இணையத்தில் புதிது: 7 in 1 கோப்பு பகிர்வான்


நம்முடைய சொந்த தயாரிப்பு மென்பொருள்கள், படங்கள், எம்பி3 கோப்புகள் போன்றவற்றை இணையத்தில் பகிர்ந்துகொள்ள இடமளிக்கும் பல டவுன்லோட் சர்வர்களை நாம் பயன்படுத்துகிறோம். நம்முடைய கோப்புகளை பொதுவாக ஒரு சர்வரில் வைப்பதைவிட இரண்டு மூன்று சர்வரில் போட்டுவைத்தால் தேவலை என்று எண்ணுவோம். ஆனால் நமக்கு இணைய வேகமும் நேரமும் ஒத்துழைப்பதில்லை. அதேபோல இவற்றில் பணம் செலுத்தி உறுப்பினரானால் மட்டுமே அடுத்தடுத்த கோப்புகளையோ, ஒரே நேரத்தில் பல கோப்புகளையோ டவுன்லோட் செய்யமுடியும். இலவசம் என்றால் சிறிது நேரம் காத்திருக்கவேண்டும். அப்படியில்லாமல் ஒரே கோப்பு பல சர்வர்களில் இருந்தால் ஒரே சமயத்தில் நமக்கு சாதகமான சர்வரில் டவுன்லோடு செய்துகொள்ளமுடியுமே என்று பலரும் எதிர்பார்க்கிறோம். இதற்கென்று ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் அப்லோடு செய்ய விரும்பும் பைல் அல்லது ஏற்கனவே உள்ள பகிர்ந்துகொள்ளப்பட்ட இணையதளத்தின் முகவரியை கொடுத்தால் போதும். தானாகவே ஒரே சமயத்தில் ரேப்பிட்சேர்
, டெபாசிட் பைல், சென்ட்ஸ்பேஸ் (Send Space), மெகா அப்லோட் (Mega Upload), ஈஸிசேர்(, பைல் பேக்டரி (File Factory), நெட்லோட் (Net Load) மீடியா பைர் (Media Fire), மெகா சேர் (Mega Share), ஜிப்பி சேர் (Zippi Share), டூ சேர்டு (Twoshared), இசட் சேர் (ZShare), பிளை அப்லோட் போன்ற பல்வேறு தளங்களில் உங்களுக்கு வேண்டிய 7 தளங்களை மட்டும் தேர்வு செய்தபின் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுத்துவிட்டு பைலை அப்லோட் செய்துகொள்ளலாம். டவுன்லோட் லிங்க்கை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்துவிடும்.
இந்த புதிய சேவையை இந்த முகவரியிலிருந்து பெறலாம்.
http://mirrorcreator.com/index.php Related Posts with Thumbnails

