ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் இணையதளங்களை பார்ப்பதே அபூர்வம். அதிலும் தமிழைப் படிப்பதென்பது அதை விடக் கடினம். ஒவ்வொரு தளமும் வெவ்வேறு வகை எழுத்துருக்களில் தட்டச்சு செய்யப்பட்டிருக்கும். அந்த எழுத்துருக்களை டவுன்லோட் செய்து படிப்பதற்குள் செய்தியின் மீதான ஆர்வமே போய்விடும். ஆனால் இன்று யுனிக்கோட் எழுத்துருவே பொதுவானது என்ற நிலை உருவான பின் எந்த ஒரு எழுத்துருவையும் பதிவிறக்காமல் படிக்க முடிகிறது. இந்த வளர்ச்சியில் கூகுளின் ஆன் லைன் டிரான்ஸ்லிட்ரேசன் மென் பொருளின் பங்கு குறிப்பிடத்தக்கது. இதில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தமிழில் பெறும் தமிங்கல தட்டச்சு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய தமிழ் இணையப் பயனர்கள் இதனையே அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்.
இணையம் தவிர்த்து கணினியில் மட்டும் பயன்படுத்துவதற்கான தமிழ் எழுத்துரு வகைகள் சுமார் 150ஐத் தாண்டும். அவற்றில் அதிகமாக பயன் பாட்டில் உள்ளவை ஒரு சிலதான். அவையும் அச்சுத் துறையினர் பயன்படுத்தும் இன்டோவேர்ட், ஸ்ரீலிபி, டேம், டேப், செந்தமிழ், இளங்கோ, அனு, சாப்ட் வியு, ஜீவா என பத்து பதினைந்து தனியுரிமை வணிக மென்பொருள்களே. இவற்றைத் தவிர்த்து சாதாரண கணினிப் பயனரால் பயன்படுத்தப்படுபவை என்று பார்த்தால் பாமினி, அமுதம், பெரியார், திஸ்கி வகை எழுத்துருக் களைக் குறிப்பிடலாம்.
நம்மில் பலருக்கு ஆங்கிலத் தட்டச்சு பயில உள்ள ஆர்வம் தமிழ் தட்டச்சு பயில்வதில் இல்லை. தமிழுக்கு 247 எழுத்துக்கள் ஆங்கிலத்திற்கு வெறும் 26 எழுத்துக்கள்தான் என்று கூறித் தமிழை கற்பது கடினம் என்ற மாயை பொதுவாக உண்டு. ஆனால் உண்மையில் தமிழ் தட்டச்சில் நாம் கற்கவேண்டிய எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள் 12, உயிர் மெய் எழுத்துக்கள் 18 மற்றும் துணை எழுத்துக்கள், கிரந்த எழுத்துக்களென மொத்தமாக ஐம்பதிற்கும் குறைவான எழுத்துக்களுக்கான விசைகளைக் கற்றாலே போதுமானது. பிற எழுத்துக்கள் மேற்கூறிய எழுத்துக்களின் கூட்டு விசையாகவே அமைகின்றன.
கணினியிலும் இணையத்திலும் தமிழைத் தட்டச்சு செய்ய உதவும் மென்பொருள்கள் பல இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றில் சிறந்த மூன்று இலவச மென்பொருள்கள்:
பதிப்பு-250: பனேசியா ட்ரீம்வீவர் நிறுவனத்தின் திறந்த மூல நிரல் கட்டமைப்பில் உருவானது. இம்மென்பொருளை பதிவிறக்க: http://pdsoftware.in/pathippu.html
இ-கலப்பை: யுனிக்கோட் எழுத்துருவை தட்டச்சு செய்யப் பயன்படுகிறது. இதனை பதிவிறக்க: http://thamizha.com/ekalappai-tamil99
என்ஹெச்எம் ரைட்டர்: நியு ஹாரிசோன் மீடியாவின் தனியுரிமை மென்பொருள். இதில் யுனிக்கோட் எழுத்துருவுடன் டேம், டேப், ஸ்ரீலிபி, வானவில் வகை எழுத்துருக்களையும் தட்டச்சு செய்ய முடியும். இதனை பதிவிறக்க: http://software.nhm.in/products/writer
*

1 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:
One can unlock iPhone 4 if you are not easily contented with the requirements which are available from an individual's iPhone dealer. Include the down, that you don’t most likely be technology bloggers the knowledgeable. Thanks to the search engines
unlock iphone 4 4.3
Post a Comment