என்றாவது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் எழுத்துருக்களை விண்டோஸ் ஃபாண்ட் போல்டரில் பதியாமல் கணினியில் தனியாக வேறு ஒரு இடத்தில் பதிவு செய்து வைத்துக் கொண்டு தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தலாம். அதற்கு நெக்ஸஸ் ஃபான்ட் மென்பொருள் உதவுகிறது. இந்த மென்பொருளில் எழுத்துருக்கள் உள்ள ஃபோல்டரை திறந்து வைத்திருக்கும் நிலையில் எந்த ஒரு மென்பொருளைத் திறந்தாலும் அதில் தற்போது நெக்ஸஸ் ஃபாண்ட்டில் திறந்திருக்கும் போல்டரில் உள்ள எழுத்துருக்களும் சேர்த்தே காட்டப்படும். எனவே கணினியில் எழுத்துருவை பதியாமலேயே பயன்படுத்த முடியும். மேலும் நாம் கொடுக்கும் தலைப்புக்குரிய எழுத்துருவை பிரிவியூவாக பார்க்கும் வசதி, காப்பி செய்வது, வேறு ஃபோல்டருக்கு மாற்றுவது எனப் பல கூடுதல் வசதிகளும் உள்ளது. இது போர்ட்டபிள் வடிவ இலவச மென்பொருளாகும். இதைத் தரவிறக்கம் செய்யும் முகவரி:
http://xiles.net/downloads/#NexusFont

2 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:
தேவையில்லாமல் எல்லா ஃபாண்ட்களும் நிறுவப்பட்டிருந்தால் பூட்டிங்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். பயனுள்ள கட்டுரையைத் தந்துள்ளீர்கள்.
இக்கட்டுரைப் படத்தில் உள்ளதுபோன்ற நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் ஃபாண்ட் பதிவிறக்க
http://tamilcpu.blogspot.com/2011/01/blog-post.html
முதல் மழை
அருமையான தகவலை தெதுள்ளீர்கள்.நன்றி நண்பரே
Post a Comment