இம்மென்பொருளைக் கிளிக் செய்தவுடன் துவங்கும் தட்டச்சு செய்வதற்கான சாளரம் (டைப்பிங் விண்டோ) கணினித் திரையின் முழுமைக்கும் தெரியும் வகையில், மெனுபார் ஐகான்கள் அனைத்தும் மறைக்கப்பட்டு (ஆட்டோ ஹைட்) பளிச்சென்று இருக்கிறது. மெனுப் பகுதியைப் பார்க்க மெளஸை மேல் விளிம்பிற்கு கொண்டு செல்ல வேண்டும்.
அதே போல எழுத்துக்கள், வார்த்தை கள், பத்தி ஆகியவற் றின் எண்ணிக்கை அறிய டைப்பிங் விண்டோவின் கீழே மெளஸை நகர்த்திப் பார்க்கலாம். எழுத் துரு மற்றும் பேக் கிரவுண்ட் வண்ணங் களை மாற்றி தீம் டெம்ப்ளேட்களாக பதிவு செய்து கொள்ளுதல், டைப் செய்யும் நேர அளவை கணக்கிடுவது, பல டாக்குமெண்ட்களை கையாள டேப் வசதி, ஸ்பெல் செக்கர் முதலிய பல வசதிகள் உள்ளது. இதற்கெல்லாம் மேலாக தானாக சேவ் செய்து கொள்ளும் ஆட்டோ சேவ் வசதியும் உள்ளது. இது ஓப்பன் சோர்ஸ் போர்ட்டபிள் மென்பொருளாக இருப்பதால் கணினி மற்றும் பென்டிரைவில் காப்பி செய்து எளிதாகப் பயன்படுத்தலாம்.
தரவிறக்க: http://gottcode.org/focuswriter/
.
1 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:
பயனுள்ள தகவல் நன்றி!
Post a Comment