இன்றைய நாளில் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாக இ-மெயில் மாறியிருக்கிறது. இ-மெயில் சேவையை இலவசமாகப் பல நிறுவனங்கள் தருவதால் ஒருவரே எண்ணற்ற இமெயில் முகவரிகளை உருவாக்கிக் கொள்வது என்பது இன்று சர்வ சாதாரண விஷயம்.
அதே நேரத்தில் இன்று தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி ஒருவருடைய இமெயில் தகவல்களை திருடுவதும் அதிகரித்து வருகிறது. இத்தகைய தாக்குதலிலிருந்து நம்முடைய இமெயில் முகவரியை எப்படிப் பாதுகாப்பது என்பது பற்றி அறிந்து கொள்வோம்.
இமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்டைத் திருட ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்கள் பல்வேறு வகையான வழிமுறைகளைக் கையாளுகின்றனர். அதில் ஒன்று ஸ்பை வேர் என்ற நச்சு நிரல்களை உருவாக்கி இணையம் வழியாக பரப்பியும், போலி அல்லது பொழுது போக்கு இணைய தளங்களில் பதிவு செய்யச் சொல்லி அதன் மூலமாகத் தகவல்களைத் திருடுவது எனப் பல வழிமுறைகளைக் கையாளு கின்றனர்.
இவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள முதலில் செய்ய வேண்டியது இமெயில் முகவரி களைத் தேவையில்லாத தளங் களில் பதிவு செய்வதைத் தவிர்ப்பது அல்லது அதற்கென வேறு ஒரு இமெயில் முகவரியை உருவாக்கிப் பயன்படுத்தலாம்.
நம் அலுவலகம் அல்லது வீட்டில் பயன்படுத்தும் கணினி யில் ஆண்டிவைரஸ், ஆண்டி ஸ்பைவேர், ஆட்வேர் ரிமூவர் ஆகிய மென்பொருள்களை நல்ல நிலையில் இயங்கும்படி அப்டேட் செய்து வைத்துக் கொள்ளவும். வெளி இடங் களில் இமெயிலை ஓப்பன் செய்து பார்ப்பதை தவிர்த்தி டுங்கள்
அதேபோல இமெயிலை அனுப்பும்போதும் கவனமாக இருக்கவேண்டும். பலருக்கும் ஒரே செய்தியை அனுப்ப வேண்டியிருந்தால் BCC என்ற கட்டத்திற்குள் முகவரிகளை உள்ளிட்டு அனுப்பவும். இதனால் பெறுபவர்கள் நாம் அனுப்பிய பிற நண்பர்களுடைய முகவரிகளைப் பார்க்க முடியாத வகையில் செய்திட முடியும்.
பாஸ்வேர்ட் திருட்டைத் தடுக்க ஜிமெயில் மற்றும் யாகூ மெயில் பயன்படுத்துவோருக்கு அந்த நிறுவனங்களே கூடுதல் வசதியாக செல்போன் வழிப் பாதுகாப்பைத் தருகின்றன.
இதனைப் பயன்படுத்த நம்முடைய இமெயில் அக்க வுண்ட்டில் நுழைந்து அக்க வுண்ட் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று செல்போன் எண்ணைப் பதிவு செய்யலாம். பதிவு செய்த வுடன் உடனடியாக நம்முடைய செல்போனுக்கு எஸ்எம்எஸ் ஒன்று அனுப்பப்படும். அதில் கொடுக்கப்படும் பாஸ்வேர்டை தளத்தில் பதிந்து உறுதிப்படுத் தவும். அதன்பிறகு நீங்கள் எப்போது பாஸ்வேர்டை மாற்ற முயன்றாலும் உடனடியாக உங்கள் செல்போனுக்கு இதே போன்ற பாஸ்வேர்ட் ஒன்று அனுப்பப்படும்.
இதன் மூலம் மற்றவர்கள் நமக்குத் தெரியாமல் பாஸ் வேர்டை மாற்ற முயற்சித்தால் கண்டுபிடித்துவிடமுடியும்.
.
0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:
Post a Comment