தேடல் இங்கிருந்தே துவங்கும்...

ஜனவரி 15 : விக்கிப்பீடியாவுக்கு பிறந்த நாள்

எப்போதும் எதையாவது தேடிக் கொண்டிருக்கும் மனித மூளைக்கு அறிவு சார் தேடலில் முன்பெல்லாம் புத்தகங்களே வடிகாலாயிருந்தன. புத்தகங்களைத் தேடுவதும்,  படிப்பதும், படித்ததை பகிர்வதும் ஓர் அலாதியான அனுபவம். ஆனால் இன்றைய நவீன இணைய உல கில் தகவல் தேடல் என்பது மிகச் சுலபமானதாக மாறியிருக்கிறது. கூகுள், யாகூ, பிங் எனத் தேடித்தர இணையதளங்கள் நிறைய உண்டு.
நாம் அறிந்த சச்சின் டெண்டுல்கரைப் பற்றியோ, நாம் அறியாத அண்டார்டிகாவின் பனி மலை, அமேசான் காடுகள் என எதைக் குறித்த தேடலானலும் பெரும்பாலான தேடல் முடிவுகளில் முன்னிலையில் வந்து நின்று தகவல் தரும் தளமாக விக்கிபீடியாவைப் பார்க்க முடியும்.
ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால் 2001, ஜனவரி 15இல் துவக்கப்பட்ட இத்தளம் இன்று உலகம் முழுவதிலுமிருந்து 36 கோடிக் கும் அதிகமான மக்க ளால் படிக்கப்படும் தளமாக உள்ளது.
விக்கிபீடியா கணினி உலகின் கலைக்களஞ்சியம் என்ற அங்கீகாரத்துடன் கடந்த 10 ஆண்டுகளில் 270 மொழிகளில், 1 கோடியே 70 லட்சம் கட்டுரைகளுடன் இன்று  மாபெரும் வளர்ச்சியை பெற்றுள்ளது. இதுவரை வெளிவந்துள்ள என்சைக்ளோபீடியா என்றழைக்கப்படும் கலைக்களஞ்சியத் தொகுப்புகளையெல்லாம் விஞ்சி, அதிகமான தகவல் கட்டுரைகளைத் தாங்கி நிற்கிறது. உலகில் பேசப்படும் பெரும்பாலான மொழிகளில் கட்டுரைகள் கிடைப்பதே இதன் பலம். அகரவரிசை, வார்த்தைத் தேடல், பொருள் வாரியான தேடல் என்று எல்லா வகையிலும் கட்டுரைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
விக்கிபீடியா திட்டம் ஓப்பன் சோர் எனப்படும் சுதந்திர திறமூல வகை சார்ந்த தாகும். அதனால் எவரும் எளிதில் அணுகி தங்களுக்குத் தெரிந்த தகவல்களைக் கொண்டு கட்டுரைகள் எழுதலாம் அல்லது எழுதப்பட்ட கட்டுரைகளில் பிழைகள் இருந்தால் நீக்கலாம் - மேம்படுத்தலாம். இதற்காக விக்கி பீடியாவில் பயனராக பதிவு செய்து கொண்டால் மட்டும் போதும். எவ்விதக் கட்டணமும் கிடையாது. தகவல் தேடுபவர்களும் முழு சுதந்திரத்துடன் தகவல்களைப் பெறலாம்.
ஆனால், இத்தகைய திறந்த மூலத் தன்மை தவறான தகவல்களைப் பதிவதற்கும் காரணமாக உள்ளதால் இதன் நம்பகத்தன்மை குறித்த சந்தேகம் எப்போதும் உண்டு. கடந்த கால அனுபவங்களைக் கொண்டு பார்க்கையில் இத்தளத்தில் அத்தகைய தவறான தகவல்கள் குறுகிய காலத்திலேயே நீக்கப்பட்டு சரிசெய்யப்பட்டிருக்கின்றன என்ற விக்கிபீடியாவின் கருத்தும் கவனிக்கத்தக்கது. இதற்கென விக்கிப்பீடியாவின் அங்கீகாரத்துடன் உலகமெங்குமிருந்து விக்கிகள் (உறுப்பினர்கள் இப்பெயரில்தான் அழைக்கப்படுகிறார்கள்)  பலர் தன்னார்வத்துடன் பங்காற்றி வருகின்றனர்.
விக்கீபீடியா தளத்தை விக்கிமீடியா என்ற அமைப்பு நிர்வகித்து வருகிறது. இதன் துணைத் திட்டங்கள் விக்கி செய்திகள், விக்கி புக்ஸ், விக்சனரி, விக்கி மேற்கோள்கள், விக்கி பல்கலைக்கழகம்,  விக்கி இனங்கள், விக்கி பொது, விக்கி மூலம் ஆகியவையாகும்.
விக்கிபீடியா தளத்தின் தமிழ் பதிப்பில் சுமார் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. சுமார் 1300 பயனர்கள் பதிவு செய்திருந்தாலும், சில நூறு பேரே தொடர்ந்து தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். தமிழில் அதிகக் கட்டுரைகளை உருவாக்க விக்கிபீடியா வகுப்புகள் தமிழகத்தில் பல இடங்களிலும் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. Related Posts with Thumbnails

