நீங்கள் கணினியில் அதிக நேரம் பணிபுரிபவரா?

கணினியில் அதிக நேரம் பணிபுரிபவர்களுக்கு பல்வேறு விதமான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. நாம் கணினியை வைத்திருக்கும் இடம், உட்காரும் நிலை, கீபோர்டு, மெளஸை தவறாகக் கையாளுதல் ஆகியவையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
தற்போது 100 கோடிக்கும் அதிகமான கணினிகள் பயன்பாட்டில் உள்ளன. எதிர்வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் பன்மடங்கு உயரும். அப்போது கணினி சார்ந்த பாதிப்புகளால் பல்லாயிரம் மக்கள் தாக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
எனவே, காற்றோட்டமான அறையில், தெளிவான, சரியான வெளிச்சத்தில், அளவான ஒளியுடன், ஒன்றரை அடி தூரத்தில் இருக்கும்படியான கணினித் திரையும், பயன்படுத்த எளிதான கீபோர்டு மற்றும் மௌசும் இருக்க வேண்டும்.
கீபோர்ட், மௌஸ் உபயோகிக்கும்போது மணிக்கட்டை வளைக்காமல் நேராக கைகளை  வைத்தும், முதுகுப்பகுதி ஒரே நேர் கோட்டில் இருக்கும்படியாக (படம்)  சாய்வதற்கு ஏற்ற நாற்காலியையும் பயன்படுத்த வேண்டும். அதே போல தொடர்ந்து கணினி முன்பாக அமர்ந்திருக்காமல் அரை மணி நேரத் திற்கு ஒரு முறை எழுந்து சிறிது நடந்து பின் அமர்வதும், கைகளை வளைத்து சிறிது பயிற்சி செய்வதும் நல்லது. அதேபோல அடிக்கடி கண் இமைகளை மூடித்திறப்பதும் கண்களுக்கு நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். Related Posts with Thumbnails

வேதியியல் மாணவர்களுக்கு பயனுள்ள இணையதளம்

வேதியியல் ( Chemistry ) துறை சார்ந்த மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு உதவிடும் வகையில் பீரியடிக் டேபிள் ஆப் எலிமெண்ட்ஸ் (Periodic Table of Elements) என்ற பெயரில் ஐசோடோப்புகளின் வேதிவினை செயல்பாடுகளை விளக்கும் வகையில், அழகிய வண்ணத்தில் குறியீடுகளுடன் கூடிய தெளிவான விளக்கப் படங்கள், தகவல்கள், வீடியோக்களுடன் இந்த இணையதளம் அமைந்துள்ளது. இணையதள முகவரி: http://ptable.com/
. Related Posts with Thumbnails

தமிழில் கல்வித் தகவல்களைத் தரும் இணையதளம்

மாணவர்களின் படிப்பிற்கு தேவையான அனைத்து தகவல்களையும் இணையத்தில் தமிழிலேயே பெற்றிடலாம். அதற்கென்று ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் வினாத்தாள்கள், படக்குறிப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கிடைக்கிறது. இதில் சாதாரண தரம், உயர் தரம் என்று இருவகைக் கல்வி முறைக்கும் தனித்தனியாக பாடங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
கணிதம், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம், வரலாறு, உயிரியல், பௌதீகவியல், நடனம், வணிகம், இராசாயனவியல், புவியியல் போன்ற பாடங்களில் மாதிரித் தேர்வையும் எழுதி தங்களின் திறனை பரிசோதித்து கொள்ளலாம். மேலும் வெளிநாட்டுக் கல்வி, பல்கலைக் கழகங்கள் குறித்த தகவல்கள், கணினித் தொழில் நுட்பம், மென்பொருள், இணையம் தொடர்பான தகவல்கள் எனப் பலவும் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கியுள்ளது. மாணவர்களுக்கு பயனுள்ள தளமாக இது இருந்து வருகிறது.
இதன் இணைய முகவரி: http://www.gatherpage.com/
. Related Posts with Thumbnails

இ-மெயிலைப் பாதுகாப்பது எப்படி?


