மேஜைக் கணினிகளில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்துவதிலிருந்து மக்களை விடுவிக்க லினக்ஸ் மூலமாக செய்த முயற்சி தோல்வியடைந்தது.
ஆயினும், லினக்ஸ் ஆர்வலர்கள் கவலைப்படவில்லை. காரணம் கடந்த 20 ஆண்டுகளில் இயங்குதளம், இணையம், கைபேசி என்று லினக்ஸ் சாதித்தது ஏராளம்.
இலவச மென்பொருளாக இருந்தாலும், வணிக மென்பொருள்களான விண்டோஸ் மற்றும் ஆப்பிள் மேக் ஆகியவற்றிற்கு சரியான போட்டியாக லினக்ஸ் உள்ளது.
பொழுதுபோக்காக தொடங்கியதாக இருந்தாலும், இன்று கூகுள், ஃபேஸ்புக், அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் அளவு
வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
இன்று சூப்பர் கம்ப்யூட்டிங் உலகில் முன்னணிப் பயன்பாட்டில் லினக்ஸ் உள்ளது. இணைய வழங்கிகளில் 50 முதல் 80 சதம் அளவில் பயன்படுத்தப்படுகிறது.
இன்று உலகில் அதிகமாக விற்பனையாகும் கூகுளின் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில் லினக்ஸ் திறந்த மூல நிரல் பதிப்பே பயன்படுத்தப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள விண்டோஸ் 7 ஸ்மார்ட் போன்கள் தற்போது சந்தையில் நுழைந்துள்ளன. அவற்றால் ஆண்ட்ராய்ட் இடத்தைப் பிடிப்பது என்பது அத்தனை சுலபமல்ல.

1 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:
பதிவு சூப்பர்
Post a Comment