ஆன்லைனில் ஒரு கணக்குப் புலி

நம்மிடம் உள்ள கால்குலேட்டர்கள் கூட்ட, கழிக்க, பெருக்க, வகுக்க, சதவீதம் காண என நாம் கொடுக்கும் எண்களைக் கொண்டு மட்டுமே கணக்கீடுகளைச் செய்யும்.

ஆனால் குறிப்பிட்ட தூரத்தை கிலோ மீட்டரிலிருந்து சென்டி மீட்டர், மீட்டர், அடி, மைல், கடல் மைல் எனப் பல்வேறு அளவுகளுக்கும் மாற்ற, சென்டி கிரேடில் உள்ள வெப்ப அளவை பாரன் ஹீட் அளவுக்கு மாற்ற, இடத்தின் நீள, அகலத்தை வைத்து பரப்பளவை கணக்கிட, அல்ஜீப்ரா, மெட்ரிக் கணக்கீடுகள், உடல் உயரம், பருமன், கலோரி கணக்கிடுதல், கட்டடக் கட்டுமானத் துறைக்கான கணக்கீடுகள் என 36 வகையான கணக்கீடுகளை இத்தளத்தில் மேற்கொள்ளமுடியும். அத்துடன் சில கணித விளையாட்டுக்களும் இடம்பெற்றுள்ளன. மாணவர்களுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் பயனுள்ளது இத்தளம்.
தள முகவரி: http://easycalculation.com/ Related Posts with Thumbnails

