லது சுயேட்சை வேட்பாளர், ஒதுக்கப்படாத சின்னங்கள் பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் சின்னங்களில் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ள முடியுமா?
முடியும். இதற்கு இந்த வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட்டுள்ள சின்னங்களில் 3-தெரிவு செய்து அவற் றின் முன்னுரிமையைத் தெரிவித்து தமது வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டும். - பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியால் நிறுத்தப்படும் வேட்பாளர் A மற்றும் B படிவங்களை மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் அதிகாரிக்கு சமர்ப்பிக்க வேண்டியது அவசியமா?
ஆமாம். - தேர்தல் பணிக்காக வாகனங்களைப் பயன்படுத் துவதில் ஏதேனும் கட்டுப்பாடு உண்டா?
கிடையாது. எத்தனை வாகனங்களை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். (இயந்திரத்தால் அல்லது மோட்டாரால் இயங்கும் ஊர்தி மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள்) ஆனால் இத்தகைய வாகனங்களை இயக்குவதற்கு தேர்தல் அதிகாரியின் முன் அனுமதியைப் பெற்று அந்த அனுமதிக் கடிதம் (அசல் கடிதம், நகல் அல்ல) வாகனங்களின் முன்புறக் கண்ணாடியில் தெளிவாகத் தெரியும்படி ஒட்டப்பட வேண் டும். இந்த ஒப்புதல் கடிதத்தில் ஊர்தியின் எண், எந்த வேட்பாளருக்காக பயன்படுத்தப்படுகிறதோ அவர் பெயர் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும். இதற்காகும் செலவு அந்த வேட்பாளரின் கணக்கில் கொள்ளப்படும்.
0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:
Post a Comment