இந்த முறை கூகுள் நுழைந்திருப்பது பணபரிமாற்ற சேவை அதாவது நாம் பயன்படுத்தும் மொபைல் போனிலிருந்து விரும்பியதை வாங்குவதற்கான மொபைல் பேமண்ட் சேவை. இச்சேவைக்கு கூகுள் வாலட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இச்சேவையில் கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு போல பிளாஸ்டிக் அட்டையாக இல்லாமல் போன் திரையில் விர்ச்சுவல் கார்டாக காட்டப்படும் என்றும், இந்த அப்ளிகேசனில் நமக்கான பின் எண்ணை அழுத்தி நுழைந்து பேமண்ட்களை அனுப்ப முடியும்.
இந்த சேவை சிட்டி பேங்க் (Citi Bank), மாஸ்டர் கார்டு (Master Card), பேபாஸ்(Pay Pass) நிறுவனங்களின் கூட்டணியில் ஸ்பிரிண்ட் நெக்ஸஸ் எஸ் 4 ஜி (Nexus S 4G by Google, available on Sprint).ஆண்ட்ராய்ட் போனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் மட்டுமே சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் பிற நாடுகளுக்கும் விரிவு படுத்தப்படும் எனத் தெரிகிறது.
கூகுள் வாலட் பற்றி மேலும் அறிய http://www.google.com/wallet/ என்ற இணைய முகவரிக்கு செல்லவும்.
.
1 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:
பயனுள்ள பதிவு...
நன்றி
Post a Comment