கணினித்துறைக் கணக்குகள்

தொழில்நுட்ப வல்லுநர்களைத் தவிர்த்து சாதாரண கணினிப் பயனர்களுக்காக எழுதப்பட்டது இக்கட்டுரை. தீக்கதிர் நாளிதழின் கணினிக்கதிர்  பகுதியில் வெளி‌வந்தது.
கணினித்துறை வளர்ச்சி என்பது இன்று வேகம் (Speed) மற்றும் கொள்ளளவை (Storage) அதிகரிப்பதையே மையமாகக் கொண்டிருக்கிறது. கம்ப்யூட்டர் ஹார்ட்வேர்கள் வேகத்தை ஹெர்ட்ஸ் (Hertz) அளவிலும், சேமிப்பகங்களின் அளவுகளைக் குறிப்பிடும் போது பைட் (Byte) என்றும் குறிப்பிடுகிறோம். இந்த அலகுகள் எந்த அடிப்படையில்  அளக்கப்படுகின்றன..?
பைட் (Byte)
ஃபைல்கள் மற்றும் சேமிப்பகங்களை அளக்கும்போது இந்த அளவைப் பயன் படுத்துவோம். கிலோ பைட், மெகா பைட், கிகா பைட் மற்றும் டெரா பைட் ஆகியவை தற்போது அதிகமாக புழக்கத்தில் உள்ள அளவுகளின் பெயராகும்.
கம்ப்யூட்டரின் ஒவ்வொரு செயலும் பிட் என்ற சிறிய அலகால் அளக்கப்படுகின்றது. ஒரு பிட் என்பது கணினியின் அடிப்படை செயல்முறையான பைனரியில் ஒன்று (1) அல்லது பூச்சியம் (0)மாகக் கருதப்படும்.  நாம் தகவல்களைப் பதியும் போது அவை ஒன்றுகளாலும் பூச்சியத்தாலும் மட்டுமே நிரப்பப்படுகின்றன.  பைனரி டிஜிட் (Binary Digit) எனும் வார்த்தைகளிலிருந்ததே பிட் (Bit) எனும் வார்த்தை உருவானது. ஒரு பிட் அளவை மட்டும் கொண்டு ஒரு எழுத்தையோ அல்லது குறியீட் டையோ உருவாக்கிவிட முடியாது. ஒன்றுக்கு மேற்பட்ட பிட்டுகள் ஒரு குழு வாக ஒன்று சேரும்போதே அது அர்த்த முள்ள தகவலாக வெளிப்படுகிறது. இவ் வாறு 4 பிட்களின் சேர்க்கையை நிப்பல் (Nibble) என்றும், 8 பிட்டுகள் சேர்ந்தது ஒரு பைட் (Byte) என்றும். 16 பிட்டுகளின் சேர்க்கையை ஒரு வர்ட் (Word) என்றும் கணக்கிடுவர். ஒரு பைட் மூலம் 256 வெவ்வேறான எழுத்துக்களையோ அல்லது குறியீடுகளையோ வெளிப்படுத்தலாம்.
1024 பைட்டுகள் சேர்ந்தது ஒரு கிலோ பைட்டாகும். 1024 கிலோ பைட்டுகள் ஒரு மெகா பைட் (Mega Byte), 1024 மெகா பைட் ஒரு கிகாபைட் (Giga Byte), 1024 கிகா பைட்டுகள் ஒரு டெரா பைட் (Tera Byte),  1024 டெரா பைட் ஒரு பீட்டா பைட் (Peta Byte), 1024 பீட்டா பைட் ஒரு எக்ஸா பைட் (Exa Byte), 1024 எக்ஸா பைட்கள் 1 ஜெட்டா பைட் (Zeta Byte), 1024 ஜெட்டா பைட்கள் 1 யோட்டா பைட்  (Yota Byte) என்றும் கணக்கிடப்படுகிறது.
ஹார்ட் டிஸ்க், பென் டிரைவ், சிடிக்களில் இந்த அளவுகள் மாறுபடும். இவை டெசிமல் (Desimal) என்ற முறையில் 1000 பைட்டுகள் ஒரு கிலோபைட்டாகவும், 1000 கிலோ பைட்டுகள் ஒரு மெகா பைட்டாகவும், 1000 மெகா பைட்டுகள் 1 கிகா பைட்டாகவும் கணக்கிடப்படுகிறது. ஆகவே 100 ஜிபி அளவு ஹார்ட் டிஸ்க்கில் தகவல் பதியும் இடம் 93 ஜிபி என்ற அளவிலேயே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெர்ட்ஸ் (Hertz)
ஒரு நொடியில் நடைபெறும் மின்னி யல் சுழற்சிகளின் எண்ணிக்கையே ஹெர்ட்ஸ் எனப்படும். ஒரு ஹெர்ட்ஸ் அளவு என்பது ஒரு நொடிக்கு ஒரு சுழற்சி நிகழ்வதைக் குறிக்கும். Hertz என்பதை Hz என்று சுருக்கிக் குறிப்பிடுவர். மின்காந்தவியல் குறித்து ஆராய்ச்சி செய்த ஐன்ரிச் ஹெர்ட்ஸ் என்ற ஜெர்மனியரின் பெயரே இந்த அளவிற்கு வைக்கப் பட்டுள்ளது.
10 லட்சம் ஹெர்ட்ஸ் 1 மெகா ஹெர்ட்ஸாகவும்(Mega Hertz), 1000 மெகா ஹெர்ட்ஸ் ஒரு கிகா ஹெர்ட்ஸாகவும் (Giga Hertz), 1000 கிகா ஹெர்ட்ஸ் ஒரு டெரா ஹெர்ட்ஸாகவும்(Tera Hz) கணினி வாய்ப்பாடு வரையறுக்கிறது.
ஒரு பென்டியம் 4 (P IV) கணினியின் இயங்கு திறன் 2.93 கிகா ஹெர்ட்ஸ் (2.93 Ghz) என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே நம்ம ஊரில் தற்போதைய அடிப்படை நிலைக் கணினியாகவும் (Basic Computer) உள்ளது. Related Posts with Thumbnails

போட்டோஷாப் கத்துக்கலாம் வாங்க!

எல்லோருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
 
எல்லோருக்கும ஆசை போட்டோஷாப்  கற்றுக் கொள்ளவேண்டும், அதில் படங்களை வெட்டி ஒட்டி கிராபிக்ஸ் வேலைகள் செய்து ‌பார்க்க வேண்டும் என்று. ஆனால் கற்றுத்தர சரியான ஆள் இல்லையே என்பவர்களுக்காக இந்தப் பதிவு.
போட்டோஷாப் கற்றுத்தரும் டியுட்டர் தளங்கள் இணையத்தில் அநேகம் உண்டு. அவ‌ற்றில் சிறந்தவையாக எனக்குத் தெரிந்ததைத் தந்திருக்கிறேன். படித்துப் பாருங்கள், பிடித்தால் ஓட்டுப் போடுங்கள்.


தமிழ் தளங்கள்
போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்
http://linoj.do.am/publ/82

http://www.computertamil.eu/index.php/photosho.html

நண்பர் வேலன் அவர்களின் பிளாக்கில் போட்டோஷாப் பாடங்கள்

http://tamilpctraining.blogspot.com/


ஆங்கில தளங்கள்
 http://abduzeedo.com/tags/photoshop
You Suck at Photoshop
Tutorial9
PSDTUTS
Good-Tutorials
  Photoshop Lady
  Photoshop Tutorials
  Luxa
Photoshop Contest
PSHero
PSDTop
Photoshop Tutorial
http://www.photoshopessentials.com/ 

போட்டோஷாப் பிரஷ்கள் பெற:
http://findbrushes.com/


.. Related Posts with Thumbnails

wibiya widget