தற்போது ஸ்மார்ட் போன்கள் என ஆப்பிள், விண்டோஸ், ஆண்ட்ராய்ட் இயங்குதளக் கைபேசிகள் குறிப்பிடப்படுகின்றன. அதேபோல இதே இயங்கு தளங்கள் நிறுவப்பட்ட டேப்ளட் பிசி எனப்படும் பலகைக் கணினிகளும் பயன்பாட்டில் உள்ளன. இக் கையடக்க சாதனங்கள் மூலம் கணினிக்கு இணையான பயன்பாடுகள் இன்று சாத்தியமாகியுள்ளன.
இச்சாதனங்களின் திறனை மேம்படுத்தி புதிய புதிய வசதிகள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன. அந்த வரிசையில் முன்னணியில் இருப்பது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் சாதனமாகும், அடுத்ததாக கூகுள் சார்பு அமைப்பான ஒன் அலையன்ஸின் ஓப்பன் சோர்ஸ் முறையிலான ஆண்ட்ராய்ட் இயங்குதளம் இரண்டாவதாக உள்ளது. அடுத்த
தாக இருப்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 7 இயங்குதளம் ஆகும்.
இதில் ஆப்பிளும், விண்டோசும் மேசைக் கணினியிலிருந்து கைபேசிக்கு மாற்றியமைக்கப்பட்ட இயங்கு தளங்களாகும். ஆனால் ஆண்ட்ராய்ட் செல்பேசி மற்றும் டேப்ளட் பிசிக்களுக்காக வடிவமைக்கப்பட்ட மென்பொருளாகும். தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வெளியிடப்படும் இம்மென்பொருளின் புதிய பதிப்பு அடுத்த ஆண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பதிப்பிற்கு ஐஸ்கிரீம் சாண்ட்விச் ((Ice Cream Sandwich)) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த இயங்குதளம் முப்பரிமாண (3D) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்
டுள்ளது. இதன் மூலம் உரிமையாளரின் முகத்தை அடையாளம் கண்டு இயங்க அனுமதிக்கும் வசதி சாத்தியமாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கார், பைக், வீட்டிலுள்ள மின் விசிறி, விளக்கு ஆகிய மூன்றாம் தர சாதனங்களை புளூடூத் தொழில் நுட்பம் மூலமாக கட்டுப்படுத்தும் வசதி இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடைசியாக வந்த ஆண்ட்ராய்ட் பதிப்பு தோஷிபா ஏடி 200 சாதனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பதிப்பு மேசைக் கணினிகளுக்கு ஏற்புடையதாக இல்லை.
ஆனால், ஐஸ்கிரீம் ஸாண்ட்விச் ஆண்ட்ராய்ட் பதிப்பு இன்டெல் மற்றும் ஏஎம்டி பிராசசர்களில் வேலை செய்யும் திறனுள்ளது. இது மேசைக் கணினிகளுக்கு இணையானது என தொழில் நுட்ப வல்லுனர்களால் பார்க்கப்படுகிறது.
இதனால், கூகுளின் அடுத்த இலக்கு மேசைக் கணினிகளுக்கான ஆண்ட்ராய்ட் இயங்கு தளமாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. ஏற்கனவே கூகுள் குரோம் (Google Chrome OS) இயங்குதளத்தை அறிமுகம் செய்திருந்தாலும் அது பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
தற்போதுள்ள மேசைக் கணினிகளில் மைக்ரோசாப்ட் விண்டோசின் ஆதிக்கமே பெரும்பாலும் உள்ள நிலையில், ஸ்மார்ட் போன்களில் 50 சதவீதத்திற்குமேல் இடம் பிடித்துவிட்ட கூகுள் ஆண்ட்ராய்ட் எளிதாக மேசைக் கணினிக்கு மாறும் சாத்தியம் உள்ளது.
எதையும் செய்து பார்க்கும் கூகுள் இதையும் செய்யும் என்றும், ஐஸ்கிரீம் ஸான்ட்விச் பதிப்பிற்கு பிறகு இது நிகழலாம் என்றும் கணினி உலகில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

1 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:
அருமையான தகவலுக்கு நன்றி நண்பரே!
திருக்கார்த்திகை நல்வாழ்த்துக்கள்.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
இதையும் படிக்கலாமே :
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"
Post a Comment