இன்றைய நாளில் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாக இ-மெயில் மாறியிருக்கிறது. இ-மெயில் சேவையை இலவசமாகப் பல நிறுவனங்கள் தருவதால் ஒருவரே எண்ணற்ற இமெயில் முகவரிகளை உருவாக்கிக் கொள்வது என்பது இன்று சர்வ சாதாரண விஷயம்.
அதே நேரத்தில் இன்று தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி ஒருவருடைய இமெயில் தகவல்களை திருடுவதும் அதிகரித்து வருகிறது. இத்தகைய தாக்குதலிலிருந்து நம்முடைய இமெயில் முகவரியை எப்படிப் பாதுகாப்பது என்பது பற்றி அறிந்து கொள்வோம்.
இமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்டைத் திருட ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்கள் பல்வேறு வகையான வழிமுறைகளைக் கையாளுகின்றனர். அதில் ஒன்று ஸ்பை வேர் என்ற நச்சு நிரல்களை உருவாக்கி இணையம் வழியாக பரப்பியும், போலி அல்லது பொழுது போக்கு இணைய தளங்களில் பதிவு செய்யச் சொல்லி அதன் மூலமாகத் தகவல்களைத் திருடுவது எனப் பல வழிமுறைகளைக் கையாளு கின்றனர்.
இவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள முதலில் செய்ய வேண்டியது இமெயில் முகவரி களைத் தேவையில்லாத தளங் களில் பதிவு செய்வதைத் தவிர்ப்பது அல்லது அதற்கென வேறு ஒரு இமெயில் முகவரியை உருவாக்கிப் பயன்படுத்தலாம்.
நம் அலுவலகம் அல்லது வீட்டில் பயன்படுத்தும் கணினி யில் ஆண்டிவைரஸ், ஆண்டி ஸ்பைவேர், ஆட்வேர் ரிமூவர் ஆகிய மென்பொருள்களை நல்ல நிலையில் இயங்கும்படி அப்டேட் செய்து வைத்துக் கொள்ளவும். வெளி இடங் களில் இமெயிலை ஓப்பன் செய்து பார்ப்பதை தவிர்த்தி டுங்கள்
அதேபோல இமெயிலை அனுப்பும்போதும் கவனமாக இருக்கவேண்டும். பலருக்கும் ஒரே செய்தியை அனுப்ப வேண்டியிருந்தால் BCC என்ற கட்டத்திற்குள் முகவரிகளை உள்ளிட்டு அனுப்பவும். இதனால் பெறுபவர்கள் நாம் அனுப்பிய பிற நண்பர்களுடைய முகவரிகளைப் பார்க்க முடியாத வகையில் செய்திட முடியும்.
பாஸ்வேர்ட் திருட்டைத் தடுக்க ஜிமெயில் மற்றும் யாகூ மெயில் பயன்படுத்துவோருக்கு அந்த நிறுவனங்களே கூடுதல் வசதியாக செல்போன் வழிப் பாதுகாப்பைத் தருகின்றன.
இதனைப் பயன்படுத்த நம்முடைய இமெயில் அக்க வுண்ட்டில் நுழைந்து அக்க வுண்ட் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று செல்போன் எண்ணைப் பதிவு செய்யலாம். பதிவு செய்த வுடன் உடனடியாக நம்முடைய செல்போனுக்கு எஸ்எம்எஸ் ஒன்று அனுப்பப்படும். அதில் கொடுக்கப்படும் பாஸ்வேர்டை தளத்தில் பதிந்து உறுதிப்படுத் தவும். அதன்பிறகு நீங்கள் எப்போது பாஸ்வேர்டை மாற்ற முயன்றாலும் உடனடியாக உங்கள் செல்போனுக்கு இதே போன்ற பாஸ்வேர்ட் ஒன்று அனுப்பப்படும்.
இதன் மூலம் மற்றவர்கள் நமக்குத் தெரியாமல் பாஸ் வேர்டை மாற்ற முயற்சித்தால் கண்டுபிடித்துவிடமுடியும்.
. Related Posts with Thumbnails

wibiya widget