தேர்தல் நடைமுறைகள் - 01

  • நாடாளுமன்ற மக்களவை அல்லது சட்டப்பேரவைத் தேர்தலில் ஒருவர் போட் டியிட குறைந்தபட்ச வயது என்னவாக இருக்க வேண்டும்?
    வேட்புமனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள் ளப்படும் நாளன்று ஒருவருக்கு வயது குறைந்தது 25 ஆண்டுகளாக இருக்க வேண்டும்.
  • ஒரு தொகுதியிலும் வாக்காளராகப் பதிவாக செய்து கொள்ளாத ஒருவர் தேர் தலில் போட்டியிட முடியுமா?
    முடியாது. தேர்தலில் போட்டியிட நடைமுறையில் உள்ள வாக்காளர் பட்டியலில் வாக்காள ராகப் பதிவு செய்து கொண்டு இருக்க வேண்டும்.
  • ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் வாக்காளராக பதிவு செய்து கொண்டுள்ள ஒருவர் நாடாளுமன்றத் தேர் தலில் வேறொரு மாநிலத்தில் இருந்து போட்டியிட முடியுமா?
    முடியும். ஆனால், அஸாமின் தன்னாட்சி உரிமை பெற்ற மாவட்டங்கள், லட்சத் தீவுகள், சிக்கிம் ஆகிய தொகுதிகளிலிருந்து போட்டியிட முடியாது.
  • ஒருவர் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் ஷெட்யூல்டு வகுப்பு பிரிவைச் சேர்ந்தவராக இருந்தால், மற்றொரு மாநிலத்தில் ஷெட்யூல்டு வகுப்பினருக்காக ஒதுக் கப்பட்ட தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட முடியுமா?
    முடியும். ஒரு மாநிலத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந் தவராக இருப்பவர் மற்றொரு மாநிலத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு பழங்குடியினருக்காக ஒதுக் கப்பட்ட தொகுதியிலிருந்து போட்டியிடலாமா? முடியும். ஆனால் லட்சத்தீவுகள், அஸாமின் தன் னாட்சி உரிமைபெற்ற மாவட்டங்கள் அஸாமின் பழங்குடியினர் பகுதிகளில் போட்டியிட முடியாது.
  • ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர், மற்றொரு மாநில சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து போட்டியிடலாமா? முடியாது. ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர், மற்றொரு மாநில பழங்குடியின உறுப்பினர், அவர் வாக்காளராக உள்ள மாநில சட்டப்பேரவைக்கு பழங்குடியினத்தவருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியிலிருந்து போட்டியிடலாமா?
    முடியாது.
  • ஷெட்யூல்டு வகுப்பையோ அல்லது பழங்குடியினர் சமூகத்தையோ சேர்ந்தவராக உள்ள ஒருவர் பொதுத் தொகுதியிலிருந்து போட்டியிட முடியுமா?
    முடியும்.
  • ஏதோ ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு இரண்டு ஆண்டு கால சிறைத் தண்டனை பெற்றவர் தேர்தலில் போட்டியிட முடியுமா?
    முடியாது.
  • ஒருவேளை அந்த நபரின் மேல்முறையீடு பைசல் செய்யப்படாத நிலையில் அவர் ஜாமீனில் இருந்தால் தேர்தலில் போட்டியிட முடியுமா?
    முடியாது. ஒருவர் தண்டனை பெற்ற பிறகு ஜாமீனில் இருந் தாலும், அவரது மேல் முறையீடு பைசல் செய்யப் படாது இருந்தாலும் உச்சநீதி மன்றத்தின் முடிவுப்படி அவர் தேர்தலில் போட்டியிடத் தகுதி இல்லாதவர் ஆவார். ஆனால், அவர் தண்டனை நிறுத்திவைக் கப்பட்டு இருந்தால் அவர் போட்டியிட முடியும்.
  • ஒருவர் சிறையில் இருந்தால் தேர்தலில் வாக்களிக்க முடியுமா?
    முடியாது. இத்தகையவர்கள் சிறையில் இருந்தால் அவர்கள் எந்த தேர்தலிலும் வாக்களிக்க முடியாது. சிறைத்தண்டனை பெற்று சிறையில் இருந்தாலும் ஓரி டத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல் லப்படும்போது காவல்துறையின் சட்டப்பூர்வ காவ லில் இருந்தாலும் அவர் வாக்களிக்க முடியாது.
  • ஒருவர் ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில்
    வைக்கப்பட்டிருந்தால், தேர்தலில் வாக்களிக்க முடியுமா?
    முடியும். அவர் அஞ்சல் வாக்குச்சீட்டு மூலம் வாக்க ளிக்க முடியும்.
  • ஒவ்வொரு வேட்பாளரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்?
    ரூ.10 ஆயிரம்.
  • நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஷெட்யூல்டு வகுப்பினர் அல்லது பழங்குடியினருக்கு இந்தப் பிணையத் தொகையில் ஏதேனும் சலுகை அளிக்கப்படுமா?
    ஆமாம், இந்தத் தொகை ரூ.5 ஆயிரம் ஆகும்.
  • சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்குச் செலுத்த வேண்டிய பிணையத் தொகை எவ்வளவு?
    ரூ. 5 ஆயிரம்.
  • சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ஷெட் யூல்டு வகுப்பு அல்லது பழங்குடி இனத்தைச் சேர்ந் தவருக்கு பிணையத் தொகையில் சலுகை ஏதேனும் உண்டா?
    ஆம், இது ரூ.2500 ஆக இருக்கும்.
  • ஒருவர் ஷெட்யூல்டு வகுப்பையோ அல்லது பழங் குடி இனத்தவராகவோ இருந்து பொதுத் தொகுதி யிலிருந்து போட்டியிட்டால், நாடாளுமன்றத் தேர் தலுக்கு அல்லது சட்டப்பேரவைத் தேர்தலுக்கு செலுத்த வேண்டிய பிணையத் தொகை எவ்வளவு?
    நாடாளுமன்றத் தொகுதிக்கு இந்தத் தொகை ரூ.5000, சட்டப்பேரவைத் தொகுதிக்கு ரூ.2500.
  • எந்த வேட்பாளர் பிணையத் தொகையை இழக் கிறார்?
    ஒரு தொகுதியில் பதிவான செல்லத்தக்க வாக்கு களில் 6ல் ஒரு பங்கை பெறத் தவறும் வேட்பாளர் பிணையத் தொகை இழப்பார்.
  • அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சியின் வேட்பாளராக இருப்பவரின் வேட்பு மனுவை எத்தனைபேர் முன் மொழிய வேண்டும்?
    ஒருவர்போதும்,
  • ஒருவர் சுயேட்சை வேட்பாளராகவோ அல்லது பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியைத் சேர்ந்தவராகவோ இருந்தால் வேட்புமனு வை எத்தனை பேர் முன்மொழிய வேண்டும்?
    பத்து பேர்.
  • நாடாளுமன்றத்திற்கோ சட்டப்பேரவைக்கோ ஒருவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு எத்தனைத் தொகுதியிலிருந்தும் போட்டியிட முடியுமா?
    முடியாது. பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத் திற்கோ அல்லது சட்டப்பேரவைக்கோ 2க்கும் மேற் பட்ட தொகுதியிலிருந்தும் போட்டியிட முடியாது.
  • அதே சமயத்தில் இந்த இரு அவைகளில் ஏதேனும் ஒன்றிற்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கும் இதே கட்டுப்பாடு உண்டா?
    ஆமாம், தேர்தல் ஆணையம் ஒரே சமயத்தில் இடைத்தேர்தல்களை நடத்தினால், ஒரே அவைக்கு நடைபெறும் இடைத் தேர்தல்களில் இரண்டுக்கு மேற் பட்ட இடங்களில் ஒருவர் போட்டியிட முடியாது.
  • அதேசமயத்தில் இந்த இரு அவைகளில் ஏதேனும் ஒன்றிற்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டி யிடுவதற்கும் இதே கட்டுப்பாடு உண்டா?
    ஆமாம், தேர்தல் ஆணையம் ஒரே சமயத்தில் இடைத் தேர்தல்களை நடத்தினால், ஒரே அவைக்கு நடைபெறும் இடைத்தேர்தல்களில் இரண்டுக்கு மேற்பட்ட இடங்களில் ஒருவர் போட்டியிட முடி யாது.
  • ஒரே தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட எத்தனை வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும்?
    நான்கு.
  • தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு ஒருவர் ஊர்வல மாகச் செல்லலாமா?
    முடியாது. தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தைச் சுற்றி 100 மீட்டர் தொலைவிற்குள் வர அதிகபட்சமாக மூன்று வாகனங்கள்தான் அனுமதிக்கப்படும். அதைப் போன்றே வேட்பாளரையும் சேர்த்து அதிகாரியின் அலுவலகத்திற்குள் அதிகபட்சமாக 5 பேர் தான் அனுமதிக்கப்படுவார்கள்.
  • தேர்தல் அதிகாரி வேட்பு மனுக்களை பரி சீலனைக்கு எடுத்துக் கொள்ளும்போது எத்தனை பேர் அனுமதிக்கப்படுவார்கள்?
    வேட்பாளர், அவருடைய தேர்தல் பிரதிநிதி, மனுவை முன்மொழிபவர் மற்றும் ஒருவர் (அவர் வழக் குரைஞராக இருக்கலாம்) வேட்பாளரால் எழுத்து மூலம் அங்கீகரிக்கப்பட்டவர் - வேட்புமனு பரிசீலனையின்போது இருக்கலாம்.
  • ஒரு வேட்பாளரின் வேட்புமனு மீது ஆட்சேபம் எடுத்துரைக்கப்பட்டால், இந்த ஆட்சேபத்திற்குப் பதில் அளிக்க வேட்பாளர் கால அவகாசம் கோரி னால், தேர்தல் அதிகாரி அவகாசம் தர முடியுமா?
    முடியும். தேர்தல் அதிகாரி ஆட்சேபணை மீதான விசாரணையை அடுத்த நாள் வரைக்கோ அல்லது அதற்கு அடுத்த நாள் வரைக்குமோ ஒத்திவைக்கலாம். ஆனால் அந்த கால அவகாசம், அன்று முற்பகல் 11 மணி வரைதான் அளிக்கப்படும். வேட்புமனுக்களை விலக்கிக் கொள்ளுவதற்கான நாள் அன்று பிற்பகல் 3 மணிக்கு முன், தேர்தல் அதிகாரி விசாரணையை முடிக்க வேண்டும்.
Related Posts with Thumbnails

