கணினி தொழில்நுட்பம் 2010

இந்த ஆண்டில் கணினித் துறை பல நிலைகளிலும் வளர்ச்சி பெற்றது. 2009ஆம் ஆண்டின் பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட பாதிப்பு  சற்றே குறைந்தது, தொழில் நுட்பத் துறை வளர்ச்சிக்குக்கு சாதகமாக அமைந்தது.
மைக்ரோசாப்ட், ஆரக்கிள், அடோப் மென்பொருள் நிறுவனங்கள் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மென்பொருள்களை அறிமுகப்படுத்தின. புதிய வியாபார முயற்சிகளையும் மேற்கொண்டன.
கூகுள், பேஸ்புக், டிவிட்டர், யாகூ  ஆகிய இணையதள நிறுவனங்களும் பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தின. அதே நேரத்தில் சில பழைய, பயன்பாடு குறைந்த வசதிகளைத் திரும்பப்பெற்றன.
மைக்ரோசாப்ட் பிங் - யாகூ ஒப்பந்தம், பேஸ்புக் - கூகுள் மோதல், விக்கிலீக்ஸ்  ‌‌வெளியிட்ட அமெரிக்க தூதரகக் ‌கேபிள் தகவல்கள், அதைத் தொடர்ந்து ஜூலி‌யன் அஸெஞ்ச் கைது, சீனாவின் அதி‌வேக சூப்பர் கம்ப்யூட்டர் எனப் பல நிகழ்வு‌கள் முக்கிய செய்திகளாயின. அதன் சிறு தொகுப்பே இப்பட்டியல். இது என் நினைவில் நின்றவை மட்டுமே பட்டியலில் உள்ளன. உங்களுக்கு வேறு ஏதேனும் தகவல் தெரிந்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். அவற்றையும் சேர்த்துக் கொள்கிறேன்.

ஜனவரி
 • கூகுள் நெக்ஸஸ் ஒன் ஆண்ட்ராய்ட் போனை வெளியிட்டது.
 • புகழ் பெற்ற ஸ்டார் ஆபிஸ், ஓப்பன் ஆபிஸ், ஜாவா ஆகிய மென்பொ ருள்களை உருவாக்கிய சன் மைக்ரோ சிஸ்டத்தை ஆரக்கிள் நிறுவனம் கையகப்படுத்தியது.

பிப்ரவரி
 • கூகுள் பஸ் சமூக வலைத்தள சேவையை அறிமுகப்படுத்தியது. இது போதிய வரவேற்பைப் பெறவில்லை.
 • கூகுளின் போட்டியை சமாளிக்க மைக்ரோசாப்ட் - யாகூ நிறுவனங்கள் கூட்டாக இணைந்து செயல்படுவதற்கான உடன்படிக்கையை செய்து கொண்டன. இதன்படி பிங்கின் தேடல் நுட்பத்தை யாகூவும், யாகூவின் விளம்பர பரிவர்த்தனையை மைக்ரோசாப்ட்டும் பயன்படுத்திக்கொள்கின்றன.
மே
 • தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கான 3 ஜி அலைக் கற்றை ஒதுக்கீட்டு ஏலம் நடந்தது. இதன் மூலம் அரசுக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி வரையிலான வருமானம் கிடைத்தது. இந்த ஏலமே 2ஜி அலைக்கற்றை ஊழல் தொகையான 1,76,000 கோடி ரூபாயை மதிப்பிட உதவியது.
 • அதிவேக இணையத்திற்கான முயற்சிகளை ‌மேற்கொண்டிருக்கும் கூகுள் இணைய வழியில் தொலைக்காட்சி ஒளிபரப்பை‌ மேற்கொள்ள தி்ட்டமிட்டுள்ளது. இதற்கென  கூகுள் இண்டெர்நெட் டிவியை துவக்குவதாக அறிவித்தது.
ஜூன்
 • உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் உலக இணை ய மாநாடு 2010 கோவையில்  நடத்தப்பட்டது. அர சின் அதிகாரப்பூர்வ எழுத்துருவாக 16 பிட் யுனிக்கோட் அங்கீகரிக்கப்பட்டது.
 • இதே நிகழ்வில் பனேசியா ட்ரீம்வீவர் நிறுவனத்திற்கு சிறந்த தமிழ் மென்பொருள் தயாரிப்பிற்கான விருதும் வழங்கப்பட்டது. 
ஜூலை
 • இந்திய ரூபாய்க்கு புதிய அடையாளச் சின்னம் ஜூலை 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சின்னம் தமிழ் நாட்டைச் சேர்ந்த உதயகுமாரால் உருவாக்கப் பட்டது.
ஆகஸ்ட்
 • இந்திய ரூபாய்க்கான புதிய  சின்னம் யுனிக்கோட் கன்சார்டியத்தால் அங்கீகரிக்கப்பட்டு எழுத்துருவில் சேர்க்கப்பட்டது.
 • கூகுள் ஆர்ப்பாட்டமாக அறிமுகப்படுத்திய கூகுள் வேவ்  தகவல் பரிமாற்ற மென்பொருளின் கட்டமைப்புத் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது. தட்டச்சு செய்யும்போதே   தேடல் முடிவு களை பட்டிய லிடும் இன்ஸ்டன்ட் சர்ச் வசதியை கூகுள் அறிமுகம் செய்தது.
அக்டோபர்
 • மைக்ரோசாப்ட் கிளவுட் கம்ப்யூட்டிங் முறையிலான ஆன்லைன் ஆபிஸ் தொகுப்பான ஆபிஸ் 365-ஐ அறிமுகம் செய்தது.
 • ஆப்பிள் ஐபோன், கூகுள் ஆண்ட் ராய்ட் போனுக்குப் போட்டியாக மைக்ரோசாப்ட் விண்டோஸ் மொபைல் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய மொபைலை சாம்சங், ஹெச்டிசி நிறுவனங்கள் மூலமாக வெளியிட்டது.
நவம்பர்
 • சீனா உலகின் அதிவேக கணினி தயாங்கி-1ஏ சூப்பர் கம்ப்யூட்டரைத் தயாரித்தது. • செல்போன் எண்ணை மாற்றாமல் சேவை நிறுவனத்தை மாற்றிக் கொள்ளும் மொபைல் நெம்பர் போர்ட்டபிலிட்டி (MNP) சேவை முதன் முறையாக  இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில்  அறிமுகமானது.

 • விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்கத் தூதரகங்களின்  தகவல் பரிமாற்ற கேபிள் ரகசியங்களை வெளியிட்டது.  இது அமெரிக்காவின் உண்மை முகத்தை உலகுக்குக் காட்டியது.
டிசம்பர்
 • அமெரிக்காவின் நெருக்குதலால் பேபால், அமெசான் தளங்கள் விக்கிலீக்சுக்கான சேவையை நிறுத்தின. அதனைத் தொடர்ந்து விக்கி லீக்ஸ் அதிபர் ஜூலியன் அஸெஞ்ச் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய் யப்பட்டார். விக்கிலீக்ஸ் தளத்தை முடக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. பின் னர் அஸெஞ்ச் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். • கூகுளுடனான மோதலின் உச்சகட்டமாக பேஸ்புக் இமெயில் சேவையை வழங்கப்போவதாக அறிவித்தது.

 • கூகுள் எர்த் மூலம் உலகின் மூலை முடுக்கெல்லாம் காட்டிய கூகுள் அடுத்ததாக மனித உடலமைப்பை முப்பரிமாணத்தில் பார்க்க  உதவும் கூகுள் பாடி பிரௌசர் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியது. இது வெப் ஜிஎல் (Web GL) என்ற தொழில் நுட்பத்தில் இயங்குகிறது. இதனைப் பார்க்க கூகுள் குரோம் பீட்டா, பயர்பாக்ஸ் 4 பீட்டா பிரளெசர்க்ளை பரிந்துரைக்கிறது. http://bodybrowser.googlelabs.com/
 • கூகுள் இணைய வழியில் இயங்கும் கிளவுட் கம்ப்யூட்டிங் அடிப்படையிலான குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிஆர்-48   (Chrome OS CR-48 Netbook)  ஐ டிசம்பர் 7ல் அறிமுகம் செய்தது.
 • ஓப்பரா பிரௌசரின் 11ஆம் பதிப்பு வெளியானது.
  http://www.opera.com/browser/download/
Related Posts with Thumbnails

1 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

Anonymous said...

Simply wish to say your article is as surprising.
The clarity in your post is just spectacular and i can assume you're an expert on this subject.

Fine with your permission let me to grab your RSS feed to keep updated with forthcoming post.

Thanks a million and please keep up the enjoyable work.

wibiya widget