விண்டோஸ் 7 (Windows 7) பதிப்பின் வெற்றியைத் தொடர்ந்து மேலும் புதிய வசதிகளுடன் இவ்வியக்கத் தொகுப்பை வடிவமைத்து வருகிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
இத்தொகுப்பு அடுத்த தலைமுறைக் கணினிப் பயன்பாடு என்று கூறப்படும் ஸ்மார்ட் போன் (Smart Phone), டேப்ளட் பிசி (Tablet PC) ஆகியவற்றிலும் பயன்படுத்தக் கூடிய வகையில் தயாரிக்கப்படுவது இதன் சிறப்பம்சமாகும்.
மேலும் இதனை விற்பனை செய்யவும், கூடுதல் மென்பொருள்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளவும் வசதியாக விண்டோஸ் ஸ்டோர் (Windows Store) என்ற ஆன்லைன் கடையையும் திறக்கிறது மைக்ரோசாப்ட். இது ஆப்பிள் அப்ளிகேஷன் ஸ்டோர் (Apple Application Store) மற்றும் கூகுள் ஆண்ட்ராய்ட் மார்க்கெட் (Google Android Market) ஆகிய வலைத்தள மென்பொருள் விற்பனை நிலையங்களை ஒத்த ஒரு வியாபார யுக்தியாகும்.
இதன் வாயிலாக இணைய இணைப்பின் மூலம் மட்டுமே விண்டோஸ் 8 இயங்கு தளத்தை நிறுவ முடியும் என்ற சூழலை மைக்ரோசாப்ட் உருவாக்கவிருக்கிறது. ஆகவே சிடி/டிவிடிக்களில் இவ்வியங்குதளம் வெளியிடப்படமாட்டாது என்பது உறுதியாகிறது.
இத்தகு யுக்தியைப் பயன்படுத்துவதனால் தற்போது உரிமை பெறாமல் (Pirated Software) பயன்படுத்தி வரும் விண்டோஸ் இயக்கப் பயனரை கட்டண முறைக்கு உட்படுத்துவது எளிதாகும் என்று மைக்ரோசாப்ட் கருதுவதாகத் தெரிகிறது.
மேலும் இந்த இணையதளத்தில் விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான கூடுதல் இயக்க மென்பொருள்களும் (Addon Applications) வழங்கப்படவிருக்கின்றன. இதற்கான மென் நிரல்களை எவர் வேண்டுமானாலும் வடிவமைத்து வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாவா (JAVA), சீ சார்ப் (C#), விசுவல் பேசிக் (Visual Basic) ஆகிய நிரல் மொழி
களைப் பயன்படுத்தி இத்தகு அப்ளிகேஷன் மென்பொருள்களை உருவாக்க முடியும். இதற்கான டெம்ப்ளேட்கள், டூல்ஸ் ஆகியவற்றை மைக்ரோசாப்ட் நிறுவனமே வழங்குகிறது.
.

0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:
Post a Comment