நவீன பேனாக் கத்தி


இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் பல பழைய பொருட்கள் வழக்கொழிந்து வருகின்றன. சில மட்டுமே நவீன மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து புதிய மாற்றங்களைத் தாங்கி வெளிவருவதும், அதனால் சந்தை வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வதும் நிகழ்வு. அத்தகைய வரிசையில் புதியதாக மாற்றம் பெற்றிருப்பது, பலரது அன்றாட பயன்பாட்டில் இருக்கும் பேனாக் கத்தி.
இதில் செய்யப்பட்டிருக்கும் புதிய வசதி 32 ஜிபி அளவு நினைவகத்துடன் கூடிய யுஎஸ்பி பிளாஸ் டிரைவ் (கையடக்க தகவல் சேமிப்பகம்), புளூடூத் தொழில்நுட்பம் மற்றும் லேசர் ஸ்கேனர் ஆகியவையும் வழக்கமான கத்திகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் பிளார் டிரைவில் சேகரிக்கப்படும் தகவல்கள் பாதுகாக்க பயனரின் கைரேகையை சோதித்து அனுமதிக்கும் வசதியும் உள்ளது. இக்கத்தி கடந்த வாரம் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த மின்னணு நுகர்வோர் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை சுமார் 250 யூரோக்கள் இருக்கும் என தெரிகிறது.
பேனாக் கத்தியை முதன்முதலில் உருவாக்கிய விக்டோரிநாக்ஸ் நிறுவனமே இதனையும் வெளியிட்டிருக்கிறது. 1884ல் கார்ல் எல்ஸ்னர் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் அவரது பேரன் சார்லஸ் எல்ஸ்னரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆண்டுக்கு 13 மில்லியன் கருவிகளை தயாரித்துவரும் விக்டோரிநாக்ஸ், இதில் பெரும்பாலானவற்றை சுவிட்சர்லாந்து ராணுவப் பயன்பாட்டிற்கே விற்பனை செய்துவிடுகிறது. Related Posts with Thumbnails

அழியும் டால்பின்கள்





சிறுவர்கள் வளர்ந்து வாலிபத்தை அடைவதை குறிக்கும் வகையில் கேல்ட்ரோன் (calderon) என்ற அதிபுத்திசாலி இன டால்பினை பலியிடும் மூடப்பழக்கம் டென்மார்க் அரசு ஆளுகைக்கு உட்பட்ட ஃபரோய் தீவில் (in the Faroe Islands, Denmark ) நடைமுறையில் உள்ளது. இக்கொடூர செயலை கண்டித்து உலகம் முழுவதுமிருந்து கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன. உடனடியாக இவ்வழக்கத்தை தடை செய்யவேண்டுமென்று டென்மார்க் அரசுக்கு பிராணிகள் நல ஆர்வலர்கள் பலரும் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.

Watch this video

www.youtube.com/watch?v=0LcVeaO6Ioc&feature=related

send an email to the Danish Prime Minister, use this link

www.whales.org.au/alert/filetter.html Related Posts with Thumbnails

wibiya widget